-
நண்பர்களுக்கு வணக்கம்.
திரு.எஸ்.வி., திரு. செல்வகுமார், திரு.லோகநாதன், திரு.ராமமூர்த்தி ஆகியோரின் பாராட்டுக்களுக்கு நன்றி. திரு. செல்வகுமார் சார், நீரும் நெருப்பும் படத்தை பற்றிய தலைவரின் பேட்டியை பதிவிட்டு உலகமெங்கும் உள்ளவர்கள்அதை படிக்க வழி செய்த உங்களுக்கு நன்றி. தலைவரின் அபூர்வ ஸ்டில்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து. ‘மற்றவர்கள் கொடுத்தால் பட்டம் தானே புகழ்ந்து கொண்டு பட்டம் சூட்டிக் கொள்வது தம்பட்டம்’ என்று தலைவரின் வசனத்தை நீங்கள் மேற்கோள் காட்டி வம்புக்கு இழுப்பவர்களுக்கு பதிலளித்திருப்பது அற்புதம். சூடு போட்டுக் கொண்டதெல்லாம் புலிகள் என்று கூறிக் கொண்டால் அவற்றைப் பார்த்து பரிதாபப்படுவதைத் தவிர என்ன செய்ய முடியும்?
திரு. வெங்கட்ரமணி அவர்களை இதயவீணையின் 43வது துவக்க நாளான இன்று தலைவரின் பாணியில் ‘வணக்கம், வந்தனம், நமஸ்தே, நமோஷ்கார்’ என்று கூறி வரவேற்கிறோம். திரு. முத்தையன் அம்மு, எனது பதிவுகள் பிடித்திருக்கிறதா? என்று என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்? மிகவும் அருமை. அதிலும் தாங்கள் இரவு 2.30 மணிக்கெல்லாம் கூட பதிவுகள் இடுவதை பார்க்கும்போது தங்கள் அயராத உழைப்புக்கு தலை வணங்குகிறேன். சிறிது இடைவெளிக்கு பிறகு வந்துள்ள ரூப் குமார் சார், ஒளிவிளக்கு படத்தில் தலைவரும் சோவும் சந்தித்து பேசும் காட்சியை நீங்கள் விவரித்த விதத்தை பாராட்டி மேலும் தங்களிடம் இருந்து இதுபோல் எதிர்பார்க்கிறேன் என்று சமீபத்தில் கூறியிருந்தேன். அதை கவனித்தீர்களா என்று தெரியவில்லை. மீண்டும் தங்களுக்கு பணிவோடு நினைவுபடுத்துகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
You may be Right, Dear Brother RKS.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
Quote:
Originally Posted by
esvee
‘இதய வீணையை மீட்டுவோம்’
உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக வெளிநாடுகளில் படப்பிடிப்புகள் நடத்த தனக்கு இருந்த தொடர்புகளை பயன்படுத்தி உதவிய, பத்திரிகையாளராக இருந்த திரு.மணியன் அவர்களை திரைப்பட தயாரிப்பாளராக தலைவர் உயர்த்திவிட்ட படம்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட புரட்சித் தலைவர், அதிமுகவை தொடங்கிய 3வது நாளில் வெளியான படம்.
கருணாநிதி தலைமையிலான அன்றைய திமுக ஆட்சியின் இடையூறுகளையும் தகர்த்து சென்னை,மதுரை, திருச்சி ஆகிய ஊர்களில் 100 நாட்கள் ஓடியதோடு பல சென்டர்களில் 50 நாட்களுக்கும் மேல் ஓடி அமோக வெற்றி பெற்ற படம்.
காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்..., பொன்னந்தி மாலைப் பொழுது பாடல் காட்சிகளில் காஷ்மீரின் அழகு கண்ணுக்கு குளிர்ச்சி என்றால், அதையும் தாண்டிய அழகு, குளிர்ச்சியுடன் தலைவர்.
பொன்னந்தி மாலைப் பொழுது பாடலில் தலைவரின் 3 டிரஸ்களும் மனதை கொள்ளை கொள்ளும். ஆடை மூடும் ஜாதிப்பூவில்... பாராவில் சுசிலா பாடும் ‘கண்ணோடு கண்... பண்பாடுமோ’ வரிகளின் போது சிவப்பு நிற டிரஸ்சில் தலைவர் லேசாக கொடுக்கும் ட்விஸ்ட் மூவ்மெண்ட் கிளாஸ். மஞ்சள் நிற டிரஸ்சில் இளமஞ்சள் நிற கூலிங் கிளாசுடன் வந்து அட்டகாசமாக ஸ்டெப்ஸ் போடும் தலைவருக்கு வயது 25க்கு மேல் இருக்கும் என்று யாராவது கூறினால் அவர்களுக்கு பார்வையில் கோளாறு என்று அர்த்தம். இந்த பாடல் மட்டும் புலமைப்பித்தன். மற்றவை வாலி.
ஒரு வாலும் இல்லே.. நாலும் காலும் இல்லே.. சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே... (நெஜந்தான் தலைவரே) கருத்தாழம் மிக்க பாடல். ‘ஆனந்தம் இன்று ஆரம்பம்...’ இளமை பொங்கும்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோதுதான் திமுகவில் இருந்து தலைவர் நீக்கப்பட்டார். தகவல் அறிந்ததும் பால் பாயசம் கொண்டு வரச் செய்து அனைவருக்கும் கொடுக்கச் சொல்லி (அவர்தான் எப்போதும் தனியாக சாப்பிட்டதில்லையே) தானும் சாப்பிட்டதோடு, கொஞ்சம் கூட பதற்றமே இல்லாமல் லாரி ஆக்சிடென்ட் காட்சியை எடுத்திருக்கிறார். இதை மணியன் கூறியுள்ளார்.
‘ஏசுநாதர்’ என்ற படத்தில் தலைவர் நடிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்பட்டது. படம் வந்திருந்தால் சரித்திரமாகி இருந்திருக்கும். வேடப் பொருத்தமும் ஏசுநாதர் போலவே இருக்கும். அந்த ஸ்டில் மிகவும் பிரபலம். ஏறக்குறைய அதேபோன்ற தோற்றம் கொண்ட தலைவரை ‘திருநிறைச் செல்வி...’ பாடலில் பார்க்கலாம்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தங்கையின் வாழ்வுக்கு நியாயம் கேட்கும்போது, ‘எவ்வளவு அடித்தாலும் இடத்தை விட்டு நகரமாட்டேன்’ என்று நிராயுதபாணியாக நிற்கும் தலைவரை திரு.சிவக்குமார் கைத்தடியால் ரத்தம் சொட்ட, சொட்ட அடிக்கும்போது திரையரங்கில் நமது தோழர்கள் உணர்ச்சிப் பிழம்பாக மாறினர். ஸ்கிரீன் அருகே உள்ள வகுப்பில் அமர்ந்திருந்த தோழர்கள் சிலர் தன்னிலை மறந்து திரு.சிவக்குமாரை அடிக்க திரையை நோக்கிப் பாய, நண்பர்கள் அவர்களை கட்டிப் பிடித்து இழுத்து சுய நினைவுக்கு கொண்டு வந்து ஆசுவாசப்படுத்தியபோது.. உணர்ச்சிப் பிரவாகத்தினூடே எழுந்த சிரிப்பலையும், அடுத்த இரு நிமிடங்களில் நிலைமை மாறி தங்கை லட்சுமியை அடித்த சிவகுமாரை அதே கைத்தடியால் தலைவர் புரட்டி எடுக்கும்போது அடிக்கப் பாய்ந்த தோழர்கள் ஆனந்தக் கூத்தாடிய காட்சியும்.... ஆஹா..அந்த நாளும் வந்திடாதோ?
கொலைப்பழி சுமந்து, காட்டில் பதுங்கியிருக்கும் தலைவருக்காக மஞ்சுளா கொண்டு வந்த சர்க்கரைப் பொங்கல் கொட்டிப் போக.... ‘கொண்டு வந்த பொங்கல் கொட்டிப் போச்சு..’ என்று கூறி சத்தமாக தலைவர் சிரிக்கும் அட்டகாச சிரிப்பும், காட்சியையொட்டி, ‘இந்த நேரத்தில் கூட எப்படி உங்களால் சிரிக்க முடிகிறது?’ என்று மஞ்சுளா கேட்கும்போது தலைவர் அளிக்கும் பதில், அவரது மனத்தின்மைக்கு சான்று மட்டுமல்ல, நம் எல்லோருக்கும் பாடம்.
அந்த பதில்: ‘‘எந்த நேரத்திலும் என்னால் சிரிக்க முடியும். என் கவலையை மறக்க ஆண்டவன் எனக்குத் தந்த ஒரே வரப்பிரசாதம் அதுதான்’
தலைவர் கூறியது முற்றிலும் சத்தியம். காஷ்மீர்... பாடல் காட்சியிலும் ‘நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?’ என்ற கேள்விக்கு ‘சத்தியம்தான் நான் படித்த புத்தகம் அம்மா’’ என்பார் சமத்துவ தத்துவத்தை அறிந்த நம் தலைவர்.
அவர் சிரித்தால் தானும் சேர்ந்து சிரித்த தமிழ்நாடு, அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டால் அழுதது. காரணம்... சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடில்லாமல் சத்திய வடிவமாய் வாழ்ந்த.. மன்னிக்கவும், வாழும் அந்த மனிதர்.... ஒரு புனிதர்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்
தங்களுடைய அபூர்வமான மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் மிகவும் அருமை .
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்
இதயவீணை படத்தை பற்றிய தங்களது மினி விமர்சனம் அருமை .
1960 தீபாவளி விருந்தாக வந்த நம் மக்கள் திலகத்தின் ''மன்னாதி மன்னன் '' 22.10 2014 அன்று சன் லைப் தொலைக்காட்சியில் 11 மணிக்கு ஒளி பரப்பாக உள்ளது .
-
கர்வம் பிடித்த கிளி!
செல்வபுரி என்ற சிற்றூரின் எல்லையில் ஒரு பெரிய மாமரம் வளர்ந்து இருந்தது. அந்த அழகிய மாமரத்தின் கிளைகள் விரிந்து இலைகள்பச்சை பசுமையாக இருந்தது. பூக்களும் கனிகளும் நிறைந்த அந்த மாமரத்தில் பறவைகள் சில கூடு கட்டி வாழ்ந்து வந்தன. அந்த மாமரத்தில் ஒரு கர்வம் கொண்ட கிளியும் வசித்துவந்தது.
அது எப்போதும் தன் அழகையும் தன்னுடைய பேச்சு திறமையையும் எண்ணி பெருமைப் பட்டுக் கொள்ளும். இங்கு வசிக்கும் மற்ற பறவை இனங்களை அது சுத்தமாக மதிப்பதே இல்லை! அவை தன்னுடன் வசிக்க லாயக்கற்றவை என்று அது எண்ணியது.மற்ற பறவைகளை கிளி சற்றும் லட்சியம் செய்வது இல்லை! தன்னுடைய அழகின்மீது கர்வம் கொண்ட அது அழகே ஆபத்தாக முடியும் என்பதை அறியாமல் மற்ற பறவைகளை ஏளனம் செய்து கொண்டு இருந்தது.
அங்கு வசிக்கும் மற்ற பறவைகள் எல்லாம் தனக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று கிளி விரும்பியது. எனவே அது மற்ற பறவைகளை அடிக்கடி வம்புக்கு இழுத்து கடுஞ்சொற்களை கூறி அவமான படுத்திவந்தது. கிளியின் குணம் அறிந்த மற்ற பறவைகள் அதனிடம் பேசுவதை தவிர்த்துக் கொண்டன. கிளியை கண்டாலே கூண்டில் போய் அடங்கிக் கொண்டன. இது கிளிக்கு மேலும் கர்வத்தை கொடுத்தது. தன்னை கண்டு மற்ற பறவைகள் பயப்படுவதாக அது நினைத்துக் கொண்டது.
அந்த கிளி வசித்த கிளைக்கு பக்கத்து கிளையில் காகம் ஒன்று வசித்துவந்தது. வயதில் மூத்த அந்த காகம் கிளிவசிப்பதற்கு முன்பிருந்தே அந்த மரத்தில் வசித்துவந்தது. அதற்கு கிளியின் செய்கை பிடிக்காது ஆனாலும் தன் வேலையை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கும். இந்த காகத்தை வம்பிழுத்து பார்க்க கிளி நினைத்தது,
ஒருநாள் கிளி, ஏ கறுப்பு காகமே! என்னைப் பார் என் சிவந்த மூக்கும் பச்சை உடம்பும் மெத்தென்ற இறகுகளும் எவ்வளவு அழகு? நீயும் உன் கறுப்பு உடம்பும் கரகரத்த குரலும்! என்னைப்போல் உன்னால் பேசமுடியுமா?நீ என் பக்கத்து வீட்டுக்காரன் என்பதில் எனக்கு அவமானமாக உள்ளது. உன்னால்தான் இந்த இடத்திற்கே அசிங்கம்! நீ இங்கிருந்து சென்று விட்டாயானால் இடம் சுத்தமாகும் என்று வம்பிழுத்தது!.காகம் பதில் ஏதும் பேசாமல் மவுனித்தது. உடனே கிளி ஏ திமிர் பிடித்த காகமே நான் கேட்டதற்கு பதில் சொல்! ஏன் மவுனமாய் இருக்கிறாய்? உனக்கு அவ்வளவு திமிரா எனக்கு மரியாதை தரமாட்டாயா? என்று கத்தியது.
உடனே காகம், ஏய் கிளியே நீதான் மரியாதை இல்லாமல் பேசுகிறாய்! நீ வருவதற்கு முன்பிருந்தே இங்கு வசிப்பவன் நான். அத்துடன் வயதிலும் மூத்தவன்.கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பை கொடுத்திருக்கிறான். அதே சமயம் பலவீனத்தையும் கொடுத்து இருக்கிறான். வீணாக பெருமைப் பட்டுக் கொள்ளாதே! நீ அழகாய் இருந்தாலும் உன்னை யாரும் கூப்பிட்டு உணவளிப்பது இல்லை! ஒரு பண்டிகை விசேஷ தினங்களில் எங்களைத்தான் கூப்பிட்டு உணவளிக்கிறார்கள் மனிதர்கள். அதை புரிந்து கொள் என்று மூக்குடைத்தது காகம்.
அப்போதும் அடங்காத கிளி ஏ காகமே என்னையே எதிர்த்து பேசுகிறாயா? உன்னை கூடிய விரைவில் விரட்டுகிறேன் பார் என்றது. என்னை விரட்ட உன்னால் முடியாது! உண்மையை சொன்னால் உனக்கு உறுத்துகிறது. நாம் ஒன்றுபட்டால் நம் பகைவர்களிடமிருந்து தப்பிக்க முடியும் உன் அகந்தையை விட்டொழி என்றது காகம்.
ஆனால் கிளியோ ஆணவத்தை விடாமல் போதும் உன் அறிவுரை காது கிழிகிறது என்று வெறுப்பேற்றியது. காகம் இதை திருத்த முடியாது என்று பறந்து சென்றுவிட்டது.
அப்போது அந்த மரத்தின் அடியில் வேடுவர் இருவர் வந்தனர். ஆ அழகிய பச்சைக் கிளி இதை பிடித்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்று பேசிக் கொண்ட அவர்கள் சிறிது தானியங்களை கீழே எறிந்து வலை விரித்தனர்.
கிளிக்கு மிகவும் சந்தோஷம்! காகத்தை கூப்பிட்டு உணவளிக்கிறார்கள்! ஆனால் நமக்கோ தேடிவந்து கொடுக்கிறார்கள்! சாப்பிடுவோம் என்று கீழே இறங்கியது. அப்போதுதான் திரும்பிய காகம், ஏ கிளியே என்ன செய்கிறாய்? தெரிந்துதான் செய்கிறாயா? இது பகைவர்கள் விரித்த வலை! வீணாக மாட்டிக் கொள்ளாதே என்று தடுத்தது.
கிளியோ ஆணவத்தில் முட்டாள் காகமே என்னை தேடிவந்து உணவளித்தது உணக்கு பொறுக்கவில்லை! உன் பேச்சை கேட்க முடியாது! ஓடிப்போ என்று கீழே குதித்து தானியங்களை கொத்த ஆரம்பித்து வலையில் சிக்கிக் கொண்டது.
அப்போது காகம் கிளியே! சொன்ன பேச்சை கேட்காமல் ஆணவத்தால் வலையில் சிக்கிக் கொண்டாயே என்று வருந்தியது. வலை வீசியவர்கள் வந்து கிளியை கூண்டில் அடைக்க தன் அழகே தனக்கு எதிரியானதை முதன் முதலில் உணர்ந்தது கிளி!
-
வினோத் சார்,
ஏதோ மாமன், மச்சான், குஞ்சு,குளுவான், நண்டு, சிண்டு பிறந்த நாளுக்காக அவர்கள் கதைகளைக் கூறி போரடிக்காமல் அருமையான அம்புலிமாமா கதையை கூறியுள்ளீர்கள். ஆனாலும் உங்களுக்கு ரொம்ப பெருந்தன்மை சார், கர்வம் பிடித்து வலையில் மாட்டிக் கொண்ட.........யை கிளி என்று கூறியுள்ள உங்கள் பண்பு.... எங்கேயோ போயிட்டீங்க சார்.
அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
-
-
1 Attachment(s)
-
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
நம் மனம் கவர்ந்த மன்னவன் தோளில், உரிமையுடன் கரங்களை வைத்துக்கொண்டிருக்கும் ஒரு நபர் தோற்றமளிக்கும் காட்சி !
பந்தா இல்லாமல், மக்களோடு மக்களாக, மக்களில் ஒருவராக இருப்பதினால் தான் அவர் "மக்கள் திலகம்" என்று அழைக்கப்பட்டாரோ !
http://i62.tinypic.com/24ox66s.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
The person behind MGR is story and dialog writer Ravindran (who wrote dialogs along with Kannadasan for Nadodi Mannan).