-
http://i50.tinypic.com/20py444.jpg
'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.’ - இந்தப் பாடல் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, அந்தப் பாடலைப் பாடிய எம்.ஜி.ஆருக்கு நிச்சயம் பொருந்தும்.
எம்.ஜி.ஆர். வாழ்ந்த ராமாபுரம் தோட்டத்தில் செயல்பட்டுவரும் காது கேளாதோர் பள்ளியின் 23-வது ஆண்டு விழா கடந்த 11-ம் தேதி கொண்டாடப்பட்டது. அந்த விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வந்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். அவர் பேசப் பேச, பள்ளி ஆசிரியர் ஒருவர் குழந்தைகளுக்கு சைகை மொழியில் புரியவைத்தார். 'நண்பர்களே வணக்கம். தமிழ் மக்கள் எல்லோருடைய உள்ளத்திலும் வாழ்ந்துகொண்டு இருப்பவர் சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர். அவருடைய வீட்டில் நடைபெற்றுவரும் பள்ளிக் கூடத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. தன் சுய உழைப்பில் வந்தப் பணத்தை ஏழை மக்களுக்கு வாரி வழங்கியவர் எம்.ஜி.ஆர்.
வாழ்க்கையில் தன்னம்பிக்கை மிகவும் அவசியம். வெற்றியின் முதற்படி தன்னம்பிக்கை. நான் குடியரசுத் தலைவராக இருந்தபோது மாற்றுத் திறனாளிகளாக இருந்த 1,000 மாணவர்கள் என்னை வந்து சந்தித்தனர். அவர்களுக்குள் எவ்வளவு திறமைகள் ஒளிந்திருந்தது என்பதை அப்போதுதான் நான் உணர்ந்தேன். இன்னொருமுறை நான் ஹைதராபாத் சென்று இருந்தபோது அங்கே ஒரு பார்வையற்ற மாணவனைச் சந்தித்தேன். அவனிடம் 'உன் லட்சியம் என்ன?’ என்று கேட்டபோது, 'குடியரசுத் தலைவர் ஆவேன்’ என்று சொன்னான். அவனுடைய தன்னம்பிக்கை என்னை வியக்கவைத்தது. 'உன்னுடைய எண்ணம் பெரிது. விடாமுயற்சியோடு, கடுமையாக உழைத்தால் உன் லட்சியம் நிறைவேறும்’ என்று அவனை வாழ்த்தினேன்.
வாழ்க்கையில் வெற்றிபெற நான்கு செயல்கள் அவசியம். நல்ல லட்சியம், அந்த லட்சியத்தை அடையத் தேவையான ஆற்றலை பெருக்கிக்கொள்வது, கடின உழைப்பு, விடா முயற்சி. இவை இருந்தால் போதும்... நீங்கள் எல்லோரும் சாதிக்கலாம்'' என்று வாழ்த்தி அமர்ந்தார் கலாம்.
விழா முடிந்த பிறகு எம்.ஜி.ஆரின் வீடு, தோட்டம் என அனைத்தையும் சுற்றிப் பார்த்தார் கலாம். ஒவ்வொரு இடங்களைப் பற்றியும் ஆவலோடு கேட்டுத் தெரிந்துகொண்டார். கிளம்புவதற்கு முன்பு குழந்தைகளை பக்கத்தில் அழைத்து உட்காரவைத்து அவர்களோடு போட்டோவும் எடுத்துக்கொண்டார்!
-
-
-
-
9.12.2012
மக்கள் திலகத்தின் பெற்றால்தான் பிள்ளையா - திரைப்படம்
இன்று 47வது ஆண்டு துவக்கம் .
ஒரு தாய் மக்கள் - 1971
இன்று 42 வது ஆண்டு துவக்கம் .
பெற்றால்தான் பிள்ளையா - 1966 - மக்கள் திலகம் தான் நடித்த படங்களில் தமக்கு மிகவும் பிடித்த படம் என்று கூறியுள்ளார் .
மக்கள் திலகத்தின் இயல்பான நடிப்பு - பாசத்துடன் , ஏக்கத்துடன் ,தத்ரூபமாக தனது உணர்சிகளை மென்மையாகவும் அருமையான முக பாவனைகளுடன் வித்தியாசமான வேடத்தில் நடித்து மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டார் .
ஒரு தாய் மக்கள் .-1971
பிரிந்திருந்த அண்ணன் - தம்பி ,ஒன்று சேரும் கதை தான் ஒரு தாய் மக்கள் .மக்கள் திலகம் - முத்துராமன் இருவரும் சிறப்பாக நடிதிருந்தனர்.
படத்தில் எல்லா பாடல்களும் இனிமை .
மதுவினால் ஏற்படும் தீமை .
கூட்டுறவு முயற்சி .
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
விட்டு கொடுத்தல்
தீயவரையும் நல்லவராக மற்றும் எண்ணம்
பாசத்திற்கு கட்டு படுதல்
போன்ற அருமையான தத்துவங்களோடு வெளியான அருமையான படம் .
-
FIRST TIME MAKKAL THILAGAM MGR IN 3D STILL.
CRATED AND FORWARDED BY OUR RAGHAVENDRAN SIR
THANKS RAGHAVENDRAN SIR .
http://i48.tinypic.com/2ij0x2f.jpg
-
-
-
-