-
மூன்று தெய்வங்கள் - தொடருகின்றது
பகுதி 1 - படத்தை பற்றிய சிறப்புக்கள்
1. யதார்த்தமாக எடுக்கப்பட்ட படம் - பேருக்காக ஒரு ஹீரோ - ஆனால் உண்மையில் ஹீரோ நம் தலைவர் தான் - ஜோடி கிடையாது ( குறைந்தது 50 ஜோடிகள் இருந்தால் தான் நடிப்பேன் - கடைசியில் அவர்களுக்கு அண்ணனாக மாறுவேன் என்று இருந்த நடிகர்கள் நடுவில் இப்படியும் ஒருவர் !!!!)
2. ஸ்ரீதர் இந்த படத்தை பார்த்திருக்க வேண்டும் - அழு மூஞ்சி என்ற சொல்லை தன் அகராதியில் இருந்தே நீக்கியிருப்பார் .
3. படம் போகும் வேகம் ரவி கிரண் பதிவுகளை விட அதிகமா இருக்கும் . மருந்துக்கு கூட போரே அடிக்காது .
4. வசனம் - கோபு - இசை - MSV - direction - Dada Mirasi
5. இந்த படத்தில் தலைவர் , தயாரிப்பாளர் ஒரு கஷ்ட்டத்தில் இருந்ததால் பணம் வாங்காமல் நடித்து கொடுத்தார் - அவருக்கு அதிகமான முக்கியத்தவம் நிறைந்த ரோல்யை , தயாரிப்பாளர் கெஞ்சியும் ஏற்று கொள்ளாமல் , சமமான ( முத்துராமன் , நாகேஷ் ) ரோல்யே எடுத்துக்கொண்டார் - காரணம் மூண்டு தெய்வங்களும் சமமே - இதில் ஒருவர் உயர்ந்தவராக இருந்தாலும் படம் சிறப்புடன் அமையாது என்பது அவரின் கருத்து .
6. படம் எதிர்பார்த்த லாபத்திற்கும் மேலாக ஈட்டி கொடுத்தது - தயாரிப்பாளர் மீண்டும் தலைவரை கெஞ்சவே - ஒரே ஒரு ரூபாயை மட்டும் சம்பளமாக பெற்று கொண்டார் தலைவர் .
7. பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் , தீபாவளி போதும் எங்கும் ஒலி பரப்பப்பட்டது - இன்றும் கேட்கலாம் .
8. அடுத்து அடுத்து வந்த படங்களினால் சிறிதே சோர்வு அடைந்தாலும் - தயாரிப்பாளர்களையும் , distributors களையும் மிகவும் சந்தோஷ படுத்தின படம் இது .
தொடரும்
அன்புடன் ரவி
:):smokesmile:
-
Mr Ravi,
As rightly pointed out it is a memorable film for NT Lovers and there is no
makeup for him except in the song sequences. Only NT have the guts
to act without makeup in so many films.
Thanks
-
1 Attachment(s)
மூன்று தெய்வங்கள் - தொடருகின்றது
பகுதி 2
சில ஆவணங்கள் / சிறந்த பாடல்கள் - அதன் சிறப்புக்கள்
இந்த படத்தில் தலைவர் வாசு சார் சொன்னதுபோல மேக்கப் போடவில்லை - அதனால் இயற்கையான அழகு சற்று கூடுதலாகவே
இருக்கும் - இதேபோல " நெஞ்சி இருக்கும் வரை " என்ற படத்திலும் மேக்கப் கிடையாது - யாருக்கு இந்த தையிரியம் ? வரும் ??
-
இன்னும் சில ஆவணங்களை போடலாம் என்று நினைத்தால்
File Upload Manager says that I have fully used 976.6kb space for uploading images - written to moderator to fix this issue - the system counts earlier file sizes uploaded already as well and rejects new images as capacity constraint - is there anyone facing the problem like mine ? There is no way to delete the images already uploaded to create space for new ones .
அன்புடன் ரவி
-
வைதேகி காத்திருந்தாளோ -
என்ன பாடல் !! என்ன குரல்!! - தலைவரின் முக பாவங்களை பாருங்கள் - truly divine - கற்பனை வளம் வாய்ந்த பாடல் - கண்ணதாசன் ஒருவனால் தான் இப்படி எழுத முடியும் - தலைவருக்கு - மகாவிஷ்ணு வின் வேடம் எப்படி பொருந்துகின்றது - NTR கிருஷ்ணன் வேடத்திற்கு தெலுங்கில் பொருத்தம் என்றால் விஷ்ணு வேடம் தமிழில் NT க்கு தான் பொருந்தும் - இன்னும் நீங்கள் நம்ப வேண்டும் என்றால் படிக்காத மேதை - படம் பாருங்கள் - எங்கிருந்தோ வந்தான் பாடலை - உங்களுக்கு சிரமம் இல்லாமல் அந்த பாடலையும் இங்கே பதிவிடுகிறேன்
http://youtu.be/asO-IBX8h4w
-
[QUOTE=g94127302;1114572]வைதேகி காத்திருந்தாளோ -
என்ன பாடல் !! என்ன குரல்!! - தலைவரின் முக பாவங்களை பாருங்கள் - truly divine - கற்பனை வளம் வாய்ந்த பாடல் - கண்ணதாசன் ஒருவனால் தான் இப்படி எழுத முடியும் - தலைவருக்கு - மகாவிஷ்ணு வின் வேடம் எப்படி பொருந்துகின்றது - NTR கிருஷ்ணன் வேடத்திற்கு தெலுங்கில் பொருத்தம் என்றால் விஷ்ணு வேடம் தமிழில் NT க்கு தான் பொருந்தும் - இன்னும் நீங்கள் நம்ப வேண்டும் என்றால் படிக்காத மேதை - படம் பாருங்கள் - எங்கிருந்தோ வந்தான் பாடலை - உங்களுக்கு சிரமம் இல்லாமல் அந்த பாடலையும் இங்கே பதிவிடுகிறேன்
படிக்காத மேதை
http://youtu.be/bQ0qDswSF9s
-
தாயெனும் செல்வங்கள் - பாடல் கருத்துக்கள் ஒற்றுமையும் , அன்பையும் அதிகபடுத்துகின்றன - இப்படி பட்ட இனிய பாடல்கள் இனி வருமா ? எல்லோரும் வாழும் நிலை வருமா ?????
http://youtu.be/0lFpu5z0oPU
-
நடப்பது சுகம் -- நகைச்சுவை வாழ்க்கையில் மிகவும் முக்கியம் என்று உணர்த்தும் பாடல் - நெஞ்சிருக்கும் வரை யின் சாயல் சிறிதே இருக்கும்
http://youtu.be/9YiNDzAL3P4
-
என்ன பாடல் !! - சொல்ல வார்த்தைகள் இல்லை !!!!!! எரிமலை போலே ஆசை வந்தாலும் அதை திருமலை தணிக்குமடா ------
http://youtu.be/4YAG1pRCXco
-
முள்ளிலா ரோஜா -- மற்றும் ஒரு அருமையான பாடல்
http://youtu.be/pKuiEkGsTVY