Originally Posted by
Gopal,S.
வாசு ,
ஆணையிட்டு விட்டீர்கள். இந்த படம் 1971 இல் நெய்வேலி அமராவதியில் பார்த்தது.இந்த படம் பார்த்து விட்டு வரும் போது என் நண்பன் (அவனுக்கு சிறிது உடல் உபாதையில் வாய் கோணலாக இருப்பதால் கோண வாயன் என்று கூப்பிடுவோம்). அப்போதெல்லாம் எல்லோருக்கும் பட்ட பெயர்தான்.(இப்போது அதெல்லாம் வழக்கிலில்லை என்று கேள்வி)
படம் பார்த்து விட்டு நடந்து வரும் போது எங்கள் பள்ளி வழியாக வந்தோம். கழிப்பறைக்கு சென்றால் அங்கு எழுதியிருந்த " புண்" என்று ஆரம்பித்த வார்த்தையை விவரம் தெரியாமல் கோண வாயன் புன்னகை என்று படித்து விட நாங்கள் சிரித்து கலாய்த்து அடித்த லூட்டி.
அப்போதே எனக்கு விமர்சகர்களை கண்டால் கொதிக்கும். எந்த சோதனை முயற்சிகளையும் முளையிலேயே கிள்ளி எரிந்து வெந்நீர் ஊற்றி விடுவார்கள். அப்போதே நான் கொஞ்சம் ரசனையில் வேறு பட்டவன். (ரவி சொல்வது மாதிரி படி படியாக எழுதி பழகி உயரவில்லை. வயதின் முதிர்ச்சிக்கும் அறிவின் எழுச்சிக்கும் தொடர்பேயில்லை) அப்போது எனக்கு neo noir அபத்த படங்களை தெரியாவிட்டாலும் ,சும்மா கற்பழிப்பு என்றால் ஜாக்கெட் கிழிப்பதை காட்டாமல் , சினிமா லைசென்ஸ் உபயோக படுத்தி பாலச்சந்தர் பண்ணிய புதுமை எனக்கு மிக பிடித்தே இருந்தது.(கற்பழிப்பு பற்றியெல்லாம் 8 வயதிலேயே எனக்கு வயதை மீறிய நண்பர்கள் மது,மாணி என்ற சென்னை நண்பர்கள் சுமாராக போதித்து விட்டார்கள்.11 வயதில் map drawing ஆரம்பித்தாகி விட்டது).பாடல்களே ரியலிசம் இல்லாதது என்று வரும் போது ,அதை சுவாரஸ்ய படுத்த எங்கு உபயோகித்தால் என்ன?
காமத்தில் கண்கள் கெட்டால் ,ஞானி யின் பேரும் முட்டாள்.(அம் ஆத்மியில் சேர்ந்து election நின்றாலும்)மோகத்தில் பிறரை தொட்டால் உன் தாயே நேர்மை கெட்டாள் . என்று வரிகளும், பரபரப்பான இசை கோர்ப்பும் அமர்களமான பாலச்சந்தரின் low key mood lighting எல்லாம் காட்சியை தூக்கும்.(என்ன பாலச்சதருக்கு பிரியமான ஜெயந்தியின் மேலானதை இன்னும் கொஞ்சம் கூடுதல் focus பண்ணியிருக்கலாம்).ராமதாசின் கோமாளி minor சுரிதார் (ஜமிந்தார்?),ஜெயந்தியின் கருப்பில் பார்டர் போட்டு நீள செயின் என்று ஞாபகம்.(43 வருஷம் ஆயிடிச்சு பாஸ்).close up சீற்ற கண்கள்,ராமதாசின் வேர்க்கும் மோகம், புலி தலை ,ஒரு மர்ம பட பாணி காட்சியமைப்பு (ராகவன் VAT என்று ஒன்று குடித்து கொண்டிருப்பார்.இதை நான் பார்த்ததே இல்லை.)கொஞ்சமாய் போராட்டம். நிறைய பாட்டு.
பாலச்சந்தரின் துணிச்சல்,புதுமை எண்ணத்தின் எழுச்சிக்கு கோட்டி சலாமுங்கோ.(கோட்டி தண்டாலு )