இரண்டாம் தொகுப்பின் கடைசிப் பாடலாக வரும் "என் இனிய பொன் நிலாவே!".. யேசுதாசின் துள்ளல், குதூகலம், ஆற்றல்... பிரமிக்க வைக்கிறது. நான் இந்த அளவுக்கு அவர் பாட்டோடு கலந்துவிடுவார் என எதிர்பார்க்கவேயில்லை. "கனாவே.." என பல்லவியின் கடைசிவரியை அவர் முடிக்கும் விதம் அட்டகாசம். அசலை அப்படியே கொண்டு வரணும் என்ற எதிர்பார்ப்பு எல்லாம் இல்லை. இந்த அளவுக்கு பாடலின் உணர்வோடு கலந்தாலே போதும்! வேறு என்ன பெரிசா வேணும்? பெண்கள் கோரஸ் கூடுதல் பலம். சபாஷ் சதா! சிறப்பா செய்திருக்காங்க.