https://www.youtube.com/watch?v=stdn5PDDHtg
Printable View
Gap filler / Monotony breaker!
Quote:
பானையில் பொங்கல் நுரை பொங்கி வழியும் போது மனதில் பொங்குமே மகிழ்ச்சி ......ஜெமினியின் இந்தப் பாடல் காட்சியும் ....அந்த குதூகலத்தை அள்ளித்தருகிறதே....மழை நனைவு நினைவுகளையும் தூண்டி விடுகிறதே!!
https://www.youtube.com/watch?v=_ukBdTZTQgM
நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் காதல் மன்னரின் இளைய தலைமுறை முன்னேற்றப் பங்களிப்பு
The King of Romance GG's contributory influence on younger generation actors hitherto..!
Part 1 GG's association with Kamalahaasan!
The invincible Emperor of Love on (black and white) Screen Gemini Ganesan's laddership for the then upcoming Prince of Love on (color) screen Kamalahaasan!
வளரும் பயிர் முளையிலே என்னும் கூற்றை மெய்ப்பித்தவர் இன்று திரையுலகில் சகலகலாவல்லவராக தனது ரசிகர்களால் ஆராதிக்கப் படும் கமலஹாசன் அவர்கள்Quote:
அமரர் ஜெமினி கணேசன் அவர்கள் தனது வித்தியாசமான விண்ணளாவிய ஆனாலும் தரையில் என்றும் கால்கள் பதிந்த Down to the Earth the Lad next doors என்ற வகையிலான நடிப்புப் பாணியின் பிதாமகராக ரசிக நெஞ்சங்களில் தன்னை நிலை நிறுத்திய நடிப்புச் செல்வமாக வலம் வந்து தமிழ்த் திரைக்கு நடிப்பு வளம் சேர்த்தவர்.
என்றும் எவரையும் பிரதி எடுக்காத தனித் தன்மையோடு வாழ்வியலின் பிரிக்க முடியாத காதலுணர்வுகளை காமம் கலந்திடாது கண்ணியமான முறையில் திரை வெளிப்பாடு செய்தவர்.
இன்றும் சின்னத்திரையில் அவரது கறுப்பு வெள்ளை காலத்து அழகிய எழிலான இயற்கையான நெற்றிவரை அலைபுரளும் சிகையலங்காரத்தில் வசீகரிக்கும் புன்சிரிப்பை வாரியளிக்கும் வதனத்தில் எல்லை மீறாத
உடல் மொழி முக பாவனைகளில் காதல் காட்சியமைப்புக்களும் ஏ எம் ராஜா மற்றும்பிபிசீனிவாசின் தேன் மதுரக் குரல் குழைவில் ஜெமினித்தனமான காதல் பாடல்களும் வயது வித்தியாசமின்றி ரசிக மனங்களை ஈர்க்கும் காந்தப் புலமாகவேவாழ்ந்து கொண்டிருக்கிறார்!
ஆனால் அந்தப் பயிரை முறையாகப் பராமரித்து அதன் அபரிமிதமான தரம் வாய்ந்த விளைச்சலை தமிழ் கூறும் நல்லுலகம் அறுவடை செய்திட ஏற்றி விட்ட
ஏணிப்படிகளாக திரைக்குப் பின்னே அவரது ஞானத் தாய் தந்தையராக வலம் வந்த குருகுல ஆசிரியர்கள் காதல் மன்னரும் நடிகையர் திலகமும் என்பதே
மிகையற்ற உண்மை.
களத்தூர் கண்ணம்மாவில் பராசக்தி நடிகர்திலகம் போல சூறாவளியாக சுழன்றடிக்காவிட்டாலும் ஒரு மலைய மாருதமாக ஹைக்கூ தென்றலாக ரசிக
இதயங்களில் பணித்திரைக் குளிராக ஊடுருவினார் மாஸ்டர் கமலஹாசன் !
மகத்தான வெற்றிகண்ட அந்தத் திரைக் காவியத்தின் அச்சாணியாக முதல் படத்திலேயே தன்னை நிரூபித்தார் கமல். ஜெமினி - சாவித்திரி யின் இயல்பான இதமான கவித்துவமான காதல் காட்சிகளும் நடிப்புப் போட்டியும், தெளிந்த நீரோட்டமான திரைக்கதையமைப்பும் சுதர்சனத்தின் நாவில் தாங்கும் சர்க்கரைச் சுவையான இசையமைப்புடன் கூடிய தேன்மதுரப் பாடல்களும், நடிகர்திலகத்தின் ஆஸ்தான இயக்குனர் பீம்சிங்கின் திறமையான நேர்த்தியான இயக்கமும் நிறைந்திருந்தாலும்.....அம்மாவும் நீயே அப்பாவும் நீயே....என்று ஜெமினி-சாவித்திரியின் அரவணைப்பில் சரணடைந்த குழந்தை கமலஹாசனை ரசிகர்கள் நெஞ்சம் நிறைய முன்னிலைப் படுத்தினர் !!
Thereafter no looking back!
ஜெமினியின் தனிப்பட்ட கவனிப்பும் கண்காணிப்பும் பார்த்தால் பசிதீரும் பாதகாணிக்கை ...தொடர்ந்து...குறத்திமகன்...நான்அவனில்லை.... என்று வளர்ந்து ... உன்னால் முடியும் தம்பி......அவ்வை ஷண்முகியில் ஜெமினியையே தனது வலுவான கரங்களில் தூக்கிக்கொண்டு படிகளில் இறங்குமளவு இமாலய வளர்ச்சி கண்டார் கமலஹாசன் !!
https://www.youtube.com/watch?v=BeX4orz_1wA
https://www.youtube.com/watch?v=5gxOh035hzc
https://www.youtube.com/watch?v=UNhURRJerPY
https://www.youtube.com/watch?v=Kg0CUJH9doQ
https://www.youtube.com/watch?v=3vFw2qwKYCU
Gap filler with Kamal!!
https://www.youtube.com/watch?v=qwOfuiBbmac
Kamalahaasan getting on to his pinnacles of fame under the tutelage and guidance of his mentor GG! Safe rungs of ladder...with no slips within the arms ring of GG!!
https://www.youtube.com/watch?v=Zljub5g4CB4