-
திரு கல்நாயக் சார்
நிச்சயம் உங்களுக்கு மக்கள் திலகத்தின் கீழ் கண்ட படங்களின் தோல்வி குறித்து கேள்வி எழும் .
பறக்கும் பாவை
நீரும் நெருப்பும்
ராமன் தேடிய சீதை
சங்கே முழங்கு
நாளை நமதே .
மேற்கண்ட ஐந்து படங்கள் மிக பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது .
ராமன் தேடிய சீதை - நாளை நமதே - இலங்கையில் மிக பெரிய வெற்றி பெற்றது ஆறுதலான செய்தியாகும் .
நல்ல நேரத்தின் பிரமாண்டமான வெற்றி சங்க முழங்கு- ராமன் தேடிய சீதை வெற்றியினை பாதித்தது .
நீரும் நெருப்பும் ......மக்கள் திலகத்தின் சிறப்பான படமாக இருந்தும் ஏன் ஓடவில்லை என்பது இன்று வரை புரியவில்லை
ஐந்து படங்கள் . இன்று பார்த்தாலும் இனிய பாடல்கள் , பிரமாண்டமான காட்சிகள் , அருமையான படங்களாக உள்ளது .
திரு கல்நாயக் சார் மக்கள் திலகத்தின் படங்களின் வெற்றி - தோல்வி குறித்து எதாவது சந்தேகம் இருப்பின் தாரளமாக கேள்விகளை பதிவு செய்யுங்கள் .
முடிந்தவரை ,facts பதிவு செய்கின்றேன்
.
,
-
தமிழோவியம்
பாடல்களால் ஒரு பாலம் : நீலநயனங்கள்
- அபுல் கலாம் ஆசாத்
தமிழில்
திரைப்படம்: நாளை நமதே
பாடலாசிரியர்: வாலி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா
திரையில்: எம்.ஜி.ஆர்., லதா
MGR, Latha1975இல் வெளிவந்த எம்.ஜி.ஆர். படங்கள் அனைத்தும் மொழிமாற்றம் செய்து எடுக்கப்பட்டவை. சச்சா ஜூட்டா (ராஜேஷ் கன்னா) - நினத்ததை முடிப்பவன், தோ ஆங்கேன் பாரா ஹாத் (சாந்தாராம்) - பல்லாண்டு வாழ்க, அந்த வரிசையில் யாதோன் கி பாராத் (தர்மேந்திரா) - நாளை நமதே.
பிரபலமான பாடல்களைக் கொண்ட இந்திப்படம் அது. தமிழில் இதனைக் கொண்டுவந்தபோது இசையமைப்பாளராகப் பணிபுரிய முதலில் எம்.எஸ்.வி. மறுத்து, பின்பு வற்புறுத்தல் காரணமாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.
ஆர்.டி.பர்மனின் இசையில் உருவான இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே பிரபலம். ஆஹா போஸ்லே, கிஷோர் குமார், லதா மங்கேஷ்கர், முகமது ரஃபி என அவரவர் அவர் பங்கிற்கு ஒரு வெற்றிப் பாடலைக் கொடுத்து ரசிகர்களை ஆட்டம் போடவைத்த படம். கதையின் ஒரு பாத்திரம் மேடைப் பாடகனாக இருப்பதால் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட படம். யாதோன் கி பாராத் என்றாலே பாடல்கள்தான் என்று சொல்லப்பட்ட நிலையில் தமிழில் 'நாளை நமதே'யாக இது உருவானபோது இசையமைப்பில் எம்.ஜி.ஆரின் உள்ளீடுகள் நிறைய வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் எம்.எஸ்.வி. இசையமைக்க மறுத்தார் என்பது செய்தி.
யாருடைய உள்ளீட்டால் உருவானதோ இந்தியில் மனதை ஈர்த்ததைப் போலவே தமிழிலும் இந்தப் பாடல் மனதை ஈர்த்தது.
பாடலுக்கான சூழல் மிகவும் சாதாரணமானதாக இருந்தபோதும் பாடல் வரிகள் அப்போதைய போக்கிலிருந்து சற்று மாறுபட்டு அமைகின்றபோது ஈர்த்துவிடுகின்றது.
நீலநயனங்கள், ஐவகை அம்புகள், மாயக் கண் இவை எழுபத்தைந்தில் வெளியான பாடல் வரிகளில் காணக்கிடைக்காதவை. இப்படிப் பல நேரங்களில் விளையாடி செல்வது வாலியின் கலை. 'ஆடை கொண்ட மின்னல்' என்று புதுமையாக கண்ணன் என் காதலனில் சொல்லிப் பார்த்தார், நாளை நமதேவில் 'பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது'.
மஜ்ரூஹ் சுல்தான்பூரியின் 'சுராலியா ஹை தும்னே ஜோ தில்கோ! நஸர் நஹீ சுரானா சனம்!' (திருடினாயே இதயத்தை இங்கே! விழிகளை ஏன் விலைபேசினாய்?) வரிகள், ஆஷா போன்ஸ்லேயின் கிறங்கடிக்கும் குரல், ஜீனத் அமனின் புன்னகை, இப்படித் துவங்கி முதல் சரணமும் பல்லவியும் அடுத்த சரணத்தை முகமது ரஃபி துவங்கும் நொடிக்காகக் காத்திருப்பது இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் நிகழ்கிறது.
தமிழிலும் இதனைத் தந்தபோது ஏறக்குறைய இந்தியின் பாதிப்பில் பி.சுசீலா பல்லவியை முடித்ததும் அனுபல்லவியை ஜேசுதாஸ் பாடுவதான அமைப்பு.
கனவு ஏன் வந்தது? காதல்தான் வந்தது!
பருவம் பொல்லாதது! பள்ளிக்கொள்ளாதது!
நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது - அதன்
கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்தது
ஐவகை அம்புகள் கைவழி ஏந்திட
மன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட
நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது
கனவு ஏன் வந்தது? காதல்தான் வந்தது
பருவம் பொல்லாதது பள்ளிக்கொள்ளாதது
நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்ததோ - அதன்
கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்ததோ
பச்சைக்கல் வைத்த மாணிக்கமாலை பக்கம் நின்றாடுமோ
பத்துப்பதினாறு முத்தாரம் கொடுக்க வெட்கம் உண்டாகுமோ
அந்த நாளென்பது கனவில் நான் கண்டது
காணும் மோகங்களென்று காட்சி நீ தந்தது
(நீலநயனங்களில்)
மாயக் கண்கொண்டு நான் தந்த விருந்து மன்னன் பசி தீர்த்ததோ
மேலும் என்னென்ன பரிமாறு என்று என்னை ருசி பார்த்ததோ
பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது
மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது
(நீலநயனங்களில்)
-
-
படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம் (16-11-1975) நன்றி, விகடன்!
பன்னிரண்டு கைகள் – இரண்டு கண்கள்.
கருணையும் காந்த சக்தியும் கொண்ட இரண்டு கண்கள், கொலைக்கு அஞ்சாத பன்னிரண்டு கைகளைக் கருணைக் கரங்களாக மாற்றுகின்றன.
கொலைக் குற்றவாளிகளான ஆறு பயங்கரக் கைதிகளைச் சீர்திருத்த முன்வருகிறார் ஜெயிலர். போலீஸ் இலாகாவின் அனுமதியுடன் அவர்களைத் திறந்தவெளிக்கு அழைத்துச் செல்கிறார். கொலை வெறியும் குற்ற உணர்ச்சியும் அவ்வப்போது அவர்களிடம் குமுறி வெடிக்கின்றன. அதற்கெல்லாம் வடிகால் அமைத்துத் தந்து, தனது கருணையாலும் பார்வையாலும் பணிய வைக்கிறார் ஜெயிலர்.
கைதிகளைத் திருத்தும் முயற்சியில் ஜெயில் அதிகாரிக்கு ஏற்படும் சோதனைகளும், மனம் திருந்திப் புதிய மனிதர்களாக அவர்கள் உருவெடுக்கும் நிகழ்ச்சிகளும் சுவையாகவும் விறுவிறுப்பாகவும் கதையை வளர்த்துச் செல்கின்றன.
ஜெயில் அதிகாரி ஓர் இலட்சிய பாத்திரம். ஆரவாரமோ, பதற்றமோ இல்லாமல் கைதிகளை அன்பினால் வசப்படுத்தும் பாத்திரம். இந்த வித்தியாசமான பாத்திரத்தை ஏற்று எம்.ஜி.ஆர். நடிக்கவில்லை. முன்மாதிரியான ஓர் இலட்சிய அதிகாரியாகவே மாறியிருக்கிறார். கைதிகள் தன்னை எதிர்க்கும் சமயங்களில் அந்த எதிர்ப்புகளைப் பலப் பரீட்சையாக எடுத்துக் கொள்ளாமல், ஆத்திரம் தணியும் வரை மோதவிட்டு அமைதிப்படுத்தும் காட்சிகள் நெஞ்சைத் தொடுகின்றன. வெகு இயற்கையாக அமைந்துள்ள இந்தக் கட்டங்கள் மறக்க முடியாதவை.
கதாநாயகியும் கூட (லதா) சற்று மாறுபட்ட பாத்திரம்தான். இலட்சிய வேகத்தில் கடமையிலேயே கண்ணாக இருக்கும் ஜெயிலரை அடையத் துடிக்கிறாள் அந்தப் பெண். அவளுடைய ஆசை உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி? கனவாகவும், நினைவாகவும் அந்தக் காட்சிகள் நளினமாகவும் கவர்ச்சியாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இருவரும் ஆசை தீர ஆடிப் பாடுவதெல்லாம் கனவு, நினைவுக் காட்சிகளில்தான் என்றாலும், கண்ணைக் கவரத் தவறில்லை. இந்தக் கட்டங்களில் வெளிப்புறக் காட்சிகள் அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.
ஆறு கைதிகளும் – மனோகர், குண்டுமணி, தேங்காய் சீனிவாசன், வீரப்பா, நம்பியார், வி.கே.ராமசாமி - சிறு சிறு ஃபிளாஷ் பேக் காட்சிகளின் மூலம் அறிமுகப் படுத்தப்படுவது சிறப்பான உத்தி. அதே போன்று, அவர்களின் பெயர்களை ஜெயிலர் கேட்கும் போது, பெயரைச் சொல்லாமல் உள்ளங்கை அடையாளத்தைக் காகிதத்தில் பதிய வைப்பதும் ரசிக்கத்தக்கது.
குரூரத்தின் மறு வடிவங்களான அந்தக் கைதிகளைக் கொண்டே நகைச்சுவைக் காட்சிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. தேங்காய் சீனிவாசனின் விளையாட்டுக்கள் முதல் மார்க் பெறுகின்றன.
குடிவெறியில் ஆறு கைதிகளும் லதாவை அணுகுவதும், ஜெயிலர் அவர்களை அங்கிருந்து விரட்டியடிப்பதும் பரபரப்பான காட்சியாக இருந்தாலும், அந்தத் தவற்றை அவர்கள் உணர்ந்து வெட்கப்படும்போது ஒரு முத்திரையான காட்சிக்குரிய சிறப்பைப் பெற்று விடுகிறது. காய்கறி வியாபாரத்துக்குப் போன கைதிகள், ஜெயிலரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, தம்மைத் தாக்குகின்றவர்களை எதிர்த்து நிற்காமல் அடிபட்டுத் திரும்புவதும் அப்படியே! இது எம்.ஜி.ஆர் படமா என்ற கேள்வியை விட, இது அவருடைய லட்சியப் படம் என்று பதில் கூறும் அளவுக்குக் கருத்துச் சித்திரமாக அமைந்திருக்கிறது பல்லாண்டு வாழ்க!
அரசியல் பொடியோ, நெடியோ இல்லாமல் முழுக்க முழுக்க மனிதாபிமானம், லட்சியம் ஆகியவற்றின் வார்ப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் அடி நாதமாக சாந்தாராம் நிற்கிறார். அவருடைய தோ ஆங்கேன் பாரா ஹாத் இந்திப் பட மூலக் கதையின் வலுவும், சுவையும் சற்றும் குறையாமல் படமாக்குவதில் டைரக்டர் கே.சங்கரும், உதயம் புரொடக்ஷன்ஸ் கதை இலாகாவினரும் ஆழ்ந்த கவனம் செலுத்தியிருக்கின்றனர். வசனங்களில் கருத்துச் செறிவும் அழுத்தமும் இருப்பது போலவே, இசையும் பாடல்களும் தரமாக அமைந்திருக்கின்றன.
எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே பல்லாண்டு வாழ்க ஓர் இனிய சித்திரம்.
-
-
-
-
-
-
டியர் வினோத் சார்,
புரட்சி தலைவரின் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை பார்த்து ரசித்தவன் நான். பாடல்களில் மயங்கித்திரிபவன். அவரது படங்களின் மகத்தான வெற்றிகளில் யாரையும் போல எனக்கும் எந்தவொரு சந்தேகமும் வந்ததில்லை. சொல்லப்போனால் எல்லா நடிகர்களின் படங்களையும், எல்லாவிதமான படங்களையும் ரசிப்பவன், நல்ல படங்களை திரும்ப திரும்ப பார்ப்பவன். அப்படியே புரட்சித் தலைவரின் படங்களையும் திரும்ப திரும்ப சென்று பார்த்து ரசிக்கின்றவன். அந்த ரிலீஸ்/ரீரிலீஸ் விளம்பரத்தில் வந்திருந்த அந்த வாக்கியம்தான் என்னை அவ்வாறு கேட்க வைத்ததேயன்றி வேறொன்று நான் சொல்வதற்கு இல்லை. நிச்சயமாக எனக்கு எந்த சந்தேகம் வந்தாலும் உங்களைப் போன்ற நண்பர்களிடம் கட்டாயம் கேட்பேன்.
நன்றியுடன்.