விழா தொடங்குவதற்கு சில மணித்துளிகளுக்கு முன்பு..திரு. ரவி..திரு. குமார்..தேனீ தாசன்..விழாவுக்கு திருவண்ணமலையில் இருந்து வந்திருந்த எம்ஜிஆர் பித்தன் திரு. கலீல் பாஷா அவர்கள் இவர்களுடன் திரு பம்மல் சாமிநாதன்
http://i45.tinypic.com/17s5lh.jpg
Printable View
விழா தொடங்குவதற்கு சில மணித்துளிகளுக்கு முன்பு..திரு. ரவி..திரு. குமார்..தேனீ தாசன்..விழாவுக்கு திருவண்ணமலையில் இருந்து வந்திருந்த எம்ஜிஆர் பித்தன் திரு. கலீல் பாஷா அவர்கள் இவர்களுடன் திரு பம்மல் சாமிநாதன்
http://i45.tinypic.com/17s5lh.jpg
திரு. ஜெய்ஷங்கர் அவர் மகன் வள்ளிநாயகம்.இந்த தலைமுறையில் நம் தலைவருக்கு ரசிகர் இருப்பது பெருமைதானே.இதுவும் சாதனையே..மற்றும் திரு.ஸ்டில்ஸ் ஞானம்
http://i50.tinypic.com/246uwk6.jpg
இன்றைய மாலை மலர் செய்தி
தமிழக சட்ட சபையில் தீர்மானம் - சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு எம்ஜியார் பெயர்.
"சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரை சூட்டியது போல்; உள்நாட்டு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்டியது போல், மண்ணுலகத்தை விட்டு மறைந்தாலும் மக்களின் மனங்களிலும், இல்லங்களிலும் தெய்வமாக வாழ்பவரும், மக்களின் மகத்தான சக்தி பெற்றவரும்; வள்ளல் என அனைவராலும் போற்றப்பட்டவரும்; தனக்கென வாழாமல் தமிழக மக்களுக்காக வாழ்ந்தவரும்; அன்புக்கு அடிமையாய்; ஆணவத்திற்கு அடிபணியாதவராய் விளங்கியவருமான மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், பாரத் ரத்னா, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரை நவீனமயமாக்கப்பட்ட சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திற்கு சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது'' என்னும் தீர்மானத்தை முன்மொழிகிறேன். இந்தத் தீர்மானத்தை இந்த மாமன்றம் ஏகமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று தங்கள் வாயிலாகக் கேட்டுக் கொண்டு அமைகிறேன்.
மக்கள் திலகத்தின் பெயரையும் - புகழையும் தொடர்ந்து காப்பாற்றிட தமிழக முதல்வருக்கு
மக்கள் திலகத்தின் ரசிகர்களின் தீர்மானம் ;
மக்கள் திலகம் அவர்கள் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தை முதலில் செம்மை படுத்தி , பசுமையான தோட்டமாக மாற்றி, மைய மண்டபம் அமைத்து மக்கள் திலகத்தின் படங்கள் - பாடல்கள் ஒளி பரப்பி கொண்டு தினமும் நல்ல முறையில் பராமரித்து கொண்டு வரவேண்டும் .
மக்கள் திலகத்தின் படங்களின் நெகடிவ் - சரிவர பராமரிக்க பட வில்லை - பல படங்களின் நெகடிவ் நிலை என்ன என்பதும் தெரியவில்லை . முழு மனதுடன் சம்பந்தப்பட்டவர்கள் நெகடிவ் - ஆவணங்களை தேடி கண்டு பிடித்து பாதுகாக்க வேண்டும் .
அண்ணா திமுக நிறுவனர் -
மண்ணுலகத்தை விட்டு மறைந்தாலும் மக்களின் மனங்களிலும், இல்லங்களிலும் தெய்வமாக வாழ்பவரும், மக்களின் மகத்தான சக்தி பெற்றவரும்; வள்ளல் என அனைவராலும் போற்றப்பட்டவரும்; தனக்கென வாழாமல் தமிழக மக்களுக்காக வாழ்ந்தவரும்; அன்புக்கு அடிமையாய்; ஆணவத்திற்கு அடிபணியாதவராய் விளங்கியவருமான மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், பாரத் ரத்னா, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் படத்தையும் - பெயரையும் எல்லா அரசாங்க விழாக்களிலும் - கட்சி விளம்பரத்திலும் கண்டிப்பாக இடம பெற உத்தரவிடவேண்டும் .
எந்த காரணத்தை முன்னிட்டும் இனி ஸ்டாம்ப் அளவில் மக்கள் திலகம் படம் வரக்கூடாது .
மக்கள் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற பல வசனங்கள் - காட்சிகள் அடிக்கடி ஜெயா தொலைக்காட்சியில் இடம் பெற வேண்டும் .
மக்கள் திலகம் எம்ஜியார் பெயரில் தினசரி காலை இதழ் துவங்க வேண்டும் .
''பொன்மனச்செம்மல் mgr '' - என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி நிறுவப்படவேண்டும் .
சமூகசேவைக்கும் - ஏழைகளுக்கு உதவும் கரங்களாகவும் - இலவச மருத்துவ சிகிச்சைக்கும் , ஏழைகளின் கல்வி உதவிகளுக்கும் ஈடுபடும் மக்கள் திலகம் எம்ஜியார் மன்றங்களை அரவணைத்து ஆதரவு தரவேண்டும்
மேற்கண்ட தீர்மானங்களை உடனடியாக செயல் படுத்தி மக்கள் திலகம் அவர்களின் ரசிகர்களின்
எண்ணங்களுக்கு உயிர் கொடுப்போம் என்று தீர்மானம் அங்கிருந்து வந்தால் .........
அந்த இனிய திரு நாள் - மக்கள் திலகம் அவர்களுக்கு நீங்கள் செய்யும் நூற்றாண்டு விழா சமர்ப்பணம் .
நம்புவோமாக .......
விழாவிற்கு கர்நாடக மாநிலம் ஷிமொகாவில் இருந்து வந்திருந்த திரு. சம்பத் அவர்களின் புதல்வரும், தீவிர எம்ஜிஆர் ரசிகருமான திரு. சிவக்குமார், பெங்களூர் திரு ரவி சென்னை திரு. லோகநாதன் மற்றும் திரு. நாகராஜ்
http://i47.tinypic.com/20958ba.jpg
இந்த படத்தை எனக்கு காட்டியவர்...ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெங்களூரில் வசிக்கும் எம்ஜிஆரின் தீவிர ரசிகரான திரு வில்சன் டான்..திரு. டான் அவர்கள் தலைவரின் புகழை உலகமெங்கும் பரப்ப வேண்டும் என்று முனைப்புடன் பேசுகிறார்.1960ம் ஆண்டிலிருந்தே தலைவரின் படங்களை பார்த்தும்..ஒரு தீவிர ரசிகராக ரசித்தும் இருக்கிறார். இந்த படம் எங்க வீட்டு பிள்ளையின் போது எடுக்கப்பட்ட படம். இன்னும் .நிறைய புகைப்படங்களையும், நெகடிவ்களையும் தன்னுடன் வைத்துள்ளார் ..தலைவரை பல முறை பார்த்து புகைப்படமும் எடுத்திருக்கிறார்..இவர் கிடைத்தது நமக்கு பெரிய சொத்து...தலைவர் புகழை உலகம் முழுவதும் இன்னும் பரப்ப இவர் ஊக்கம் நமக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறேன்..இதிலிருந்து, நம் தலைவர், மாநிலம் மட்டுமல்ல கடல் கடந்து, இனம் கடந்து, மொழி கடந்து வாழும் இறைவன் என்பது புலனாகிறது.
http://i46.tinypic.com/2f06dtg.jpg
மதுரை நகர தகவல்கள் .
தற்போது திருப்பரங்குன்றம் - லக்ஷ்மி அரங்கில் மக்கள் திலகத்தின் குலேபகாவலி படம் நடைபெற்று வருகிறது .
ரிக்ஷாக்காரன் படம் விரைவில் மதுரை - சென்ட்ரல் அரங்கில் வரவுள்ளதாக தகவல் .
மதுரை - மீனாக்ஷி அரங்கம் புது பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டு அடுத்த மாதம் உலகம் சுற்றும் வாலிபன் வருவதாக தகவல்
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்
பெங்களூரில் நடைப் பெற்ற மக்கள் திலகம் மலர் மாலை -1 வெளியீட்டு விழா படங்கள் பதிவிட்டமைக்கு நன்றி .நீங்கள் குறிப்பிடட்ட திரு டான் அவர்கள் மக்கள் திலகத்தின் தீவிர அபிமானி . அவரிடம் பல மக்கள் திலகத்தின் அபூர்வ படங்கள் மற்றும் நெகடிவ் உள்ளது என்று தெரிவித்தார் .
உலகளவில் மக்கள் திலகத்தின் புகழையும் அவரது நடிப்பின் ஆற்றல் - சமுதாய சீர் திருத்த பணிகள் - புதுமையான சண்டை காட்சிகள் - தனி மனித காந்த சக்தி -ஹாலிவுட் மற்றும் பல நாடுகளில் உள்ள நடிகர்களின் நடிப்பை விட மேலான இயல்பான நடிப்பின் வேந்தரான மக்கள் திலகம் ''style-soft-image-short and sweet acting'' என்ற concept மூலம் விரைவில் பல்வேறு நாடுகளில் உள்ள திரைப்பட அமைப்புகளுடன் நேரில் சந்தித்து புதிய முயற்சியாக
உலகளவில் மக்கள் திலகத்தின் புகழை எடுத்து செல்லுவதற்கு பாடு படும் திரு டான் அவர்களுக்கு நன்றியும் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக அவருக்கு எல்லா உதவிகளும் தந்து அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம் .
விழாவில் திருப்பூர் ரவி அவர்கள், தலைவரின் பெருமைகள் மற்றும் சாதனைகளை பற்றி உரையாற்றினார்..விழா மேடையில் திரு. கலீல் பாஷா, சிமோகா திரு. சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ, திரு. முனியப்பா, திரு. எம்ஜிஆர் மணி, திரு. பம்மல் சாமிநாதன், திரு. குமார்.
http://i50.tinypic.com/117xxyg.jpg
மக்கள் திலகம் திரியின் சார்பாகவும் , மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சார்பாகவும் ஆவணத்திலகம் திரு பம்மலார் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம் .
மக்கள் திலகம் மலர் மாலை -1 என்ற அருமையான ,உயர்தரமான மக்கள் திலகத்தின் 134 ஆல்பங்கள் கொண்ட ஒரு விலைமதிப்பில்லாத பொக்கிஷத்தை நமக்கு இரவு பகல் பாராது உழைத்து கடின உழைப்பில் உருவான இந்த பணிக்கு நமது நன்றி .
புத்தகம் வாங்கிய நண்பர்கள் அனைவரும் நேரிலும் , அலைபேசியிலும் தங்களுடைய மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர் .