It is news to me Sir. Thanks for the information.
Printable View
சதிலீலாவதி படம் பற்றி எம்.ஜி.ஆர் அவர்களது கருத்து
நான் நடித்த, எனது முதல் படமான சதிலீலாவதியில் எனக்களிக்கப்பட்டது இன்ஸ்பெக்டர் வேடம். முதலில் துப்பறிபவன் என்று சொன்னார்கள். அதன் பிறகு கதாநாயகனின் நண்பன் பரசுராமனாக குறிப்பிட்டு வேறு வழியின்றி என் மீது பச்சாதாபப்பட்டு கொடுத்த வேடம் தான் இன்ஸ்பெக்டர் பாத்திரம்.
அதிலும் சைக்கிள் ஓட்டத் தெரிந்த இன்ஸ்பெக்டராகப் பதிவே ஏற்றுக் கொண்ட நான் அப்பதிவியின் தகுதியைக் காப்பாற்றிக் கொள்ள கலைவாணரின் உதவியுடன் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டேன்.
சிலர் பதவியை உயர்த்துகிறார்கள். சிலரைப் பதவி உயர்த்துகிறது. ஆனால் நானோ அந்த அப்பாவி இன்ஸ்பெக்டரையும் உயர்த்தவில்லை. அந்த இன்ஸ்பெக்டர் பதவி(வேடமும்) என்னை உயர்த்தவில்லை.
தட்சயக்ஞம் படத்தைப் பற்றி மக்கள் திலகத்தின் பேட்டி
நல்ல உள்ள படைத்த எந்த எம்.கே.ராதா அண்ணன் அவர்கள் சிபாரிசு செய்தும் சமூகத் தொண்டு என்ற படத்தில் நடிக்க மறுத்தேனோ அதே அண்ணன் எம்.கே.ஆர் அவர்களிடம் நானே வலியச் சென்று வேலை கேட்டு நடிப்பதற்கும் சிறந்த ஆசான் இராசா சந்திரசேகர் அவர்களை மூத்த அண்ணனாகவும் அன்பு ஆசானாகவும் அடையவும் காரணமாகயிருந்த படம் தான் தட்சயக்ஞம்.
தட்சயக்ஞத்தில் எனக்கு வேலை வாங்கித் தந்த எம்.கே.ஆர் அண்ணன் அவர்கள் தான் முதலில் தட்சனாக நடிக்க ஒப்பந்தம் பேசி, முடிவில் சம்பளத் தொகை வேறுபாட்டினால் நடிக்காமல் போய்விட்ட படம் தான் இது.
எனக்கு வேலை வாங்கிக் கொடுத்து விட்டு தனக்கு வேலையில்லாமல் போயும் மகிழ்ச்சியோடு வாழ்க்கையைக் கழித்த எம்.கே.ஆர். அவர்களின் பண்பை நடைமுறையில் வெளிக்காட்டிய படம் இதுவே.
சீதா ஜனனம் படத்தில் மக்கள் திலகம்
http://i45.tinypic.com/2iu6aoo.jpg
Dear jai sir /roop sir
very nice postings about pirahalatha and makkal thilagam comments about his first two flims .
திரு செல்வகுமார் சார் அவர்களுக்கு எனது நன்றிகள் மற்றும்
பாராட்டுகள்
தங்கள் இதுவரை பதிவிட்டு வரும் தலைவரின் முதல்கட்ட
படங்களின் கதை சுருக்கும் அனைத்தும் மிகவும் அருமை
தங்கள் உழைப்பிற்கு நான் தலை வணங்குகிறேன்
தொடருங்கள் வெற்றியை நோக்கி மட்டுமே நம் பயணம்
தலைவனின் ஆசி நமக்கு எப்பொழுதும் உண்டு
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
நீதிக்கு இது ஒரு போராட்டம்,
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.
பாடல் தலைப்பு நாரணன் மாய லீலை திரைப்படம் வேதவதி அல்லது சீதா ஜனனம்
கதாநாயகன் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி/எம்.ஜி.ஆர் கதாநாயகி கே.தவமணிதேவி
பாடகர்கள் பாடகிகள்
இசையமைப்பாளர் பாடலாசிரியர்கள்
இயக்குநர் டி.ஆர்.ரகுநாத் ராகம் பைரவி
வெளியானஆண்டு 22-02-1941 தயாரிப்பு ஷியாமளா பிக்சர்ஸ்
நாரணன் மாய லீலை
விருத்தம்
நாரணன் மாய லீலை
நாரி நீ யறியமாட்டாய்
ஆரணங்குன் மேலிந்த
ராவணன் வைத்த ஆசை
காரணம் உயிரை நீப்பான்
கவலையற்றுலகம் வாழும்
பூரணப் புகழும் யாரும்
பூசிக்கும் தெய்வம் போல்வாய்