http://www.youtube.com/watch?v=9U6xl8czvXg
Printable View
Enjoy Mr Vasu Sir. By this time the Evening show would have been
started in your house.
ராகவேந்திரன் சாரும், முரளி சாரும் நேற்றைய கொண்டாட்டங்களைப் பற்றி அற்புதமாக பதிவிட்டிருந்தார்கள். நம் ஹப்பர்கள் அனைவருடனும் வசந்த மாளிகையைக் கண்டு மகிழ்ந்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று.
1008 பிரச்னைகள், குடும்பப் பொறுப்புகள், வேலை, அலைச்சல் சகிதம் வாழ்க்கையில் உழன்று கொண்டு இருக்கும் நாமெல்லோரும் சின்னக் குழந்தைகள் போல நேற்று எல்லாக் கவலைகளையும் மறந்து நம் இதய தெய்வத்தின் ஒவ்வொரு அசைவினையும் அணு அணுவாக ரசித்து கைதட்டி ஆரவாரக் கூச்சலிட்டு அனைத்துக் கவலைகளையும் சில மணி நேரங்கள் மறந்து... மனம் மகிழ்ந்து.... எவ்வளவு ஜாலி! எத்தனை சந்தோஷம்! ரசிகவேந்தர் சார், முரளி சார், அன்பு பம்மலார், சந்திரசேகரன் சார், பார்த்தசாரதி சார், ராதாகிருஷ்ணன் சார், ராமஜெயம் சார், பாரிஸ்டர் சார், (மனுஷன் facebook -இல் கலக்குகிறாரய்யா...) ஆனந்த் சார், சித்தூர் வாசுதேவன் சார், (இரு முறை தொடர்ந்து படம் பார்த்து ஆச்சர்யத்தில் மூழ்க வைத்தார்) மற்ற எல்லா நண்பர்களுடனும் இனிமையாகக் கழிந்த இந்த நாளை எப்படி மறக்க முடியும்! படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கோபாலின் போன். அங்கிருந்து அவ்வளவு ஆர்வம். ஆனால் இன்றுதான் பேச முடிந்தது. அதே போல அன்பு நண்பர் வினோத் அவர்களின் அன்பு விசாரிப்பு... ராகவேந்திரன் சாரின் சுறுசுறுப்பு, பம்மலாரின் சரவெடிகள், முரளி சாரின் அபரிமிதமான அன்பு, பார்த்தசாரதி சாரின் இனிய நட்பு, ராதாகிருஷ்ணன் சாரின் தலைவர் பக்தி...அங்கத்தினர் அல்லாத ரெகுலர் ஹப்பர்கள், கிரிஜா மேடம், இவர்களுடன் சாத்தப்பன் சார், கொண்டலதாசன் சார், எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற போன்று T.M.S. (மனுஷன் ரசிகர்களோடு படம் பார்க்க ஆரம்பித்து விட்டார். பால்கனிக்கே வரவில்லை. கீழே லோ கிளாஸ் இருக்கையில் அமர்ந்து நடிகர் திலகத்தையும், அவரைக் கொண்டாடும் ரசிகர்களையும் ரசித்துக் கொண்டிருந்தார் போலீஸ் பாதுகாப்புடன். ஏகப்பட்ட ரசிகர்கள் அவர் காலில் விழுந்து ஆசி பெற்றனர். 'யாருக்காக' பாடலுக்கு முன் கிளம்பி விட்டார்) வந்து கலக்கினர்.
இளவயது இருபாலாரையும் நிறைய பார்க்க நேர்ந்தது. வேலூரிலிருந்து தலைவரின் வெறித்தனமான ரசிகர் படம் பார்க்க கல்லூரியில் படிக்கும் தன் மகளுடன் வந்திருந்தார். ராகவேந்திரன் சாரும், நானும் அவர்களைப் பேட்டி எடுத்தோம். வாண வேடிக்கைகள் ஆறேழு நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து வர்ண ஜாலங்களாய் விண்ணில் ஒளிர்ந்தன. தலைவர் பேனருக்கு சாத்துக்குடி மாலைகள் கோர்க்க வெகு நேரமாயிற்று.
நூறு தேங்காய்களுக்கு மேல் உடைக்கப்பட்டன. ஆல்பர்ட் திரையரங்கின் முன் உள்ள சாலை சில நிமிடங்கள் பிளாக் ஆனது. எங்கு பார்த்தாலும் தேங்காய் ஓடுகள் தாம்.
பெண்கள் கூட்டம் அதிகம். மாலை நான்கு மணியிலிருந்தே பெண்கள் நடக்கும் அளப்பரைகளை இடத்தை விட்டு எழுந்திருக்காமல் பார்த்து ரசித்தபடியே இருந்தனர். அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்ற செயலாளர் திரு M.L கான் அனைவரையும் கன்ட்ரோல் செய்தபடி இருந்தார். மேட்னி முடிந்து திரையரங்கிலிருந்து வெளியே வரும் ரசிகர்கள் கைகளை உயர்த்தி ஆட்டியபடியே 'சிவாஜி வாழ்க' என்று கோஷம் எழுப்பியபடி உற்சாகமாக வந்தது உணர்வு பூர்வமாய் இருந்தது.
'ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்' பாடலுக்கு சில்லறைகள் சிதறின. கடலூரில் இருந்து என்னுடன் வந்த நண்பர்கள் 50 ரூபாய் டிக்கெட்எடுத்து படம் பார்த்துக் கொண்டிருக்கையில் அவர்கள் ஷர்ட் பாக்கெட்களில் கூட ஒரு ரூபாய் நாணயங்கள் விழுந்தனவாம்.
கர்ணன் புகழ் 'திவ்யா பிலிம்ஸ்' சொக்கலிங்கம் வந்திருந்தார். மிக நட்புடன் நமது திரிகளைப் பற்றி கேட்டு தெரிந்து கொண்டார். மற்றொரு சந்தோஷமான செய்தியையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார். அது...
கர்ணன் மறுபடியும் ரீ-.ரிலிஸ் என்பதுதான். விரைவில் ஆல்பர்ட் திரையரங்கில் வெளியாகலாம் என்று கூறினார். கமலா திரையரங்கிலும் கேட்டிருப்பதாகக் கூறினார். முரளி சார் இதைப் பற்றிய உறுதியான தகவல்களை நிச்சயம் அளிப்பார்,
படம் முடிந்ததும் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிய மனமில்லாமல் பிரிந்து வந்தோம். வீடு திரும்பி நெடு நேரமாகியும் ஒரு கண்ணில் நடிக தெய்வமும், மறு கண்ணில் நம் அன்பு நண்பர்களும் நிழலாடியபடியே இருந்தார்கள்.
மொத்தத்தில் மறக்க முடியாத சரித்திர நாளாகி விட்டது நேற்றைய ஞாயிற்றுக் கிழமை.
Exactly Mr Vasu Sir.
ராகவேந்திரன் சார் ஏற்கனவே 'ஆல்பர்ட்' அம்ர்க்களங்களை அழகான நிழற்பட பதிவுகளாய் அளித்து அசத்தியிருந்தார். இப்போது நம் காமெரா கிளிக்'கிய சில போட்டோக்கள்.
http://i1087.photobucket.com/albums/...2/DSC00253.jpg
http://i1087.photobucket.com/albums/...2/DSC00254.jpg
Hi all,
Nice to see photographs of all eminent hubbers. The description about Sunday show with hubbers were extremely descriptive just like live coverage but sadly in the theatre I watched there was no cut out & allaparais
Wish to see NT movie with you all hubbers
waiting for next movie of NT, I strongly feel the movie must be advertised like Karnan
Dear Mr. Neyveli Vasudevan sir,
Excellent coverage of Albert theatre's Sunday alapparais both by brief description and SUPERB photos.
You and Mr. Raghavendar sir covered each and every corner of Albert theatre, ofcourse inside the theatre also.
Thus both of you kept that day incident as record for future.
We feel we are there with you all, by this brief coverage.
Descriptions by Raghavendar, Murali Srinivas, Cahndrasekhar and yourself give a detailed report about sunday function.
Thank you all.
சென்னையில் வசந்த மாளிகை திரைப்பட வெளியீட்டைக் கொண்டாடும் வகையில் தேங்காய் உடைக்கும் காட்சி
http://youtu.be/L27gxhdOLh4
ஆனந்தை வரவேற்க ஆனந்த நடனம்
http://youtu.be/Iy1Agk_Egq0
a coverage in the pages of cinema lead website.
From: http://cinemalead.com/news-id-sivaji...-03-131581.htmQuote:
Even now Sivaji is the boss at the box office.
http://cinemalead.com/cinema-images/...i-11-03-13.jpg
Sivaji Ganesan, the legendary actor is known for his classic and he is rightly called as Marlon Brando of Indian cinema. The actor's Karnan which was released in the digital version got a huge profit and the makers has decided to release Vasantha malaigai which is running successfully now. Now the latest is that Sivaji's VeeraPandiya Kattaboman,Pasamalar and Puthiya Paravai will soon be released in digital. Among all these Pasamalar(Digital) likely to have a next month release.
Distributors feels that it is safe bet to invest on old Sivaji films as people are very much interested in watching his old classics. Now famous production houses are in urge to get the rights of Sivaji's classics. Even now Sivaji is the boss at the box office.
Thanks for the info about the BOSS of Box Office. Even some
fans who have talked to Mr Chockalingam given a suggestion to
take up Sivandha Mann. Those who are talked about Brahmandam
that one Helicopter Scene is sufficient proof. Do not know whether
it will materialise or not.
Thanks Adiram sir.
Thanks for the alapparai videos Raghavendran sir.
Thank u very much Vasu sir.
Now that it has been proved beyond any doubt and no second thought that NT reigns supremacy in the box office even after his demise. Karnan was a good beginning and VM fills up the shoes. It has now become the order of the day that only NT's classics deserve a rerun in improvised formats of coloring or digital conversion. I once again request the ardent followers of NT to see that NT movies are alternated in rerelease as one color followed by one black and white. Now VM followed by Paasamalar paves way for this formula of embedding NT's cult image in the hearts and minds of our younger generation present and to come. In my personal opinion, I would like to suggest combinations like Pudhiya Paravai and Uyarndha Manithan, Sivandha Mann and Paava Mannippu, Thillana Mohanambal and Paalum Pazhamum, saraswati sabatham and Uthama Puthiran, Raja and Pattikkada Pattanama, Raja raja cholan and vietnam veedu.... like this. NT lives and we live to love him and adore him.
வெவ்வேறு ஊர்களில் ரசிகர்கள் நிறுவிய பேனர்களின் நிழற்படங்கள். அனைவருக்கும் நமது உளமார்ந்த நன்றி.
மதுரை நாகராஜன் அவர்கள் அனுப்பிய நிழற்படம்
http://i1146.photobucket.com/albums/...ps7d544c07.jpg
சென்னை கோவா ராஜேந்திரன் அவர்களுடைய பேனரின் நிழற்படம்
http://i1146.photobucket.com/albums/...ps0ad07bfe.jpg
மத்திய சென்னை மாவட்ட சிவாஜி மன்றத் தலைவர் கேசவன் அவர்கள் நிறுவிய பேனர்களின் நிழற்படங்கள்
http://i1146.photobucket.com/albums/...ps1732e159.jpg
http://i1146.photobucket.com/albums/...psb37b513a.jpg
http://i1146.photobucket.com/albums/...ps86ba894b.jpg
http://i1146.photobucket.com/albums/...ps1cbdc129.jpg
Sivajisendhil sir,
Your suggestions are good.
But whatever may be the suggestions, they should not digitalise more than two movies per year, and every film MUST be given not less than six months gap, because we have to compet with new movies and public also should get ready to recieve.
If there is simultanious releases, then our past history will repeat. Let Pasamalar wait up to June.
and pl. dont suggest thillana and saraswathi sabatham. we are fed up with that guy C.N.Paramasivam.
ராகவேந்திரன் சார் வெவ்வேறு ஊர்களில் ரசிகர்கள் நிறுவிய பேனர்களின் நிழற்படங்களை அளித்து சந்தோஷம் கொள்ளச் செய்துள்ளார். அவருக்கு நமது திரியின் சார்பாக மனமார்ந்த நன்றி!
இனி தொடரும் மதுரை ஆர்ப்பாட்டங்கள்....
http://i1087.photobucket.com/albums/...3-08130545.jpg
http://i1087.photobucket.com/albums/...3-08130611.jpg
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்