Quote:
ஆண்டு தோறும் வெளியாகும் திரைப்படங்களில் இருந்து சிறந்த அறிமுகக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கவிருக்கிறது, ராஜ் டிவி. 2012-ம் ஆண்டு அறிமுகக் கலைஞர்கள் பட்டியலில் இருந்து ராஜ் டிவி ரசிகர்கள் முதல் சுற்றில் தேர்ந்தெடுத்துள்ள கலைஞர்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன. நடிகர்கள்: சிவகார்த்திகேயன், விஷ்வா, உதயநிதி ஸ்டாலின், தினேஷ், விஜய் ஆண்டனி, விக்ரம் பிரபு, விஷ்ணு பிரியன்.
நடிகைகள்: ஸ்வாதி, நந்திதா, லட்சுமிமேனன், வரலட்சுமி, மனிஷா, ராதிகாஆப்தே, காயத்ரி.
இயக்குநர்கள்: ஐஸ்வர்யா தனுஷ், ரஞ்சித், பிரபாகரன், எம்.அன்பழகன், கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி தரணீதரன், ஜீவா சங்கர்.
இசையமைப்பாளர்கள்: அனிருத், கார்த்திக், சந்தோஷ் நாராயணன், டேனியல், பிரசன்னா, கிரிஷ்.
நகைச்சுவை நட்சத்திரங்கள்: அர்ஜூன், பகவதி, கர்ணா, செந்தில், வித்யு, மதுமிதா.
ஒவ்வொரு பட்டியலில் இருந்தும் முதல் மூவரை தங்கள் வாக்குப் பதிவின் மூலம் ரசிகர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அதற்கு வசதியாக வாக்குப் பெட்டியுடன் ‘முதல் மூவர் சிறப்பு வேன்‘ இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் வலம் வரவிருக்கிறது. ரசிகர்கள் தேர்வுக்குப் பின்னர் விருதுக்குரிய அறிமுகக் கலைஞர்களை கே.பாக்யராஜ் தலைமையிலான நடுவர் குழு தேர்ந்தெடுக்கிறது. நடிகர்கள் பார்த்திபன், தம்பி ராமையா, இயக்குனர் சீனு ராமசாமி, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், கதிரேசன், கமீலா நாசர் நடுவர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். வரும் 23-ந் தேதி அன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் பரிசளிப்பு விழாவுக்கு தலைமையேற்பவர் இயக்குனர் பாரதிராஜா. தேர்வுக்குழுவினரின் இறுதிப் பட்டியலோடு ஒத்துப்போகிற மூன்று ரசிகர்களுக்கு ராஜ் டிவியின் பரிசாக தலா ஒரு லட்சம் ரூபாய், ஐம்பதாயிரம் ரூபாய், இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் என 3 பரிசுகள் வழங்கப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சரியான விடையை எழுதியிருந்தால் இருக்கவே இருக்கிறது, குலுக்கல் முறை.