அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
https://youtu.be/s4YlJrewwBY
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
Printable View
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
https://youtu.be/s4YlJrewwBY
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
ஆதவன் ரவி
அட்டகாசமான நூறு பதிவுகளில் நூறாயிரம் விஷயங்களை சொல்லி விட்டீர்கள். தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
தங்களைத் தொடர்ந்து இங்கு ஒவ்வொருவருக்குமே இது போன்ற நினைத்து மகிழும் நுணுக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஆசை வந்து விட்டது, நான் உள்பட.
என்றாலும் தங்கள் நடையில் நாங்கள் படிப்பது அதை விட ஆனந்தம்.
தொடருங்கள்.
Muthaiyan Ammu,
I cant explain in my words my Ecstatic state on seeing sivatha mann,niraikudam with two best possible pairs in south Indian screen.(Sivaji-Vanisree,Sivaji-Kanchana) Wish,more stills from Orunaalile and kannoru pakkam.
My Deepavali wishes to All.(Our Rasi festival)
அனைத்து நண்பர்களுக்கும் இதயம் கனிந்த தீபத் திருநாள் பசுமை தீபாவளியாக மலர்ந்திட நடிகர்திலகம் திரிசார்ந்த நல்வாழ்த்துக்கள்
செந்தில்
முத்தையன் அம்மு
நிறைகுடமாய் விளங்கும் மக்கள் தலைவர் நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியங்களுள் ஒன்றான நிறைகுடம் நிழற்படங்களின் மூலம் தாங்களும் ஓர் நிறைகுடமே என சொல்லியிருக்கிறீர்கள்.
தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
To All Hubbers,
HAPPY DIWALI.
Mr Muthaiyan Ammu,
Thanks a lot for the Kallakkal Stills of NT's in Sivandha Mann and Niraikudam.
சங்கம் - தங்கம் - சிங்கம்
இரண்டு மாதங்களுக்கு முன்பு சரியாக சொல்ல வேண்டுமென்றால் செப்டம்பர் 17 அன்று காலை ரயிலில் மதுரைக்கு சென்று இறங்குகிறேன். அன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி. ரயில் நிலையத்திலும் வெளியில் வந்தவுடனும் முதலில் தென்பட்டது ஒரு பெரிய விளம்பரம். இன்று முதல் கோலாகல ஆரம்பம். சென்னை சில்க்ஸ்-தங்கம் தியேட்டர் வளாகத்தில் என்ற வரிகள் பளிச்சிடுகின்றன.
அன்று மாலை மற்றொரு அலுவல் காரணமாக தங்கம் தியேட்டர் அமைந்திருக்கூடிய மேல பெருமாள் மேஸ்திரி வீதி வழியாக செல்ல நேர்ந்தது. அரங்க முகப்பே முற்றிலும் மாற்றபப்ட்டு வெள்ளமென மக்கள் கூட்டம். முந்தைய காலங்களில் கூட்டம் மிக அதிகமாக இருந்தால் பின் பக்க கேட் என அழைக்கப்பட்ட வாசல் வழியாக அதாவது தியேட்டருக்கு பக்கவாட்டில் அமைந்திருக்கும் காக்கா தோப்பு தெரு என்று அழைக்கப்படும் வீதியில் மக்கள் வெளியே வருவார்கள். இப்போதும் மக்கள் புது துணிகளை வாங்கிக் கொண்டு கூட்டம் கூட்டமாக அந்த வாசல் வழியாக வெளியே வந்துக் கொண்டிருந்தார்கள்.
வெகு நாட்களுக்கு பின் மதுரை வந்த சந்தோஷம் நிறைந்திருந்த மனதில் சட்டென்று ஏதோ குறைவது போல் தோன்றியது. உற்சாக பலூனில் சின்ன துளையிட்டது போல். முந்தைய தலைமுறையை சேர்ந்தவர் அதிலும் சினிமாவை நிரம்ப நேசித்த மனிதர்கள் அனைவருக்குமே திரையரங்குகள் என்பது அவர்கள் வாழ்க்கையின் ஒரு பாகமாகவே மாறிப் போயிருக்கும்.
இதற்கு முன்பும் பல திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. அப்போதும் மனதில் சோகம் வந்தது. ஆனால் தங்கம் தியேட்டர் மூடப்பட்டு விட்டது எனும்போது மட்டும் ஏன் கூடுதல் சோகம் வர வேண்டும்? இத்தனைக்கும் அந்த அரங்கம் ஏதோ முதல் நாள் வரை செயல்பட்டுக் கொண்டிருந்த தியேட்டரும் அல்ல. 1994-லியே தங்கம் தியேட்டர் தன இயக்கத்தை நிறுத்திக் கொண்டு விட்டது. ஆக 21 வருடங்களாக மூடிக் கிடக்கும் தியேட்டர் எப்போது வேண்டுமானாலும் இடிக்கபப்ட்டு வணிக வளாகமாக மாற கூடும் என்பதும் தெரியும். அபப்டி இருந்தும் ஏன் இந்த சோகம்?
அதற்கு காரணம் தங்கம் தியேட்டருக்கும் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் இடையே உள்ள தொப்புள் கொடி பந்தம் என்றே சொல்ல வேண்டும். 1952 அக்டோபர் மாதம் 17-ந் தேதி தமிழ் சினிமாவில் துள்ளி எழுந்தான் ஒரு சிங்கத் தமிழன். அவனோடு சேர்ந்து துள்ளி எழுந்தது மதுரை தங்கம் தியேட்டர். பலருக்கு தெரிந்திருக்கலாம். என்றாலும் தெரியாத ஒரு சிலருக்காக சொல்கிறேன். மதுரை தங்கம் தியேட்டர் ஆரம்பமானதும் அதே 1952 அக்டோபர் 17 அன்றுதான். பராசக்திதான் முதல் படமாக வெளியானது.
தனிப்பட்ட முறையில் தங்கம் திரையரங்கைப் பற்றி எனக்கு ஏராளமான நினைவுகள்.
முதல் நினைவு மெல்லிய தீற்றலாய் - அன்னை இல்லம். படம். அன்றைக்கு மிக சிறிய வயதில் பால்கனியில் அமர்ந்து பார்த்ததில் ஏதும் நினைவில்லை. நடையா இது நடையா பாடல் காட்சியின் ஒரு சில ஷாட்ஸ் மட்டும் ஏனோ நினைவிருக்கிறது..
மிகப் பெரிய போர்டிகோ அமைந்திருக்கூடிய தங்கத்தில் மக்கள் வெள்ளத்தில் வாசல் முதல் உள்ளே அரங்கத்தின் பால்கனிக்கு இட்டு செல்லும் சின்ன படிக்கட்டுகள் வரை பெற்றோரின் கை பிடித்து சென்று கர்ணன் படம் பார்க்க போனதும் போர் காட்சிகளும் நடிகர் திலகம் கதையை தலைக்கு மேலே தூக்கி பீமனை தாக்க முயற்சிக்கும் காட்சியும் இன்றும் நினைவில்.
பணமா பாசமா ஒரு மதியக் காட்சி பார்க்க போனபோது அன்றுதான் படத்தில் நடித்த நட்சத்திரங்கள் நேரில் தோன்றுகிறார்கள் என்பது தெரிய வந்தது. ஒரு படத்தின் வெற்றி விழாவில் அதில் நடித்த நட்சத்திரங்கள் மேடையில் தோன்றுவதை முதன் முதலாக நேரில் பார்த்த அனுபவம் தங்கம் தியேட்டர் எனக்கு கொடுத்த ஒரு pleasant surprise.
பணமா பாசமாவை பார்த்து விட்டூ அதிக எதிர்ப்பார்ப்புகளுடன் வீட்டில் அனைவரும் அதே யூனிட்டின் அடுத்த படமான உயிரா மானமா படத்தை முதல் நாள் அடித்து பிடித்து பார்க்க போய் ஏமாற்றம் அடைந்ததும் அதே தங்கத்தில்தான்
நடிகர் திலகத்தின் படத்தை முதல் நாள் பார்க்க வேண்டும் என்ற ஆசையை முதலில் நிறைவேற்றிக் கொடுத்ததும் எங்க மாமா படத்தின் மூலமாக அதே தங்கம் தியேட்டர்தான்.
எங்க மாமா முதல் நாள் இரவுக் காட்சி என்றால் அதை விட விரைவாக நடிகர் திலகத்தின் படத்தை முதல் நாள் மாலைக் காட்சியிலே பார்க்கும் ஆசை "எதிரொலி"க்க வைத்ததும் அதே தங்கம் தியேட்டர்தான்.
முதன் முறையாக படம் பார்க்க வீட்டோடு செல்லாமல் நண்பனோடு Andaz படம் பார்த்ததும் அதே தங்கம் தியேட்டரில்தான். ஜிந்தகி ஏக ஸஃபர் பாட்டு முடிந்ததும் [ராஜேஷ் கண்ணா portion முடிந்தவுடன்] ஏராளமான பேர் [குறிப்பாக இளம் பெண்கள்] எழுந்து போவதைப் பார்த்ததும் அதுதான் முதல் முறை. .
தேரே மேரே ஸப்னே என்ற தேவ் ஆனந்த் படம் பார்க்கும்போது அதில் இறுதியில் வரும் ஒரு பிரசவக் காட்சியைப் [அந்த கால் கட்டத்திற்கு துணிச்சலாக காட்டியிருப்பார்கள்] பார்த்து விட்டு முன் வரிசையில் அமர்ந்திருந்த சக வயது சிறுவன் ஒருவன் மயக்கம் போடுவதை பார்த்ததும் அதே தங்கம் தியேட்டரில்தான்.
மறக்க முடியாத 1972-ல் லாரி டிரைவர் ராஜாவை "நீதி"யில் பயங்கர அளப்பரையோடு பார்த்ததும் தங்கத்தில்தான்
நீதிக்கு பிறகு ஒரு ஒன்றரை வருட காலம் முழுக்க முழுக்க இந்திப படங்களை மட்டுமே தங்கம் திரையிட ஏராளமான இந்தி நடிகர்களையும் இந்திப் படங்களையும் பரிச்சயப்படுத்தியதும் தங்கம் தியேட்டர்தான். சீதா அவுர் கீதா, விக்டோரியா நம்பர் 203, யாதோன் கி பாராத், மனோரஞ்சன், பே-இமான் என்று எத்தனை எத்தனை படங்கள்!
நடிகர் திலகத்தை மதுரை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது தங்கம் தியேட்டர் எனும்போது அந்த முதல் அனுபவம் அதாவது பராசக்தியை தங்கத்தில் தரிசிக்கும் அனுபவம் நமக்கு கிடைக்கவில்லையே என்ற என்னைப் போன்றோரின் ஏக்கத்தையும் போக்கியது தங்கம் தியேட்டர்.
ஆம். 1977-ம் ஆண்டு தீபாவளியின்போது தங்கம் தியேட்டர் தன வெள்ளி விழாவைக் கொண்டாடியது. அந்த நேரத்தில் தங்கத்தில் வெளியான முக்கியமான படங்களிலிருந்து காட்சிகள் திரையிடப்பட்டன. அப்படி அந்த தீபாவளிக்கு வெளியான "சக்கரவர்த்தி" திரைப்படம் பார்க்க போனபோது பராசக்தியின் முக்கியமான காட்சிகளை அதே தங்கத்தில் காணும் வாய்ப்பும் கிடைத்தது. 1952-ல் அலப்பரை எப்படி இருந்தது என்பது தெரியாது. ஆனால் 1977-ல் பராசக்திக்கு நடந்த அலப்பரை மறக்க முடியாது. .
நடிகர் திலகத்தின் படங்களான இளைய தலைமுறை, என்னை போல் ஒருவன் போன்றவற்றை மீண்டும் முதல் நாள் காண வாய்ப்பு கிடைத்ததும் தங்கம் தியேட்டர் மூலமாகத்தான்
எம்ஜிஆர் அவர்களின் படங்களான பறக்கும் பாவை, தேடி வந்த மாப்பிள்ளை, நான் ஏன் பிறந்தேன், ஜெய்சங்கரின் வீட்டுக்கு வீடு, அத்தையா மாமியா, துணிவே துணை, அன்று சிந்திய ரத்தம், ஒரே வானம் ஒரே பூமி, பக்திப் படங்களான ஆதி பராசக்தி, சுப்ரபாதம், முத்துராமனின் ஒரு குடும்பத்தின் கதை, உறவு சொல்ல ஒருவன், வாழ்ந்து காட்டுகிறேன், வாழ்வு என் பக்கம், காற்றினிலே வரும் கீதம், ரஜினியின் ஆறிலிருந்து அறுபது வரை, பாக்யராஜின் தூறல் நின்னுப் போச்சு, பிரபுவின் அதிசய பிறவிகள், முத்து எங்கள் சொத்து என்று பார்த்த படங்களை சொல்லிக் கொண்டே போகலாம். .
அதுவும் 1982 தீபாவளியன்று [நவம்பர் 14, 1982] காலையில் பரீட்சைக்கு நேரமாச்சு படத்தை சினிப்ரியாவில் ஓபனிங் ஷோ பார்த்துவிட்டு மாலை ஸ்ரீதேவியில் ஊரும் உறவும் பார்க்க திட்டமிட்டு ஏதோ காரணத்தினால் அது நடக்காமல் போக மாலைக் காட்சி தங்கம் தியேட்டருக்கு சென்று அதிசய பிறவிகள் பார்த்தது, படம் முடிந்து வெளியே வந்தால் பேய்த்தனமான மழை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அடித்து பெய்த மழை, வேறு வழியில்லாமல் இரவு 10-30 மணிக்கு தொப்பலாக நனைந்து ரோடுகளில் முழங்கால் அளவிற்கு தேங்கி நின்ற தண்ணீரில் கிட்டத்தட்ட நீந்தி சென்று ரயில்வே ஸ்டேஷன் வாசலில் அண்ணா நகர் போக பஸ்ஸிற்காக காத்து நின்று தீபாவளிக்கு வாங்கிய புது சட்டையும் பாண்ட்டும் வகை தொகையில்லாமல் அழுக்காகி மற்றொரு முறை அணிவதற்கு கூட லாயக்கில்லாத அளவிற்கு போன அனுபவத்தை கொடுத்ததும் தங்கம் தியேட்டர்தான்.
எழுதினால் எழுதிக் கொண்டே போகலாம். ஆகையால் நமது சிங்கத்தின் சாதனைகளை மட்டும் சொல்லி முடிக்கிறேன்
1952-லியே ஒரு லட்சத்து அறுபத்தி எட்டாயிரம் ரூபாய்க்கும் மேலாக மொத்த வசூல் செய்து சாதனை படைத்தது நடிகர் திலகத்தின் பராசக்தி அதிலும் 112 நாட்களில் 1,12,000/- ருபாய் வரி நீக்கிய நிகர வசூல். அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக ஆயிரம் ருபாய் நிகர வசூல். V C கணேசன் முதல் படத்திலிருந்தே வசூல் சக்கரவர்த்தி கணேசன் என்பதற்கு தங்கமே சான்று. . .
தங்கத்தில் 100 நாட்கள் ஓடிய படங்கள் 7. அவற்றில் அதிகபட்சமாக நடிகர் திலகத்தின் 3 படங்கள் 100 நாட்களை கடந்தது. அவை
பராசக்தி [112 நாட்கள்]
படிக்காத மேதை [116 நாட்கள்]
கர்ணன். [108 நாட்கள்]
[நான்காவது படமாக 100 நாட்கள் ஓடியிருக்க வேண்டிய வணங்காமுடி 78 நாட்களில் மாற்றபப்ட்டது வழக்கம் போல் வில்லனாக வந்தது நடிகர் திலகத்தின் தங்கமலை ரகசியம்].
தங்கம் தியேட்டர் சரித்திரத்திலேயே தொடர்ந்து 15 காட்சிகள் அரங்கம் நிறைந்த ஒரே படம் நடிகர் திலகத்தின் அன்னை இல்லம். 1963 நவம்பர் 15 வெள்ளிக்கிழமை தீபாவளியன்று வெளியான அன்னை இல்லம் 15,16, 17 [வெள்ளி, சனி, ஞாயிறு] மூன்று தினங்களிலும் 5 காட்சிகள் வீதம் நடை பெற்று அவை அனைத்தும் ஹவுஸ் புல் ஆனது.
மதுரை மாநகரிலே முதன் முறையாக முதல் வாரத்தில் அரை லட்சத்திற்கும் அதிகமான வசூலைப் பெற்ற படம் அன்னை இல்லம்.
மதுரை தங்கத்தில் அன்னை இல்லம் முதல் வார வசூல் Rs 51,096/-
அந்த முதல் வார சாதனை வசூலை முறியடித்தது எங்க மாமா
மதுரை தங்கத்தில் எங்க மாமா முதல் வார வசூல் Rs 57,000/- சொச்சம்
அந்த முதல் வார சாதனை வசூலை முறியடித்தது என்னை போல் ஒருவன்
மதுரை தங்கத்தில் என்னை போல் ஒருவன் முதல் வார வசூல் Rs 80 ,140 .69 p
தங்கம் தியேட்டர் சரித்திரத்திலேயே இரண்டாவது வார ஞாயிற்றுக்கிழமை [படம் வெளியான 9-வது நாள்] கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக எக்ஸ்ட்ரா காட்சி அதாவது 5 காட்சிகள் திரையிடப்பட்ட வரலாற்றை உருவாக்கியதும் நடிகர் திலகத்தின் என்னை போல் ஒருவன்தான்.
மதுரை மாநகரிலேயே பத்தே நாட்களில் ஒரு லட்ச ருபாய் வசூல் செய்த முதல் படம் என்னை போல் ஒருவன்
மதுரை தங்கத்தில் என்னை போல் ஒருவன் 10 நாள் வசூல் Rs 1,00,000/- சொச்சம்.
http://www.nadigarthilagamsivaji.com...Others/034.jpg
இப்படி நடிகர் திலகத்திற்கும் தங்கம் தியேட்டருக்கும் இருக்கக்கூடிய அசைக்க முடியாத சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
சங்கத் தமிழ் மதுரையில் தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமாக உருக் கொண்ட தங்கமே! சிங்கத் தமிழன் ரசிகர்களாகிய நாங்கள் உன்னை என்றும் மறவோம்!
அன்புடன்
இரண்டு மாதங்களுக்கு முன்பு எழுத நினைத்தது நேரமின்மையால் முடியாமல் போய் இப்போது எழுதியிருக்கிறேன். ஒரு விதத்தில் தீபாவளி நாயகனுக்கும் தீபாவளி தியேட்டருக்கும் இருக்கும் உறவை தீபாவளி நேரத்தில் எழுதுவதுகூட பொருத்தம்தான்
அனைவருக்கும் உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!