:exactly:Quote:
Originally Posted by Shakthiprabha
Printable View
:exactly:Quote:
Originally Posted by Shakthiprabha
08 May 2009
thanks to ISAITAMILNET _ Prabhu
[html:00f09c1f41] <div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13374348&vid=5029739&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8783/85171769.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13374348&vid=5029739&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8783/85171769.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:00f09c1f41]
Kathir, thanks for the explanation. I'm getting the concept better now. :)
Yeah., understood :DQuote:
Originally Posted by Shakthiprabha
Pls do not hesitate to advise me. I need them. :)Quote:
After brushing aside my thoughts to ponder on the capacity or authority on my part to tell u few things, I strongly take up the initiative to go ahead and say a word or two on negative thoughts.
:shaking:Quote:
VR,
Always 3rd law works. Every action has equal opposite reaction. When we think good, positive energy bounces back. Therefore as far as possible, AVOID cursing, negative thoughts, bad mouthing, shouting with anger, feeling of remorse, regret etc.
Remember by inflicting hurt and negative energy to any being, we are infliciting hurt to our ownselves. (theory rarely fails)
Its nice to know that u have decided to try and change :) goodluck.
Aiyo... i must stop this habit. I must cultivate positive thoughts in order to get rid of this bad habit. :oops:
Thank you so much ka... I will put in conscious efforts to stop these thoughts from now on... :bow:[/quote]
Other day we were talking on
கனகதாரா ஸ்தோத்ரம்
[html:ec0df4769b]<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/VdSu0wdB81M&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/VdSu0wdB81M&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>[/html:ec0df4769b]
தமிழில்
[html:dc7e48529e]<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/x7JdqjKVvxM&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/x7JdqjKVvxM&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>[/html:dc7e48529e]
தமிழில்
கேட்பதில் என்ன ஒரு சுகம்
ஆகா....
நன்றி ஆனா :)
ஆம் தமிழில் நாம் ஓதும் ஸ்தோதிரங்களின் பொருளுணர்ந்து துதிப்பதால் ஈடுபாடு அதிகரிக்கிறது :bow:
On a relevant/non-relevant note. A passage by Nicholas of Cusa (1401 – 1464).
-------------
"O Lord, how marvelous is Thy face,
Thy face, which a young man, if he strove to imagine it, would conceive as a youth's; a full-grown man, as manly; an aged man as an aged man's! Who could imagine this sole pattern, most true and most adequate, of all faces--of all even as of each--this pattern so very perfectly of each as if it were of none other?
He would have need to go beyond all forms of faces that may be formed, and all figures. And how could he imagine a face when he must go beyond all faces, and all likenesses and figures of all faces and all concepts which can be formed of a face, and all color, adornment and beauty of all faces?
Wherefore he that goeth forward to behold Thy face, and all beauty which can be conceived is less than the beauty of Thy face; every face hath beauty yet none is beauty's self, but Thy face, Lord, hath beauty and this having is being. 'Tis therefore Absolute Beauty itself, which is the form that giveth being to every beautiful form.
O face exceedingly comely, whose beauty all things to whom it is granted to behold it, sufficed not to admire! In all faces is seen the Face of faces, veiled, and in a riddle; howbeit unveiled it is not seen, until above all faces a man enter into a certain secret and mystic silence where there is no knowlege or concept of a face.
This mist, cloud, darkness, or ignorance into which he that seeketh Thy face entereth when he goeth beyond all knowlege or concept is the state below which They face cannot be found except veiled; but that very darkness revealeth They face to be there, beyond all veils.
------------------
Love and Light.
Today's episode was informative :cool2: Cho intervened thrice to lecture. :bow:
I will write about it ka.... :boo:
Go ahead :thumbsup:
May 11.
அஷோக்கிற்கு shock treatment கொடுக்க நாதனும், நீலகண்டனும் அவனை அழைத்துக்கொண்டு செல்கிறார்கள்.
மயக்க ஊசி போடப்பட்டு அஷோக் உள்ளே அழைத்து செல்லப்படுகிறான்.
(காட்சி மேல் உலகத்திற்கு மாற்றப்படுகிறது). இதைப் பார்த்துக்கொண்டு இருக்கும் நாரதர் கண் அசைக்க, ஆஸ்பத்திரியில் treatment ஆரம்பிக்கும் தருவாயில் மின்வெட்டு நிகழ்கிறது.
சற்றே அதிர்ச்சி ஆகும் நாதன், என்னவென்று விசாரிக்க, மாலை வரையில் current வராது என்ற பதில் வருகிறது. உடனடியாக Generator'ai ஆன் செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கிறார் மருத்துவர். Diesel இல்லை என்று பதில் வருகிறது. Strike காரணதால் உடனடியாக எதுவும் செய்யமுடியாத நிலை ஏற்படுகிறது.
--
தயாரிப்பாளர்: என்ன சார் இது. நாரதர் தான் power cut'ku காரணமா? நாரதர் என்ன E.B'la வேலை செய்யறாரா? என்று நையாண்டியாய் கூற, சோ விளக்குகிறார்.
சோ: ஒரு விஷயத்துல நம்மக்கு தெரியாத ஒன்னு கலந்து இருந்தா அது தெய்வ செயல் என்று கூறிவிடலாம். இப்போ powercut ஆச்சு. ஏன் ஆசுசு? ஏன் diesel தீர்ந்து போச்சு? ஏன் diesel வாங்கி வைக்கல? இப்படி கேட்டுண்டே போகலாம். உதாரணமா, ஒரு flight accident நடக்குது. அதுல போக வேன்டிய ஒருதர் airport வரைக்கும் போயிட்டு, எதையோ மறந்துட்டு திரும்ப வந்துடறார். அந்த flight'ல போன எல்லாரும் இறன்துடராங்க, ஆனா இவர் மட்டும் தப்பிசுடறார். ஏன் இப்படி நடந்தது? எப்படி இவர் மட்டும் தப்பிச்சார்? அதிர்ஷ்டம்! திருஷ்டம் என்றால் பார்வை உடையது. அதிருஷ்டம் என்றால் பார்வைக்கு அப்பாற்பட்டது. அந்த மாதிரி விஷயம் எல்லாம் தெய்வச்செயல்'னு சொல்றோம். என்று கூறி "எந்த ஒரு விஷயத்துக்கு காரணம் கண்டறிய முடியவில்லையோ அது தெய்வச்செயல்" என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டிருப்பதை எடுத்துரைக்கிறார்.
--
நாதனின் மனதில் ஒரு உறுத்தல். இந்த தடங்கலில் ஏதொ ஒரு செய்தி இருப்பதாய் உணர்கிறார். நீலகன்டனிடம் இதனைக் கூற, நீலகன்டணோ அதை அறவே மறுக்கிறார். அதற்கு முதல் நாள் இரவு தான் சொற்பனதில் கண்ட காட்சியையும், இந்த தடங்கலையும் சம்பந்தப்படுத்தி, இந்த தடங்கல் வெறும் coincidence இருக்க வாய்ப்பில்லை என்று எடுத்துறைக்கிறார். கனவில் "ஒரு மிகப்பெரிய அறையில் ஜகஜோதியாய் சரவிளக்குகள் எறிய. ஒரு முனிவர் அந்த அறைக்குள் நுழைந்து எறியும் விளக்கில் ஜலத்தை தெளிக்கிறார். அத்துனை விளக்கும் அணைந்து விடுகின்றன" என்று தான் கண்ட கனவையும், இந்த மின்வெட்டு நிகழ்விற்கும் சம்மந்தம் இருப்பதாய் கூறுகிறர். இதை மறுக்கும் நீலகண்டனிடம், இது போன்ற இன்னொரு அனுபவத்தை கூருகிறார். பல ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் அதிகாலை "ஸ்வமிநாதா" என்று தன் தந்தையின் குரல் கேட்பதாக உணர்ந்ததையும், அதை தொடர்ந்து, அன்று காலையில் தந்தையின் இரங்கல் செய்தி வந்ததாக தெரிவிக்கிறார்.
--
This is only the first part. The remaining will be posted soon. :)
நீலகண்டன் தான் ஒரு நிலம் வாங்க இருப்பதாகவும், அதனை இந்த மாததில் பதிவு செய்து விடவேண்டும் என்று தன் மனைவியிடம் கூறுகிறார்.
--
இப்ப எல்லாம் நிலம் வாங்கினா register பண்ணனும். Documents வச்சுக்கனும். இதெல்லாம் உங்க காலதுல இருந்ததா? யார் எந்த நிலத்தில் இருக்கிறாரோ அந்த நிலம் அவருக்கு சொந்தம் என்று தான் இருந்தது என்கிறார்.
சோ, அப்பொழுதும் இந்த நடைமுறை இருந்ததாகவும், அதனை சரியாக செய்து கொண்டு வந்ததாகவும் கூறுகிறர். மனுநீதி, அர்தசாஸ்த்திரம், இவற்றில் இது பற்றி கூறப்பட்டிருப்பதையும் எடுத்துரைக்கிறார். அர்த்த சாஸ்த்திரம் என்பது வேதம் இல்லை என்றும், அது "Administration" எனப்படும் ராஜாங்கம் எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றி கூறுவதாக சொல்கிறார். அதில், நாம் இப்போது தான் வந்ததாக நினைத்துக்கொன்டிருக்கும் Metallurgy, Mining இவை எல்லாம் கூட வருவதாகவும் கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார். அதில் இந்த பத்திர குறிப்புகள் பற்றி வருவதை எடுத்துரைக்கிறார்.
சுக்ரநீதியில் ஒரு வழக்கு எப்படி கை ஆள வேன்டும் என்பதற்கான குறிப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். "வாதி, ப்ரதிவாதி, __ , தீர்ப்பு" இவை நாலும் சேர்ந்ததுதான் ஒரு வழக்கு என்று கூறப்பட்டிருக்கிறதாக சொல்கிறார்.
உம்: வரி கட்டாமல் ஏமாற்றும் ஒருவனை, காட்டிக்கொடுதால், அந்த Informer-க்கு, வசூலிக்கப்படும் வரியில் ஒரு பங்கு கொடுக்கும் வழக்கம் இன்று இருப்பதை அறிவோம். அன்றும் இந்த வழக்கம் இருதாதகவும், அதில் Informer-கு 6-ல் ஒரு பங்கு கொடுக்க வேன்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது என்றும் கூறுகிறார். மேலும், லஞ்சம், ஊழல் வாங்கும் அதிகாரிகளுக்கு என்ன தண்டனை வழங்க வேன்டும் என்று கூரப்பட்டிருக்கிறது. நீதிபதி லஞ்சம் வாங்கினால் கடுமையான தண்டனை prescribe செய்யப்பட்டிருப்பதாக கூறுகிறார்.
உளவாளிகளை எப்படி நியமிக்க வேண்டும் என்று எடுதுரைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சந்யாசி நல்ல உளவாளியாக இருப்பார். ஒருவன் ஒரு சந்யாசியைப் போல் வேடமிட்டுக்கொண்டு, மடம் அமைத்துகொன்டு, சிஷ்யர்கள் வைத்துகொன்டால், அவனிடம் நிறைய பேர் வந்து பேசுவர். confidential-ஆன விஷயங்களை சந்யாசியிடம் உளறுவர். அவன் மூலமாக நிறைய விஷயங்களை வாங்கிகொள்ளலாம்.
இன்று இருக்கும் நல்லதும் சரி, கெடுதலும் சரி, அன்றைக்கே அதனை கையாண்டு இருக்கிறார்கள். எனவே, இன்றைக்கு தான் இவை எல்லாம் வந்ததாக நினைக்க வேண்டியதில்லை என்று கூறி முடிக்கிறார்.
--
Akka, pls let me know what is the 3rd one in the four things for a Case.
Also, I request you to write about the "madisaar, priya's good news, saasthirigal meeting" scenes. :oops: I don't know how to write about madisaar, conceive matter :oops: :lol: not getting the right words :ashamed:
Quote:
Originally Posted by viraajan
:ty:
its goodQuote:
Originally Posted by viraajan
keep on writing - u will reach it
:ty: Thanks aana :bow:
vr,
:2thumbsup:
romba nalla ezhuthirukeenga... :clap:
keep an eye on spellos .
:ty: akka :bow:
Yes ka. R, r, n, N, o, O indha madiri letters'la thAn kOttai vittudaren.. :oops:
aarvama type pandrappo n instead of N, r instead of R :banghead:
I will correct it :bow:
neenga eppadi ka type pandreenga... :bow: believe me these two posts took more than 100 mins :oops2:
will keep writing and practice :thumbsup:
வாதி அவர் தரப்பு மனு, பிரதிவாதி அவர் தரப்பு மறுப்பு, அடுத்து வருவது trial அதாவது வழக்கு சம்பந்தபட்ட பேச்சுக்கள், அது போகும் போக்கு, proceedings என்று வைத்துக்கொள்ளலாம். இறுதியாக judgement / தீர்ப்புQuote:
Originally Posted by viraajan
Thanks ka :D
பிரியா தான் கருவுற்றிருப்பதை தன் மாமியாரிடம் மகிழ்வுடன் முதலில் பகிர்ந்து கொள்கிறாள். ஜாதி கட்டான மடிசார் கட்டிக்கொண்டு கோவிலுக்கு போக ஆவல் இருப்பதாக தெரிவிக்கிறாள். மனமெல்லாம் வெள்ளையாக சாம்புவின் மனைவி செல்லம்மாள் பேசுவதைக் கேட்க நன்றாக இருக்கிறது.Quote:
Originally Posted by viraajan
நேற்று எழுத விட்டுப்போன சில விஷயங்கள்
_______________________________________
"மாதங்களில் நான் மார்கழி" என்று கண்ணன் கூறுகிறான். தன்னை (இறையம்சத்தை) இருப்பவற்றுள் சிறந்தது எதுவோ அதுவாக கற்பித்துக்கொள்கிறான். அப்படி மார்கழி மாதத்தில் என்ன சிறப்பு?
இறைவனுக்கு உகந்த மாதம். தேவர்களுக்கு பிரியமான மாதம். சிறிதே நேரம் இறைவனை துதித்தாலும் பெரும் பேறு வந்துயர்த்தும் மாதம். அப்படிப்பட்ட மாதத்தில், இறைவழிபாட்டில் ஈடுபட வைக்க ஒரே வழி தான் உண்டு. சிறந்த மாதமான மார்கழியை இறைவனுக்கு அர்பணித்து அவன் துதி பாடுதலே அவ்வழி. அதற்கு நம் சொந்த விஷயங்கள், சௌகரியங்கள், நற்காரியங்களை எல்லாம் சற்றே தள்ளிப்போட்டு மற்ற
பதினோரு மாதங்களில் செய்துக்கொள்ளலாமே என்பதால் தான் மார்கழி மாதங்களில் நம் வீட்டு நற்காரியங்களை செய்யாமல் இறைவனின் துதியில் ஈடுபடச் செய்கிறார்கள்.
சோவின் இந்த விளக்கம் ஒப்புமைக்குறியதாக இருந்தது :clap: quite logical !
நாம் கேள்விபட்ட ஒன்று தான், "இருப்பதை வைத்து இன்புறு" எனும் தத்துவம். என்னிடம் என்ன இல்லை என்று நினைத்து துன்பத்தில் துவண்டால் ஒவ்வொரு தனிப்பட்ட ஜீவனுக்கும் துக்கம் சொல்லி மாளாது. இன்பமும் துன்பமும் மனத்தின் வெளிப்பாடே. நம்மிலிருந்து புறப்படும் உணர்வுகள். அந்த மனதை ஷாந்தமாக வைத்துக்கொண்டால், சுற்றுப்புற சூழலினால் வரும் இன்பம்/துன்பம் நம்மை அதிக அளவு பாதிக்காது.
ஆங்கிலத்தில் "count your blessings" என்று கூறுவார்கள். இத்தத்துவத்தை சுட்டிக்காட்டி சாம்பு பேசுகிறார். "குறைப்பட்டுக்கொள்ளாத மனிதன் ஏது! " இருந்தாலும் குறை இல்லாவிட்டாலும் குறை. எது இருந்தால் குறை? நம்மிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்று தெரியாமல் வருந்துவதே பெரிய குறை. நாம் சுகப்பட உலகில் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றனவே. "கூன் குருடு பேடு நீங்கி பிறத்தல் அரிது" என்ற பாடல் வரிகள் அழுத்தமாய் பதிந்த வரிகள். , கூன் குருடு பேடு நீங்கி இறைவன் அளித்திருக்கும் இந்த உடல் எத்தனை காரியங்களை செய்ய வல்லது! அதை அளித்த இறைவனை வணங்க வேண்டும். உண்ண உணவும், இருக்க இடமும், அன்பு கொண்ட உறவுகளும், நதியும், மலையும், நீரும், காற்றும், மலர்களும், மரங்களும், எத்தனை ஆனந்தங்கள்! எத்தனை அழகு! அற்புதங்கள்! எப்பேற்பட்ட கருணை வள்ளல் அவன்! இந்த எண்ணத்துடன் பல மஹான்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அனுபவித்து இறைவனின் கொடை உள்ளத்தை துதித்து பாடல் பாடியிருக்கிறார்கள்.
அசுர வேகத்துடன் செயல்படும் இவ்வுலகில் இன்றைக்கு நான் இதையெல்லாம் ரசித்து பார்க்கும் நிலையில் இல்லை. நேரம் போதவில்லை. நேரம் இருப்பினும், மனம் இருப்பதில்லை.
நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே!!
நம் வாழ்வில் நிறைந்திருக்கும் அழகை ரசிக்கவும், நிறைகளை அளக்கவும் நேரம் போதாமற் இருக்கும் போது குறைகளை நினைக்க நேரமேது?!
(வளரும்)
SP,
yes. nice explanation abt margazhi month/nature. pl continue your expert comments/thoughts :D
//I feel kambar jayaraman is excelling in his role.//
vr :clap:
:exactly:Quote:
Originally Posted by Shakthiprabha
May 11, 2009
[html:5a0eb6d379] <div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13418516&vid=5049543&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8834/85344451.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13418516&vid=5049543&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8834/85344451.jpeg&embed=1" ></embed></object>Quote:
thanks : Isainet.net - Prabhu
</div>[/html:5a0eb6d379]
விராஜனுக்கு நேற்றைய தொடரை பார்க்க முடியாமல் போனதால், நேற்றைய தொடருக்கான என் பதிவு
p.s: ஒரு குட்டி குறிப்பு :D பாடலில் (title song) வரும் பெண் சன்யாசி (நாதன் குலத்தை சபிப்பவள்) வேம்புவின் அக்காளாகவும் வருகிறார் போல :D
______
May 12th
________
பாகவதர் தன் முயற்சிக்காக மருத்துவச்சி ஹேமாவைக் கண்டு அஷோக்கைப்பற்றி எடுத்துரைக்க முயல்கிறார். விழலுக்கு இறைத்த நீராய் வீணாய் போனது அவர் தரப்பு பேச்சுக்கள். எள்ளிநகையாடி வழக்கம் போல் அதை ஏற்க மறுத்துவிடுகிறார் ஹேமா.
அஷோக்கிற்கு மயக்க ஊசி போட தயாராகிறார் ஹேமா. அதற்கு முன்பு இயந்திரங்கள் எல்லாம் சரியான இயக்கநிலையில் இருக்கின்றனவா என்று பார்த்துக்கொள்ளும்படி கூறுகிறான் அஷோக். அவனிடம் திடீரென ஒரு மாற்றம். அவனுள்ளிருந்து வேறொரு ஷக்தி பேசுவது போல் செயல்படுகிறான். ஏழு வருடங்கள் முன்பு சரியான இயந்திரம் தருவிக்கப்படாததால் மின் இணைப்புத் துண்டிக்க நேரிட்ட போது மித்ரா என்ற பணக்காரர் இறந்ததையும், அதைப் பற்றிய பேச்சு பிகார் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டதையும் நினைவுறுத்துகிறான். மித்ரா வீட்டவர்கள் இவரை கோர்டுக்கு இழுக்கவிருந்ததையும், ஹேமாவின் தந்தை பணம் பல செலவு செய்து அதை சரிகட்டியதையும் சுட்டிக்காட்டுகிறான்.
வெலவெலத்துப்போகிறார் ஹேமா.
நீங்கள் நினைப்பது சரி தான். அஷோக்கை அப்படிப் பேசச் செய்தது நாரதரின் செயல். ஹேமா நாதனிடம் எல்லோரும் சொல்லும் அதே வசனத்தை மிகுந்த மரியாதையுடன் தெரிவிக்கிறார். "சார் உங்க பையன் சாதாரண பிறவியல்ல. அவனுள்ள எதோ ஒரு அமானுஷ்ய சக்தி இருக்கிறது" என்று
வியக்கிறாள். எவருக்கும் தெரியாமல் போன தன் சரிதத்தை அவன் நினைவுக்கு கொணர்ந்ததாகச் சொல்கிறாள். ( Contradctory: Ashok says whole bihar was aware of the case and its history, how can it be unknown here in south, I am sure communication and its means weren't that bad seven years earlier. If the case was a popular one, then ashok recollecting its facts isn't any abnormal phenomenon. இயக்குனர் சற்றே கவனத்துடன்
இருந்திருக்க வேண்டுமோ? ) தன்னால் இனி அவனை நோயாளியாக இனி ஏற்க முடியாது என்று மறுத்துவிடுகிறார்.
(அப்பாடி !! போதும் அந்த பையனை விட்ருங்க :cry: :P :oops: )
வேம்புவுக்கு கிரி சம்பந்தம் விட்டுப்போனதில் வருத்தம் மிஞ்சியிருக்கிறது. முதலியார் பணம் கேட்டதன் நோக்கத்தை தெரிந்தபின் அவருக்கு சிறு நம்பிக்கை மீதம் துளிர் விடுகிறது. அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் செல்லம்மா சுப்புவிற்கும் அவர் அக்காளுக்கும் எடுத்துச் சொல்லப் போய் நன்கு மூக்கறுபட்டுத் திரும்புகிறாள். எந்த சூழலிலும் பொறுமை கடைபிடிக்கும் அவளது பாத்திரத்தின் குணம் மிகவும் பாராட்டத்தக்கது.
சாஸ்திரங்களும், நல்ல கருத்துக்களும் அறிந்த வைதீக பிராமணனுக்குத் தான் பரந்த நோக்கு இருக்க வேண்டும் என்று அவர் ஆதங்கம் மேலிட வேம்பு புலம்புகிறார்.
பண்டிதன் என்பவன் யார் என விளக்கும் பகவான் க்ருஷ்ணர், எவன் சமநோக்குடன் பிற உயிர்களை அணுகுகிறானோ, எவனுக்கு விஷால மனசும், மனித நேயமும் இருக்கிறதோ, எவன் ஜாதி ஒன்று தான் அது மனிதன் என்ற ஜாதி , ரூபங்கள் பலவாயினும் ஆன்மா ஒன்றே என உணர்கிறானோ அவனே பண்டிதன். பண்டிதன் என்பவன் ஞானி அல்ல. இங்கு வேம்பு சாஸ்திரகள் இதையெல்லாம் கற்றுக்கொண்டவர். அதை செயல்படுத்த எண்ணுகிறார். பண்டிதனும் கற்றுணர்ந்தவன், அவன் கற்றுணர்ந்த விஷயங்களை நிஜ வாழ்வில் பயின்றால் அதுவே பெறும் நிலைக்கு அவனை உயர்த்த வல்லது. வேம்பு சாஸ்த்ரிகளைப் போன்றவர்களும், தம் பரந்த நோக்கை நிஜ வாழ்வில் கடைப்பிடிக்க முயலுவதால், அம்முயற்சி
வெற்றி பெற்றால், என்றேனும் தம் நிலை உயர்த்தப் பெறுவர். ஞானி என்பது உயர்ந்த நிலை, எல்லோராலும் எளிதில் நினைக்கவும் வல்லாத நிலை என்பதை உணர வேண்டும்.
ஜாதிகள் ஒழித்தவனே உண்மையான பண்டிதன் என்பதை உணர்த்த நம் எல்லோருக்கும் தெரிந்த ஆதிஷங்கரர் கதையை மேற்கோள் காட்டுகின்றனர். ஆதிஷங்கரருக்கு தெரியாததல்ல, எனினும் இப்படிப்பட்ட பாடங்கள் இவரைப் போன்ற பெரிய மஹான்களால் சாமான்ய மக்களுக்கு விளங்கப்பெற வேண்டும் என்று இறை நடத்தும் செயல் எனக் கொள்ளலாம்.
ஆதிஷங்கரர் நடந்து கொண்டிருந்த ஒத்தையடிப் பாதையில்
எதிரே ஒரு சண்டாளன் (சண்டாளன் என்ற சொல்லுக்கு இழி பிறவி என்று கொள்ளக்கூடாது, மாமிசங்களை விற்று, புசித்து, உண்ணும் தாமஸ குணம் படைத்தவன் என்று வேண்டுமானால் கொள்ளலாம்). அவன் ரூபம் அழுக்குடன் இருந்தது. கையில் தோல் பை அதனுள் கள், தோளில் மாமிசத் துண்டங்களைத் தொங்க விட்டிருந்தான்.
"சற்றே விலகிக் கொள்" என்று ஷங்கரர் சொல்ல,
அவனோ "எதை விலகச் சொல்கிறாய்? இந்த ஆன்மாவையா அல்லது உடம்பையா? ஆன்மாவை என்றால், உன்னுள்ளும் என்னுள்ளும் நிறைந்திருக்கும் அது ஒன்றே என கூறியவனே நீ தான். அப்படியில்லாமல் இந்த உடம்பை விலகச் சொல்கிறாயா? உன் உடம்பும் என் உடம்பும் அன்னம் என்ற உணவினாலான சதைப் பிண்டங்களல்லவா? உன்னுள் ஓடும் அதே இரத்தம், சதை, தசையல்லவா என்னுள்ளும்? உணவினாலான இதை விலகச் சொல்கிறாயா? " எனக் கேட்கிறான்.
மேலும் கூறுகிறான்....
"கங்கையில் தெரியும் சந்திர பிம்பமும், அழுக்கு நீரில் தென்படும் பிம்பமும் வெவ்வேறு ஆகுமோ? பொன்குடமேயானலும், மண்குடமேயானாலும், அதனுள் இருக்கும் காற்றுக்கு வேறுபாடு உண்டோ?" என்கிறான்.
உடனே தன் தவறை உணார்ந்த ஷங்கரர், அவனையே தன் குரு என ஏற்றதாக கூறுவர். அத்தருணத்தில் இயற்றப்பட்டது மனீஷ பஞ்சரத்தினம் என்ற ஐந்து ஸ்லோகங்கள்.
அடக்க மாட்டாமல் நினைவில் ஆடியது எனக்கு மிகவும் பிடித்த பாரதியின் பாடலொன்று ...
காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் இடமெங்கும் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம்
- பாரதியார்
இவரின் கவிதைகள் எந்நேரத்திலும் பொருந்தி வருகிறதே! :bow:
(வளரும்)
_______
( நாளை மீண்டும் விராஜன் தொடர்வார் )
Shankar,Quote:
Originally Posted by wrap07
Every single person in this serial, I feel, is contributing his/her best :bow: They gel so perfectly with their respective roles.
Quote:
Originally Posted by Shakthiprabha
:ty:
Thanks Shankar :bow:
Thanks SP akka :)
May 12, 2009
[html:e90951132f] <div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13443616&vid=5059829&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8861/85436478.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13443616&vid=5059829&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8861/85436478.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:e90951132f]
May 12, 2009
- but 2 posting ..?
mm
[html:61f2835bd5] <div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13436118&vid=5056945&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8854/85409833.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13436118&vid=5056945&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8854/85409833.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:61f2835bd5]
May 13 2009.
Part 1:
ஆஷோக்கிற்கு சிகிச்சை அளிப்பதாய் உறுதியளித்த இரண்டு மருத்துவர்களும், தற்போது முடியாது என்று கைவிரித்துவிட, எரிச்சலாகிறார் நாதன். அவனுக்கு வியாதியும் இல்லை, விரக்தியும் இல்லை. யோகாபிமானம் மட்டும் ச்ற்றே இல்லை என்றும், வாழ்க்கை மீதும், மனிதர்களின் மீதும் பற்றுதலை உண்டாக்கிவிட்டால், அஷோக் நிலமை மாறிவிடும் என்று வசு கூற, ஆக, இவன் சந்யாசியாகவும் இல்லாமல், சக மனிதரைப் போலவும் இல்லை, "திரிசங்கு சொர்கம்" என்கிறார் நாதன்.
--
"திரிசங்கு சொர்கம்" என்றால் என்ன என்று தயாரிப்பாளர் கேட்க, சோ அதற்கு விளக்கம் அளிக்கிறார். (Folks, I will try to search for this story in net and post it soon. In case i dont get it, akka please help :cry2: )
--
கோவிலுக்கு போவது, பூஜை செய்வது என எதிலும் குறைவில்லை, இருப்பினும் தம் ப்ரார்த்தனைகள் பகவான் செவிகளுக்கு எட்டவில்லை என்றும், பகவானுக்கு ஒரு Hearing Aid தேவைப் படுகிறது என்றும், வசு நகைச்சுவை கலந்து தன் வேதனையை வெளிப்படுதுகிறாள். அதற்கு "சாஸ்திரிகள் தான் அந்த Hearing Aid என்றும், நம் ப்ரார்த்தனைகளை பகவான் செவிகளுக்கு எட்டச் செய்வது இவர்கள் தான் என்று சாஸ்திரிகளை பர்த்து நாதன் கூற, சாஸ்திரிகள் முகத்தில் மட்டும் அல்ல மலர்ச்சி, நம் முகத்திலும் தான் :)
---
Note: Giri's parents eloped and married! :)
கிரி (கிருபவின் நண்பன்), ஸ்லோக புத்தகங்கள் விற்கும் தாத்தாவை காண்கிறான். தான் அவரிடம் புத்தகங்கள் வாங்கி இருப்பதை நினைவுப்படுத்தி, அவரை தன் இல்லத்திற்கு அழைத்து செல்கிறான். அவரைப் பார்த்த மாத்திரதில் அதிர்ச்சி அடைகிறாள் அவன் அம்மா. காரணம், அவர் வேறு யாருமில்லை, அவளின் சொந்த அப்பா தான். இத சற்றும் எதிர்ப்பார்க்கத கிரி, இத்தனை நாளும் வயது காரணமாக அவரை தாத்தா என்று அழைத்ததையும், இன்று அவர் தான் அவனின் சொந்த தாத்தா என்ற உண்மை தெரிந்ததும், நெகிழ்கிறான்.
கிரியின் அப்பா வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன் நடந்ததை மனதில் வைத்துக்க்கொண்டு, கிரியின் தாத்தாவை அவமதிப்பார், என்று நாம் யூகித்துக்கொண்டிருக்க, அவரோ, தன்னை ஆசிர்வதிக்குமாறு வேன்டுகிறார். திருமணதின் போது கிடைக்காமல் போன ஆசிர்வதம் இப்போது கிடைக்கட்டும் என்று கூறுகிறார். ச்ந்தோஷம் ஒரு புறம் குற்ற உணர்ச்சி மறுபுறம் என தாத்தாவின் முகபாவம் கனகச்சிதம்.
இளையவளின் பேச்சைக் கேட்டு இவர்கள் கல்யாணத்தை ஒதுக்கியதாகவும், பின் இளயவளே இவரின் சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வாங்கிக்கொண்டு விட்டாள் என்றும், அவளின் மூலமாக வந்த பிள்ளைகள் எஞ்சி இருந்த சொத்தையும் வாங்கிக்கொண்டு தன்னை ஒதுக்கி விட்டாதாகவும், கூறி தன் குமுறலை அழுகையாக வெளிப்படுதுகிறார் தாத்தா. அன்று இவர்களுக்கு செய்த பாவம் மொத்தமும் தன்னையே திருப்பி தாக்கி விட்டதாக கூரி அழுகிறார். அதனை மறுத்து பேசும் கிரியின் அப்பா, பெற்றவரின் மனதை ரணமாக்கி விட்டு, அவரின் பெண்ணை திருமணம் செய்துக்கொண்டது மட்டும் எப்படி சரியாகும் என்று கூறி தன் குற்ற உணர்ச்சியையும் வெளிப்படுதுகிறார். நடந்தஹை மறந்து, இனி தங்களுடனே சேர்ந்து இருக்குமாறு தாத்தாவை கேட்டுக்கொள்கிறார் அப்பா. தன் விருப்பமும் அது தான் என்று கூறி சம்மதிக்கிறார் தாத்தா.
அன்றே உங்கள் திருமணத்திற்கு சம்மதித்து சந்தோஷமாக இருந்திருக்கலாம் என்று எண்ணி வருத்தப்படும் தாத்தாவை, "Past is an outdated cheque, future is a post dated cheque but present is the hot cash" என்று கிரியின் அப்பா கூற, கிரி தன் பங்குக்கு, வாழ்க்கை என்பது ஒரு Cone Ice cream அது உருகிவிடும் முன், நாம் அதனை அனுபவித்துவிடவேன்டும் என்கிறான். அதற்கு, எல்லா ice cream'um உருகிப்போய், வெறும் empty cone-ஆகத்தான் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன் என்று வருதத்துடன் பதிலளிக்கிறார் தாத்தா. "We will fill the empty cone " தாத்தா என்று கிரி கூற, "with more and more ice creams" என்று கூறி முடிக்கிறார் கிரியின் அப்பா.
May 13: Part 2:
வேலைக்கு சென்று திரும்பும் நீலகண்டணை, வாசலில் வழிமறித்து, அவரிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேன்டும் என்று கூறுகிறார் பாகவதர். பாகவதரை வெறுத்து ஒதுக்கும் நீலகண்டன், வழக்கம் போல், அவருக்கு செவி சாய்க்காமல் செல்கிறார். வலுக்கட்டாயமக நீலகண்டனை நிறுத்தி, அஷோக்கிற்கு சிகிச்சை அளிக்க முன் வ்ந்த மருத்துவர்கள் இருவரும் இப்போது முடியாது என்று கூறியதை சொல்லி சந்தோஷப்படுகிறார். எரிச்சலாகும் நீ.க , மருத்துவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போனதை நினைத்து நாங்கள் வருத்ததில் இருக்கிறோம், உமக்கு சந்தோஷமா இருக்கா?" என்று வசை பாடுகிறார்.
அஷோக் extraordinary person என்பதை இப்பொழுதாவது புரிந்துக்கொள்ளுங்கள் என்கிறார் பாகவதர். நீ.க கோபத்தில், தான் முட்டாள்களோடு பேசுவதில்லை என்று கூறி வீட்டிற்குள் விரைகிறார். பாகவதர் அவரை விடுவதாய் இல்லை. ஆனால் நான் பேசுவேன் என்று பின் தொடர்ந்து வீட்டிற்குள் செல்கிறார். பாகவதரின் இச்செயலால் எரிச்சலாகும் நீ.க பாகவதர் தன் வீட்டிற்குள் வந்தது தனக்கு பிடிக்கவில்லை என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிடுகிறார். "எனக்கும் மரியாதை, சுய கவுரவம் எல்லாம் உண்டு. உம்ம மாதிரி நானும் எல்லாத்தையும் பார்ப்பவன் தான்" என்று கூறும் பாகவதரிடம், எதற்காக தன்னை பின் தொடர்ந்து வீட்டிற்குள் வந்தீர்கள் என்று கேட்கிறார் நீலகண்டன். அதற்கு, தானாக வரவில்லை என்றும், ஏதொ ஒரு சக்தி தான் தன்னை உள்ளே அழைத்து வந்ததாக கூறுகிறார் பாகவதர். இதற்கு விளக்கம் கேட்கும் நீலகண்டனிடம் "ஒரு வேளை நீர் மாற வேன்டிய நேரம் வந்து விட்டதோ என்னவோ. உமக்கு ஒண்ணு தெரியுமா. இந்த வாழ்க்கையே Opposite அச்சாணியைக்கொண்டுதான் சக்கரமாய் சுற்றுகிறது. Good என்றால் evil இருக்கும், பகல் எனில் இரவு இருக்கும், கோபம் எனில் சாந்தம் இருக்கும். இத்தனை நாள் கடவுள் இல்லை'னு சொல்லிண்டு இருந்தேள், சக்கரம் சுற்ற தொடங்கிவிட்டது.. அடுத்த நிலை, கடவுள் இருக்கார்'னு சொல்லப்போறேள். எந்த அஷோக்கப் பாத்து பைத்தியம், சித்த ப்ரம்மை பிடித்தவன்'னு சொன்னேளோ, அந்த அஷோக்கே உமக்கு குருவாகி கண்ணை திறக்க போகிறான், உம்முடைய அறியாமையை அழிப்பான், அவன் யாரென்று உலகத்துக்கு அறிவிக்கும் சமயம் வரும், அப்பொழுது அவன் யாரென்று உமக்கு தெரியும், நீர் யார் என்றும் உமக்கு புரியும்" என்று கூறுகிறார். எல்லாவற்றிற்கும் பதில் பேசும் நீலகண்டனிடமிருந்து இதற்கு பதில் இல்லை. முகதில் கலவரம். "தொடரும்" என்ற எழுத்துக்கள் தோன்றுகின்றன. ம்ம்...பொறுத்திருந்து பார்ப்போம்.
Akka, as usual first 5 mins miss pannittEn :oops: help pls :bow:
thAthA'va samaadhanappadutha use pannina "cheque", "ice cream" dialogues konjam cliche'va irundhalum, the way they have expressed it on the screen was thoroughly enjoyable. :)
Nilagandan's reaction to bagawathar's speech was stunning. :clap:
As usual, bagawathar did his part so well :bow:
Why does the composer use "nenjinile nenjinile" tune in the BGM when Bagawathar followed Nilagandan. :confused2: Inappropriate music for the scene. :oops:
And,
I got reminded of Anbu Kathir when Bhagavathar spoke about the concept of Duality!! :)
:ty:Quote:
Originally Posted by viraajan
improved lot
keep up
Encouraging. Thanks aana :bow:
May 13, 2009
[html:790ecb488e] <div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13453542&vid=5063834&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8871/85473579.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13453542&vid=5063834&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8871/85473579.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:790ecb488e]
Hi Aana, that was May 13. I typed it wrongly :oops:Quote:
Originally Posted by aanaa
Both the parts are from May 13 episode :)
May 14.
Part I:
அஷோக்கை குணப்படுத்த தான் ஒரு யோசனை கூற விழைவதாக கோமதி மாமி நாதனிடம் தெரிவிக்கிறார். நாதனும் செவி சாய்க்கிறார். (அந்த யோசனை என்னவென்று பின்னர் தெரிய வரும் :) ). மாமி யோசனை கூற, நதனுக்கு அந்த யோசனை சரி என்று படுகிறது. வசுவிற்கோ அது பிடிக்கவில்லை. மாமியின் யோசனை சரி இல்லை என்று அதனை நிராகரிக்க, நாதனோ அது தான் சரி என்று தீர்மானமாக கூறிவிடுகிறார். வேறு வழியின்றி வசுவும் சம்மதிக்கிறாள். ஆனால், "அவரை" நேரில் சென்று சந்திக்காமல், ஒரு கடிதத்தில் விபரத்தை எழுதி அனுப்புமாறு கோருகிறாள். நாதனும் சம்மதிக்கிறார். கடிதம் எழுதப்பட்டு மாமி மூலமாக "அவருக்கு" அனுப்பி வைக்கப்படுகிறது.
அவர் வேறு யாரும் இல்லை. நீலகண்டன் தான். நாதன் நேரில் வராமல், தொலைப்பேசியிலும் தொடர்பு கொள்ளாமல், கடிதம் மூலமாக தொடர்பு கொண்டிருப்பது, நீலகண்டனுக்கு சற்றே அதிர்ச்சியைக் கொடுக்கிறது. கடிதத்தைப் படிக்கிறார். சற்றே கலக்கமாகிறார். மறூக்கவும் முடியாமல், சரி என்று ஒப்புக்கொள்ளவும் முடியாமல் குழம்பிப் போகிறார். இருப்பினும் நாதன் இதுவரை உதவி என்று தன்னை நாடியதில்லை, இது தான் முதல் முறை என்பதால், சரி என்று ஒப்புக்கொள்கிறார்.
நீலகண்டனின் மகளான உமா மீது அஷோகிற்கு நல்ல மதிப்பு இருப்பதல், அவள் நினைதால் இவனை மாற்ற முடியும். எனவே, உமாவை அஷோக்குடன் பழக விடுவதன் மூலம் அஷோக்கின் போக்கை மாற்ற்லாம் என்பது தான் கோமதி மாமியின் யோசனை. இந்த உதவியைத் தான் கடிதம் மூலமாக கேட்டு அனுப்பினார் நாதன்.
அஷோக் வீட்டிற்கு வருகிறாள் உமா.
நாதன் பேசத்துவங்குகிறார். "Psychiatric treatment-ஆல் அஷோக்கிற்கு எந்த பிரயோஜனமும் இல்லை, சொல்லப்போனால், அந்த மருதுவத் துறைக்கே அவன் ஒரு சவாலக இருக்கிறான். மற்ற வியாதி என்றால், ஒரு முறை சரி வரவில்லை என்றால், வேரு ஒரு முறையைக் கையாளலாம். Allopathy இல்லை என்றால், ஆயுர்வேதம், யுனானி என பல முறைகள் இருக்கின்றன. ஆனால், அஷோகிற்கு ஏற்பட்டு இருக்கும் இந்த நிலையை சரி செய்ய இவை எல்லாம் உதவாது. அவன் ஆன்மீகத்தில் மூழ்கிக்கொண்டு இருக்கிறான். அவன் மீட்க உன்னால் மட்டுமே முடியும். அவனுக்கு உன் மீது அளவற்ற பற்று இருப்பது உண்மை. நீ நினைத்தால் அவனை மாற்ற முடியும்." என்று கூற, உடனே சம்மதம் தெரிவிக்கிறாள் உமா.
அவள் செய்யும் இந்த உதவிக்கு கைமாறாக என்ன கேட்டலும் தருவதாக தெரிவிக்கிறார் நாதன். அஷோக்கை முழுமையாக மாற்றி விட்டால், அவனையே தனக்கு வாழ்க்கை துணையாக தர வேன்டுகிறாள். சற்றும் அதிர்ச்சியாகாத நாதன், அஷோக்கிற்கு புனர்ஜென்மம் கொடுக்க்க போகும் அவளை விட வேறு யாரும் சிறந்த துணையாக இருக்க முடியாது என்று கூறி, முழு சம்மதம் தெரிவிக்கிறார். சந்தோஷத்தில் திளைக்கிறாள்... முழு திருப்தியுடன் விடை பெறுகிறாள் உமா.
அவள் சென்றபின், பூகம்பமாய் வெடிக்கிறாள் வசு. அஷோக்கை மாற்றி, தன் பிள்ளையாக திருப்பித் தர கேட்டால், அதற்கு பதிலாக அவனையே விலையாக கேட்கிறாள், என்று கொதித்தெழுகிறாள். எப்படியும் ஏதோ ஒரு பெண்ணைத் தான் மணமுடித்து வைக்க போகிறோம், அது இவளாக இருந்தால் என்ன? என்று நாதன் கேட்க, தன் பிள்ளை இப்படியே இருந்தாலும் பரவாயில்லை, இந்த திருமணம் நடக்காது என்று திட்தவட்டமாக மறுத்து விடுகிறாள் வசு.
வீட்டிற்கு திரும்பும் உமா நடந்ததைஇ கூறி, தன் விருப்பத்தையும் தெரிவிக்கிறாள். அதிர்ச்சியாகும் குயிலி, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறாள். தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, நாதன் இந்த விஷயத்தைக் நீலகண்டனிடம் கூறி, அவரின் சம்மதத்தைக் கேட்கிறார். அதற்கு பதில் ஏதும் தராமல், பிறகு பேசிக்கொள்ளலாம் என்று கூறிவிடுகிறார்.
நீலகண்டனும் செய்வதறியாது தவிக்கிறார். முதலில் அஷோக்கின் நிலமை சரி ஆகட்டும், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கிறார்.
எவ்வளவு முன்னேறி விட்டீர்கள்
italic/ different color
keep up