Originally Posted by
venkkiram
அது அடக்கமான ஸ்டைலுங்க. இது தாறுமாறான ஸ்டைல். இதைப் போய் ஸ்டைல் இல்லைன்னு சொல்றிங்களே ?? வில்லன்கள் எவ்வளவு கொடூரமாக சண்டை போட்டாலும், ஒடம்புல தூசி படமா சண்டை போட்டே காலத்தை ஓட்டி வந்த ஜேம்ஸ் பாண்டுகளுக்கு மத்தியில் புழுதி பறக்க வைக்கும் டேனியல் தனி ரகம். எந்த நேரத்திலும் எதிரிகளிடமிருந்து ஆபத்து வரலாம் என உயிரையும் காத்துக்கொண்டு, எதிரிகளை அழித்தே ஆகணும் என நினைத்திருக்கும் ஒருவனுக்கு எப்படி தூக்கம் வரும்? தூக்கம் வராத இன்சோம்னியா கண்களை டேனியலிடத்தில் நீங்கள் பார்க்கலாம்.