-
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
தவப்புதல்வன்
[26.8.1972 - 26.8.2011] : 40வது ஜெயந்தி
பொக்கிஷப் புதையல்
அரிய நிழற்படம் : கிறிஸ்துமஸ் தாத்தா [Santa Claus]
http://i1094.photobucket.com/albums/...EDC4429a-1.jpg
அரிய ஆவணம் : பேசும் படம்
http://i1094.photobucket.com/albums/...EDC4436a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4437a-1.jpg
வருவார்.....
அன்புடன்,
பம்மலார்.
-
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
தவப்புதல்வன்
[26.8.1972 - 26.8.2011] : 40வது ஜெயந்தி
காவிய விமர்சனங்கள்
மின்னல் கொடி: 10.9.1972
http://i1094.photobucket.com/albums/...EDC4428a-1.jpg
ஆனந்த விகடன் : 1972
http://i1094.photobucket.com/albums/...EDC4434a-1.jpg
[இந்த காலகட்ட விகடன் விமர்சனங்கள் குறித்து நமது முரளி சார் மேலதிக விவரங்கள் வழங்கினால் நன்றாக இருக்கும்]
வருவார்.....
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் ராகவேந்திரன் சார்,
ரசிகவேந்தராகிய தாங்கள், தங்கள் இதயத்தின் அடித்தளத்திலிருந்து வாரி வழங்கும் வளமான பாராட்டுக்களையெல்லாம் அடியேன் பெறுவது அடியேனது வாழ்வின் பேறு. தங்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள் !
தாங்கள் பதிவேற்றிய நிழற்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் !
'பருவம் பார்த்து அருகில் வந்து வெட்கமா' - "மருதநாட்டு வீரன்" பாடல் ஒலி-ஒளிப் பேழை சிறந்த செலக்ஷன் !
அன்புடன்,
பம்மலார்.
-
தூக்கு தூக்கி, கூண்டுக்கிளி, மங்கையர் திலகம், தாயே உனக்காக, தவப்புதல்வன் ஆகிய பஞ்சரத்னங்கள் வெளியான ஆகஸ்ட் 26 அன்று பிறந்தநாள் காணும் ரசிக ரத்னம், அருமை நண்பர், நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை அமைப்பின் மாநிலத் தலைவர் திரு.கே.சந்திரசேகரன் அவர்களுக்கு இதயபூர்வமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !
Happy Birthday Sir ! Many More Happy Returns !
திரு.சந்திரசேகரன் அவர்களது திருத்தொண்டு வளர்பிறை சந்திரன் போல் தொய்வின்றி சிறக்கட்டும் !
பாசத்துடன்,
பம்மலார்.
-
டியர் வாசுதேவன் சார்,
'உனக்காக நான்' என்று ஒவ்வொரு நொடியும் அண்ணலையே எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கும் தாங்கள், பதிவிட்ட "தாயே உனக்காக" நிழற்படங்கள் அருமை !
அன்புடன்,
பம்மலார்.
-
'தாயே உனக்காக' திரைப் படத்தில் நடிகர் திலகம் அவர்கள் இடம் பெற்ற மிக அரிய பாடல் காட்சி.
http://s2.postimage.org/yx41gvcas/th..._001634850.jpg
நடிகர் திலகத்தின் அற்புத கௌரவத் தோற்றத்தில் அழியா 'கெளரவம்' பெற்ற திரை ஓவியம் 'தாயே உனக்காக'. நாட்டுக்கு சேவை செய்து உயிரை தியாகம் செய்யும் அற்புதமான ராணுவ கேப்டன் கதாபாத்திரம் நடிகர் திலகத்திற்கு. 'Ballad of a soldier' ("ஒரு போர் வீரனின் பாட்டு") என்னும் ரஷ்ய கதையின் தழுவல் தான் 'தாயே உனக்காக'. சோவெக்ஸ்போர்ட் என்ற ரஷ்ய பிலிம் கம்பனி கதை உரிமை அளித்தது.
திரு.சிவக்குமார் அவர்கள் கதாநாயகனாக நடித்திருந்தார். (சிவக்குமாரின் நண்பராக ஒரு சிறு வேடத்தில் திரு. விஜயகுமார் அவர்கள் நடித்திருப்பார்.) திரு கே.வி .மகாதேவன் இசையமைப்பில், திரு பி.புல்லையா அவர்கள் இயக்கத்தில் நடிகர் திலகத்தின் ஜோடியாக நாட்டியப் பேரொளி பத்மினி நடித்திருந்தார்.
பழகு செந்தமிழ் அழகு மங்கை உன் பருவம் காட்ட வேண்டும்...
கருநீல மலை மேலே தாய் இருந்தாள்..
ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்...
போன்ற நல்ல பாடல்கள் கொண்ட படம்.
ராணுவ அதிகாரியாக மிடுக்குடன் நம் பத்மஸ்ரீ அவர்கள். போரில் காயமுற்று மருத்துவமனையில் ராணுவ வீரரான சிவக்குமாரிடம் தன் மனைவியைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் போதும், பிளாஷ்பேக்கில் வரும் அந்த மிக அரிய டூயட் பாடலில் பத்மினி அவர்களுடன் மலையாள மற்றும் கன்னட உடை அணிந்து அந்தந்த கலாச்சாரங்களுக்கேற்ப தன்னை மாற்றிக் காண்பிக்கும் போதும், போருக்குப் போகுமுன் பத்மினியிடம் உணர்ச்சி மயமான வசன மழை பொழிந்து விட்டு விடை பெறும் போதும் படத்தில் சில நிமிடங்களே வந்தாலும் நம்மை ஆட்டிப் படைத்து விடுகிறார் நடிக வள்ளல்.
'பழகு செந்தமிழ் அழகு மங்கை உன் பருவம் காட்ட வேண்டும்' என்ற சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கணீரென்ற பின்னணிக் குரலோசையில் தேச பக்தியை நினைவூட்டும் விதமாக, தென்னிந்திய கலாச்சார உடைகளில் நடிகர் திலகம் புகுந்து விளையாடுவதைக் காணக் கண் கோடி வேண்டும்.
அந்த மிக மிக அரிய பாடலைப் பார்த்து மகிழலாமா...
http://www.youtube.com/watch?v=v7j3w...yer_detailpage
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
-
Many Many Happy Returns of the Day Mr.Chandrasekar.
Interview given by Dr.Rajkumar Second son Raghavendra Rajkumar
http://www.bangaloremirror.com/artic...i-Talkies.html
He was the greatest actor of his times and even now. But who did he admire?
He greatly admired Sivaji Ganesan. He used to travel in local buses and watch Sivaji’s movies in theatres. And Sivaji admired appaji as an actor.
-
எழுதியது நெல்லை கண்ணன்
தமிழன் எக்ஸ்பிரஸ் சிவா ஒருமுறை சிவாஜிக்கு விருது வழங்காதது குறித்துத்
தொலைபேசியில் கேட்ட போது சொன்ன கவிதை
பல்கலைக் கழகமாய் வந்து நின்றான்
நடிப்புக் கல்லூரிகள் பின்னரே தோன்றின
அவனுக்கு விருது வழங்காததால் குடியரசுத் தலைவர் மாளிகை
ஒரு சிங்க நடையைத் தரிசிக்கும் வாய்ப்பை இழந்தது
தேசத்திற்கே விருதாய் வந்தவனுக்கு தேசம் எப்படி விருதளிக்க முடியும்
அவன் போட்ட பிச்சையிலே தான் பலர் இன்று கோடீஸ்வரர்
சிவாஜி எனும் நடிப்பின் வேதம்
பராசக்தி தனில் மலர்ந்தான் தமிழர்களின்
படங்களுக்காய் இறைவனவன் தந்த பூவாய்
தராதரத்தில் அவனை மிஞ்ச இன்னுமொரு
தனி நடிகன் வருவதற்கு வாய்ப்பேயில்லை
அறாத ஒரு பெரும் புகழைக் கொண்ட வேந்தன்
அண்ணன் அவன் சிவாஜி எனும் நடிப்பின் வேதம்
பராபரமே அவன் நடிப்பின் சிறப்பைக் காண
பக்கத்தில் அவன் அழைத்துக் கொண்ட தின்று
-
1964ல் வந்த சிவாஜி படங்கள்.
கர்ணன்
பச்சை விளக்கு
ஆண்டவன் கட்டளை
கை கொடுத்த தெய்வம்
புதிய பறவை
முரடன் முத்து
நவராத்திரி
ஒரே வருடம்..வந்த .ஒரே நடிகனின் 5 படங்கள் 100 நாட்கள் சாதனை நடிகர் திலகத்திற்கு மட்டுமே உரியது.இச் சாதனை .வேறு எவராலும் இதை முறியடிக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது என்றே தோன்றுகிறது.
மேலும்..5 ..100 நாட்கள் படங்களும் மொத்தம் 15 திரையரங்குகளில் சென்னையில் ஓடின.அவை..
கர்ணன்,பச்சை விளக்கு,கை கொடுத்த தெய்வம்,புதிய பறவை,நவராத்திரி.
நடிகர் திலகம் சிவாஜி போல இவ்வளவு முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்தவர்..உலகளவிலேயே யாரும் இல்லை.அவற்றைப் பார்க்கலாம்.
வீரபாண்டிய கட்டபொம்மன் - கட்டபொம்மன்
பாரதியார் - கை கொடுத்த தெய்வம்
வ.வு.சி.- கப்பலோட்டிய தமிழன்
கர்ணன்- கர்ணன்
பரதன்- சம்பூர்ண ராமாயணம்
சாம்ராட் அசோகன்- அன்னையின் ஆணை
ஹேம்லட்-ராஜ பார்ட் ரங்கதுரை
திருப்பூர் குமரன்-ராஜ பார்ட் ரங்கதுரை
பகத் சிங்- ராஜபார்ட் ரங்க துரை
ஐந்தாம் ஜார்ஜ்- கௌரவம்
ஹரிச்சந்திரன்-ஹரிசந்திரன்
அக்பர்-உத்தமன்
வீர சிவாஜி- ராமன் எத்தனை ராமனடி
ஒதெல்லோ- ரத்தத்திலகம்
சாக்ரடீஸ்-ராஜா ராணி
தெனாலிராமன்-தெனாலிராமன்
அப்பர்-திருவருட்செல்வர்
நாரதர்-சரஸ்வதி சபதம்
சிவன்-திருவிளையாடல்
முருகன்- ஸ்ரீவள்ளி
விஷ்ணு-மூன்று தெய்வங்கள்
காளிதாஸ்-மகா கவி காளிதாஸ்
சேரன் செங்குட்டுவன் - ராஜா ராணி
கவுதம புத்தர் - அன்பைத் தேடி
ஜூலயஸ் சீசர் - சொர்க்கம்
ஏதெனும் விட்டுப்போயிருந்தால்...................excus e
-
25.08.1977 அன்று வெளியாகி 25.08.2011 அன்று 35வது ஆண்டில் நுழையும் நடிகர் திலகத்தின் உன்னதத் தெலுங்குத் திரைக்காவியமான சாணக்ய சந்த்ரகுப்தா வின் ஜெயந்தி
http://4.bp.blogspot.com/_hkhUD0LDPh...andragupta.jpg
நடிக நடிகையர் - அக்கினேனி நாகேஸ்வரராவ் சாணக்யராக, நந்தமூரி தாரக ராமராவ் சந்த்ரகுப்தராக, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அலெக்ஸாண்டராக, ஜெயப்ரதா, எஸ்.வரலட்சுமி, மற்றும் பலர்
பாடலாசிரியர் - நாராயண ரெட்டி
இசை - பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பின்னணி - பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்
தயாரிப்பு - திரிவிக்கிரம ராவ்
இயக்கம் - என்.டி.ராமராவ்
நிறுவனம் - ராமகிருஷ்ணா சினி ஸ்டூடியோஸ்
வெளியீட்டு நாள் - 25.08.1977
நீண்ட இடைவேளைக்குப் பின், அதாவது கிட்டத் தட்ட 14 ஆண்டுகளுக்குப் பின்னர் ராமராவ் அவர்களும் நாகேஸ்வர ராவ் அவர்களும் இணைந்து நடித்த படம். அதற்கு முன் அவர்கள் இணைந்து நடித்து வெளிவந்த படம் ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன யுத்தம். சாணக்கியர் பாத்திரத்தை ராமராவ் அவர்கள் நடிக்க விரும்பி பின்னர் அதை நாகேஸ்வர ராவ் அவர்களுக்கு விட்டுத் தந்ததாக அந்தக் கால கட்டத்தில் செய்தியுண்டு. அது மட்டுமல்லாமல் என்.டி.ஆரின் தயாரிப்பில் நாகேஸ்வரராவ் நடித்த முதல் படம் கூட.
இப்படத்தின் மற்றொரு நிழற் படம்
http://i.tollywood.info/chanakya-chandragupta.jpg