இன்று முதல் (15/01/2016)சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "பறக்கும் பாவை " தினசரி 3 காட்சிகள் , பொங்கல் வெளியீடு
கடந்த முறை 02/01/2015 முதல் ஒரு வாரம் ஓடியது.
தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன்
Printable View
மாலை மலர் - பொங்கல் மலர் 2016
http://i64.tinypic.com/ddkmrd.jpg
Wish you all a very happy & prosperous pongal.
Regards,
Sathya
மாலை முரசு -பொங்கல் சிறப்பு மலர் 2016
http://i63.tinypic.com/ine99w.jpg
Dear Yukesh Sir,
Belated New year wishes and Pongal Greetings !
In that news paper cutting, they have missed out some movies of Nadigar Thilagam that ran over 100 days in the same year for your information sir.
1962 - 100 days Films of Nadigar Thilagam Sivaji Ganesan
1) Paarthaal Pasi Theerum - Madurai & Salem
2) Padiththaal Mattum Podhuma - Chennai, Madurai, Tiruchy & Salem
3) Aalayamani - Chennai, Madurai, Trichy, Salem, Kovai & Colombo
RKS
தினகரன் -14/01/2016
http://i63.tinypic.com/4tlzld.jpg
தமிழக அரசியல் =16/01/2016
http://i65.tinypic.com/2hqszm1.jpg
http://i66.tinypic.com/ev5bev.jpg
அடையாளம் வார இதழ் -20/01/2016
http://i64.tinypic.com/10wi05c.jpg
சினிக்கூத்து -24/01/2016
http://i67.tinypic.com/opo4k5.jpg
இன்றைய (15-01-16) தினகரன் நாளிதழுடன் இலவச இணைப்பாக அளிக்கப்பட்ட "வசந்தம்" இதழில் பிரசுரமான செய்தி :
http://i64.tinypic.com/16gk8wn.jpg
http://i64.tinypic.com/1omwbm.jpg
http://i64.tinypic.com/dmfhgl.jpg
சென்னை மாநிலத்தை , தமிழ் நாடு மாநிலமாக பெயர் மாற்றம் செய்து 47 ஆண்டுகள்
நிறைவு பெறுகிறது. அதை, 14/01/1969 அன்று அன்றைய முதல்வர் பேரரறிஞர்
அண்ணா சட்டசபையில் அறிவித்தார். அருகில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
அமர்ந்துள்ளார்.
புகைப்படத்துடன் செய்தியை TIMES OF INDIA -15/01/2016 இன்று வெளியிட்டுள்ளது
ஹலோ எப் எம் 106.4 பண்பலை வரிசையில் , நாளை (16/01/2016) பிற்பகல் 2 மணி
முதல் 3.30 வரை மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "நம் நாடு " திரைப்பட
ஒலிச்சித்திரம் கேட்கலாம். தொகுத்து வழங்குபவர் : டூரிங் டாக்கீஸ் ரஞ்சிதா அவர்கள் .
ஒலிசித்திரத்தின் இடையே , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றிய செய்தி குறிப்புகள்
அவ்வப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் வழங்குகிறார். கேட்டு மகிழுங்கள்.
http://i63.tinypic.com/29o1t10.jpg
Courtesy : Face Book
எல்லோருக்கும் இதயம் கனிந்த "பொங்கல்" நல்வாழ்த்துக்கள்... பொன்மனச்செம்மல் நூற்றாண்டு பிறந்த நாள் வைபவங்கள் துவங்குவதை முன்னிட்டு பல பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ள செய்திகளை பகிர்ந்த தோழர்களுக்கு நன்றி...
ஹலோ எப் எம்.106.4ல் இன்று ஒலிபரப்பான "நாடோடி மன்னன் " ஒலிசித்திரத்தின்
இடையே வெளியான செய்திகள்.
நாடோடிமன்னன் திரைப்படம் கிட்டத்தட்ட 5 மணி நேரம் திரையில் ஓடும் அளவிற்கு பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது .எடிட்டிங் வேலையில் பணிபுரிந்தவர்கள் திக்கு முக்காடினர். இயக்குனர் எம்.ஜி.ஆர். அவர்களே படதொகுப்பா ள ருடன் இணைந்து காரியத்தைக் கச்சிதமாக முடித்தார்.
படத்தொகுப்பு வேலைகள் ஒருபுறம் நடக்க, பட தயாரிப்பு வேலைகளும் நடந்து
கொண்டே இருந்தனவாம் .
இந்தப் படத்திற்கு ஆகும் செலவு, தாமதம்,வெற்றி /தோல்வி , வேலைகள் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன . அவற்றை பொருட்படுத்தாமல், இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆன மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படம் தோல்வி அடைந்தால்
நான் நாடோடி, வெற்றி பெற்றால் மன்னன் என அறிவித்து, விமர்சனங்களை
தவிடு பொடியாக்கி மாபெரும் வெற்றி பெற்றார் .
அரசிளங்குமரி திரைப்பட படப்பிடிப்பில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் , வில்லன்
நம்பியாரும் மோதும் சண்டை காட்சியில் , எம்.ஜி.ஆர். அவர்களின் கையில் கத்தி
பட்டு, சிறிது ரத்தம் வந்ததும் , படப்பிடிப்பு குழுவினர் பதட்டம் அடைந்து, வில்லன்
நம்பியாரிடம் வாதிட, உடனே, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தலையிட்டு
நம்பியார் அவர்களுக்கு என் மீது கோபம் இருக்காது, எங்களது நட்பு ஆழமானது .
அவருடைய கத்திக்கு தான் கோபம் வந்துள்ளது என்று சாதுர்யமாக பேசி
அனைவரின் பதட்டத்தையும் போக்கினாராம்.
1967ல் நடிகர் எம்.ஆர். ராதாவால் சுடப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை
மேற்கொண்டிருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் , தயாரிப்பாளர் தேவர்
மருதமலை கோயில் பிரசாதத்துடன் சென்று, அடுத்த படத்திற்கு (விவசாயி )
அட்வான்ஸ் பணம் கொடுத்து , கண்டிப்பாக , முருகா நீ விரைந்து நலம் அடைந்து
வீடு திரும்புவாய். என் அடுத்த 3 படங்களுக்கும் நீ தான் கதாநாயகன் என்று
அறிவித்து, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நெகிழும்படி செய்ததோடு, அனைவரையும்
வியப்பில் ஆழ்த்தினார்.
அன்பு நண்பர்கள்
திரு வினோத்
பேராசிரியர் திரு செல்வகுமார்
திரு லோகநாதன்
திரு கலியபெருமாள்
திரு சைலேஷ் பாசு
திரு முத்தையன் அம்மு
திரு ஜெய்சங்கர்
திரு சுகாராம்
திரு சத்தியா
மற்றும் திரியில் தொடர்ந்து தங்களின்
பங்களிப்பை நல்கிவரும்
அனைவருக்கும்
எனது பாராட்டுக்களைத் தெரிவித்துத்கொள்கிறேன்.
மக்கள் திலகத்தின் 99வது பிறந்த தினம்
வருகின்ற 17ம் தேதி வருகின்றது.
அன்று தங்கள் பகுதிகளில் நிகழும் பிறந்தநாள் நிகழ்வுகளை
அனைவரும் நமது திரியில் அவசியம்
பதிவிடும்படி கேட்டுகொள்கிறேன்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
மீண்டும் நிகழ முடியாத முன்னுதாரணம்! - எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்கம்
உலகம் சுற்றும் வாலிபன்
நன்றாக நினைவிருக்கிறது எனக்கு. கடந்த 2008-ல் தீபாவளிக்கு மூன்று வாரங்களே இருந்த அக்டோபர் முதல் வாரத்தின் வெள்ளிக்கிழமை அது. சென்னை புரசைவாக்கத்தில் மோட்சம் திரையரங்கம் அமைந்திருக்கும் மில்லர்ஸ் சாலையைக் கடந்து வில்லிவாக்கம் செல்வதற்காக பைக்கில் விரைந்துகொண்டிருந்தேன். காலை 11 மணிக்கு அந்தத் திரையரங்கை நெருங்கியபோது போக்குவரத்து நெருக்கடி. பேண்ட் வாத்தியம் முழங்க “புரட்சித் தலைவர் வாழ்க! பொன்மனச் செம்மல் வாழ்க! தர்மத்தின் தலைவன் வாழ்க! எங்கள் தங்கம் வாழ்க! எங்க வீட்டுப் பிள்ளை வாழ்க” என்ற கோஷங்கள் காற்றைக் கிழித்தன.
வெள்ளை பேண்டும் மஞ்சள் கட்டம்போட்ட சட்டையும் தலையில் ஆரஞ்சு நிற சன் ஷேட் தொப்பியும் அணிந்து நடுவில் நின்றுகொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். அவரது வலப்புறம் நடிகை லதாவும் இடப்புறம் அந்தத் தாய்லாந்து நடிகையும் பிரமாண்ட ப்ளக்ஸ் பேனரில் நின்றுகொண்டிருந்தார்கள். அந்த பேனருக்கு மாலை அணிவித்துக்கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர். எப்படித் தங்களுக்குள் பதிந்திருக்கிறாரோ அதே வரிசையில் கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்தார்கள். அந்த ரசிகர்கள் கூட்டத்தில் நாற்பது வயதுக்கும் குறைவான இளைஞர்கள் சரிபாதிக்கும் மேலாக இருந்தார்கள்.
100க்கும் அதிகமான பெண்களையும் பார்க்க முடிந்தது. எம்.ஜி.ஆர். நடித்து, இயக்கி, தயாரித்த அந்தப் படம் 35 ஆண்டுகளுக்குப் பின் வெளியானபோது அங்கே திரண்டு நின்ற அவரது ரசிகர்கள் ஒரு புதுப்பட வெளியீட்டைப்போல் கொண்டாடியது ஆச்சரியத்தை அளித்தது. தீபாவளிக்குப் புதுப்படம் வெளியாகும்வரை அந்தத் திரையரங்கில் ‘உலகம் சுற்றும் வாலிப’னுக்குக் கூட்டம் குறையவில்லை. தினசரி அந்தப் பாதையில் பயணித்து வந்த நானே இதற்குச் சாட்சி.
இன்று மோட்சம் திரையரங்கம் தன் சேவையை நிறுத்திக் கொண்டுவிட்டது. ஆனால் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் டிஜிட்டல் முறையில் மீள்பதிவு செய்யப்பட்டு வேறொரு மால் திரையரங்கில் வெளியாகலாம். அப்போதும் இந்த ரசிகர் கூட்டத்தை அதே உற்சாகத்தோடு அங்கே காண முடியும். அதுதான் எம்.ஜி.ஆர். எனும் ஒப்பிடமுடியாத நட்சத்திரம் ஏற்படுத்திச் சென்றிருக்கும் தாக்கம்.
திராவிட இயக்கத்தின் அறுவடை
அவதார புருஷர்களைப் பற்றி புராணக் கதைகள் வழியாக அறிந்திருந்த தமிழர்களுக்கு, தர்மத்தின் காவலனாக எம்.ஜி.ஆர். திரைப்படம் வழியே வசீகரித்த வரலாறு ஒரே நாளில் நடந்த திருப்பம் அல்ல. திராவிட இயக்கத்தின் பிரச்சாரக் கருவியாகத் திரையிலும் அரசியல் மேடைகளிலும் கவனம்பெறத் தொடங்கிய ஒரு வளரும் நட்சத்திரம், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் திராவிட பகுத்தறிவு இலட்சியவாதத்தை உள்வாங்கிக்கொண்டிருந்தாலும் அதைத் தனக்கான பாதையாக அவர் முன்வைக்கவில்லை.
மாறாக, திரைப்படங்களின் வழியாகத் தன்னை ஊருக்கு உழைக்கும் ஏழைப்பங்காளன் என்ற புனித பிம்பமாக முன்னிறுத்திக்கொண்ட துருவ நட்சத்திரமாக எழுந்து நின்றார். அந்தப் புனித பிம்பம்தான் பின்னாளில் அரசியல் களத்திலும் அவருக்குக் கைகொடுத்தது.
சிறுசிறு வேடங்கள் ஏற்று நடித்துப் பின் கதையின் நாயகன் ஆனார். அதன் பின் சாகச நாயகனாகவும் அதற்கும் பின் நல்லவர்களைக் காக்கத் தீயவர்களை அடக்கி ஒடுக்கும் அவதார நாயகனாகவும் உயர்ந்து நின்ற எம்.ஜி.ஆர்., அரசியலிலும் பல்வேறு தடைகளைத் தாண்டித் தமிழர்களின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து பதிமூன்று ஆண்டுகள் முதலமைச்சராக அவர் அமர்ந்தது தமிழக அரசியல் வரலாற்றின் தற்செயல் நிகழ்வு அல்ல.
விளிம்பு நிலை மக்களின் ரட்சகர்
‘புரட்சித் தலைவர்’, ‘மக்கள் திலகம்’ என்று ரசிகர்களாலும் தொண்டர்களாலும் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். தன்னிடம் உதவி என்று கேட்டவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளி அள்ளி வழங்கியவர் எனப் போற்றப்படுகிறார். ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்கள் மீதான அவரது பரிவும் கவனமும் தனித்துவமானது. தன் பால்ய காலத்தில் தாயார் சத்யபாமா, அண்ணன் சக்ரபாணி ஆகியோருடன் வறுமையும் பட்டினியும் சூழ, கும்பகோணத்தில் வசித்தபோது பெற்ற வாழ்வனுபவத்திலிருந்து அவர் பெற்றுக்கொண்டது.
இந்த அனுபவம்தான் அவரது பல திரைப்படங்களில் ‘ஏழைப்பங்காளன்’ காட்சிகளாக உருமாறியது. பின்பு அவர் அரசியலுக்கு இடம்மாறியபோது சமூகநலத் திட்டங்களிலும் பிரதிபலித்தது.
கேரளப் பெற்றோருக்கு இலங்கையில் பிறந்து, சிறு வயதிலேயே அப்பாவை இழந்தவர் எம்.ஜி.ஆர். குடும்பம் குடந்தைக்குப் புலம்பெயர்ந்தது. சிறு வயதில் பாண்டிச்சேரியில் முகாமிட்டிருந்த பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேர்ந்து தமிழகம் முழுவதும் நாடோடியாய் அலைந்து திரிந்தார். திரைப்படங்களில் நடிக்க தாமதமாகவே வாய்ப்பு கிடைக்கிறது. நாயகனாக நடிக்கும் வாய்ப்பு அதைவிடத் தாமதமாகிறது.
நாயகனாக நிலைபெற்ற பிறகு அதில் திருப்தி அடைய மறுத்துப் புதிய சாகசத்தில் இறங்குகிறார். தன் வாழ்க்கையோட்டத்தின் வரைபடத்தைப் பிரதிபலிக்கும் விதமாகத் தான் நடித்து இயக்கிய படத்துக்கு ‘நாடோடி மன்னன்’ என்ற தலைப்பிட்டு ஒரு படத்தைத் தயாரித்து, இயக்கி, நடிக்க முடிவுசெய்கிறார். அந்தப் பட வெளியீட்டுக்கு முன் “ படம் வெற்றியடைந்தால் நான் மன்னன்; தோல்வி அடைந்தால் நாடோடி” என்று கூறியிருக்கிறார். அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்று, திரை உலகின் முடிசூடா மன்னராக அவரை மாற்றியது. சாகச முயற்சி சாதனையாக மாறியது.
தனிப் பிறவி
எம்.ஜி.ஆருக்குப் பிறகு வந்த பலரிடத்தில் அவர் பாணியிலான கதைகளைத் தொட்டுக்கொண்டு நடிப்பதன் மூலம் மக்களிடம் செல்வாக்கை வளர்த்துக்கொண்டு அரசியலில் இறங்கலாம் என்ற எண்ணத்தையும் முயற்சியையும் பார்க்க முடிகிறது. திரை பிம்பத்தைக் கட்டமைக்கும் முயற்சிகள் பல வெற்றியடைந்தும் இருக்கின்றன. ஆனால் யாராலுமே எம்.ஜி.ஆர். அளவுக்கு அதில் வெற்றிபெற முடியவில்லை.
சினிமாவில் பெரும்பாலான நாயகர்கள் எம்.ஜி.ஆரைப் போல தர்மத்தைக் காக்கவே போராடுகிறார்கள். ஆனால் யாராலும் ‘தர்மத்தின் தலைவ’னாக, ‘மக்கள் திலக’மாக உருப்பெற முடியவில்லை. தன் படங்கள் மூலமாகச் சமூக உளவியலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது எம்.ஜி.ஆரின் தனிப் பெரும் சாதனை. அந்த வகையில் அவர் தனிப் பிறவி. மீண்டும் நிகழ முடியாத முன்னுதாரணம்.
தி ஹிந்து -
மக்கள் திலகத்தின் 99வது பிறந்த நாள் இன்று நிறைவு .
மக்கள் திலகத்தின் 99 வது படம் ''கணவன் ''
மக்கள் திலகம் கதை எழுதிய ஒரே படம் . ஏராளமான சொத்தும் அதிகார மமதையும் கொண்ட ஒரு பெண்ணின் ஆணவத்தை கதாநாயகன் அந்த பெண்ணை மாற்றி தன்னுடைய வழியில் கொண்டு வரும் கதை . கதாநாயகியின்
அடாவடி பேச்சு , பணக்கார தோரணை , யாரையும் அடக்கி ஆளும் சுபாவம் , திருந்த மாட்டேன் என்கிற பிடிவாதம்
கொண்ட நாயகியின் ஒட்டு மொத்த குணங்களை மக்கள் திலகம் தகுந்த நேரத்தில் அப்பெண்ணை முழுவதுமாக மாற்றி தன பக்கம் ஈர்த்து வெற்றி காண்கிறார் . மக்கள் திலகத்தின் கதை மிகவும் ரசிக்கும்படியும் , புதுமையாகவும் இருந்தது .படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் மூலம் மக்கள் திலகம் அன்றே [1967ல் ] சிலரின் குணங்களை எப்படி எடை போட்டு இருக்கிறார் என்பது நிரூபணம் ஆகிறது . மக்கள் திலகம் எம்ஜிஆர் தனிப்பிறவி அல்லவா ?
நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். அவர்கள் அன்றும், இன்றும், என்றும் வசூல் சக்கரவர்த்தி என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் .
மதுரை சென்ட்ரல் சினிமாவில், நேற்று (15/01/2016) வெளியான, நடிக பேரரசரின்
"அலிபாபாவும் 40 திருடர்களும் " -முதல் நாள் வசூல் -ரூ.20,500/- அபார சாதனை.
தகவல் உதவி :மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
http://s13.postimg.org/ye6eh16p3/scan0001.jpg
DINAMALAR - COIMBATORE EDITION DT. 16.01.2016
http://s30.postimg.org/xqzd6v1ap/125...94046789_n.jpg
Courtesy : Mr.S.S.Ramakrishnan, Madurai
http://s13.postimg.org/ecyfqmdyf/106...10869757_n.jpg
Courtesy : Mr.S.S.Ramakrishnan, Madurai