-
13-10-2020
தொலைக்காட்சி சேனல்களில்,
ஆண்டவன் கட்டளை-,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, 12 pm&7 pm - முரசு டிவி,
தூக்கு தூக்கி-,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,... 12:30 on ராஜ் டிஜிட்டல்,
அவன் ஒரு சரித்திரம்-,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,... 1:30 pm ராஜ் டிவி
திரிசூலம்-,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,... 4 pm சன் லைப் தொலைக்காட்சியில்
சபாஷ் மீனா-,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ....11pm பாலிமர் சேனலில்,
Thanks Sekar .P
-
முதன்முதலாக... 5
ஒரே ஷாட்டில் ஒரு வசனக் காட்சியும், ஒரு பாடல் காட்சியும்..
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...a9&oe=5FAE96B8
Thanks Nilaa
-
இன்று 10.10.2020 வேலூர் மாவட்டம் பிரபு நற்பணி மன்றம் மற்றும் விக்ரம் பிரபு நற்பணி மன்றத்தினர்கள் திரு.B.அன்பழகன், மாவட்ட தலைவர், பிரபு மன்றம். மாவட்ட தலைவர் விக்ரம் பிரபு மன்றத்தலைவர்
திரு.வீரமணி அவர்கள் மற்றும் திரு.உத்தமன் காட்பாடி நகர மன்றத்தலைவர் திரு.குமார் ஆகியோர் இனைந்து நடிகர் திலகம் Dr.சிவாஜி கணேசன் அவர்களின் 92 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் திரு.B.டீக்காராமன். மாவட்ட தலைவர் காங்கிரஸ் அவர்கள் அன்னதானத்தை பொது மக்களுக்கு வழங்கினார்.
மேலும் வேலூர் மாவட்ட சிவாஜி மன்றத்தலைவர் திரு.V.சிவாஜிரவி அவர்கள் நேஷ்னல் பிச்சர்ஸ் திரு.கார்த்திகேயன் மற்றும் மன்ற பொருப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
அதிலிருந்து சில புகைப்படங்கள் உங்களுக்காக.
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...9c&oe=5FADA606
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...d7&oe=5FAC3AF2
Thanks Amaran Amaran
-
இப்போ எல்லா ஊர்லயும் மல்டிபிளக்ஸ் தியேட்டருங்க அதிகமாகிட்டதால எல்லாப்படமும் எல்லா தியேட்டர்யும் ரிலீஸ் ஆகுது...
ஆனா, 2005 க்கு முன்னாடி அப்படில்லாம் கெடையாது... அந்தந்த நடிகர்களுக்குனு இருந்த பேவரைட் தியேட்டர்ஸ்லதான் அவங்க படங்களை ரிலீஸ் பண்ணுவாங்க...
இப்படியொரு சிஸ்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது அனேகமா நம்ம ஐயா படங்களாத்தான் இருக்கணும். விவரம் தெரிஞ்சவங்க .இதை கன்பார்ம் பண்ணுங்க...
அப்படி ஐயாவோட பேவரைட் தியேட்டர்ஸ் சென்னையில சாந்தி, கிரவுன், புவனேஸ்வரின்னு மூனு தியேட்டருங்க.. மூனும் ஆயிரத்துக்குமேல கெப்பாசிட்டிங்க... அந்த குரூப்ஸ் தியேட்டர்ல அய்யாவோடபடம் ரிலீஸ் ஆச்சுன்னா அது கன்பார்மா ஹிட் மூவிதாங்க...
1965 ல வெளியான திருவிளையாடல்தாங்க இந்த குரூப்ஸ்ல வெளியான முதல்படம்... பர்ஸ்ட் படமே மூனு தியேட்டர்லயும் சில்வர் ஜூபிளி ஓடுச்சிங்க... கடைசிப்படம் 1985ல வெளியான நீதியின் நிழல் படம்ங்க... அது மூனு தியேட்டர்லயும் கிட்டதட்ட பத்து வாரத்துகிட்ட ஓடுச்சிங்க...
1965 ல இருந்து 1985 வரைக்கும் இதுமாதிரி மொத்தம் 40 படம் இந்த குரூப்ல ரிலீஸாகி இருக்குங்க... அதுல, 3 படம் 3 தியேட்டர்லயும் வெள்ளிவிழா ஓடுச்சிங்க... ஒருபடம் ஒரு தியேட்டர்ல சில்வரும், மத்த ரெண்டு தியேட்டர்ல 140 நாளும் ஓடுச்சிங்க... ஒரு படம் மூனு தியேட்டர்லயும் 133 நாள் ஓடிருக்குங்க... 20 படம் மூனு தியேட்டர்லயும் நூறு நாள் ஓடிருக்குங்க... நாலு படம் சென்னையில ஓடுலனாலும் வெளியூர்ல நூறு நாளு, வெள்ளிவிழான்னு ஓடி கல்லா கட்டியிருக்குங்க... ஒரு நாலஞ்சு படம் 75 நாள் வரைக்கும் 3 தியேட்டர்லயும் ஓடி, தீபாவளியோ, பொங்கலோ எதையாச்சும் காரணம்காட்டி கழட்டி விட்டிருக்காங்க...
ஒன்னு ரெண்டு படந்தாங்க அம்பது நாளுக்கு கீழே ஓடியிருக்கு...
இதுல ஒரு பியூட்டி என்னன்னா... மூணு தியேட்டர்லயும் ரிலீஸாகி ஹிட் ஆன படம் ஓடுனா மூணு தியேட்டர்லயும் நூறுநாள் தாண்டி ஓடியிருக்குங்க... இல்லைனா, மூனு தியேட்டர்லயும் எடுத்து விட்டிருக்காங்க... ஒரு தியேட்டரோ ரெண்டு தியேட்டர்லயோ இந்த குரூப்ல ஓடலீங்க... பந்தம் படம் மட்டுந்தான் சாந்தில நூன் ஷோ போட்டு, அதுவும் 77 நாளுக்கு மேல... noon show போட்டு நூறு நாள் ஓடிருக்குங்க... மத்தபடி எல்லா படமும் எல்லா தியேட்டர்லயும் ரெகுலர் ஷோவுலதாங்க ஓடிருக்கு... அதான் ஹைலைட்டு!
இப்போ இந்த மேட்டர் எதுக்கு இங்க சொல்ல வந்தனா... இப்படியொரு ரெக்கார்ட்ஸ் எந்தக் காலத்துலயும் எந்த ஹுரோவுக்கும் நம்ம ஊர்ல கெடையாதுங்குறதுதான் நம்ம அய்யாவோட கெத்து...
இனிமேலும் யாருக்கும் ஓடும்னு நெனைக்கிறீங்க...? நோ சான்ஸ்!
சாந்தி, கிரவுன், புவனேஸ்வரினு இந்த மூனு தியேட்டர்லயும் ரிலீஸான அய்யாவோட படம் லிஸ்ட்டு ஏற்கனவே குழுவுல போட்டாச்சுங்க... இருந்தாலும் மறுக்கா ஒருமுறை போட்டுருக்கேன்... பார்த்து தெரிஞ்சுக்குங்க...
இன்னைக்கு இவ்ளோதான் மேட்டரு...
குட் நைட்டுங்க!
( மீள் பதிவு)
Thanks Nilaa
................................
பின்னூட்டம்
இன்று இங்கு நண்பர் வெண்ணிலா விஜயகுமார் சாதாரணமாகத்தான் இந்த பதிவை பதிவிட்டார். உடனே அங்கே "கதறல் பதிவு" வந்துவிட்டது. பாவம் ஓவர் கதறல். அதுவும் அதே ஐந்து படங்களை (எ.வீ.பிள்ளை, அடிமை, ரிக்ஷா, உ.சு.வா . மற்றும் உரிமை) வைத்துக் கொண்டு தான் கதை அளக்கப்படுறது. சரி, ஓகே. இந்த ஐந்தும் வெற்றிப் படங்கள். மற்ற 126 -ம் தோல்விப் படங்கள்.(M T)
............................
அப்படியா..! மீள் பதிவுக்கே மிரண்டு போனார்களா?(V V)
-
#அரசியல்_நாயகனும்_அந்தப்புர_நாயகியும்..!
××××××××××××××××××××××××××××××××××××××××
எம்.ஜி.ஆர். தன் படத்தில் நடிக்கும் இளம் நடிகைகளை 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்வது வழக்கம் . நடிகைகள் ஜெயலலிதா, மஞ்சுளா, லதா ஆகியோர் அது போன்ற ஒப்பந்தங்கள் மூலமே பிரதான நடிகைகளாக வலம் வந்தனர்.
ஜெயலலிதாவும் 1965 லிருந்து 1972 வரை மட்டுமே எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்தார். பணம், புகழ், பாதுகாப்பு என்ற உத்தரவாதம் அவர்களுக்கு கிடைத்ததால் தங்க கூண்டுதான் என்று தெரிந்தே அதில் அந்த கிளிகள் வசித்தன. நடிகருக்கு இருந்த ரசிகர் செல்வாக்கும், அரசியல் செல்வாக்கும் அவர்களை அடிமைப் பெண்களாகவே வசிக்க வைத்தது.
பணமும் , புகழ், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான நாயகி என்ற பாதுகாப்பு இருந்தாலும் அதைத் தாண்டிய ஒன்று ஒரு இளம் பெண்ணுக்குத் தேவைதானே..? 1972 ல் எம்.ஜி.ஆருக்கு வயது 55.ஜெயலலிதாவுக்கு வயது 24., மஞ்சுளாவுக்கு 20, லதாவுக்கு 19. சினிமா, அரசியல் என்று பரபரப்பாக இயங்கிய ஒரு நடிகர் 24 வயது பெண்ணின் உடலியல் சார்ந்த உளவியல் தேவைக்கு என்ன தீர்வு கொடுத்து விட முடியும் ?
ஜெயலலிதா தனக்கான தேவையை வேறு நபர்களிடம் தேடியதால் எம்.ஜி.ஆரின் கோபத்திற்கு ஆளானார். ஆனால் கோபம் மட்டுமே தாபத்தை தீர்க்குமா..? இறுதியில் பெண்மையே வென்றது. ஆண்மை ஒரு நிபந்தனை விதித்தது..! தமிழக எல்லைக்குள் வேண்டாம். எனது இமேஜ் பாதிக்கப்படும். கிளி விட்டால் போதும் என்று ஹைதராபாத் பறந்து விட்டது காதலன் ஷோபன் பாபுவோடு வாழ. ஊரறிந்த ரகசியம் இது..!
நடிகரை விட்டு நடிகை விலகியிருந்த அந்த காலம் தான் நடிகர் நிம்மதியாக இருந்த காலம். ஆனால் அரசியல் அரைவேக்காடான நடிகர் கலைஞரை சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் சமாளிக்க முடியாமல் திணறினார். தி.மு.க. ஆட்சியின் மீது எதிர்க்கட்சிகளும், பார்ப்பனிய ஊடகங்களும், தமிழ் தேசியம் பேசிய சூத்திர பார்ப்பனிய வாதிகளும், போலி பொதுவுடமை வாதிகளும் அடுக்கிய குற்றச்சாட்டுகள் எல்லாம் நடிகரின் வாக்குகளாக மாறி அவரை 1977 ல் முதலமைச்சர் ஆக்கியது.
ஆட்சி அமைத்துவிட்ட நடிகருக்கு தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைத்து ஆட்சியை பிடிக்கவேண்டும் என்பது மட்டுமே ஒற்றைக் கொள்கை. அதற்காக அவர் ஆடிய கோமாளிக் கூத்துக்கள் அநேகம். அரசியல் ஆட்டத்தில் களைத்துப்போன நடிகர் மீண்டும் நடிக்க ஆசைப்பட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் வருமான வரி பாக்கியை அடைக்க வருமானம் போதவில்லை என்பதே. அந்த நடிகர்தான் தான் இறக்கும் போது சில ஆயிரம் கோடி சொத்துக்களை தன் உறவினர்களுக்கு உயில் எழுதி வைத்தார்.
எங்கே நடிகர் தன் கட்சியை தி.மு.க. வில் கரைத்து விடுவாரோ என்று அஞ்சியவர்களின் அடுத்த வாரிசாக நடிகை அவதாரம் எடுத்தார். அவரை தூக்கி நிறுத்த ஆரியப் பார்ப்பனர்களும், அடிமை சூத்திரர்களும் அரங்கேற்றிய கபட நாடகங்கள் தான் தி.மு.க. மீதான தொடர் விமர்சனங்கள்.
இன்றுவரை தி.மு.க. மீதான மக்களின் பார்வை மாறாமல் இருக்க காரணம் ஆரம்ப காலங்களில் கழகத்தின் மீது வைக்கப் பட்ட அவதூறான குற்றச்சாட்டுகளே. நடிகரும், நடிகையும் ஏதோ நல்லாட்சி கொடுத்தது போலவும், கழகம்தான் ஊழலுக்கு மொத்தக் குத்தகை என்பது போலவும் பேசியும், எழுதியும் வருவோருக்கு சரியான பதிலடி கழகத்தின் சார்பில் கொடுக்கப்படுவதில்லை.
அதே போல நடிகரையும், நடிகையையும் சரியாக அம்பலப்படுத்தாமல் கடந்து போனதும் நம் தோல்விக்கு காரணமாகி விட்டது. அதுதான் தமிழகத்தை தறுதலைகள் கொள்ளையடிக்க விட்டு விட்டது தி.மு.க. கலைஞர் ஒருவர் மட்டும்தான் கட்சியில் இயங்கினார். அவரை மக்கள் நம்பக்கூடாது என்று பலமுனைத் தாக்குதல்கள் படையெடுத்தன. கலைஞர் மட்டுமே பேசிப்பேசிக் களைத்துப் போனார். மற்றவர்கள் தலைவர் பேசட்டும் என்று ஒதுங்கிக்கொண்டனர்.
-ஜீவா வனத்தையன் தமிழரிமா
மீள்
-
15-10-2020
தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
பூப்பறிக்க வருகிறோம்-............................. 7 am கே டிவியில்
பாவமன்னிப்பு-............................................ 9:30 am - ராஜ் டிஜிட்டல்,
பாகப்பிரிவினை-........................................ 1:30 pm வசந்த் டிவி,
ராஜ ராஜ சோழன்-..................................... 1:30 pm ராஜ் டிவி,
லஷ்மி கல்யாணம்-..................................... 2:30 pm ராஜ் டிஜிட்டல்,
தெய்வப்பிறவி-............................................ 4 pm சன் லைப் சேனலில்,
பட்டிக்காடா பட்டணமா-.......................... 11 pm பாலிமர் சேனல்,
Thanks Sekar
-
-
-
-
பராசக்தி (17-10-1952 )இன்று 68 வருடங்கள் .
https://scontent-ort2-1.xx.fbcdn.net...6c&oe=5FAEA896
Thanks Vcg Thiruppathi
-
68 ஆண்டுகளுக்கு முன் திரைவானில் உதயமான கலைக்கதிரவனின் ஒளி நிரந்தரமாக தமிழகத்தின் புகழை பிரகாசிக்கச் செய்து கொண்டிருக்கும்.
https://scontent-ort2-1.xx.fbcdn.net...3f&oe=5FB02F86
Thanks VeeYaar
-
-
-
-
பொதுவாக.. படம் முழுதும் சோகக்காட்சிகள் பரவி இருந்தால் பார்வையாளர்களுக்கு ஒருவித சங்கடத்தை உண்டுபண்ணிவிடும்.. அதுவும் அந்தப்படங்கள் கருப்புவெள்ளையில் வெளிவந்தால் ரிப்பீட் ஆடியன்ஸ் வருவார்களா என்ற சந்தேகமே வந்து விடும்.. விதிவிலக்காக துலாபாரம் போன்ற ஒருசில படங்களே மக்கள் கவனத்தை முழுமையாக ஈர்த்து இருக்கிறது.. ஆனால் நம் நடிகர் திலகத்திற்கு அப்படியில்லை.. அவரது நவரச நடிப்பை பூரித்து பார்க்கும் பார்வையார்கள்தான் அவரது Extreme End..சோகக்காட்சிகள் நிறைந்த படங்களையும் ரசித்து இருக்கிறார்கள்.. அந்த வகையில் உருவாக்கப்பட்ட படம்தான் இந்த "பாபு".. பெரும்பாலான காட்சிகள் உள்ளத்தை தொடும் காட்சிகளை அமைத்து எடுக்கப்பட்ட படம்.. பொதுவாக தீபாவளிப் படங்களை Energetic ஆக ரசித்து விட்டு வருவதற்கே விரும்புவார்கள்.. திரைப்படங்கள் வெளியீடுகள் அந்த ஒருநாளை மட்டுமே கணக்கிலெடுத்து உருவாக்கப்படுபவை அல்ல.. இருப்பினும் இந்தப்படத்திற்கு கிடைத்த ரிப்பீட் ஆடியன்ஸ்தான் படத்தை பல ஊர்களில் 100 நாட்கள் கடந்த நல்ல வசூலுடன் கூடிய வெற்றிப்படமாக மாற்றி இருக்கிறது.. படத்தைப்போலவே கதையும் சிம்ப்பிள்... பிரம்மாண்டமான அரங்குகள் இல்லை.. பெரிய பொருட் செலவுகள் இல்லை.. ஒரு கை ரிக்சா ஒரு குடிசை.. கிழிந்த காஸ்ட்யூம்.. நைந்து போன காலணி.. இப்படித்தான் ஏறக்குறைய படம் முழுவதும் நடிகர் திலகத்தை பயன்படுத்தி இருப்பார் ஏ.சி.திருலோகசந்தர்.. தன்னுடைய சொந்தப்படத்தை சிவாஜியை மட்டுமே நம்பி இப்படி ஒரு படத்தை தயாரிக்க ஒரு தயாரிப்பாளராக அதே ஏ.சி.திருலோகசந்தர் முன் வந்திருப்பதும் வியக்கத்தக்கது.. சிவாஜியும் தன் பழுத்த நடிப்பால் அப்படியே அனைவரையும் கட்டிப்போட்டு படம் முடியும்வரை கண்ணீரோடு பார்வையாளர்களை இருக்கையில் அமர வைத்திருப்பார்.. இந்தப்படத்துடன் வெளிவந்த படங்களை இப்போது யாரும் நினைத்துப்பார்க்க விரும்புவதில்லை.. இந்தப்படம் யாருடைய நினைவில் இருந்தும் அகலவில்லை.. இன்றைய தினம் பாபுவுக்கு 50 வது பிறந்த நாள்.. 100வது பிறந்த நாளில்கூட இந்த பாபுவை மறக்காத பார்வையாளர்கள் இருப்பார்கள்...
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...5a&oe=5FAF64F1
Thanks Jahir Hussain
-
தான் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு பாத்திரத்தையும் உள்வாங்கி அதற்கொரு உருவகம் அமைத்து அதற்கு தன் நடிப்பின் மூலம் புதிய பரிமாணம் அமைத்து உயிருடன் நம்மோடு உறவாட வைத்த நடிகர் திலகத்தின் இன்னுமொரு அற்புதம், 1971ம் ஆண்டு தீபாவளியன்று இதே தேதியில் வெளியான, சினி பாரத் அளித்த பாபு. மெல்லிசை மன்னர் வாலி ஏ.சி.திருலோக்சந்தர் நடிகர் திலகம் கூட்டணியின் புகழ் மகுடத்தில் மற்றுமோர் வைரம்.
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...ae&oe=5FAFC312
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...18&oe=5FB04905
Thanks VeeYaar
-
-
காரைக்குடி என்ற ஊரில் உலகம் சுற்றும் வாலிபன் 75 நாட்கள் ஓடியிருந்தது . முன்னைய பழைய படங்களின் சாதனைகளை அறிந்திராத எம் ஜீ ஆர் ரசிகர்கள் உ சு வாலிபன்தான் காரைக்குடியில் அதிகபட்சமாக 75 நாட்கள் ஓடிய முதல்படம் ஒரே படம் என எண்ணிக்கொண்டார்கள். அது விடயத்தில் அவர்களை குறை சொல்லமுடியாது ஏனெனில் பழைய விடயங்கள் தெரியாமல் இருந்திருக்கலாம்
ஆனால் தங்கள் படம்தான் சாதனையாக இருக்கிறது என நினைத்துக்கொண்டு தங்கள் படமே சாதனையாக நிலைத்திருக்கவேண்டும் என்பதற்காக சின்னத்தம்பி திரைப்படத்தை ஓடவிடாமல் தியேட்டர் நிர்வாகத்தை மிரட்டியது ஏற்புடையதல்ல.(சின்னத்தம்பி திரைப்படத்தை ஓடவிடாமல் எம் ஜீ ஆர் ரசிகர்கள் தடைசெய்யமுயன்ற விடயம் முன்னர் இங்கே பதிவிட்டுள்ளேன்)
விடயம் என்னவெனில் 75 நாட்கள் ஓடிய உ சு வாலிபன் தான் காரைக்குடியில் அதிகநாட்கள் ஓடிய படம் என்ற நினைப்பு மிகவும் தவறு என்பது அண்மையில் கிடைத்த வாழ்க்கை படத்தின் விளம்பரம் சுட்டி நிற்கிறது. வாழ்க்கை காரைக்குடியில் 100 நாட்கள் ஓடியிருக்கிறது.
மேலும் இது கண்ணுக்கு முன் இருக்கும் விளம்பரம். மேலும் பல படங்கள் ஓடியிருக்கலாம். ஏற்கனவே உ சு வாலிபனைவிட சாதனையில் ஒருபடம் இருக்கையில் தங்கள் படம்தான் சாதனையில் இருக்கவேண்டும் என எண்ணிக்கொண்டு சின்னத்தம்பி படத்தின் சாதனையை நசுக்கப்பார்த்தார்களே எம் ஜீ ஆர் ரசிகர்கள் என்னே ஒரு அநியாயமான அற்பத்தனமான விடயம்.
இப்படித்தான் எம் ஜீ ஆரின் படங்கள்தான் சாதனை என அவரது ரசிகர்கள் கனவிலேயே மிதந்துகொண்டு கற்பனையில் வாழ்கிறார்கள்.
https://scontent-ort2-1.xx.fbcdn.net...fa&oe=5FB14C2C
(மீள் பதிவு நன்றி சிவாஜி முரசு)
-
-
-
-
-
-
-
https://scontent-ort2-1.xx.fbcdn.net...65&oe=5FB1496C
Thanks Vcg Thiruppathi
........................................
-
1981 மார்ச் மாதம் இலங்கையில் திரைக்குவந்தது பட்டாக்கத்தி பைரவன்
கொழும்பு ....ஜெஸிமா..... யாழ்........ ஶ்ரீதர் ஆகிய திரைகளில் 100 நாட்கள் ஓடியது.
கொழும்பில் 20 வாரங்கள்
பட்டாக்கத்தி பைரவன் திரையிடப்பட்டிருந்தவேளை மேலும் 2 சிவாஜி படங்கள் திரையிடப்பட்டன.
எனினும் பட்டாக்கத்தி பைரவன் 2 திரைகளில் 100 நாட்கள் கண்டு சாதனை படைத்தது.
யாழ்நகரில் 7 லட்சம் வசூல் பெற்று சாதனை நிலை நாட்டியது பட்டாக்கத்தி பைரவன்.
யாழ்நகர்......ஶ்ரீதர் அரங்கில்........ 100 ....நாள் வசூல்........................7 05 226.25
(யாழ்நகரில் எம் ஜீ ராமச்சந்தரின் எந்தப்படமும் 6 லட்சம் பெறவில்லை ஆகக்கூடுதல் வசூல்
பெற்ற ராமச்சந்தரின் படம் மீனவநண்பன் 5 லட்சம் )
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...00&oe=5FB0DF13
(இலங்கை விளம்பரம் 15 வது வாரம்)
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...31&oe=5FB3B00A
( சிவாஜி கணேசனின் 3 படங்கள் ஒரே நேரத்தில் காட்சியளித்துக்கொண்டிருந்ததற்கான
விளம்பர ஆவணப்பதிவு)
-
1961 இல் இந்த பதில், சிவாஜியை அமுக்க வேண்டும் என்று திமுக, மு. க, எம்ஜிஆரை வளர்த்துவிட்டதால் வந்த வினை, இல்லையெனில் எம்ஜிஆர் மிக சாதாரண ஜெமினி, எஸ் எஸ் ஆர் போல இருந்திருப்பார்.
தமிழனுக்கு எதிரியே தமிழன்தான் என்பதற்கு, இது ஒரு சிறந்த உதாரணம்..
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...5a&oe=5FB53487
Thanks Trichy Srinivasan
-
1960ம் ஆண்டின் இறுதியில் பெரும் மழை வெள்ளத்தால் தமிழகத்தின் சில பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட போது தன்னுடைய பங்களிப்பை மனமுவந்து செய்தவர் நடிகர் திலகம்.
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...b3&oe=5FB29ABB
Thanks VeeYaar
-
நம் கலைத்தாயின் தவப்புதல்வனின் ரசிகர்கள் ...ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தனித்திறமைகள் ..ஈடுபாடுகள் ...நடிகர் திலகத்தின் மேல் உள்ள பக்தி ..அளவில்லாத அன்பு ..இன்னும் எத்தனை எத்தனையோ ..!!
அதைப்போல ...நடிகர் திலகத்தின் மேல் அளவற்ற பற்று கொண்ட ஒரு ரசிகர் ..வரலாற்று ஆசிரியர் ..இவர் நடிகர் திலகத்தின் மேல் உள்ள பற்றை ...நடிகர் திலகம் நடித்த படங்களை பார்த்ததிலிருந்து வெளிப்படுத்தியுள்ளார் ..!
இதில் என்ன ஆச்சரியம்..?
நாம் அனைவருமே அப்படித்தானே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. !
நடிகர் திலகத்தின் ரசிகர்கள் ..வெறித்தனமான ரசிகர்கள் ...அவர் நடித்த படங்களை அதிகபட்சம் எத்தனை முறை பார்த்து இருப்பார்கள் ..?
சுமார் பத்து,இருபது,முப்பது, ஐம்பது ,நூறு, ஆயிரம் முறை பார்த்திருப்பார்கள் ...!
இங்கே நான் சொல்லும் நபர் ...
நடிகர் திலகம் நடித்த ஒரேஒரு படத்தை "7300" முறை பார்த்துள்ளார் ..!!
நம்ப முடிகிறதா ..?
ஆம் நம்பித்தான் ஆகவேண்டும். !!
எந்த அளவு பக்தியும்,பாசமும் ,பற்றும் இருந்திருந்தால் ...அவர் ஒரு படத்தை இத்தனை முறை பார்த்திருக்க வேண்டும் ..!!
யார் அந்த ரசிகர்..?
அவர் அவ்வளவு முறை பார்த்த படம் எது ..?
உங்கள் ஆவல் புரிகிறது ..!!
நேற்று தனது 41 ஆண்டுகளை வெற்றிகரமாக முடித்து தனது 42வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்திருக்கும்..நம்....நடிகர் திலகத்தின் வெற்றிக் காவியம் #பட்டாக்கத்தி_பைரவன். தான் அது.!!
அத்தனை முறை படத்தை பார்த்து ரசித்த அந்த நபர் திருச்சியைச் சார்ந்த வரும்..
நமது நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரும்.. முகநூல் குழுக்களில் உள்ளவருமான..
திரு Vijayakumar Krishnamurthy என்பவர்தான்.
திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் தனது ஆசிரியப் பணியை செவ்வனே செய்து வருகிறார் ..!!
படத்தின் சிறப்பம்சங்கள். பலவற்றை நமது நண்பர்கள் ..ஏற்கனவே பதிவிட்டு இருக்கிறார்கள் ..!
கோல்டன் ஜூபிலி வருடத்தை நோக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் நம் சிம்மக்குரலோனின் வெற்றிக் காவியம் "பட்டாக்கத்தி பைரவன்" திரைப்படத்தை கொண்டாடி மகிழும் அதே வேளையில் ...
இதுபோன்ற அன்புள்ளம் கொண்ட ரசிகரை நாமும் வாழ்த்துவோம். !!
Yhanks Sheik Ali
..................................
பினனூட்டம்
மிக்க மகிழ்ச்சி ஐயா, இந்த வருட இறுதிக்குள் நடிகர் திலகத்தின் அடுத்த பிறந்த நாளுக்குள் 10,000வது முறையினை எட்டிவிடுவேன்(Vijayakumar Krishnamurthy)
...........................
நான் இந்த படத்தை தியேட்டர், VCR, CD இறுதியில் YOUTUBE ((Vijayakumar Krishnamurthy)
-
-
-
கலைக்குரிசில் நடிகர்திலகத்தின் திருப்பெயரால் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 முதல் குரூப்ஸ் ஆஃப் கர்ணன் நடத்திவரும் தொடர் அன்னதானத்தில் 194- வது நிகழ்ச்சி!
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...bf&oe=5FB57234
Thanks Nilaa
-
22-10-2020
.
தொலைக்காட்சி சேனல்களில்,
நவராத்திரி-....................................... 11 am சன் லைப் சேனலில்,
நீதிபதி - ..............................................1:30 pm ராஜ் தொலைக்காட்சியில்,
ரத்தபாசம் - .......................................3:30 pm முரசு தொலைக்காட்சியில்,
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...49&oe=5FB48089
Thanks Sekar
-
Hero 72!!
மதுரையிலும் சாதனை,
1972 ஆம் ஆண்டில் வெளியான நடிகர் திலகத்தின் திரைப்படங்களான
ராஜா
ஞான ஒளி
பட்டிக்காடா பட்டணமா
தர்மம் எங்கே
தவப்புதல்வன்
வசந்த மாளிகை
நீதி
ஆகியன மதுரையில் மட்டுமே ஆண்டின் ஒட்டுமொத்த வசூல் என
Rs 21,19,225-78 ரூபாயை குவித்து சாதனை படைத்தது,
அதுவரை வேறு எந்த நடிகர்களின் திரைப்படங்களும் ஆண்டிற்கு 21 லட்சம் என்ற பெரும்தொகையை மதுரையில் நெருங்கியது கிடையாது,
1) ராஜா- 26-01-1972
மதுரை செண்ட்ரல் திரையரங்கு
101 நாட்கள் வசூல் - Rs 3,14,909-80
2) ஞான ஒளி - 11-03-1972
மதுரை நியூ சினிமா திரையரங்கு
90 நாட்கள் வசூல் - Rs 2,41,122-15
3) பட்டிக்காடா பட்டணமா - 06-05-1972
மதுரை செண்ட்ரல் திரையரங்கு
182 நாட்கள் வசூல் - Rs 5,61,495-20
4) தர்மம் எங்கே - 15-07-1972
மதுரை தேவி திரையரங்கு
49 நாட்கள் வசூல் - Rs 1,28,443-85
5) தவப்புதல்வன் - 26-08-1972
மதுரை சிந்தாமணி திரையரங்கு
70 நாட்கள் வசூல் - Rs 1,79,224-71
6) வசந்த மாளிகை 29-09-1972
மதுரை நியூ சினிமா திரையரங்கு
200 நாட்கள் வசூல் - Rs 5,30,536-15
7) நீதி 07-12-1972
மதுரை தங்கம் திரையரங்கு
56 நாட்கள் வசூல் - Rs 2,35,493-92,
அட்டகாசமான சாதனையை நிகழ்த்தி இருக்கிறது நடிகர் திலகத்தின் Hero 72 ஆம் ஆண்டு,
( பொக்கிஷ வசூல் விபரங்கள் சேகரிப்பு திரு வி.வெங்கடேஷ் மதுரை)
Thanks Sekar
-
இன்றைக்கு நட்சத்திர நடிகர்களின் புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல்வாரத்தில், அரங்குகளின் அனுமதிச்சீட்டு கட்டணத்தை இரண்டு அல்லது மூன்று மடங்காக ஏற்றிவிடுவது வாடிக்கையாக உள்ளது.
ஆனால், 58 ஆண்டுகளுக்கு முன்பே, அதுவும் படத்தின் 100 ஆம் நாளன்று அனுமதிச்சீட்டின் விலையை ஐந்து மடங்கு உயர்த்தி விற்பனை செய்திருக்கிறார்கள்.
இது நிகழ்ந்தது 1959ல்.
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், நாகர்கோவில் பயனியர் பிக்சர் பேலஸ் அரங்கில் 100 நாள் விழா வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் திலகமும் கலந்து கொண்டார். அவர் வருகையின் எதிரொலியாக அரங்கில் கூட்டம் முந்தியடிக்க ஆரம்பித்தது.
கூட்டத்தை சமாளிக்க திரையரங்க நிர்வாகம் அனுமதிச்சீட்டின் விலையை ஐந்து மடங்காக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது.
25 பைசா டிக்கெட் 125 காசுகளாக வசூலித்தனர். ஆனால், எதிர்பார்த்ததுபோல் கூட்டம் குறைந்தபாடில்லை.
மாறாக, மேலும் கூட்டம் அதிகமானது.
அரங்கைவிட வெளியில் இருமடங்கு கூட்டம் நின்றது. அனைவரும் நடிகர்திலகத்தைப் பார்க்காமல் கலையப் போவதில்லையென உறுதியோடு நின்றனர்.
அதைக் கேள்வியுற்ற நடிகர்திலகம் அரங்கின் வெளியே வந்து ரசிகர்களிடையே தோன்றி, அரைமணி நேரம் காரின் மேல் ஏறி நின்று, மக்களிடம் உரையாற்றியது நெடுங்காலம் அவ்வூரில் பேசப்பட்ட சரித்திரமாகும்.
ஏன் இப்போதும்கூட மூத்த ரசிகர்கள் இந்நிகழ்ச்சியை பேசி ரசிப்பதுண்டு.
( இது ஒரு மீள்பதிவு)
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...15&oe=5FB68F9D
Thanks Nilaa
-
இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் இப்படிப்பட்ட சாதனை
அகிலஉலக வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன்
ஒருவரால் மட்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது
6..10..1979 ம் ஆண்டு திரையிடப்பட்ட
தீபம் ...
அந்தமான் காதலி
இரண்டு படங்களும் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்துள்ளன
அதுவும் 2 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியுள்ளன
தீபம்......................................கொழும்ப ு..............செல்லமஹால்................145 நாட்கள்
தீபம்.......................................யாழ்ப் பாணம்.........ஶ்ரீதர்....................... ..... .114 நாட்கள்
அந்தமான் காதலி...............கொழும்பு...............சம ந்தா. ...........................101 நாட்கள்
அந்தமான் காதலி...............யாழ்ப்பாணம்.........மனோகர ா.... ....................105 நாட்கள்
......
இது உலக சாதனை
ஒரு திரைப்படம் திரையிடப்பட்ட முதல் நாளில் அதிமுனதாக முதல்காட்சி
ஆரம்பித்து வைத்து சாதனை பரிந்தது நடிகர்திலகத்தின் படங்களே
இச்சாதனை இதுவரை எந்த ஒரு நகரின் படங்களாலும் முறியடிக்கப்படவில்லை
இலங்கை யாழ்நகரில் ராஜா திரை அரங்கில் 13.6.1975 ல் திரையிடப்பட்ட
எங்கள் தங்க ராஜா முதல்காட்சி நள்இரவு
1 .30 மணிக்கு ஆரம்பித்து சாதனை படைத்தது
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அதிமுன்னதாக முதற் காட்சி
ஆரம்பித்ததில் சாதனை படைத்தது வைர நெஞ்சம்
10; 6. 1977 ல் யாழ்நகர் ஸ்ரீதர் திரை அரங்கில் திரையிடப்பட்ட
வைர நெஞ்சம் முதல் காட்சி நள்இரவு
12. 05 மணிக்கு
ஆரம்பித்து சாதனை படைத்தது
இது உலக சாதனை என்றே நினைக்கின்றேன்
தமிழ்நாட்டில் கூட இச்சாதனை நிகழ்திருக்காதென நினைக்கின்றேன்
எங்கள் தங்க ராஜா சாதனை அறிந்த எம் ஜீ ஆர் ரசிகர்கள்
அடுத்து வெளியிடப்பட்ட எம் ஜீ ஆரின் நான் ஏன் பிறந்தேன்
படத்தின் மூலம் அதனை முறியடிக்க முயற்சித்தார்கள்
ஆனால் முடியாமல் போய்விட்டது
15 7. 1975 ல் யாழ்நகர் ராணி அரங்கில் வெளியிடப்பட்ட
நான் ஏன் பிறந்தேன் முல்காட்சி நள்இரவு
2 மணிக்கு மேல்தான் ஆரம்பித்தது.
சாதனை சக்கரவர்த்தியின் சாதனை முறியடிக்கப்படவில்லை.
மீள் பதிவு
-
நான் அறிந்த தெரிந்த வரையில் இலங்கையில் 200 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள்
வசந்த மாளிகை கொழும்பு கெப்பிட்டல் 250 நாட்கள்.
யாழ்ப்பாணம் வெலிங்டன் 208 நாட்கள்.
குரு கொழும்பு கிங்ஸ்லி 200+ நாட்களுக்கு மேல்.
நீயா 200நாட்கள் கடந்திருக்கவேண்டும் சரியான தகவல் என்னிடம் இல்லை.
உலகம் சுற்றும் வாலிபன் கொழும்பு கெப்பிட்டல் 203 நாட்கள்.
பைலட் பிரேம்நாத் யாழ்ப்பாணம் வின்சர் 222 நாட்கள்.
உத்தமன் கொழும்பு சென்ரல் 203 நாட்கள்.
பராசக்தி கொழும்பு மைலன் 39 வார விளம்பர ஆவணப்பதிவு
நடிகர்திலகம் சிவாஜி பத்திரிகையில்வெளிவந்திருந்தது
மீள் பதிவு
-
நீதிபதி 26-01-1983
#பெங்களூரில் முதல் வாரத்தில் மட்டுமே5.35 லட்ச ரூபாய் வசூலித்த முதல் தமிழ்ப்படம் இது.
#திருபாலாஜி அவர்கள் நிறுவனம் தயாரித்தப் படங்களிலேயே சென்னையில் 27 லட்சம் ரூபாய் வசூலித்த முதல் படம் நீதிபதி.
#மதுரைசினிப்பிரியா & மினிப்பிரியா 175 நாட்கள் / மொத்தவசூல் ரூ.7,17,413.
#சென்னைசாந்தி 141 நாள் மொத்த வசூல் : ரூ.14,22,692.50
#சென்னைஅகஸ்தியா 115 நாட்கள் மொத்த வசூல் : ரூ. 6,38,964.60
#சென்னைஅன்னைஅபிராமி 115 நாட்கள்மொத்தவசூல் : ரூ. 6,70,740.30
#சேலம்கைலாஷ் 101நாள்/ ரூ.7,38,462.10
#கோவைதானம் 107 நாள் / ரூ. 10,00,036.10
#திருச்சிகாவேரி+வெலிங்டன் 100 நாள் வசூல். ரூ. 7,18,222.00
-
முதன் முதலில் டைட்டிலில் நடிகர் திலகம் என்று இடம் பெற்ற அம்பிகாபதி, மற்றும் வித்தியாசமான கெட்டப்பில் நடிகர் திலகம் நடித்த சித்ரா பௌர்ணமி இரு படங்களும் இன்று அடுத்த ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றன.
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...1f&oe=5FB4CBF5
Thanks Veeyaar
-
ஒரு அப்பாவி நடிகர் கல்விக்காக செய்த உதவிகளில் மிக சில
1. *1957ல்- *பெருந்தலைவர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்திற்காக 100000 ரூபாய்*
2. *பாண்டிச்சேரி பகல் உணவு திட்டத்திற்காக 100000 ரூபாய் நிதி உதவி*
3. *1960ல் கட்ட பொம்மன் நாடகம் நடத்தி 32 லட்சங்கள் நிதி உதவி*
4. *பம்பாய் தமிழ் *குழந்தைகள் பள்ளி கூட நிதி உதவி 5,00,000* (நாடகம் நடத்தி)
*5. போடி நாயக்கனூரில் தொழில் கல்வி ஆரம்பிக்க ரூ.2,50,000*
*முறையாக* *அரசுகளிடம்*.
*(1960 களில்* *மதுரையில்* *நான்* *வசித்த தெருவில்* 1 *சென்ட் இடத்தின்* *விலை வெறும் ரூபாய்* *5 மட்டுமே. தற்போது ரூபாய் 30.00 லட்சம் தான்). கணக்கு* *போட்டு பார்த்தால்* .........
*100000/5 * 30 லட்சம் : 6000 கோடி மட்டுமே*.
*ஆனால் ஒரு கொடை* *வள்ளல் ஆட்சிக்கு* *வந்த* *உடன் அரசு பணத்தில் சத்துணவு திட்டம்* .(முன்னவர் கொடுத்தது சொந்த பணம்).
*அதற்கு வருமானத்தை பெருக்க சாராய வியாபாரம்*.
*அந்த சாராய வியாபாரிகளுக்கு கல்வி சாலைகள், கல்வி தந்தை பட்டங்கள் வேறு*.
*பாவம் அந்த அப்பாவி* *நடிகனுக்கு* *நாம் தந்த பட்டம் மகா* *கஞ்சன் என்று. ஏன்* *என்றால் அது உழைத்த* *பணம் . தமிழ் நாட்டில்*
*கல்வியை வியாபாரம்* *ஆக்கியதின் விளைவு*.
*பெருந்தலைவர்* *பிச்சை* *எடுத்தாவது* *குழந்தைகளுக்கு மதிய* *உணவு தருவேன் ஆனால் ஒரு* *போதும் சாராயக் கடைகளை திறக்க மாட்டேன் என்று சொன்னதற்கு பரிசு ஆட்சி மாற்றம்*.
*ஆனால் ஆட்சிக்கு வருவதற்கு முன் நான் ஒரு போதும் சாராயக் கடைகளை திறக்க மாட்டேன் என்றும் என் தாயின் மீது சத்தியம் என்று சொன்ன ஆட்சியாளருக்கு மீண்டும் முதல்வர் பதவி*.
*சாரயக்கடை திறந்த உடன் அப்பனுக்கு சாராயம்* ,
*மகனுக்கு சத்துணவா என்று கேட்ட நடிகர் திலகத்தின் மீது அண்ணன் நடிகருக்கு வந்ததே கோபம். என்ன செய்வது தமிழ் நாட்டின் விதி*.
Thanks Vijaya R K