-
I remember back when Kozhi Koovudhu and Ilamai Kalangal albums were released at the same time. My cousin had a hard time choosing which one to buy (he had money for only 1). He choose KK eventually. Was certainly a very hard choice to make - so much of quality and magical musical abundance back then ....
-
Punnaimaran,
Thanks to you for getting this thread back on track. A very nice writeup. Waiting for your further posts.
I was hoping app_eng would join in since he has also traveled a long way with Raja in the 80s. He did join but I am hoping he will write more details.
This is another good way to write about the 4 decades of Raja. How you have grown with me, maybe gone away from him for some time and how you came back. Or how you stayed back and don't want to travel any more :D This would add a good dimension to the topic to a dry analysis.
-
Thanks suresh65
16 வயதினிலே பாடல்களைத் தொடர்ந்து ஒரு காதல் தேவதை, தாலாட்டு பிள்ளை என்னை, உறவுகள் தொடர்கதை, பன்னீர் புஷ்பங்களே போன்ற பாடல்கள் எங்களுக்கு(சென்ற இடுகையில் குறிப்பிட்ட 'ரிப்பீட்' நண்பன்) பிடித்திருந்தது. ஆப்போதெல்லாம் ரேடியோவிலும், என் நண்பன் வீட்டு ரெக்கார்டு பிளேயரிலும் திருமண விழாக்களிலும் தான் பாடல்கள் கேட்க இயலும். அந்த காலகட்டத்தில் தான் எங்கள் கிராமத்தில் ஒரு புதிய "ரெக்கார்டிங் சென்டர்" ஆரம்பித்தார்கள். அது எங்கள் வீட்டிலிருந்து ஒரு 25 நிமிடம் நடக்கும் தொலைவில் இருந்தது(எங்களுக்கு 10 நிமிட ஓட்டம்). தினமும் பள்ளி முடிந்து வந்ததுமே பம்பரத்தைத் தூக்கிக் கொண்டு அங்கே ஓடி போய், "அண்ணே புதுசா வந்திருக்குற இளையராஜா பாட்ட போடுங்க" என்போம். அவரும் எங்களுக்காக பாடல்களை ஒலிக்கச் செய்வார். பம்பரம் விளையாடிக் கொண்டே பாடல்களை கேட்டு மகிழ்வோம். இதனூடே ஒரு நாள் காலை இலங்கை வானொலியைக் கேட்டுக்கொன்டே பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருக்கையில் அப்துல் ஹமீத் அறிவிக்கிறார்.... "சிட்டுக்குருவி என்ற திரைப்படத்திற்காக இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமயணியமும் பி.சுசீலாவும்". என் கண்மணி உன் காதலி என்று தொடங்குகிறது அந்தப் பாடல், நான் வானொலிப் பெட்டியின் அருகிலேயே நின்று விட்டேன். அப்பொழுது இருந்த என்னுடைய உணர்ச்சிகளை வார்த்தைகளால் விளக்க முடியவில்லை. மனதில் அந்த பாடலை பாட முயன்று கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்ததும் முன்னே என் நண்பன் நடந்து செல்வதைப் பார்த்தேன். அவனருகே ஓடிசென்று, "எலே, புதுப் பாட்ட கேட்டியா???? கருவாட்டு கூட முன்னால போ...." என்றேன். அவன் இல்லை என்றதும், நான் அவனுக்கு அந்தப் பாடலைப் பற்றி சொல்லி "உனக்கு கண்டிப்பாகப் பிடிக்கும் என்றேன்". மாலை வீட்டிற்க்கு வந்ததும் துணிகளை மாற்றி விட்டு நாங்கள் இருவரும் ரெக்கார்டிங் சென்டரை நோக்கி ஓடுகிறோம்.(கோலிக்காய் 'சீசன்' வந்து விட்டதால் டவுசர் பாக்கெட்டில் கோலி குன்டுகள் குலுங்குகின்றன :lol: ). தொலைவில் இருந்தே, "அண்ணே 'என் கண்மணி, என் கண்மணி'" என்று தொண்டையைக் கிழித்துக் கொண்டே வந்து சேர்ந்தோம். பாடலைக் கேட்டதும் இருவருக்கும் ஒரே மகிழ்ச்சி, மீண்டும் மீண்டும் கேட்டு வரிகளை எழுதினோம். ஆனால் 'சூப்பர் மார்க்கெட்டு' என்பது மட்டும் விளங்கவில்லை. (எங்கள் கிராமத்தில் சிறிய சந்தையைத் தவிர எதையும் நாங்கள் பார்த்ததில்லை). இந்தப் பாடலிலிருந்து நாங்கள் பாடல் வரிகளை எழுதி வைத்துப் பாட ஆரம்பித்தோம்.
பயணம் தொடரும்....
-
-
-
Dear punnaimaran,
very nice write up.
Experiences - Ellarukum nadakaradhu dhan.
Adhai azhaga, ezhuthula solla theiryanam,
adhu oru Art.
Adhu ungaluku romba nalla iruku.
pl continue your great experiences...
(unga quotation romba nalla iruku. nice and true ...)
-
Thanks Usha Sankar. This is the first time I'm attempting to write my experiences and am glad that you liked it. My thanks to eagle also for starting this topic. It's like re-experiencing the past.
-
punnai maran anne - kalakreenga...
-
புன்னை மாறன்,
கொடுத்து வைத்தவர் அய்யா நீர், இப்படி ஒரு ரிகார்டிங் சென்டர் ஊரில் இருப்பதற்கு :-)
அருமையான அனுபவங்கள்! இன்னும் எழுதுங்கள்!
-
Punnaimaran,
Another nice post. You have been able to capture your times very well and give us a good picture about you and your place. It is very nice reading your experience. Please continue.