Quote:
பிரபல நட்சத்திரங்களின் திருமணத்தின் போது நடைபெறும் மறக்க முடியாத சம்பவங்கள், நிகழ்வுகளை வழங்குகிறது விஜய் டி.வி.யின் `நம்ம வீட்டு கல்யாணம்' நிகழ்ச்சி.
திருமணம் குறித்து மணமகன், மணமகள் மட்டுமல்லாது அவர்களின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். திருமண வாழ்வில் கிடைக்கும் மனநிறைவு, முரண்பாடுகளையும் விவரிக்கிறார்கள். திருமணத்திற்கு பின்பு நண்பர்கள், உறவினர்களுடனான தொடர்பு துளிர்த்ததா- துண்டிக்கப்பட்டதா? என்பதையும் நினைவு கூர்கிறார்கள்.
திருமண ஏற்பாடுகளில் நடக்கும் குளறுபடிகள், நகைச்சுவை அனுபவங்கள், மறக்க முடியாத நிகழ்வுகள், மாப்பிள்ளை அசடு வழிதல், திருட்டுத்தனமாக மணப்பெண்ணை சந்திக்க மாப்பிள்ளை எடுக்கும் முயற்சிகள் என்று தங்களின் திருமணத்தைப் பற்றி சகல விஷயத்தையும் பிரபலங்கள் பேச வருகிறார்கள்.
பூர்ணிமா-பாக்கியராஜ் முதல் பா.விஜய், நடிகர் நரேன், அருண்விஜய், மனோஜ், இசையமைப்பாளர் இமான் உள்ளிட்ட பலர் தங்கள் காதல் திருமணங்கள், பெற்றோர் நிச்சயித்து நடத்திய திருமணங்கள் பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள்.
இரவு 7.30 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
.