Quote:
"சிவாஜி கணேசன் சிறந்த நடிகர் என பத்திரிகைகளாலும் படவுலகினராலும், ரசிகர்களாலும், சக நடிகர்களாலும் ஏகோபித்துப்பாராட்டப்பட்டு வருகிறார். அவர் எந்தப்படத்தில் நடித்தாலும் அவர் வரை நடிப்பு சோடை போனதில்லை. பராசக்தி, மனோஹரா, தூக்குத்தூக்கி, எதிர்பாராதது, திரும்பிப்பார், அமரதீபம், தெனாலிராமன், மங்கையர்திலகம், பெண்ணின் பெருமை, ரங்கோன் ராதா, முதல் தேதி, மக்களைப் பெற்ற மகராசி, புதையல், ராஜா ராணி, போன்ற ப்ல படங்களில் சிவாஜி கணேசன் மிகச் சிறப்பாக நடித்துப் புகழ் பெற்றிருக்கிறார். ப்ல் நடிகர்கள் தாங்களாகவோ, தங்கள் சிஷ்யர்கள் மூலமாகவோ, ஒரு பட்டத்தைப் பெற்றிருக்கும் போது, சிவாஜி கணேசனுக்கு ஏதும் பட்டமில்லாதிருப்பது வருந்தத் தக்கது. "பேசும் படம்" என் யோசனையை ஏற்று சிவாஜி கணேசனுக்கு நடிகர் திலகம் எனச் சிறப்புப் பட்டம் வழங்கி வரவேர்குமா?வெ.ர. நாகராஜன், சிவகங்கை
(சிவாஜி என்ற சிறப்புப் பெயரைக் கொண்ட கணேசனுக்குத் தனியாகப் பட்டம் எதுவும் தேவையில்லை. தன் நடிப்புத் திறனாலும் பழகும் பண்பினாலும் எல்லோரது இத்யத்திலும் இடம் பெற்று விட்ட கணேச சம்பிரதாயத்தை ஒட்டியும் உங்கள் ஆவலுக்காகவும் நடிகர் திலகம் என அழைப்பதில் யாருக்காவது கசக்குமா என்ன? ஆசிரியர்
ஆதாரம் - பேசும் படம் செப்டெம்ப்ர் 1957