Designed by Dr PS Ramesh Babu, the Medical Officer of Tamil Nadu Agricultural University, Coimbatore Hospital
drpsrameshbabu@gmail.com
https://mail.google.com/mail/u/0/?ui...2&disp=safe&zw
https://mail.google.com/mail/u/0/?ui...1&disp=safe&zw
Printable View
Designed by Dr PS Ramesh Babu, the Medical Officer of Tamil Nadu Agricultural University, Coimbatore Hospital
drpsrameshbabu@gmail.com
https://mail.google.com/mail/u/0/?ui...2&disp=safe&zw
https://mail.google.com/mail/u/0/?ui...1&disp=safe&zw
Designed by our ardent NT fan Dr Ramesh Babu of TNAU Hospital Coimbatore-3
https://mail.google.com/mail/u/0/?ui...2&disp=safe&zw
https://mail.google.com/mail/u/0/?ui...1&disp=safe&zw
Designed by Dr Ramesh Babu from Coimbatore, yet to become a member
https://mail.google.com/mail/u/0/?ui...2&disp=safe&zw
https://mail.google.com/mail/u/0/?ui...1&disp=safe&zw
https://www.youtube.com/watch?v=zpd0...FZNyi3mTALNtmQ
செந்தில்வேல்
தாங்கள் தேர்ந்தெடுக்கும் பாடல்கள் சூப்பரென்றால், அதற்குத் தரும் விளக்கம் இன்னும் சூப்பர்.
தங்கள் பதிவைப் படித்தவுடன் எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்...
சென்னை சாந்தியில் முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர்கள் சற்றே சோர்வடையும் நேரத்தில் இந்தப் பாடலும், யாரோ நீயும் நானும் யாரோ பாடலும் அழற்சியைப் போக்கி தெம்பை ஊட்டின. தேவதை பாடலும் நடிகர் திலகத்திற்கே கிடைத்திருந்தால் இன்னும் அமர்க்களமாக இருந்திருக்கும்.
எங்கெங்கோ செல்லும் பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் சிவப்பு மற்றும் கருநீல மேலங்கிகள் அவ்வளவு அழகாக அவரை எடுத்துக் காட்டியது சிறப்பாக இருந்தது. அதுவும் கல்லானவன் எனத்துவங்கும் அந்த மூன்றாவது சரணத்திற்கு முன் வரும் பின்னணியின் போது ஒலிக்கும் கிடார் இசையின் போது, இருவரும் தரும் அந்த Jerk, body twist with mild and slight movements, ஆஹா காணக் கண்கோடி வேண்டும்..
படத்தை விடுங்கள். அது எப்படியோ போகட்டும்.
தலைவருக்கு பாடல் காட்சிகள் இப்படத்தில் சூப்பர்.
http://cinema.dinakaran.com/Karan_im...-news-7093.jpg
இளையராஜாவிற்கு நமது உளமார்ந்த பாராட்டுக்கள்.
இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்தப் பாடலுக்கென்று தனியாக ரசிகர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்.
On behalf of this prestigious NT thread we welcome many more contributions from our ardent NT fan Dr P S Ramesh Babu, from Coimbatore
senthil
வாசு,
அழகான காட்சி! அற்புதமான போஸ்! அருமையான எழுத்து!
[நெஞ்சிருக்கும் வரை பற்றி இவ்வளவு தாமதமாக எழுதுவதற்கு மன்னிக்கவும்].
நெஞ்சத்தில் உள்ளதையெல்லாம் கொட்டி எழுதியிருக்கிறீர்கள். ரகுராமனும், சிவராமனும் ராஜேஸ்வரியும் பீட்டரும் மறக்க முடியாத பாத்திரங்கள். நட்பையும் நம்பிக்கையையும் அழுத்தமாக சொன்ன படம். உறவுகளை விட நட்பு மனித நேயம் உயர்ந்தது என்பதை அழுத்தமாக சொன்ன படம். வெளியே முறைப்பாக காட்டிக் கொண்டாலும் உள்ளே ஈர பசையுடன் இருக்கும் மனதிற்கு சொந்தகாரராக விஎஸ் ராகவனுக்கும் மறக்கமுடியாத ரோல்.
நமது பாட்டுடை தலைவனை பற்றி நினைக்கும்போதெல்லாம் பிரமிப்பாக இருக்கும். ஒரு மனிதன் அதிலும் ஒரு நடிகன் அதிலும் உச்சத்தில் நிற்கும் ஒரு நடிகன் மேக்கப் இல்லாமல் அதுவும் ஒரு கருப்பு வெள்ளை படத்தில் மேக்கப் இல்லாமல் நடிக்க அதுவும் ஆரம்பம் முதல் முடிவு வரை அது போல் தோன்ற ஒப்புக் கொள்ள வேண்டுமென்றால் எத்துனை தைரியம் வேண்டும்? தன் மீதும் தன் திறமை மீதும் தன் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் மேல் எத்துனை நம்பிக்கை வேண்டும்? இவையனைத்தும் நிரம்ப பெற்றதனால்தான் அவரால் இது போன்ற பல சோதனை முயற்சிகளில் ஈடுபட முடிந்தது. வாழ்க்கையில் ஒப்பனை செய்துக் கொள்ளாதவர் அல்லவா அதனால் திரையிலும் தேவைப்படவில்லை.
நீங்கள் குறிப்பிட்ட அந்த காட்சி மறக்கவே முடியாத ஒன்று. அந்த உடல் மொழி அசாதாரணமாக இருக்கும். நட்போடு ஆரம்பித்து கண்டிப்போடு முடியும். அந்த அட்டகாசமான நடை திரும்புதல் அப்புறம் அந்த போஸ் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒன்று. தியேட்டர்களில் கைதட்டல்கள் காதை கிழிக்கும். Spontaneous என்று சொல்வார்களே அது போல் தன்னிச்சையாக ரசிகர்கள் கைதட்டுவார்கள்.
எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. 1979-ம் வருடம் மாதம் நினைவில்லை. மதுரை அலங்காரில் நெஞ்சிருக்கும் வரை வெளியாகியிருக்கிறது. சனிக்கிழமை மாலைக்காட்சி. நிறைந்த கூட்டம். ஆங்காங்கே ஆர்ப்பரிப்பு இருந்தாலும் ஞாயிறு மாலைக்காட்சிக்கு நடைபெறும் அலப்பரை போல் இல்லாமல் ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது இந்த குறிப்பிட்ட காட்சி வந்தது. அந்த குறிப்பிட்ட இடம் வந்தபோது எழுந்த பலத்த கைதட்டல் சத்தம் என்னருகே அமர்ந்திருந்த ஒரு வயதானவரை திடுக்கிட செய்துவிட்டது. கிட்டத்தட்ட அவரை பிடித்து குலுக்கியது போல் உணர்ந்திருப்பார் என நினைக்கிறேன். நான் அவரை கவனிப்பதை பார்த்ததும் லேசான சிரிப்பை உதிர்த்துவிட்டு திரும்பிக் கொண்டார். தியேட்டரில் அப்படி ஒரு ரியாக்ஷன் ஏற்படுத்தக்கூடிய ஒரு காட்சியை அழகாக வர்ணித்து சுவையூட்டியதற்கு நன்றி.
அன்புடன்
வாசு, அப்புறம் இரண்டு விஷயம். உங்கள் ஊருக்கு பக்கத்தில் உள்ள மந்தாரக்குப்பத்தில் அவன்தான் மனிதன் பார்த்த சுவையான நினைவுகளை நண்பர் ஒருவர் பகிர்ந்துக் கொண்டார். உங்கள் ஞாபகம்தான் வந்தது.
இரண்டாவது முக்கியமானது, உங்கள் ஆண்டனியின் மகள் மேரியை சந்தித்தோம். பேசினோம். சொல்ல வேண்டுமா அப்போதும் உங்கள் நினைவுதான்!
ரவிகிரண் சார்,
தங்களின் உளப்பூர்வமான பாராட்டுதல்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.
'வீரபாண்டியக் கட்டபொம்மன்' முன்னோட்ட வீடியோவிற்கு சந்தோஷமான நன்றிகள். தங்கள் விடா முயற்சியில் இந்த முன்னோட்டத்தை நாங்கள் கண்டு அனுபவிக்கிறோம்.
முரளி சார்,
மிக்க நன்றி! 'நெஞ்சிருக்கும் வரை' நினைவுகள் அருமை. நமக்குப் பிடித்த அந்த அற்புதக் காட்சியை ஏனைய அனைவரும் ரசிக்கும் விதத்தை அழகாகச் சொல்லி இருந்தீர்கள்.
சிவராமன் பெயரை மறக்க முடியாது. அதுவும் எங்கள் குடும்பத்தினர் அந்தப் பெயரை மறக்கவே இயலாது. ஏனென்றால் என்னுடைய அம்மாவிற்கு சிவராமன், சீதாராமன் என்று இரு தம்பிகள். இதில் மூத்தவர் சிவராமன். என்னுடைய மாமா. இவர் நடிகர் திலகத்தின் தீவிர பக்தர். இவருடன்தான் 'சிவந்த மண்' கடலூர் ரமேஷ் திரையரங்கில் 09.11.1969 அன்று முதல் காட்சி, காலைக்காட்சி போய் பார்த்து, கூட்டத்தில் சிக்கி உடல் சிவந்து போய் உயிரோடு திரும்பி வந்தேன். போலீஸ் லத்தி பதம் பார்த்ததில் கையெல்லாம் காயம். அப்போது வயது எனக்கு சரியாக எட்டு. மாமாவிற்கும் இளம் வயது. இருபது வயதுதான். குடும்பத்தில் ஆறு பேர் பெண்களாக இருக்க இருவர் மட்டுமே ஆண்கள். மாமா சிவராமன் மிகுந்த கண்டிப்பானவர். நீங்கள் குறிப்பிட்ட மந்தாரக்குப்பம்தான் ஜாகை. தாத்தா அப்போது உயிருடன் இல்லை. இறந்து விட்டார்கள். பாட்டி மட்டுமே. குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பும் மாமாவின் கையில். அதுவும் அந்த இளம் வயதில்.
அந்த தெருவே எங்கள் மாமாவைக் கண்டால் கிடுகிடுக்கும். அந்த இளம் வயதிலேயே சிங்கம் மாதிரி அந்த ஏரியாவிற்கு அவர். நான் அவர் முகத்தை ஏறிட்டும் பார்த்து பேசியது கிடையாது. தலைவரை கணேசன் என்றுதான் மாமா உரிமையுடன் அழைப்பார். விடுமுறைக்கு மந்தாரக் குப்பம் சென்றால் தலைவரின் படங்களுக்கு என்னை மறக்காமல் கூட்டிச் செல்வார். குடும்பத்தில் மூத்த ஆண்பிள்ளை. மாமா இருக்கும் தெருவில் வாலிபப் பிள்ளைகள் தெருவில் நடமாடவே பயப்படுவார்களாம்.
அப்படிப்பட்டவர் இளம் வயதிலேயே 1971 ல் எதிர்பாராவிதமாக காலமாகி விட்டார். அதிர்ச்சியில் அனைவரும் உறைந்து விட்டோம். அம்மாவிற்கு மாமா மேல் மூத்த தம்பி என்பதால் நிரம்பப் பிரியம். மேலும் வறுமை நிலையில் உழன்ற குடும்பம். அம்மாவுக்குக் கல்யாணம் ஆகி விட்டதால் மீதி உள்ள 5 பெண்களையும் கரையேற்ற வேண்டிய பொறுப்பு சிவராமனுக்கு. அதையும் அவர் பொறுப்பாக செய்து வந்தார். அப்படிப்பட்டவர் நாங்கள் யாருமே எதிர்பாராத வகையில் காலனிடம் சென்று விட்டார். எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.
அம்மா வேறு அப்போது குடும்ப அறுவை சிகிச்சையை துணிந்து ஏற்ற முதல் பெண்மணி. அப்போது குடும்ப அறுவை சிகிச்சை என்பது இன்னொரு கண்டம் போல. ஆரம்ப காலம். யாருமே செய்து கொள்ள அஞ்சுவார்கள். அதனால் அம்மாவுக்கு அந்த அறுவை சிகிச்சையிலிருந்து அடிக்கடி மயக்கம் வந்து விடும். சுயநினைவை இழந்து விடுவார்கள். ஒரு அரை மணிநேரம் சென்றதும் மயக்கம் தானாக சரியாகி விடும். ஆனால் அந்த மயக்க நிலையிலும் அவர்கள் சில சமயங்கள் எழுந்து நடமாடுவார்கள். ஆனால் அவர்களுக்கு தன் நிலைமை என்னவென்று தெரியாது. அந்த நிலையிலேயே அடுப்பு பற்ற வைப்பார்கள். பாத்திரம் துலக்குவார்கள். சமைப்பார்கள். ஆனால் தான் யாரென்று அவர்களுக்குத் தெரியாது. மயக்கம் தெளிந்ததும்தான் அவர்களுக்கு தான் யாரென்றே தெரியும்.
நான் அப்போது சிறு வயது ஆதலால் அம்மாவின் இந்த நிலைமை கண்டு பயப்படுவேன். அம்மா மயக்கமானால் கிட்டே போக மாட்டேன். மயக்கம் தெளிந்து அம்மா என் பெயரைச் சொல்லி அழைத்தால்தான் அருகே செல்வேன்.
அப்படிப்பட்டவர்கள் தன் தம்பி, அதுவும் இளம்வயது தம்பி, அந்தக் குடும்பத்தையே, அதுவும் இன்னும் 4 தங்கைகள், ஒரு தம்பி என்று அனைவரையும் கரையேற்ற வேண்டிய தம்பி (இன்னொரு அக்காவிற்கு அதாவது எனது சித்திக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார் மாமா) இறந்து போனதை தாங்கவே முடியாமல் அம்மா துடிதுடித்துப் போய் விட்டார்கள்.
அடிக்கடி தன் தம்பியின் திடீர் மறைவால், அதிக துக்கத்தில், ஏற்கனவே அம்மாவிற்கு அடிக்கடி வரும் மயக்கம் அதிகமானது. ரொம்ப சிரமப்பட்டோம். நான் கடலூர் துறைமுகத்தில் பத்தாம் வகுப்புவரை பாட்டி வீட்டில் தங்கிப் படித்ததால் வாரம் ஒருமுறை அம்மா இருக்கும் ஊர் சென்று சனி ஞாயிறு அவர்களுடன் தங்கி விட்டு திங்கள் அன்று திரும்ப ஸ்கூலுக்கு வந்து விடுவேன். அம்மாவுடன் தங்கியிருக்கும் அந்த இரு நாட்களிலும் கூட அவர்கள் சில மணி நேரங்கள் மயக்கமாகி விடுவார்கள். வயது ஏற ஏற எனக்கு பயம் தெளிந்து அம்மாவின் அருகிலேயே இருப்பேன் அவர்களுக்கு மயக்கம் தெளியும்வரை. அப்பா வேலைக்குப் போய் இருக்கும் போது கூட பல தடவை அம்மா சுயநினைவிழந்து இருப்பார்கள். என்னுடன் பிறந்த சகோதர சகோதரிகள் அப்போது மிகச் சிறிய வயது. தவிரவும் அதில் ஒரு தங்கை இன்னொரு சொந்தக்காரார் வீட்டில் தங்கிப் படித்து வந்தாள். தம்பியும், என் பெரிய தங்கையுமே இருப்பார்கள். தம்பி கைக்குழந்தை. பெரிய தங்கை விவரம் புரியாத சிறுமி.
மாமாவின் நினைப்பு அதிகமானதால் அம்மா மிகவும் கவலையில் நொந்து போனார்கள். (இன்னும் கூட நினைத்துக் கொண்டு அழுதபடி இருப்பார்கள்)
இப்போது விஷயத்திற்கு வருகிறேன். 'நெஞ்சிருக்கும் வரை' படத்தில் தலைவர் பாடும் 'பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி' பாடலில் 'திருவளர்ச்செல்வன்' சிவராமனுக்கும், திருவளர்ச்செல்வி' ராஜேஸ்வரிக்கும்' என்ற வரிகள் வருமல்லவா?! மாமா இறந்து கொஞ்ச நாட்கள் சென்று ஒரு விடுமுறைக்கு நான் அம்மா வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது ரேடியோவில் இந்தப் பாட்டைப் போட்டு விட்டார்கள். அதுவரை நன்றாக இருந்த அம்மா அந்தப் பாட்டில் இந்த வரிகளில் 'சிவராமன்' என்று கேட்டதும் 'தொப்'பென்று மயக்கமாய்க் கீழே விழுந்து விட்டார்கள், பாடலில் 'சிவராமன்' என்ற தம்பி பெயரை கேட்டதும் தம்பி ஞாபகம் வந்து இந்த நிலைமை. அப்புறம் அரைமணி நேரம் சென்று முகத்தில் தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தியதும் நார்மல் ஆனார்கள்.
அதிலிருந்து இந்தப் பாடல் எப்போது எந்த வானொலியில் ஒலி பரப்பினாலும் அதுவும் அம்மா இருக்கும் போது ஒலி பரப்பினால் நைஸாக ஓடோடிச் சென்று ரேடியோவை 'ஆப்' செய்து விடுவேன். (நல்ல வேளை. தொலைக்காட்சிகளில் அதிகம் இந்தப் பாடலைப் போடுவதில்லை) எங்கே மயக்கமாகி விடப் போகிறார்கள் என்ற பயத்தில். பேச்சை மாற்றி விடுவேன். இன்றும் கூடத்தான். அந்த சம்பவம் என் மனதில் ஆழமாகப் புதைந்து விட்டது. அம்மாவைவிட நான் அதிகம் பயப்படுவேன் இந்தப் பாட்டிற்கு இப்போதும்.
எனக்கும் அந்த பாடலை இப்போது கேட்டாலும் எங்கள் குடும்பம் பட்ட வேதனை, மாமா இறந்த சோகம், அம்மாவின் மயக்கம் என்று மனதில் துக்கம் பீறிடும். நம் ரகுராமன் தன் தங்கை ராஜேஸ்வரிக்கு சிவராமனைத் திருமணம் முடித்து வைத்து அழகு பார்த்தான். எங்கள் குடும்பத்து சிவராமனோ தானும் திருமணம் முடிக்காமல், தங்கைகளுக்கும் திருமணம் முடிக்காமலேயே (தீவிர தலைவர் பக்தன் வேறு) சகோதரிகள் அனைவரையும் நிர்க்கதியாக்கி தவிக்க விட்டு விட்டு இளைஞனாய் இருக்கும் போதே இறைவனடி சேர்ந்துவிட்டான்.
இன்னொரு ஆறுதலான விஷயம். காலப் போக்கில் அம்மாவுக்கு அடிக்கடி வரும் வந்த அந்த மயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி விட்டது. ஆனாலும் எப்போதாவது ஒருமுறை இன்னும் கூட எட்டிப் பார்ப்பதுண்டு.
மன்னிக்க வேண்டும் முரளி சார். எங்கள் குடும்பக் கதையைச் சொல்லி உங்களை சங்கடப்படுத்தி விட்டேன். எனக்கு அந்தப் பதிவைப் பதிவிடும்போதே இந்த நினைவு முழுக்க இருந்து அப்புறம் கொஞ்சம் மறந்தது. இப்போது நீங்கள் சிவராமன் என்று பெயரைக் குறிப்பிட்டிருந்ததும் மீண்டும் அந்த நினைவு வந்துவிட்டது.
இன்றுவரை அம்மாவை அந்த பாட்டை நான் கேட்கவே விடுவதில்லை. எங்கள் குடும்பத்தில் இந்தப் பாட்டிற்கு இப்படி ஒரு பின்னணி உண்டு.
எங்களை என்றும் சோகத்தில் ஆட்டி வைக்கும் பாடல்.
https://youtu.be/35rQjjzAlmA
நெய்வேலியார் அவர்களுக்கு பாலகாட்டார் எழுதும் மடல்
தங்களுடைய எழுத்தினை என்னவென்று பாராட்டுவது...! இது கேள்வி சார் ! உண்மையிலயே தெரியவில்லை...அந்தளவிற்கு ஒரு தர உச்சம் !
கட்டபொம்மன் திரைகாவிய முன்னோட்டம் - விடா முயற்சி என்பது ஒருபுறம் இருந்தாலும் தலைவரின் அருள் இதுதான் உண்மை ! நான் எதிர்பார்க்காத ஒருவரிடமிருந்து எனக்கு இது கிடைத்தது என்றால் அது அவர் அருள் அல்லாமல் எப்படி ?
அன்புடன்
rks
https://scontent-sin1-1.xx.fbcdn.net...91&oe=565B9F25
Kalam Sir, Our salutes to you. We dream of greater India, scientific India, self-dependent India,
We love you. We love Kamaraj. We love Sivaji Ganesan.
You are not a politican.
But you are a role model.
You are people's President.
We saw Kamaraj and Sivaji in you.
We must elect a person,
who adores you, vows to rule as you, Kamaraj and Sivaji Ganesan, a role model,
Kamaraj, undoubtedly, the only leader whose period was a golden rule for Tamil Nadu.
People knew him.
Kalam - People know you. You are a people's President.
Sivaji Ganesan - was a failure only in elections, not in politics. But he was a true follower of Kamaraj. He was honest. He was outspoken. He was a down to earth person.
People don't know him as a leader - able administrator - man of highest calibre in public administration.
We are sure, a leader who vows to follow these leaders, will definitely bring the golden period for Tamil Nadu. The best tribute we can give you, is to choose such a person as our administrator.
May your Soul Rest in Peace.