http://onyxinvesting.com/wp/wp-conte...05/SignWow.jpg
Amazing photos. Thanks Raghavendran sir.
Printable View
http://onyxinvesting.com/wp/wp-conte...05/SignWow.jpg
Amazing photos. Thanks Raghavendran sir.
சிவாஜி ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் திலகம்
http://sphotos-h.ak.fbcdn.net/hphoto...15147648_n.jpg
நன்றி - நமது அருமை நண்பர் எம்.எல்.கான் - முகநூல் மூலமாக
அற்புதமான மன்னவரின் படங்களை அளித்து தூக்கத்தைக் கெடுத்து விட்டீர்களே ராகவேந்திரன் சார்.
கான் அவர்களை நினைத்தால் பொறாமையாய் இருக்கிறது. ம்... கொடுத்து வைத்தவர்.
Ragavendar Sir,
Superb Photos . Rare and enjoyable.
Dear RAGHAVENDRAN sir,
Photos are rocking
மிக்க நன்றி, வாசு, கோபால், ராகுல்.
தொடர்ந்து..
http://sphotos-d.ak.fbcdn.net/hphoto...64655575_n.jpg
http://sphotos-g.ak.fbcdn.net/hphoto...24676285_n.jpg
நடிகர் திலகத்திற்கும் பெருந்தலைவருக்கும் நடுவில் இருப்பவர் என்.எம்.மணிவர்மா. பெருந்தலைவருக்குப் பின்னால் இருப்பவர் என்.எஸ்.வி.சித்தன்
நன்றி முகநூல் நண்பர் சிவாஜி.
இந்த வசீகரமான உடையில் நடிகர் திலகம் மேடையில் தமிழில் முழங்குவதைக் காணவும் கேட்கவும் எத்துணை பேறு நாம் பெற்றிருக்க வேண்டும்.
http://sphotos-h.ak.fbcdn.net/hphoto...54474867_n.jpg
Nadigar Thilagam with Lata Mangeshkar
Another rare photo of course NT is not there. Kannadasan and Kamaraj.
http://sphotos-b.ak.fbcdn.net/hphoto...42961171_n.jpg
வாசு சார்,
சில நேரங்களில் நாம் எத்தனை முயற்சித்தாலும் வார்த்தைகள் நமக்கு கை கொடுக்காத சூழல் நிலவும். அப்படிப்பட்ட ஒரு சூழல், உணர்வு, உங்கள் 1995 மார்ச் மாதம் கொடைக்கானல் அனுபவத்தைப் பற்றி படித்ததும் தோன்றியது. அபிமான நடிகன், ரசிகன் என்பதை தாண்டி, அபிமான் நடிகன் நடித்த படங்களில் மிகப் பிடித்த படம் என்பதை தாண்டி ஞான ஒளி உங்கள் உள்ளத்தை ஊடுருவி இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.
இந்தப் படம் திரையரங்கில் வந்தால் மிக்க மகிழ்ச்சி. இல்லையேல் உங்களுக்காக நமது NT FAnS அமைப்பின் சார்பாக நிச்சயம் திரையிட்டு விடுவோம். வந்து விடுங்கள்.
அன்புடன்
நான் ஒரு ஜோசியர் பார்த்தேன். அவர் நம் எல்லோர் ஜாதகங்களையும் NT ஜாதகத்தோடு ஒப்பிட்டு ஞான ஒளி திரையீடலுக்கு நாள் குறித்து கொடுத்துள்ளார் 20/7/2013 மிக மிக சிறந்த முஹுர்த்த நாளாகும்.(18.30 to 21.30)
இந்த நாளைக் குறித்துக் கொடுக்கச் சொல்லி ஜோசியரிடம் குறித்துச் சொன்னது யாரோ?
இன்றைய ஸ்பெஷல் புகைப்படம் (பார்த்தசாரதி சாருக்காக)
http://i1087.photobucket.com/albums/...%20-2/3-25.jpg
'ஞானஒளி' திரையிடப் பட்டால் அனைத்து ஹப்பர்களும் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும். இது அன்புக் கட்டளை. அனைவருக்கும் தேநீர் விருந்து என் செலவாக்கும். என் உயிரே அந்தப் படத்தில்தானே இருக்கிறது. சித்தூரார் அவசியம் வருவார். ஒளியைப் பார்க்க வருகிறாரோ இல்லையோ வேறு ஒருத்தரைப் பார்க்க வேண்டுமாம். நான் கூட்டி வருகிறேன்.
என்னது தேநீரா? படம் முடிந்தவுடன் 21.30 க்கு அனைவரும் கொலை பசியுடன் அலைந்து கொண்டிருப்போம். dinner சால சிறந்ததாகும். (கடலூர் பண்ணையாருக்கு இதெல்லாம் ஜுஜுபி)
பரவாயில்லை, தேநீரை வாசு சார் தருவார், டின்னரை கோபால் சார் பார்த்துக் கொள்வார். நமக்கு வேட்டை தான்
மு- - -,
அது ஜோசியர் பதிவு. போடும் போது ஸ்டில் பார்க்க கூட இல்லை.
மெனுவிலேயே நோக்கம் புரியுதா வாசு சார்
இனிய நண்பர் கோபால்
மக்கள் திலகம் - நடிகர் திலகம் விருந்தோம்பல் பற்றி உங்களுக்கு நன்கு தெரியும் .உண்மையான ரசிகர்கள் யாரும் மாற மாட்டார்கள் .
ஆனால் அன்புக்கு கட்டுப்பட்டு விருந்து படைப்பார்கள் .
உங்களுக்கு எங்கள் விருந்து என்றும் உண்டு .
ஆண்டவன் கட்டளை
முதல் வெளியீட்டின்போது (1964) பார்க்கவில்லை. அப்போது சின்னஞ்சிறுவன். பின் எப்போது முதலில் பார்த்தேன்?. 1971-ல் ஊரிலிருந்து வந்திருந்த உறவினர் சிலரை வழியனுப்ப எக்மோர் ரயில் நிலையம் சென்றபோது (போகும்போது டாக்சி, வரும்போது இரண்டே பேர் என்பதால் புறநகர் ரயில்) புறநகர் ரயிலுக்கு டிக்கட் எடுக்குமிடதுக்கு வெளியில் பளிச்சென்ற போஸ்ட்டர் 'இப்பொழுது நடைபெறுகிறது சன் தியேட்டரில்' என்ற வாசகத்துடன் அட்டகாசமான 'ஆண்டவன் கட்டளை' போஸ்ட்டர். அதைப்பார்த்ததும் முடிவு செய்து விட்டேன். நாளை போய்விட வேண்டுமென்று. காரணம் மறுநாள் வியாழக்கிழமை.கடைசி நாளாக இருக்கலாம் என்பதால் அவசரப்பட்டேன்.
மறுநாள் நண்பர்களிடம் சொன்னபோது அதில் ஒருவன் சொன்னான்.. 'டேய் அவசரக்காரா, இதுக்காக மன்னடியிலிருந்து தேனாம்பேட்டை போறேங்கிறியே. இதைப் பார்த்தியா' என்று கையிலிருந்த தினத்தந்தி பேப்பரை விரித்துக் கட்டினான். அதில் 'நாளை முதல் பிரபாத்தில் தினசரி 3 காட்சிகள் ஆண்டவன் கட்டளை' என்ற விளம்பரம் வெளியாகியிருந்தது. அவ்வளவுதான் மனம் குதியாட்டம் போட்டது. பின்னே விட்டுக்குப் பின்புறம் உள்ள தியேட்டரிலேயே வருகிறதென்றால் வேறென்ன வேண்டும்?. 'அப்படின்னா நாளைக்கே போயிடுவோம்' என்று நான் சொன்னதும் 'இப்பவும் அவசரப்படுறான் பாரு. நாம எல்லோரும் இந்தப்படத்தை முதல் முறையாக பார்க்கபோறோம். அதை ஹவுஸ்புல் காட்சியில் பார்த்தால்தான் நல்லாயிருக்கும். சண்டே ஈவ்னிங் ஷோ போவோம்' என்றான் இன்னொருத்தன். சரியென்று பட்டதால் அதுவே முடிவாயிற்று. இருந்தாலும் வெள்ளி சனியில் தியேட்டர் விசிட் தவறவில்லை எனக்கு.
முதல் நாளில் இருந்தே நல்ல கூட்டம். கடைசி இரண்டு கிளாஸ் புல்லானது மற்ற கிளாஸ்களிலும் கௌரவமான கூட்டம். அப்படீன்னா ஞாயிறு நிச்சயம் ஹவுஸ்புல் என்று முடிவு செய்து கொண்டேன். ஞாயிறு அன்று மாலை நாலரைக்கெல்லாம் சென்றுவிட்டோம், எப்படியும் சுவர் தடுப்புக்குள் போய் நின்றுவிட வேண்டும் என்பதற்காக. அப்போதே நாலைந்து பேர் உள்ளே நின்றனர். நேரம் ஆக ஆக கூட்டம் சேரத்தொடங்கியது. மனம் சந்தோஷத்தில் துள்ளியது.
கியூவில் நிற்கும்போதே ஒரு பெரியவர், 'நான் இந்தப்படத்தை பத்து தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன்' என்று ஆரம்பித்து படத்தின் சிறப்புக்களை அள்ளிக்கடாசினார். அப்போது இன்னொருவர் 'பெரியவரே கதையைச் சொல்லிடாதீங்க' என்று உஷார்படுத்தினார் (அவரும் முதல் தடவை பார்க்கிறார் போலும்). அவ்வப்போது வெளியில் எட்டி எட்டி பார்த்துக்கொண்டோம் நல்ல கூட்டம். மேட்னி ஷோ முடிந்ததும் டிக்கட் விநியோகம் துவங்கியது. இடையில் நுழைந்தவர்கள் எல்லாம் வாங்கியது போக, கிட்டத்தட்ட 25 வது டிக்கட் கிடைத்தது. பால்கனிக்கு அடுத்த கிளாஸ். உள்ளே போய் இடம் போட்டு, அங்கிருந்தவரை பர்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, வெளியில் வந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். எதிர்பார்த்தது போலவே ஹவுஸ்புல் போர்டு போட்டதும் மன்றத்தினர் பட்டாசு வெடித்தனர். உள்ளே ஓடினோம். விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது.
'இந்தியன் நியுஸ் ரிவியூ' ஓடி முடிந்ததும் படம் தொடங்கியது. (தொலைக்காட்சிகளில் செய்திகள் துவங்கப்பட்டபின் தியேட்டர்களில் நியூஸ் ரீல் காட்டும் வழக்கம் நிறுத்தப்பட்டது). சென்சார் சர்டிபிக்கேட்டை அடுத்து பி.எஸ்.வி. பிக்சர்ஸ் எம்ப்ளம் பார்த்ததுமே கைதட்டல். ப்ரொபசர் கிருஷ்ணன் தரிசனத்தின்போது உச்சகட்ட கைதட்டல். இம்மாதிரி ஆரவாரத்தோடு பார்ப்பதை மிஸ்பண்ண இருந்தோமே என்று ஒருகணம் நினைத்தேன். ப்ரொபசர் கிளாஸில் பாடம் நடத்தும் போது அவரது ஒவ்வொரு அசைவும் ரசிக்கப்பட்டது. அப்போது கேமரா திரும்பி மாணவர்களைக் காட்டும்போது, முதல் வரிசையில் அமர்ந்திருந்த இரட்டை ஜடைபோட்ட தேவதையைக் கண்டதும் கைதட்டல். பக்கத்திலிருந்தவன் என் விலாவில் இடித்து 'டேய் உங்காளுடா' என்றான். எனக்கு அதெல்லாம் கவனமில்லை. பத்து ஈக்கள் உள்ளே போனால் கூட தெரியாதவண்ணம் வாய் பிளந்திருக்க, 'இப்படி ஒரு அழகா, இதற்கு முன் எத்தனையோ படத்தில் பார்த்திருக்கிறோமே. இவ்வளவு கியூட் தெரியலையே' என்ற யோசனையுடன் இமை மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். (இத்தனைக்கும் இதற்கு முன் எங்கிருந்தோ வந்தாளில் தலைவருக்கு அண்ணியாக, யாருக்கோ ஜோடியாகவெல்லாம் பார்த்தாகி விட்டது). ப்ரொபசர் கிருஷ்ணனைக் கவர்வதற்காக அவர் அடிக்கடி தனது இரட்டை ஜடையை முன்னால் இழுத்துவிட்டுக் கொண்டு காந்தப்பார்வை பார்க்கும்போது தியேட்டரில் உற்சாகமான கலகலப்பு. ப்ரொபசர் தடுமாறுகிறாரோ இல்லையோ நாம் கிளீன் போல்ட்.
நடிகர்திலகம் தன தாயாருடன் பேசும் காட்சி படத்தின் ஜீவனான காட்சிகளில் ஒன்று. அதில் ஒவ்வொரு வசனத்துக்கும் கைதட்டல் கிடைத்தது. ஹாஸ்டல் விசிட் சென்ற இடத்தில் மாணவிகள் விளைக்கை அணைக்க, சக மாணவி என்று நினைத்து ப்ரோபசரைக் கட்டிப்பிடிக்க, அந்த ஸ்பரிசத்தை எண்ணியபடியே தடுமாறும் இடத்தில் தலைவரின் பெர்பாமன்ஸுக்கு ரசிகர்களிடையே நல்ல ரெஸ்பான்ஸ். அதன்பிறகு தலைவரின் மனசாட்சி உலுக்கி எடுக்கும் இடம்தான் ராகவேந்தர் சார் வர்ணித்த இடம். அந்தக்காட்சி முழுக்க அடங்காத கைதட்டல். ஒரு பழைய படத்துக்கு புதுப்படம் போல வரவேற்பு கிடைத்ததைப்பார்க்க உற்சாகம் தாளவில்லை.
'அலையே வா' பாடலைப்பற்றி எழுதி உணர்த்த முடியாது. பார்த்து உணர வேண்டும். உணர்ந்தோம். இப்போது தொலைக்காட்சி வசதியிருப்பதால் அடிக்கடி பார்ப்பதால் அதன் அருமை பலருக்குத் தெரியவில்லை. தியேட்டரை விட்டால் வேறு கதியில்லை என்ற அந்த காலகட்டத்தில் நின்று உணர்ந்து பார்த்தால் அதன் அருமை தெரியும்.
ஆவலுடன் காத்திருந்த அடுத்த பாடல்..
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையுடன் புதருக்குள் இருந்து ரயில் தோன்றி பாலத்தில் பயனிக்கத்தொடங்கியபோதே கைதட்டல் எழுந்தது. அப்படியே கேமரா திரும்பி படகில் இருக்கும் லட்சிய ஜோடியை காட்டும்வரை கைதட்டல் ஓயவில்லை. கருப்பு வெள்ளையிலேயே இவ்வளவு அற்புத ஒளிபபதிவா என அசர வைத்தது. என்ன ஒரு நேர்த்தி.
ஒரு தத்துவப்பாடலையே டூயட் பாடலாக்கிய கவியரசர் கண்ணதாசனின் திறமை. அதற்கு ஏற்ற இசையை வழங்கி உச்சத்துக்கு கொண்டு சென்ற மெல்லிசை மன்னர்களின் சாதனை. அதனை கணீரென்று பாடி கலக்கிய சௌந்தர்ராஜன் சுசீலாவின் அற்புதம். நடித்தவர்களைப் பற்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை ஐயாமார்களே... இயக்குனர் சங்கர் ஆயிரம் டூயட்டுகளைப் படமாக்கி இருக்கலாம். ஆனால் அவரது சிறந்த பத்துகளில் இதுவும் ஒன்று என்றால் அது மிகையில்லை. பாடல் முழுக்க கைதட்டலும் விசிலும் கேட்டுக் கொண்டேயிருந்தன. நானோ வேறொரு உலகத்தில், ஏனென்றால் இதில் பங்கேற்ற அனைவரும் எனக்கு வேண்டப்பட்டவர்கள். அழகான பாடலின் முடிவில் தாங்கவொண்ணா துயரம்.
அடுத்த பாடல்.... தன்னுயிர் தந்து மன்னன் உயிர்காத்த அந்த வாயில்லா ஜீவனின் உடலை அடக்கம் செய்துவிட்டு மன்னர்களின் இசைக்கேற்ப தளர்நடை நடக்கும் மன்னனைக் கண்டு கூட்டம் ஆர்ப்பரித்தது. "ஆறு மனமே ஆறு" என்று தொடங்கியதும் ஆறு தெருக்களுக்கு கேட்கும் வண்ணம் கைதட்டல். ஒவ்வொரு படைவீட்டுக்கும் செல்லும்போது விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் என கெட்-அப் மாறும்போதும் கைதட்டல் அடங்கவில்லை. கடைசியில் கடலை தின்னும் காட்சியில் எப்படியிருந்திருக்கும் என்று சொல்லணுமா. முன்சீட்டிலிருந்து ஒருவர் எழுந்து இரண்டு கைகளையும் உயர்த்தியவாறு கத்தினார் "பாவி, இதுக்கெல்லாம் நீதான்யா, நீ மட்டும்தான்யா".
என்ன அற்புத உணர்வைத்தந்த காவியம் "ஆண்டவன் கட்டளை".
சபாஷ் கார்த்திக் சார்! அருமையோ அருமை. நீண்ட நாட்கள் பட்டினி போட்டதற்கு வட்டியும் முதலுமாக தந்து ஜமாய்த்து விட்டீர்கள். கார்த்திக் சாரா கொக்கா! படம் பார்க்க இருந்த ஆர்வம், பார்க்கும் போது இருந்த ஆர்வம், ரசிகர்களின் கமெண்ட், அரங்கு நிறைவு, ஆர்ப்பாட்ட ரசிப்பு ஆரவாரங்கள், நடுவில் மறக்காமல் ஜொள்ளு, (ஆமாம் தியேட்டரில் ஈக்களே இல்லையாமே!) பாடல்களின் மினி அலசல் என்று எல்லாவற்றிலும் 100 கிராம் தந்து 1 கிலோ மகிழ்ச்சியைக் கொடுத்து விட்டீர்கள். இப்படி வருவீர்களா? நீங்கள் குறிப்பிட்ட அந்த முதியவர் மட்டுமல்ல நம் தலைவரை பாவி என்று செல்லமாக அழைக்காத நபர்களும் உண்டோ! ஏனென்றால் அது "ஆண்டவன் கட்டளை"
L .K .G ,ஹை ஸ்கூல் கூட போகாமல் PHD பண்ண விரும்பும் (பிரம்மச்சரியம் to துறவு)ப்ரொபசர் கிருஷ்ணனுக்கு அகம்-புறம் இரண்டும் சோதனைக்குள்ளாவது வியப்புக்குரியதல்ல.
புற சோதனையில் பரிதாப தோல்வியுடன் திரும்பும் கிருஷ்ணன் (வயதுக்கேற்ற ஆண்மைக்கு திட்டத்துடன் விட பட்ட சவாலை இந்த நேர்க் குணமுள்ள பேராசிரியர் எதிர் கொள்ள முடியாமல் முதல் பந்தில் CLEAN BOWLED ஆன சச்சின் போல பரிதாப நிலையில்
அக சோதனையில் இறங்குவார்)
ஆனால் மருந்தை குடிக்கும் போது தேவதையை நினைக்காதே என்ற பலவீன நோக்குடன் தொடங்குவதில்தான் ஆபத்தே. மருந்தை விட இந்த தேவதையின் நினைவையே அதிகம் பருகுவார். தன்னுடைய லட்சியங்களை கொல்ல வேண்டிய இந்த துர்பாக்கிய பேராசிரியருக்கு , duncan ஐ கொலை செய்த Macbeth போராட்டமே. moral values ஒரு புறம்,Vacillating own conscience நடுநிலை தவறிய நடுவராய் ,Tortured by the thoughts of passion மறுபுறம்.....
தொடர்ந்து பேராசிரியர் என்ன செய்தார் என்று தொடர்வோம்.
கார்த்திக் சார்,
ரசிகர்களை குதூகலத்தில் தள்ளி time Machine போல பின் நோக்கி போக வைக்க வேண்டுமா, கூப்பிடு கார்த்திக் சாரை,கூப்பிடு முரளி சாரை என்றாகி விட்டது. (சென்னை,மதுரை என்றால்)
கிராமம் என்றால் நம்மிடையே ஒரு கிராம ராஜன் உருவாகி தூள் கிளப்புகிறார்..
மிக்க நன்றி.
மாயாவியை கண்டு பிடிக்க ஒரு மாத விடுமுறையில் வருகிறேன்.பிரபாத் டாக்கீஸ் பின்புறம் 70 களில் வசித்த சிறுவனை பற்றி பெரிமேசன் (அல்லது குலோத்துங்க சோழன்)போல துப்பு துலக்கி மர்மத்தை விடுவிக்க போகிறேன்.
கார்த்திக் சார்,
அற்புதம், அபாரம்!!! ஆண்டவன் கட்டளை - தரிசனம் அபூர்வ விவரிப்பு. அழகிய திரைப்படம். இன்னும் இவ்வளவு பேச வைக்கிறது என்பதிலேயே அதன் உயர்ச்சி தெரிகிறது. நானும் 80-களின் துவக்கத்தில் திருச்சி-க்கு ஒருமுறை சென்றபோது திருச்சி-பிரபாத் தியேட்டர்-இல் பார்த்து ரசித்திருக்கிறேன். எனக்கும் மிக பிடித்த படம். பின்னர் தொலைக்காட்சிகளில் ஓரிரு முறைதான் பார்க்க முடிந்தது. எல்லோரும் எழுதியதை படித்த பின்பு உடனடியாக பார்க்க வேண்டும் என்று ஆவல் உண்டாகிறது. முயற்சிக்கிறேன். உங்கள் கருத்துக்கு மீண்டும் என்னுடைய பாராட்டுக்கள்.
ஆடைகளுக்கேன்றே பிறந்த ஆணழகர் (தொடர் 1)
அனைவருக்கும் வணக்கம். புதிதாக மேலும் ஒரு விஷுவல் தொடர். நம் இதயதெய்வத்தின் புகழை மேலும் மெருகூட்டக் கூடிய வகையில். ஆம். நடிகர் திலகத்தின் உடை ரசனையை விளக்கும் விஷுவல் தொடர்.
நடிகர் திலகத்தின் உடை அணியும் ரசனையை வியக்காதவர்களே இருக்க முடியாது. அந்தக் காலக் கட்டத்திலேயே உடைகளில் அதிநவீன நாகரீகத்தைப் புகுத்தி அனைவர் கவனத்தையும் ஈர்த்தவர் அவர். பலர் பலமுறை நம் ரசிகரல்லாதோர் கூட அவருடைய உடைகள், அவற்றை அவர் அணியும் பாங்கு, நேர்த்தி, உடைகளில் காட்டிய உன்னத டிசைன்கள் இவற்றை மனதாரப் புகழ்ந்ததை பலமுறை கேட்டிருக்கிறேன்.
பொதுவாகவே உடைகள் அணியும் விதத்தில் நடிகர் திலகம் மிகவும் பெயரும் புகழும் பெற்றவர். தனது திரைப்படத் தொழிலில் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு உடைகளைத் தேர்ந்தெடுப்பதில் வல்லுநர் அவர். அந்த அசாத்திய திறமை அவருக்கு முதல் படத்திலேயே வந்து விட்டது.
முதலில் திரைப்படங்களில் அவர் எப்படிப்பட்ட உடைகளை அணிந்தார், அதை எவ்வாறு அணிந்தார், அணிவதில் கூட எத்தகைய ஸ்டைல்களைக் காட்டினார் என்று எழுதுவதை விட நிழற்படங்களாக சிறு விளக்கங்களுடன் அளித்தால் இப்போதுள்ள தலைமுறையும் வருங்கால தலைமுறைகளும் நன்கு தெரிந்து கொள்ள முடியும் என்ற ஆவலில் எழுந்ததே இந்தத் தொடர்.
தனது தொழில் அல்லாது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, குடும்ப வாழ்விலும் சரி அவர் உடைகளில் செலுத்திய கவனம் கூட இந்தத் தொடரில் வெளியாகும்.
இப்போது முதலில் 'பராசக்தி'
இந்த முதல் காவியத்திலேயே அவரின் ஆடைகள் சாம்ராஜ்யம் தொடங்கியது. ஏனென்றால் பணக்கார குணசேகரன் அணிந்த ஹைகிளாஸ் ஆடைகள், அவன் ஏழ்மை நிலையைத் தொட்டதும் ஏற்பட்ட உடைகளின் உருமாற்றம் என்று இருவேறுபட்ட உணர்வுகளை உடைகளின் மூலமும் வடித்துக் காட்ட அவருக்குக் கொடுக்கப் பட்ட முதல் சந்தர்ப்பம். சந்தர்ப்பத்தைத் தவற விடுபவரா நம் ஆருயிர்த் திலகம்?. இப்போது பார்க்கலாம்.
நடிகர் திலகத்தின் திரைப்பட வாழ்வின் நம் கண்களுக்கு விருந்தளித்த முதல் உடை. கிட்டத்தட்ட நைட் டிரஸ். அவருக்கு அவ்வளவு மேட்சாகக் கவர் ஆகும். ஷர்ட், பேன்ட் இவற்றின் மேலிருந்து கீழ் நோக்கி வரும் அழகான கோடுகள் இன்னும் அவரை அழகாகக் காட்டும்.
இதை எப்படி உடுத்தியிருப்பார் என்று கவனியுங்கள். அதுதான் விசேஷம். இரவில் படுத்து காலையில் கண் விழிக்கையில் full hand ஷர்ட்டின் கைப்பகுதிகளை ஏனோதானோவென்று அரைகுறையாக மடித்தும் மடிக்காதது போல உடுத்தியிருப்பார். இரவில் தூங்கி எழுந்தவனின் ஆடைகள் எப்படி சரிசெய்யப் படாமல் இருக்குமோ அப்படியே அணிந்திருப்பார். அப்போதே அப்படி ஒரு பெர்பெக்ஷன்.
http://imageshack.us/a/img571/8365/p...dripmovie7.png
http://i1087.photobucket.com/albums/...%20-2/1-41.jpg
ஹோட்டலில் அணிந்து வரும் அழகான டிரஸ் பொறுப்பாக கோட்டை ஹேங்கரில் மாட்டிய பிறகு. வாட்சில் டைம் பார்க்கும் அழகைப் பாருங்கள். அதில் ஒரு அவசரம் தெரியும்..
http://i1087.photobucket.com/albums/...%20-2/2-41.jpg
கைகள் மடித்துவிடப்பட்ட நிலையில். 'டை' அருமையாக உள்ளது. .
http://imageshack.us/a/img153/5360/p...dripmovie9.png
புதுப் பெண்ணின் மனதைத் தொட்ட அழகான, அம்சமான full covered உடை.
http://i1087.photobucket.com/albums/...%20-2/3-26.jpg
காதலியை வசப்படுத்தும் அருமையான கோட் சூட், டையுடன்
http://i1087.photobucket.com/albums/...%20-2/7-10.jpg
உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த famous கோர்ட் உடை. கை மடித்து விடப்பட்ட ஸ்டைல் என்றுமே புகழ்க் கொடி நாட்டும்.
http://i1087.photobucket.com/albums/...%20-2/4-19.jpg
கிளைமாக்ஸ் காட்சியின் கலக்கல் neck cover பனியன் டைப் உடை. அந்த சிரிப்பு அப்படியே நெஞ்சை அள்ளிக் கொண்டு போய்விடும்
http://i1087.photobucket.com/albums/...%20-2/5-12.jpg
போனஸ் ஸ்டைல் போஸ்
http://i1087.photobucket.com/albums/...%20-2/6-13.jpg
வாசுதேவன் சார்
நீங்கள் என்னென்ன பதிவிட்டாலும்
இனிமை
புதுமை
அருமை
அட்டகாசமான ஆரம்பம்
அமர்க்களம் தொடரட்டும்
உங்களின் அசூர உழைப்பு - பாராட்டப்படவேண்டும்
வாசு,
அமர்க்களமான ஆரம்பம் .முதல் படத்திலிருந்தே துவங்குகிறாய் வேலையை. நடக்கட்டும்.
50 களில் அகில இந்திய அளவில் ஒரு வடக்கிந்திய பத்திரிகையால் "Best Dressed Man" in Indian Cinema வாக தேர்ந்தெடுக்க பட்டவராயிற்றே?
என்னா அழகு, handsome நம் திராவிட மன்மதன்? அனைத்து உடைகளும் அவருக்காகவே தவம் இருந்து அவரை அடைந்தது போல பொருந்தும் அழகு!!!!
டியர் கார்த்திக் சார்,
நீண்ட நாளைக்குப் பிறகு தங்களுடைய "ஆண்டவன் கட்டளை" திரைப்பட வர்ணணை, எப்போதும்போல நாங்களும் தங்களுடனேயே அமர்ந்து திரைப்படத்தைப் பார்த்த திருப்தியைத் தந்தது. நன்றி.
டியர் வாசுதேவன் சார்,
நடிகர்திலகத்தின் ஆடையழகிற்கென்று ஒரு தொடர். முதல் படத்திலேயே, நைட் டிரஸ் முதல் வரை அழகினை தாங்கள் ஆராதித்திருக்கும் பாங்கு அருமை.
வாசு சார்,
புதுத்தொடர் துவக்கத்திலேயே பிரமாதப்படுத்தி விட்டீர்கள். அதுவும் முதல் படத்திலிருந்தே. வரப்போகும் பதிவுகளை நினைத்தால்... ஒன்ஸ் மோர்-லேயிலும் கலக்கியிருப்பாரே. என்ன சொல்வது? அபாரம். உங்களை இதற்க்காக கேட்டுக் கொண்ட ராகுல்-க்கும் நன்றி.
ஒரு சின்ன விண்ணப்பம். எல்லாத் தொடர்களையும் சிறிது இடைவேளை மட்டுமே விட்டு அடிக்கடி கவனியுங்கள்.
Mr Vasu Sir,
Your new series on Dressing of NT is simply Superb. Whenever Gnana Oli shown
I will definitely come to chennai to watch Mr Antony as well as our friend Mr Gopal.
Mr Karthik Sir,
NIce writeup on Andavan Kattalai. We expect many more from you.