ஒரு சேஞ்சுக்கு படத்தின் நாயகன் நா.அழகப்பனே வந்து படத்தை விமர்சிக்கிறார்.ஓவர் டூ நா.அழகப்பன்.
வணக்கங்க.நாந்தான் நாவன்னா.அழகப்பன்.உங்க படத்த நீங்களே விமர்சனம் பண்ணுங்கன்னு நம்ம செல்வம் தம்பி கூப்டுச்சு.சரி தான் கழுதய பண்ணிட்டு போவோமுன்னு வந்தேன்.
படத்துல நான் ஒரு நாடக ட்ரூப் வச்சிருக்கேன்.(தியாகு,மனோபாலா தவிர மத்ததெல்லாம் நம்ம பசங்க தான்).ஓப்பனிங் சாங்க முடிச்சிட்டு வந்து பாத்தா எங்கம்மா என் சாதகத்த பாத்துட்டு பயந்து போய் கிடக்காங்க.அதுக்கு பரிகாரமா அங்கன தீடீரென முளச்ச ரம்பயோட சிலைக்கு மால போடுறேன்.
உடனே ஏற்கனவே என் நகைச்சுவையில மயங்குன (டி.வி ல வின்னர்,மருதமலை,புலிகேசி, படத்து ஜோக்ஸெல்லாம் பாத்துருக்கும் போல இருக்கு.ஏன்னா இந்தப்படத்துல நான் ஒன்னும் பெரிசா செய்யலியே) ரம்பை என்னை ஆள் வச்சு இந்திரலோகத்துக்கு தூக்கிட்டுப் போய்டுது.இருங்க..இருங்க முழுக்கதையும் சொல்றேன்.அதுக்குள்ள ஓடுனா எப்படி?
காலையில பூலோகத்துலயும்,நைட்டு மேலோகத்துலயும் இருக்கிற மாதிரி செட்டப்.அப்போ எப்ப தூங்குவ?னெல்லாம் கேட்கக் கூடாது.அழுதுடுவேன்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்
மேலோகத்துல இந்திரன் கடலை போடுறதையும், எமன் பாவம் செஞ்சவங்களுக்கு தண்டனை குடுக்குறதையும் மாறி மாறி ஏதோ தீவுத்திடல்ல பொருட்காட்சி பாக்கிற மாதிரி பாக்குறேன்.
நடுவுல நாரதரா நாசர் அப்பப்போ வந்து போறாரு.எங்க பக்கத்து வீட்டு குழந்தை தீடீரினு செத்துப்போக,எனக்கு இந்த எமப் பய மேல வந்தது பாருங்க கோவம்...இன்டர்வெல்.
அதுக்கு அப்புறம் கதய எப்படி கொண்டு போறதுன்னு தெரியல.கழுதய கொண்டு போய்த்தான ஆகனும்னு, பூலோகத்துல காச்சுன சாராயத்த மேலோகத்துக்கு எடுத்துட்டு போய் கிங்கரப்பசங்களுக்கும்,சித்ரகுப்தனுக்கும் ஊத்திக் கொடுத்து இந்த எமப் பயல கொல்லலாம்னு பாத்தா,அந்தப் பயலுக்கு சாவே கிடையாதாம்.அந்த நன்னாரிக்கு பொறந்த நாதாறி எல்லாம் கனவுன்னு நம்பி எங்கள ஏதும் செய்யாம விட்டுடுச்சு.
சரி மக்களோட விதிய மேலோகத்துல இருந்து படிச்சிட்டு போய் பூலோகத்துல அதையெல்லாம் சொல்லி,நரகத்துல கொடுக்கிற தண்டனையையும் சொல்லி அவங்களோட பாவங்கள குறைக்கிறேன்.இதனால* முல்லைப் பெரியாறு பிரச்சினை வரைக்கும் தீந்துருதுன்னா பாருங்களேன்.படத்துலயே இதான் பெரிய காமெடின்னு சில நன்னாரிக சொல்லிக்கிட்டு திரியுதுங்க.இருக்கட்டும்...இருக்கட்டும்...
எமப்பயலோட வரவுல ஆட்கள் குறைய டென்சனாகிறாரு எமன்.நாரதர் வந்து என்னைப் போட்டுக் கொடுக்க கடுப்பான இந்திரனும்,எமனும் எனக்கும்,ரம்பைக்கும் சாபம் கொடுக்கிறாங்க.
கொடுமை,கொடுமைன்னு இவ்வளவு நேரம் படம் பாத்தா கிளைமேக்ஸ்ல ஒரு கொடுமை திங்கு,திங்குன்னு ஆடுச்சாங்குற கதையா நான் 90 வயசுக் கிழவனா மாறிடுறேன்.அப்புறம் என்ன ஆச்சு.கத முடிஞ்சது.உங்க கத இல்லீங்க.எங்க படத்தோட கதை.
முதல்ல படத்துல இருக்கிற நல்ல விசயங்கள பாப்போம்.முதல்ல ஞாபகம் வர்றது நம்ம தோட்டா தரணி அண்ணண் தான்.என்ன அருமையா,பிரம்மாண்டமா செட் போட்டுருக்காரு.உங்களுக்கு ஒரு தொப்பிதூக்கல்ணே(ஹேட்ஸாப்).
அப்புறம் இந்த எமப்பயலா வற்றானே.அவன் நல்லா நடிச்சிருக்கான்ப்பு.சும்மா சொல்லக்கூடாது.டயலாக் டெலிவரியும்,பாடி மாடுலேசனும் பய பின்னியிருக்கான்.அதுவும் நீங்க நல்லவரா?கெட்டவரா?ன்னு ஒருத்தன் கேட்குற சீன்ல பிச்சு உதறியிருக்கான்.
நம்ம ஒளிப்பதிவாளர் கோபிநாத்.நல்லா கலர்புல்லா படம்புடிச்சிருக்காரு அண்ணே.
அம்புட்டுதேன். இப்ப மத்த விசயங்கள பாப்போமா...(ஆஹா கிளம்பிட்டாங்கய்யா..கிளம்பிட்டாங்க)
படத்துல கதையும்,திரைக்கதையும் கொஞ்சம் அப்படி,இப்படி இருக்கிறதால நம்ம ஹீரோயினையும் கொஞ்சம் அப்படி,இப்படி காட்டியிருக்கோம்.ஒரு வார்த்தைல சொல்லனும்னா பில்லா நயந்தாராவுக்கு மேலா.என்ன* வ*டிவேலு ப*ட*த்துல*யா இப்ப*டினு கேட்க*க்கூடாது.வேற* வ*ழியில்ல*.
அப்புறம் படத்துல சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வர்ற மாறியெல்லாம் சீன் இல்ல.ஏதோ அங்கொன்னும்,இங்கொன்னுமா எங்கள அறியாம வந்தது தான் இருக்கு.அதனால ஓவரா எதிர்பார்த்து படத்துக்கு வராதீங்க சொல்லிப்புட்டேன்.
வசனங்கள்.நம்ம தம்பிராமையா நல்லா தமிழ்ல வசனம் எழுதுறாப்ல.ஒத்துகிடுதோம்.அதுக்காக இப்படியா தீடீர் திடீர்னு...முடியல*...
படத்துல நானும்,அந்த எமப்பயலும்,நாரதரும் நல்லா நடிச்சிட்டதால மத்தவங்கெல்லாம் ஒப்புக்கு சப்பாணிதான்.
எங்கண்ணண் கவுண்டமணி எமனாகவும்,செந்திலு சித்ரகுப்தனாகவும் நடிச்ச லக்கிமேன் அளவுக்கு கூட படம் இல்லைன்னு பாத்தவங்க சொல்றாங்க.வெயிட் பண்ணி பாப்போம்
எப்ப*டி ஓடுதுன்னு.
மொத்ததுல தமிழ்மண வாசகர்களுக்கு புரியறா மாதிரி சொல்லனும்னா ஒரு நல்ல உபத்திரவம் இல்லாத,எந்த வம்பதும்புக்கும் போகாத,மொக்கை.
கடைசியா ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்.நாங்க எப்படி படம் எடுத்தாலும் வந்து பாக்குறீங்க...நீங்க ரொம்ப நல்லவங்க...(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
சரி வர்ட்டா...அடுத்து ஒரு நல்ல படத்துல சந்திப்போம்(எடுத்தா...)
நீதி:
வருடத்திற்கு சுமார் 100 தமிழ்ப்படங்கள் வெளிவரும்.அதில் 10 தான் நல்ல படங்களாக இருக்கும்.இன்னும் 11 மாசங்கள் இருக்கிறது.காத்திருப்போம்.
http://kadalaiyur.blogspot.com/2008/...g-post_02.html
Idhula irundhu enna theriyudhu,
Oru maasam aayum nalla padame varala,......... except Pirivom Sandhippom----sumaaraana padam