http://www.youtube.com/watch?v=UOc-ChJ47Wk
PUDUMAI PITTHAN - FULL MOVIE
Printable View
http://www.youtube.com/watch?v=UOc-ChJ47Wk
PUDUMAI PITTHAN - FULL MOVIE
http://www.youtube.com/watch?v=pnc6KrY8oF8
Kannan En Kadhalan - Full Movie
http://www.youtube.com/watch?v=cg3rfkNHrNk
sirithu vazha vendum - full movie
மூன்றாவது முறையாக ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றது முன்னிட்டு சாதனைகள் விளம்பரத்தில் அதிமுக நிறுவன தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் படத்தை போடாமல் வந்துள்ளது மூலம் தமிழக முதல்வர் இருட்டடிப்பு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறார் என்பது புரிகிறது .
தேர்தல் நேரத்தில் மட்டும் எம்ஜிஆர் பெயர் - படங்கள் - பாடல்கள் - எம்ஜிஆர் புகழ் வார்த்தை ஜாலங்கள் தேவை படுகிறது . அமோக வெற்றிக்கு பிறகு வழக்கம் போல் .......ஜெயிப்போம் . மறப்போம் என்று செல்லும் இவர்களுக்கு காலம் தக்க பதில் கூறும் என்று நினைவு படுத்துகிறோம் .
‘பொன்மனச் செம்மல்’ என்றும், ‘புரட்சித் தலைவர்’ என்றும், ‘மக்கள் திலகம்‘ என்றும், ‘இதயக்கனி’ என்றும், இன்னும் என்னென்னவோ வாழ்த்துரைகளாலும், எத்தனை, எத்தனையோ தலைமுறைகளுக்கு தமிழர்கள் நம் இதய தெய்வம் எம்.ஜி.ஆரை வாழ்த்தியும், வணங்கியும், பின்பற்றியும் மகிழப் போகிறார்கள். ‘எம்.ஜி.ஆர்.’ என்ற மூன்றெழுத்தே ஒரு மந்திரம் தான். நினைக்கும் போதும், உச்சரிக்கும் போதும் உற்சாகத்தையும், உயர்வையும் தருகின்ற திருமந்திரம் ‘எம்.ஜி.ஆர்.’ என்னும் திருமந்திரம். திரையுலகிலும், அரசியலிலும் ஒருசேர பயணித்து, இரண்டு துறைகளிலும் வெற்றிக் கொடியை நாட்டிய ஒரே தலைவர் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
ஏழை, எளிய மக்களின் உயர்வுக்காகவும், உழைப்பால் உலகை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொண்டிருக்கும் சாமான்ய மக்களுக்காகவும் நல் உள்ளத்தோடு பாடுபடுகின்ற உயர்ந்த மனிதர்களை ஒவ்வொரு நாட்டின் வரலாற்றிலும் பார்க்க முடியும். எம்.ஜி.ஆர். அத்தகைய ஒரு வரலாற்று மனிதர் மட்டுமல்ல, அவரை ஒத்த சரித்திர நாயகர் களுக்கெல்லாம் இல்லாத மேலும் பல சிறப்புகளைப் பெற்றவர் ஆவார்.
இப்படிப்பட்ட ஒரு சரித்திர நாயகரை தலைவராகப் பெற்றிருக்கின்ற பெரும் பாக்கியம் இறைவனால் நமக்கு அருளப்பட்டது என்பதை நினைக்கும் போது உள்ளம் நெகிழ்கிறது. உணர்ச்சிகளின் மேலீட்டால் கண்களில் நீர் கசிகிறது. இப்படிப்பட்ட தலைவருக்கு விசுவாசமான தொண்டராக, உடன்பிறப்பாக, ரத்தத்தின் ரத்தமாக இறுதி மூச்சுவரை வாழும் வீர சபதம் மேற் கொள்ளும் தருணம் தான் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா.
பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாக விளங்கியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.-வின் வளர்ச்சிக்கு உரமாகவும், வேராகவும் இருந்து அல்லும் பகலும் அயராது உழைத்து திமுக-வை ஆட்சிப் பீடத்தில் அமர்த்திய பெருமை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு உண்டு.
பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பின், எம்.ஜி.ஆர். தி.மு.க.-வின் தலைமைப் பதவிக்கும், முதல்–அமைச்சர் பதவிக்கும் போட்டியிட்டு வென்றிருக்க முடியும். அந்த அளவுக்கு மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் செல்வாக்கு பெற்று விளங்கியவர் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இருப்பினும், அரசியலில் கிடைக்கும் பதவியினை ஒரு பொருட்டாகவே அவர் நினைத்ததில்லை. அதனால் தான், பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு ஒரு “கிங் மேக்கராக” செயல்பட்டு கருணாநிதியை முதல்–அமைச்சர் ஆக்கினார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
ஜெயலலிதா