http://i57.tinypic.com/288s609.jpg
திருவாளர்கள்:ராஜ்குமார், தூத்துக்குடி ராஜப்பா ,நடிகர் ஹாஜா ஷெரிப்,லோகநாதன், ஆர். கே. சண்முகம் மற்றும் பலர்
Printable View
http://i57.tinypic.com/288s609.jpg
திருவாளர்கள்:ராஜ்குமார், தூத்துக்குடி ராஜப்பா ,நடிகர் ஹாஜா ஷெரிப்,லோகநாதன், ஆர். கே. சண்முகம் மற்றும் பலர்
http://i57.tinypic.com/2nuk56e.jpg
திருவாளர்கள்:சாந்தகுமார் ,பெருமாள், ராஜ்குமார், ராமமூர்த்தி மற்றும் பலர். கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பாக திரு சொக்கலிங்கம்
அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.
http://i57.tinypic.com/2dmfudt.jpg
திருவாளர்கள்:மர்மயோகி மனோகர், கோவை வி.கே.எம்., ஜெயகுமார், பெரியநாயகி ,மற்றும் பலருடன் திரு.பி.எஸ். ராஜு
http://i60.tinypic.com/1pxod4.jpg
திருவாளர்கள்:ராமமுர்த்தி,சாந்தகுமார் ,பெருமாள் மற்றும் பலருடன்
திரு.சொக்கலிங்கம்.
திரு ஆர். கே.சண்முகம் அவர்களுக்கு 100 வது நினைவு நாள் பரிசை
வழங்குபவர்கள் திரு.பாரி, திரு. ராஜப்பா ஆகியோர். அருகில் திரு. ராஜ்குமார்.
http://i57.tinypic.com/zlf4on.jpg
http://i62.tinypic.com/29w06wx.jpg
ஆல்பட் திரைஅரங்கின் உள்ளே - மாலை காட்சியின்போது.
இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்களின் திருமண நாளான இன்று அவருக்கு இனிய நல் வாழ்த்துக்களை திரியின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம் .
https://www.youtube.com/watch?v=CXtjNlLAH8E
http://i60.tinypic.com/2a4ofmq.jpg
திருவாளர்கள்:வேலு, சாந்தகுமார், ஹயாத், சிவா மற்றும் பலருடன், திரு. சொக்கலிங்கம்.
இன்றைய சன் லைப் தொலைகாட்சியில் இரவு 7 மணிக்கு
http://i61.tinypic.com/opbqqb.jpg
திரு. எஸ். ராஜ்குமார், பேராசிரியர் திரு. செல்வகுமார் இணைந்து திரு. பி.எஸ். ராஜுவுக்கு 100 வது நாள் நினைவுபரிசு வழங்கினார்கள் .
அருகில் திருவாளர்கள்:குமார், ஹயாத் , ஷங்கர், ராஜப்பா மற்றும் பலர்
http://i61.tinypic.com/a0drb6.jpg
திருவாளர்கள்:ராஜ்குமார், செல்வகுமார், பாரி, குமார், ராஜப்பா மற்றும் பலருடன் திரு.லோகநாதன், திரு.ஹயாத் இணைந்து 100 வது நாள்
நினைவு பரிசு திரு. பி.எஸ். ராஜுவுக்கு வழங்கும் காட்சி.
http://i61.tinypic.com/315ep76.jpg
ஆயிரத்தில் ஒருவன் 100வது நாள் விழா புகைப்படங்கள் முற்றும்.
----------------------------------------------------------------------------------------------------------------
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=rEOt...ature=youtu.be
''இதுவரை வந்த தமிழ் சினிமாக்களில் நீங்கள் அதிகம் பார்த்த படம் எது?''
'''நாடோடி மன்னன்’. சினிமா என்ற பிம்பத்தை ஆறு வயதில் எனக்குள் கட்டி எழுப்பிய முதல் படம். இன்றும் ரசிக்கிறேன். 60-ல் இருந்து 6-க்குப் பயணப்படுகிறேன்!
- கவிஞர் வைரமுத்து , விகடன் இதழில் ..
நமது தெய்வம் மக்கள்திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் வேலூர் அப்சரா திரை அரங்கில் இரண்டு நாட்கள் மட்டும் நண்பர்களே
காரணம் ஆடி மாதம் வருவதனால் அவசரமாக வேறு தேதி இல்லாததனால் உடனடியாக ஆரம்பம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம்
இருந்தும் இன்னும் theator வேலை முடிய ஒரு மாதம் ஆகும்
sentimental ஆக தலைவர் படம் போடவேண்டும் என்பதற்காக அவசரமாக போடப்பட்டது
திரு அப்சரா பாலாஜி அவர்களின் நண்பர் திரு அசோக்குமார் இந்த தகவலை என்னிடம் பேசும்போது கூறினார்
http://i59.tinypic.com/33eh9ua.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i58.tinypic.com/2qkm03m.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/2nscas7.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i58.tinypic.com/29z625x.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/14afo9l.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
supper still YUKESH SIR
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்Quote:
Originally Posted by Yukesh Babu;114816
1
Thanks ramamurthy sir for uploading aayirathil oruvan posters of apsara theaters
what about fans reaction today
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i57.tinypic.com/2aangis.jpg
http://i60.tinypic.com/f57zi9.jpg
மக்கள் திலகத்தின் ''தெய்வத்தாய் '' இன்றுடன் பொன்விழா ஆண்டு நிறைவு நாள் .
http://i58.tinypic.com/24b3es1.jpg
18.7.1964 அன்று வெளிவந்த சத்யா மூவிஸ் முதல் படம் .
பாலசந்தர் - அறிமுக படம் - வசனம் .
மாதவன் இயக்கிய முதல் மக்கள் திலகத்தின் படம் .
100 நாட்கள் ஓடி வெற்றி பெற்ற படம் .
1964-ல் வேட்டைக்காரன், என் கடமை, பணக்கார குடும்பம், தெய்வத்தாய், தொழிலாளி, படகோட்டி, தாயின் மடியில் ஆகிய 7 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். இதில் "தெய்வத்தாய்", ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிப்பு.
இந்தப்படம் தயாரிக்கப்பட்ட காலக்கட்டத்தில், கே.பாலசந்தர் அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். நாடகம் எழுதி, இயக்குவதில் புகழ் பெற்று விளங்கினார். அவர் எழுதிய "மெழுகுவர்த்தி", "மேஜர் சந்திரகாந்த்" ஆகிய நாடகங்களில் ரசிகர்களிடம் மிகுந்த ஆதரவைப் பெற்றிருந்தன.
ஒருமுறை "மெழுகுவர்த்தி" நாடகத்திற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், பாலசந்தரின் திறமையை வெகுவாகப் பாராட்டியதுடன், அவரைப்போன்ற இளைஞர்கள் படத்துறையில் நுழையவேண்டும் என்று வற்புறுத்தினார்.
அதன் விளைவாக, "தெய்வத்தாய்" படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு பாலசந்தருக்குக் கிடைத்தது.
இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி இணைந்து நடித்தார். பி.மாதவன் டைரக்ட் செய்தார். இசை: விசுவநாதன் - ராமமூர்த்தி. இது வெற்றிப்படமாக அமைந்தது.
தேவர் பிலிம்ஸ் தயாரித்த "வேட்டைக்காரன்" படத்தில் மேல் நாட்டு பாணியில் "கவ்பாய்" உடையில் எம்.ஜி.ஆர். நடித்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சாவித்திரி.
ஆரூர்தாஸ் வசனம் எழுத டைரக்ட் செய்தவர் எம்.ஏ.திருமுகம். இந்தப்படமும், இதே ஆண்டு வெளிவந்த "தொழிலாளி"யும் தேவர் பிலிம்சின் வெற்றிப்படங்கள்.
வேலுமணி தயாரித்த "படகோட்டி"யில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர்.
சக்தி கிருஷ்ணசாமியும், ஏ.எல்.நாராயணனும் வசனத்தை எழுதினர். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்த இந்தப் படத்தை டி.பிரகாஷ்ராவ் டைரக்ட் செய்தார். இப்படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
"தெய்வத்தாய்", நியாயம், சத்தியம், கடமை இவைகளை கொள்கை உள்ள ஆர்.எம்.வீ. அவர்களுக்கு இந்த படம் ஒரு சவாலாக இருந்தது. தமிழ் சினிமா துறையில் ஆர்.எம்.வீ. அவர்கள் முழுக்க முழுக்க மக்கள் திலகம் அவர்களுடைய கொள்கையை பின்பற்றுபவர். நல்லவர், இவரை நம்பி இந்த படத்தை தயாரிக்கிறேன். இது நிச்சயமாக எனக்கு வெற்றியையும், நல்ல முன்னேற்றமும் கிடைக்கும் என்று மனதிடத்துடன் அந்த படத்தை "சத்யா மூவிஸ்" தயாரித்தது. ஆர்.எம்.வீ. வெளியிட்டார். அந்த படம் 100 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
1960களில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி மற்றும் கே.வி.மகாதேவன் கோலோச்சிக்கொண்டிருந்த நேரம், இந்த வாத்தியம் தமிழ் திரையிசையில் புகுந்தது. அந்த நாளைய பல படங்களின் பாடல்களுக்கு இந்த இசை பயன்படுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பாக எம்.ஜி.ஆரின் பாடல்களில் அதிகளவில் இது புகுந்து விளையாடியது. எம்ஜிஆரின் படங்களில் மகிழ்ச்சியானதும், கலகல்ப்பானதும், வேகமானதுமான பாடல்கள் அதிகமாக இருந்ததனால் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் இந்த வாத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கலாம் என்பது எனது எண்ணம்.
இதன் ஆதிக்கம் பல பாடல்களில் இருந்தாலும், தெய்வத்தாய் திரைப்படத்தில் எம்ஜிஆர் சரோஜாதேவியை சுற்றி ஓடியபடி குதூகலித்து வெளிப்படுத்தும் ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் என்ற பாட்டு பொங்கசின் அட்டகாசத்துக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.
இந்தக்காலகட்டத்தில் எம்.எஸ்.வி.யின் ஆர்கெஸ்ட்ராவில் பொங்கஸ் கலைஞராக இருந்தவரின் பெயர் கணேஷ். இவர் எப்படி பொங்கசை இசைத்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, பலவருடங்கள் கடந்தாலும் இன்றும் உற்சாகம் கரைபுரண்டோடும்.
எம்ஜிஆரின் காதலின் போது குறும்புத்தனதுடன் குதூகலமாக ஓடி வருவது இந்தப் பொங்கஸ் தான். இளமை ததும்பும் இசைக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி பொங்கசைப் மிகத் திறம்படப் பயன்படுத்தியிருப்பார்கள்.
இந்தப் பாட்டின் மொத்த நீளம் 4.30 நிமிடங்களாகும். இதில் பாடலின் ஆரம்ப இசையை அட்டகாசமாகத் தொடக்கி வைப்பதே பொங்கஸ் கணேஷ் தான். அழகான எம்ஜிஆர், மிடுக்காகத்தொடங்கும் பொங்கசின் தாளத்துக்கேற்ப, தனது கால்களால் ஆடுவது கண்கொள்ளாக் காட்சி.
http://youtu.be/ufwwcCxpz8E
பாடல் தொடங்கிய 0.04 செக்கனில் தனது விளையாட்டை ஆரம்பிக்கும் பொங்கஸ் 0.19 செக்கன் வரை அட்டகாசமாகச் சென்று பல்லவிக்கு வழிவிட்டொதுங்கிகிறது..
பின் முதலாவது இடையிசையில் 1.08 நிமிடத்தில் தொடங்கி, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு 1.26 நிமிடத்தில் மெதுவாக ஓய்கிறது. முதலாம் சரணம் முடிந்ததும், 2.19 நிமிடத்தில் பாட்டின் இரண்டாவது இடையிசையில் மீண்டும் குதித்தோடி வரும் பொங்கஸ் எம்ஜிஆருடன் சேர்ந்து சில்மிஷம் பண்ணியபடி 2.57 நிமிஷம் வரை எமையெல்லாம் உற்சாகத்தில் கட்டிப்போடுகிறது. அது முடிவுற்று இரண்டாவது சரணம் தொடங்கும் போது காணாமல் போய் இறுதியாக சரணம் முடிந்தும் முடியாததுமாக பாய்ந்தோடி வந்து 3.46 நிமிடத்தில் காதுகளை அணைத்துக் கொள்கிறது. அப்படியே எம்ஜிஆருடன் மீண்டும் பரிணமித்து 4.09 நிமிடத்தில் மெதுவாக வேகமெடுக்கும் பொங்கஸ், தொடர்ந்து மிக வேகமாக ஓடிப்போய் 4.30 நிமிடத்தில் பாடலின் முடிவுடனும் எம்ஜிஆருடன் மலர்ந்த முகத்துடனும் முடிந்து போகிறது.. ஆஹா அற்புதமான இசை கேட்டுப்பாருங்கள் நண்பர்களே தொலைந்து போவீர்கள்.
அதேபோல் நாளை நமதேயில் எம்ஜிஆர் லதாவுடன் ரொமாண்டிக் பண்ணும் என்னை விட்டால் யாருமில்லையிலும் பொங்கசைத்தான் முன்நிலைப் படுத்தியுள்ளார் எம்.எஸ்.வி. தனது ஆசானின் எதிர்பார்ப்பை உணர்ந்த பொங்கஸ் கலைஞர் கணேஷும் அவரின் எதிர்பார்ப்புக்கு எந்தக் குறையும் வைக்காமல் அற்புதமாக இசைத்துள்ளார்.
Courtesy- ilavenirkaalam
மக்கள் திலகத்தின் வெற்றிக்கு பின்னால் இருந்த முதன்மையான மனிதர் என்றால் திரு .இராம .வீரப்பன் அவர்கள்.
http://i59.tinypic.com/2zzq1bp.jpg
திரு அண்ணா அவர்களால் அறிமுகபடுத்தபட்ட திரு வீரப்பன்
1953 முதல் 1987 வரை 34 ஆண்டுகள்
மக்கள் திலகத்தின் நாடக மன்றம்
எம்ஜியார் பிக்சர்ஸ்
எம்ஜிஆர் ரசிக மன்றம்
நடிகன் குரல் - சமநீதி
சத்யா மூவிஸ் நிறுவனம்
அண்ணா திமுக -மேலவை உறுப்பினர்
அண்ணா திமுக - சட்ட மன்ற உறுப்பினர்
1977-1987 மந்திரிசபையில் பதவி
என்று எல்லா துறையிலும் திரு வீரப்பன் முழு மனதுடன்
மக்கள் திலகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர் .
திரைப்பட துறையில் மக்கள் திலகத்தின் பல சாதனைகளுக்கு
உறுதுணையாக இருந்தவர் . எம்ஜியார் மன்றங்களை கட்டி காத்தவர் .
மக்கள் திலகத்தின் ரசிகர்களை ஆதரித்து ,பல உதவிகளை புரிந்தவர் .
சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்த
தெய்வத்தாய்
காவல்காரன்
ரிக்ஷாக்காரன்
இதயக்கனி
பிரமாண்ட வெற்றி படங்கள் . நான் ஆணையிட்டால் - கண்ணன் என் காதலன் வெற்றி படங்கள் .
கண்டிப்புக்கு பெயர் போனவர் .
மக்கள் திலகத்தின் புகழுக்கு இவர் ஆற்றிய பணிகள் மறக்க முடியாது . அருமையான மனிதர் .
DEIVATHAI -1964
http://i62.tinypic.com/33cogib.jpg
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்
தமிழ் - அண்ணா - கடமை - திமுக - எம்ஜிஆர்
இப்படி பல மூன்றெழுத்தில் உள்ள வார்த்தைகள் - வாலியின் வரிகள் நிஜ வாழ்வில் மக்கள் திலகத்தின் புகழை பிரதிபலித்தது .
மக்கள் திலகம் நம்மை விட்டு பிரிந்து 26 ஆண்டுகள் ஆன பின்னரும் இந்த பாடலில் உள்ள
வரிகள் இன்றளவும் மிக பொருத்தமாக உள்ளது .
எம்ஜிஆரின் பெயர் - எம்ஜிஆரின் படங்கள் - எம்ஜிஆர் இயக்கத்தின் ஆட்சி .
சரித்திரம் புகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது .
இந்த அதிசயம் உலகில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டுமே .