SATHYAM CINEMAS - AAYIRATHIL ORUVAN - 50TH DAY CELEBRATION - SOME IMAGES FORWARD BY MR. THANGAVEL UK GOLDEN MOVIES.
http://i58.tinypic.com/24maw44.jpg
Printable View
SATHYAM CINEMAS - AAYIRATHIL ORUVAN - 50TH DAY CELEBRATION - SOME IMAGES FORWARD BY MR. THANGAVEL UK GOLDEN MOVIES.
http://i58.tinypic.com/24maw44.jpg
SATHYAM CINEMAS - AAYIRATHIL ORUVAN - 50TH DAY CELEBRATION - SOME IMAGES FORWARD BY MR. THANGAVEL UK GOLDEN MOVIES.
[http://i61.tinypic.com/29bdpty.jpg
SATHYAM CINEMAS - AAYIRATHIL ORUVAN - 50TH DAY CELEBRATION - SOME IMAGES FORWARD BY MR. THANGAVEL UK GOLDEN MOVIES.
http://i57.tinypic.com/2nveywy.jpg
SATHYAM CINEMAS - AAYIRATHIL ORUVAN - 50TH DAY CELEBRATION - SOME IMAGES FORWARD BY MR. THANGAVEL UK GOLDEN MOVIES.
http://i57.tinypic.com/zmmhqw.jpg
http://s7.postimg.org/5mxm8ux9n/4520...3753_MDS_M.jpg
DAILY THANTHI
Dear Sir,
If you are mentioning about the second release comparison, i am not aware..so no comments on this...!
But if you are mentioning during the initial release....then am sorry sir,,Enga Veetu Pillai collection record was immediately surpassed by Nadigar Thilagam's Thiruvilayadal, The collection of Ayirathil oruvan also dropped quite a large in all centers because of Thiruvilayaadal !
You may check the records if need be...!
மதுரை -ராம் திரை அரங்கில் இன்று முதல் மக்கள் திலகத்தின் ''மாட்டுக்கார வேலன் '' திரையிடப்பட்டுள்ளது .
கோவை நகரில் அடிமைப்பெண் இரண்டாவது வாரம் தொடர்கிறது . சென்னை பிராட்வே அரங்கில்
தர்மம் தலைகாக்கும் நடை பெறுகிறது .
http://i57.tinypic.com/2hh3xtt.jpg
தற்போது சன் லைப் தொலைகாட்சியில் மக்கள் திலகத்தின் நம்நாடு ஒளி பரப்பாகி கொண்டு வருகிறது .
நாளை கால 11 மணிக்கு சன் லைப் தொலைகாட்சியில் ''பெரிய இடத்து பெண் ''.
JAFNA - RANI
http://i62.tinypic.com/16hp5qw.jpg
JAFNA- WELINGTON
http://i60.tinypic.com/qq4uup.jpg
JAFNA- WINSOR
http://i61.tinypic.com/r7rr03.jpg
1965ல் வந்த மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை படத்தின் மொத்த வசூலை வேறு எந்த நடிகரின் படமும் முறியடிக்கவில்லை .1969ல் வந்த மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் படம் எங்க வீட்டு பிள்ளை மொத்த வசூலை
முறியடித்தது உண்மை . அடிமை பெண்ணின் ஆதாரம் இதோ .
THANKS ROOP SIR
http://i57.tinypic.com/33vc9wl.jpg
அனைத்து மக்கள்திலகம் அபிமானிகளின் mgr.,அவர்களின் புகைப்படங்கள், ஆவணங்கள், அரிதான செய்திகள் எல்லாம் இனிமை! புதுமை! இளமை! " ஆயிரத்தில் ஒருவன்" - 51 நாட்களை கடந்து வெற்றி விழா கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சி... மற்றபடி நாம் இங்கு ஏற்கனவே பகிர்ந்து கொண்ட சூரியனுக்கு- டார்ச் லைட் அடித்து ஒளி உண்டாக்குவது போல -புரட்சி தலைவருக்கு இருக்கும் புகழை, பெருமையை எதனாலும், எவராலும் மிஞ்ச போவதில்லை!!! எனும் பேருண்மையை இந்த சிறியவன் கூறி கொள்வதில் உவகை அடைகிறேன்...
எங்க வீட்டு பிள்ளை- வசூலை, வெற்றியோட்டதை வேறு எந்த நடிகர், நடிகையர் நடித்த திரைப்படங்களும் நெருங்க கூட இயலவில்லை! என்பதை மிகுந்த பணிவன்போடு தெரிவித்து கொள்கிறேன்...மக்கள் திலகம் அவர்கள் நடித்த திரைப்படங்களை அவர் நடித்து வெளியான திரைப்படங்களே வசூலில் வெற்றி முகம் காட்டின - என்ற உண்மை எல்லா திரைப்பட தயாரிப்பாளர்கள், சக தோழர்கள் சார்பாக சொல்லி கொள்ள விரும்புகிறேன்...விநியோகஸ்தர்கள், திரை அரங்கு உரிமையாளர்கள், பொது மக்கள் என யாவரும் அறிந்த ஒன்றை திரும்ப, திரும்ப வியாக்கியானம் - செய்வது தேவையில்லா ஒ
மக்கள் திலகத்தின் பெயருக்குத்தான் என்ன ஒரு மதிப்பு, என்ன ஒரு பயம்,சில சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்களுக்கு?தேர்தல் பிரச்சாரம்- ஓட்டு பதிவு வரையிலும் மக்கள் திலகத்தின் திரைப்படங்களை ஒளி பரப்பி கொண்டிருந்தவர்கள் சுத்தமாக அவர்தம் படங்களை போடாமல் பார்த்து கொண்டனர் என்பதை கண்டு நம்மால் நகைக்காமல் இருக்க முடியவில்லை...இப்பொழுது திரும்ப பழையபடி mgr படங்களை ஒளி பரப்பி வருகின்றனர்...
மக்கள்திலகத்தின் '' இன்றுபோல் என்றும் வாழ்க'' -இன்று 35 வது ஆண்டு துவக்க தினம் .
http://i57.tinypic.com/14d10g2.jpg
Hit songs that won polls for AIADMK
On an evening in 1973, when late charismatic actor and political leader M.G. Ramachandran, fielded Maya Thevar as the AIADMK’s candidate for the Dindigual Lok Sabha by-polls then, the new party’s maiden electoral contest, his song writers gifted him a catchy Tamil song that turned out to be prophetic.
Presaging the AIADMK’s political rise, the song “Namathu Vetriyai Naalai Charithiram Sollum” (History will speak of our victories), a title number in the hugely popular MGR-starrer ‘Ulagam suttrum Vaaliban,’ heralded the fledgling party’s emergence to become a formidable force in the State’s politics until MGR was alive.
Nearly 41 years after the party’s historic victory at Dindigul, the AIADMK, facing the 2014 Lok Sabha polls, has picked a leaf from its own history. The party has released a set of two CDs — one with 11 songs by Pulamaipithan, erstwhile poet laureate in the MGR era —, that strikes a similar triumphant note. Only this time it projects the Prime Ministerial prospects of the party supremo and Chief Minister Jayalalithaa. The songs in the second album have been written by another lyricist, Kadhalmadhi.
The music for the album has been scored by noted music director Deva, who is also the president of the Tamil Nadu Iyal Isai Nataka Mandram. Noted singers like S.P. Balasubramaniam, Mano, Chinmayi and Ananthu have rendered the songs.
Though most of the songs in this album — used as effective campaign tool by the AIADMK- harp on the theme of Ms. Jayalalithaa “becoming the Prime Minister,” the first two songs “Ithu chengottaikku pokira railyu vaarunka; Delhi simmasanathial amma amarkira kaatchi parunga” (board the train for Red Fort to watch Amma adorning the Prime Ministerial seat) and “nam puratchi thalaivai pirthamaraavathu kaalathin kattayam” (it is destiny that is making Jayalalithaa the Prime Minister) are direct in their messages.
While the DMK banked on its leader M. Karunanidhi’s oratorical skills, MGR, who suffered a bullet injury in his throat, made use of powerful dialogues and songs in his films to convey his message. He had song writers who captured the essence of his vision and agenda in the Tamil songs.
“MGR used to play the song ‘vaasal engum erattai ilai kolam idungal (decorate your homes with two leaves symbol)’ after making a speech at every point during the 1977 general election that led to the AIADMK capturing power in the State,” recalled Mr. Pulamaipithan, who penned many of the politically inspiring songs in MGR’s films.
Another song writer Muthulingam said MGR had even made special arrangements for release of two songs — ‘Ithu naatai kaakum kai’ and ‘anbukku naan adimai’ in the film ‘Indru Pol Endrum Vaazhga’ — by a recording company in Calcutta in 1977.
This also attracted the attention of the ‘Washington Post’ then, which in an article reported how the two songs played a role in the AIADMK’s victory at the hustings.
“Director Shankar read out that report for me. Of course it was hyped as MGR was a charismatic leader in his own right; but the news report explained the importance of the songs in the election campaign,” recalled Mr. Muthulingam.
courtesy - the hindu
BANGALORE - AYIRATHILORUVAN - FIRST RELEASE - 50TH DAY PAPER CUTTING- 1965
http://i58.tinypic.com/2larhqw.jpg
BANGALORE - SHREE
http://i62.tinypic.com/154bl3r.jpg
மக்கள் திலகத்தின் திரைப்பட நிழற் படங்களும் , கட் அவுட் படங்களும் என்றுமே பேசும் . திரை உலகவரலாற்றில் 1958-1977 வரை வந்த தென்னிந்திய படங்களில் மக்கள் திலகத்தின் 10 படங்கள்
முதல் வெளியீட்டில் ஒரு கோடி வசூலாகி உள்ளது என்பதை ஆதார பூர்வமாக பல பத்திரிகைகளில்வந்துள்ளது . அதே போல் மக்கள் திலகம் நடிப்புத்துறை விட்டு விலகிய 1977 வரை நிகழ்த்திய சாதனைகளை முறியடிக்கப்பட வில்லை . எனவே 1977 வரை சாதனைகள் பல புரிந்த முதல்வர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
வெறும் வார்த்தைகளால் வசூல் விபரம் எழுதி , எந்த விளம்பர ஆவணங்கள் இன்றி பதிவிடும்சாதனைகள் நம்பகத்தன்மை இல்லை என்பது அவர்களுக்கே புரியும் .
மக்கள் திலகத்தின் சாதனைகள் .
7 அரங்கில் வெள்ளி விழா - எங்க வீட்டு பிள்ளை .
23 அரங்கில் தமிழகம் - கர்நாடகம் 100 நாட்கள் - உலகம் சுற்றும் வாலிபன்
10 படங்கள் ஒரு கோடி வசூல் சாதனை .
இன்னும் பட்டியல் நீளும் .
திரை உலக வசூல் சக்கரவர்த்தி எம்ஜிஆர் என்பதை நாடே நன்கறியும் .ஒரு சிலரின் மன திருப்திக்காக மனதில் பட்டதை எழத்து மூலம் வசூலை பதிவிடுவதை நகை சுவையாகஎடுத்து கொள்வோம் .
NO WORDS....
PESUM PADAM DOCUMENT.
http://i62.tinypic.com/ivlidw.jpghttp://i61.tinypic.com/280m8g2.jpg
பயணங்கள் முடிவதில்லை படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர்.
கோவைத் தம்பி தயாரித்த "பயணங்கள் முடிவதில்லை'' படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர். எதுவும் பேசாமல் எழுந்து சென்றதால், கோவைத்தம்பி பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
"பயணங்கள் முடிவதில்லை'' கோவைத்தம்பியின் முதல் படம். தன்னுடைய "தலைச்சன்'' குழந்தையை, தன் தலைவர் எம்.ஜி.ஆர். பார்த்து வாழ்த்துக் கூறவேண்டும் என்று விரும்பினார்.
எம்.ஜி.ஆரை சந்தித்தார். "அண்ணே! ஒரு சினிமாப் படம் தயாரித்திருக்கிறேன். "பயணங்கள் முடிவதில்லை'' என்பது படத்தின் பெயர். தாங்கள் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
"குடும்பத்தோடு வரலாமா?'' என்று சிரித்துக்கொண்டே எம்.ஜி.ஆர். கேட்டார்.
கோவைத்தம்பி அசந்துவிட்டார். "என்ன அண்ணா இப்படிக் கேட்கிறீர்கள்? இது எனக்கு எவ்வளவு பெருமை! எல்லோரும் வாருங்கள்!'' என்றார்.
1982 பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் சென்னையில் அரங்கண்ணலுக்கு சொந்தமான ஆண்டாள் பிரிவியூ தியேட்டரில், எம்.ஜி.ஆருக்காக "பயணங்கள் முடிவதில்லை'' படம் திரையிடப்பட்டது. மனைவி ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர். வந்திருந்தார். அமைச்சர்கள் அனைவரும் வந்திருந்தார்கள்.
படம் ஓடத்தொடங்கியது. படத்தைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர். என்ன சொல்வாரோ என்று கோவைத் தம்பியின் மனம் `திக் திக்' என்று அடித்துக்கொண்டது.
`கிளைமாக்ஸ்' வந்தபோது, அரங்கத்தில் பூரண அமைதி நிலவியது. ஆனால், லேசாக விம்மல் ஒலியும் கேட்டது. அது ஜானகி அம்மாளிடம் இருந்து வந்த விம்மல் ஒலிதான்.
இதன்பின் என்ன நடந்தது என்பதை கோவைத்தம்பி கூறுகிறார்:
"படம் முடிந்து, தியேட்டரில் லைட் போடப்பட்டது. தலைவர் எம்.ஜி.ஆர். உடனடியாக எழவில்லை. சிறிது நேரம் மவுனமாக அமர்ந்திருந்தார்.
பின்னர் எழுந்தார். தன்னைப் பார்த்து கும்பிட்டவர்களுக்கெல்லாம், அமைதியாக பதில் வணக்கம் செலுத்தினார். மவுனமாக காரில் வந்து ஏறினார். கார் புறப்பட்டது.
எல்லோரையும் பார்த்து கும்பிட்டவர், என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்படியே திகைத்துப்போய் நின்றேன்.
அருகில் நின்ற சில அமைச்சர்கள், "நாங்கள் அப்போதே சொன்னோமே, கேட்டாயா? தலைவரைக் கூப்பிடாதே, இந்தப்படம் எல்லாம் அவருக்குப் பிடிக்காது என்று சொன்னோமே கேட்டாயா!'' என்று என்னிடம் கூறினார்கள்.
சற்று தூரம் சென்ற தலைவரின் கார் நìன்றது. செக்யூரிட்டி மட்டும் இறங்கி எங்களை நோக்கி ஓடிவந்தார். "கோவைத்தம்பியை மட்டும் வரச்சொல்லுங்கள். சி.எம். கூப்பிடுகிறார்'' என்று அமைச்சர்களைப் பார்த்து சொன்னார்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பதற்றத்துடன் ஓடினேன். எம்.ஜி.ஆரைப் பார்த்துக் கும்பிட்டேன்.
"இந்தப் படத்தின் மூலம், இன்னும் ஒரு வாரத்தில் புகழின் உச்சிக்கு சென்று விடுவாய். அந்த அளவுக்கு படம் சிறப்பாக இருக்கிறது. வரப்போகிற புகழைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டியது உன் பொறுப்பு. ஒவ்வொரு அடியையும் ஜாக்கிரதையாக எடுத்து வை. வெற்றியும், புகழும் நிரந்தரமல்ல. அதை, உன் விவேகத்தால் தக்க வைத்துக் கொள்'' என்று கூறினார்.
என் கண் கலங்கி விட்டது. எம்.ஜி.ஆரின் கார் புறப்பட்டு, பார்வையில் இருந்து மறையும் வரை, அதையே பார்த்துக் கொண்டு நின்றேன்.
தலைவர் கூறிய வார்த்தைகளை வேதவாக்காகக் கொண்டேன். கலைத்துறையில் என் பயணத்தை நம்பிக்கையுடன் தொடர்ந்தேன்.
என் இரண்டாவது படத்தை, மணிவண்ணன் டைரக்ஷனில் தயாரித்தேன். "இளமைக் காலங்கள்'' என்பது, படத்தின் பெயர். மோகனும், சசிகலாவும் நடித்தார்கள்.
18-8-1983-ல் படம் வெளிவந்தது. இந்தப் படமும் வெற்றிப்படம்தான். 200 நாட்கள் ஓடியது.
இரண்டாவது படமும் வெற்றிப்படமாக அமைந்ததால், கலைத்துறையில் எனது ஈடுபாடு அதிகமாகியது. அடுத்த படத்தைத் தயாரிக்கத் தொடங்கினேன்.
முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை'' டைரக்ட் செய்து பெரும் வெற்றியடைய வைத்த டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் டைரக்ஷனில் சிவகுமார் - அம்பிகா ஆகியோரை வைத்து "நான் பாடும் பாடல்'' என்ற படத்தைத் தயாரித்தேன். இந்தப்படம் வேகமாக வளர்ந்தது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் என்ற ஊரில் எடுத்தோம். இரண்டு கிளைமாக்ஸ் காட்சிகளை சுந்தர்ராஜன் வைத்திருந்ததால் எதை தேர்வு செய்வது என்பதில் எனக்கு மிகவும் குழப்பம் ஏற்பட்டது.
எந்த "கிளைமாக்சை'' வைத்துக் கொள்வது என்று நானும் சுந்தர்ராஜனும் கடும் விவாதம் நடத்திக் கொண்டிருந்தோம். கதாநாயகி அம்பிகா இறப்பது போல அமைந்தது ஒரு கிளைமாக்ஸ். சிவகுமார் தொட்டு பொட்டு வைத்த நெற்றியை அம்பிகாவே நெருப்புக்கட்டையை எடுத்து சூடு வைத்துக் கொள்வது போல மற்றொரு கிளைமாக்ஸ்.
இரண்டு கிளைமாக்ஸ்களில் எதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற பயம் எங்களுக்குள் ஏற்பட்டுவிட்டதால், ரீ ரிக்கார்டிங் செய்யும்போது இசையமைப்பாளர் இளையராஜா முடிவிற்கே விட்டு விடுவோம் என்று இருவரும் தீர்மானித்தோம்.
அப்படி இளையராஜா தேர்ந்தெடுத்த கிளைமாக்ஸ்தான் `நான் பாடும் பாடல்' கிளைமாக்ஸ். சிவகுமார் பொட்டு வைத்த நெற்றியை அம்பிகா - தானே சுட்டுக்கொள்வது போன்ற இந்த கிளைமாக்ஸ் காட்சியால் படம் சக்கை போடு போட்டு பிரமாண்ட வெற்றி பெற்றது. படம்
25 வாரங்கள் ஓடியது.
தொடர்ந்து மூன்று படங்களும் வெற்றிகரமாக ஓடியதால் திரையுலகிலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி, மதர்லேண்ட் பிக்சர்ஸ் பெயர் மிகவும் பிரபலமடைந்தது.
இவ்வாறு கோவைத்தம்பி கூறினார்.''
பட அதிபர் கோவைத்தம்பி தயாரித்த முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை'' 425 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இந்தப் படத்தின் மூலம், டைரக்டராக ஆர்.சுந்தர்ராஜன் அறிமுகமானார்.
கோவைத் தம்பியின் சொந்த ஊர் கோவை மாவட்டம் தெலுங்குபாளையம். 1940 நவம்பர் 28-ந்தேதி பிறந்தார். தந்தை பெயர் பெருமாள் உடையார். தாயார் சுந்தாயி அம்மாள்.
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த கோவைத்தம்பி, எப்படி அரசியல்வாதியாகவும், பட அதிபராகவும் ஆகமுடிந்தது?
"கிராமத்தில், கோவணம் கட்டிக்கொண்டு, எருமை மாட்டைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த என்னை, கோபுரத்தின் உச்சியில் உட்கார வைத்தது திராவிட இயக்கமும், எம்.ஜி.ஆரும்தான்.
1954-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த "மலைக்கள்ளன்'' படம் வெளிவந்தது. அப்போது, கோவை ஆர்.எஸ்.புரம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.
எங்கள் பள்ளியின் மாணவர் மன்றத்தில், "கலையும் நாமும்'' என்ற தலைப்பில் பேச எம்.ஜி.ஆர். அழைக்கப்பட்டிருந்தார்.
அவரை நேரில் பார்த்த அந்த நாள், என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அவர் அழகு, நடை-உடை-பாவனை, பேச்சு அனைத்தும் என்னைக் கவர்ந்தன. அவருடைய மேடைப் பேச்சு என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் கூட்டம் எங்கு நடந்தாலும் ஆர்வத்துடன் சென்று அந்தத் தலைவர்களின் பேச்சை கேட்டேன். அதனால்தான், பள்ளிப் பருவத்திலேயே, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறந்த பேச்சாளருக்கான விருதுகளைப் பெற்றேன். கலைஞரின் பேச்சும், எழுத்தும், சினிமா வசனங்களும், எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களும் என் உள்ளத்தில் கலை உணர்வைத் தூண்டின. நானே பல நாடகங்களை உருவாக்கி, வசனம் எழுதி மேடைகளில் நடித்து வந்தேன்.
தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்டு, அவர் அ.தி.மு.க.வை தொடங்கியபோது, நானும் அவர் கட்சியில் ஐக்கியமானேன். சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
நான் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கியிருந்தபோது, 1981-ல் கோவையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் என்னை அணுகி, "எங்களிடம் ஒரு நல்ல கதை இருக்கிறது. அதை நீங்கள் சினிமாப்படமாகத் தயாரித்தால் நன்றாக இருக்கும்'' என்று கூறினார்கள். அந்த இளைஞர்கள்தான் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனும், துணை இயக்குனர் சிறுமுகை ரவியும்.
"பொது வாழ்வுக்கு வந்து விட்டதால், சினிமா தயாரிக்கலாமா?'' என்று முதலில் தயங்கினேன். பிறகு சம்மதித்தேன்.
பொதுவாக, அந்தக் காலக் கட்டத்தில் என் எண்ணங்களை அண்ணன் அரங்கநாயகத்திடம் (முன்னாள் அமைச்சர்) கலந்து பேசிய பிறகுதான் முடிவு எடுப்பது வழக்கம். எனவே, சுந்தர்ராஜன் என்னிடம் கதையை கூறியதும், அதை அரங்கநாயகத்திடம் கூறும்படியும், அவர் முடிவை ஏற்பதாகவும் தெரிவித்தேன்.
அதன்படி, அரங்கநாயகத்தை சந்தித்து கதையைக் கூறினார், சுந்தர்ராஜன். "கதை நன்றாக இருக்கிறது. தாராளமாகப் படம் தயாரிக்கலாம்'' என்று அரங்கநாயகம் தெரிவித்தார்.
TAMIL NEWS STORIES
Home > More Tamil NewsAayirathil Oruvan crosses 50 days
Vathiyar continues to rule
May 02, 2014
It was a treat for the massive fan base of ‘Vathiyar’ (late Dr. MG Ramachandran) this election season, when the evergreen Aayirathil Oruvan’s restored version hit the screens. The classic successfully completes 50 days run today and is still going strong.
In Chennai the film is being screened at Sathyam’s Studio 5 and Baby Albert, with a show each. The 50 days poster, which was released today, modestly claims that the film is marching towards its 75th day. But would it even be a surprise if it crosses the 100 day mark with ease, considering the fan base the lead cast, matinee idol MGR and current Chief Minister of Tamil Nadu, Dr. J Jayalalithaa, still have in the state?
புரட்சித் தலைவரின் ‘ஆயிரத்தில் ஒருவன்’-50-வது நாள் விழா..!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு கடந்த பிப்ரவரியில் தமிழகம் முழுவதும் ரீலீஸானது.
இந்தப் படத்தின் 50-வது நாள் விழா இன்று சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவின் புகைப்படங்கள் இவை.(small correction movie released in march14)
https://www.google.co.in/url?sa=t&rc...YJnBIcJOTKaP0Q
http://i1170.photobucket.com/albums/...ps603a72d3.jpg
1968இல் வெளியான மக்கள் திலகத்தின் 100வது படமான ஒளிவிளக்கு இலங்கையில் 5 தியேட்டர்களில் 100நாட்களும் 2தியேட்டர்களில் 175 நாட்களும் ஓடியது.அதன் பிறகு 1974, 1979, 1984, 1993 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் இலங்கையில் திரையிடப்பட்டு ஒவ்வொரு முறையும் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.