http://i59.tinypic.com/334n7vb.jpg http://i60.tinypic.com/2m7w0er.jpg
Printable View
மறு, மறு வெளியீடுகளில் அசுரத்தனமான வெற்றி- திரையிடல்கள் கண்ட வசூல் சக்கரவர்த்தி - மக்கள்திலகம் காவியங்களில் "ஒளிவிளக்கு" மிக முக்கிய grade - அந்தஸ்து பெற்றதில் ஒன்று...அந்த...காலத்திலிருந்து திரும்ப, திரும்ப ஜெமினி கலர் லேப்பிளிருந்து புத்தம் புது பிரிண்டுகள் வருடம் தவறாமல் கண்ட திரை காவியம்... இப்படத்தின் மறு வெளியீடுகளில் இந்த பட விநியோகஸ்தர்கள், திரை அரங்க உரிமையாளர்கள், கான்டீன், சைக்கிள் ஸ்டாண்ட் குத்தகைதாரர்கள் வரை அமோக லாபம் அடைந்தோர் அநேகம்...இது போல பலரை பல காலம் வாழ வைத்தவர் மக்கள்திலகம்!!!!!!
1988- மக்கள்திலகம் அமரரான காலத்தில் "ஒளிவிளக்கு"- போதிய இடைவெளி அன்றி சென்னை- நாகேஷ், நடராஜா -திரை அரங்குகளில் சினிமாஸ்கோப் - அகன்ற திரையில் polyester பிரிண்ட் வெளியிட பட்டபொழுது மக்கள் அளித்த பேராதரவை காணும் பாக்கியம் ஏற்பட்டது... தொடர்ந்து houseful காட்சிகளாக நாகேஷில் பார்க்கும்போது படம் டைட்டில் காட்சி தொடங்கி மக்கள்திலகம் அறிமுகம் ஆவதிலிருந்து படம் நிறைவடையும் வரை பார்த்த ரசிகர்கள் மக்கள் அனைவரின் கண்களிலிருந்தும் கண்ணீர், ஆனந்த கண்ணீராக இனி எப்பொழுது மக்கள்திலகத்தை காண்போம் என்ற உணர்ச்சி மிகுதியில் காண நேரிட்டதை மறக்கவே முடியாது...படம் முழுவதும் மக்களின் அலப்பறைதான்...
மக்கள்திலகம் வழங்கும் "ஒளிவிளக்கு" 100-வது திரை பட காவியத்தின் வசூல் சாதனை, பொது மக்கள் ஆதரவு , மகத்தான வரவேற்பு காணும் படம் வேறு மொழிகளிலாவது உண்டா? என தகவல் அறிந்தவர் சொல்லலாம்...இதன் ஹிந்தி, மலையாளம் பதிப்பு பார்க்க நேர்ந்தது... ஆனால் ஏதெனிலும் மக்கள்திலகத்தின் ஆளுமை, அந்த கத்தியை பட்டன் தட்டி நீட்டவும், லாவகமாக மடக்கவும், பின்பு மீண்டும் பட்டனை முடுக்கி கத்தியை நீட்டிய பாங்கும் எவரும் கற்பனை பண்ண முடியாத கலையின் வடிவமாகும்...
ஒரு எழுத்தாளனின் உணர்ச்சிதான் இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு வழி வகுக்கிறது
- புரட்சித்தலைவர்
வணக்கம் ஹுசைன் மற்றும் குருநாதன் சார்,
இந்த (...............)இல் இருக்கும்மக்கள்திலகம் திரி -தங்களது வருகை நல்வரவு ஆகுக:
https://www.youtube.com/watch?v=nhVztpWRldY
நன்றி.