மாலை மலர் - 19/02/2015
http://i58.tinypic.com/2upem0w.jpg
Printable View
மாலை மலர் - 19/02/2015
http://i58.tinypic.com/2upem0w.jpg
தமிழ் இந்து -19/02/2015
http://i61.tinypic.com/4tuhdk.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூல் வெளியீட்டு விழா - தொடர்ச்சி ..
----------------------------------------------------------------------------------------------------------
கவிஞர் திரு. முத்துலிங்கம் : இன்று போல் என்றும் வாழ்க திரைப்படத்தில் ,
அன்புக்கு நான் அடிமை, இது நாட்டை காக்கும் கை ஆகிய பாடல்கள் எழுத
வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக "இது நாட்டை காக்கும் கை " என்கிற பாடலின்
இசைத்தட்டுக்களை அதிக அளவில் கல்கத்தாவில் இருந்து கொண்டுவர ஏற்பாடு
செய்திருந்தார் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காரணம் அப்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து அ.தி.மு.க , 1977 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது.
மக்களின் நாடித்துடிப்பை துல்லியமாக அறிந்து செயல்பட்ட ஒரே தலைவர், புரட்சி தலைவர். ஒருமுறை நான் எம்.எல்.சி. ஆனவுடன் புரட்சி தலைவர் வீட்டிற்கு சென்று
காலையிலேயே மாலையிட சென்றேன். அப்போது நான் இன்னும் குளிக்கவில்லை.
பல அலுவல்கள் உள்ளன. கோட்டைக்கு செல்ல வேண்டும். நேரமாகிவிட்டது.
ஆகவே, என் தாய் சமாதியில் வைத்துவிட்டு போ என்றார். அதன்படி செய்தேன்.
இப்படி தாய்க்கு சிறப்பு செய்தும், மற்றவர்களுக்கு தாயின் பெருமையை திரைப்படங்களின் மூலம் திறம்பட உணர்த்தியவர் புரட்சி தலைவர் ஒருவரே.
இந்த புத்தகத்தின் ஆசிரியர் திரு. பாலு மணிவண்ணன் அவர்கள் இயக்குனர்
விஜயனிடம் 12 படங்களுக்கு உதவியாக பணிபுரிந்தவர்.
மலைக்கள்ளன் திரைப்படத்தில் வரும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
என்கிற பாடல் , ஆரம்பத்தில் திரு. தஞ்சை ராமையாதாஸ் என்பவர் எழுதினார்
அவருக்கும், திரு பட்சிராஜா (மலைக்கள்ளன் தயாரிப்பாளர் ) அவர்களுக்கும்
ஏற்பட்ட தகராறு காரணமாக பாடல் எழுதுவதை பாதியில் விட்டுவிட்டார்.
படப்பிடிப்பில் யாரோ ஒருவர் இந்த பாடலை முணுமுணுக்க , அது எம்.ஜி.ஆர்.
அவர்கள் காதில் விழ, பாடல் நன்றாக இருக்கிறதே என எண்ணி, புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். அவர்கள், திரு. தஞ்சை ராமையாதாஸ் அவர்களை அணுகியபோது,
மேற்கொண்டு தன்னால் பாடல் எழுத முடியாது, மன்னித்து விடுங்கள், தயாரிப்பாளர் அணுகுமுறை எனக்கு பிடிக்கவில்லை, என்று கூறி ஒதுங்கிவிட்டார்.
பின்னர், கோவையில் திரு. அய்யா முத்து என்பவர் உதவியுடன் அந்த பாடல்
எழுதி முடிக்கப்பட்டு வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டு, பட்டி தொட்டி எல்லாம்
பிரபலம் ஆனது.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் , ஆரம்ப காலத்தில் , திரைபடத்தில் நுழைந்த
காலங்களில், தன்னிடம் ரூ.10/- இருந்தால் ரூ.2/- தர்மம் செய்வாராம்.
ரூ.100/- இருந்தால், ரூ. 10/ தர்மம் செய்வாராம்., ரூ.1000/- சம்பளம் வாங்கிய காலத்தில் ரூ.100/- தானம், தர்மம் செய்வாராம்.
உதவி என்று ஒருவன் வந்துவிட்டால், அது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காதுகளில் விழுந்துவிட்டால், வந்தவன் வெறுங்கையோடு திரும்ப மாட்டான்.
கலியுலக கர்ணனுக்கு பிறகு, நாம் வாழ்ந்த/ வாழ்கின்ற காலத்தில் , கண்ட திரையுலக, அரசியல் உலக வரலாற்றின் ஒரே கர்ணன் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களே. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. மனிதாபிமானமும்,
மனிதநேயமும் மிக்க ஒரே தலைவர் நமது மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.தான்.
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படம் வளரும் சமயத்தில், எனது மனைவிக்கு
கருச்சிதைவு ஏற்பட்டது. அப்போது, சத்யா ஸ்டுடியோவில் புரட்சி தலைவரை
சந்திக்க சென்றேன். காரில் உட்கார்ந்து புறப்பட்ட எம்.ஜி.ஆர். அவர்கள், என்னைக்
கண்டதும், காரை நிறுத்தச் சொல்லி, விசாரித்தார். காரில் ஏறிவிட்டால், எந்த
காரணம் முன்னிட்டும் சாதாரணமாக காரை விட்டு இறங்கமாட்டார். ஆனால்
மனிதாபிமான செய்திகளுக்கு செவி சாய்க்கவும் தவறமாட்டார். எனது பிரச்னைகளை கேட்டதும், உடனடியாக ரூ.2000/- தந்து , என் மனைவியின் சிகிச்சைக்கு உதவினார். அப்போது ஒரு சவரன் விலை ரூ.300தான். இந்த மாதிரி
காரியங்கள், உதவிகள் பல பேருக்கு செய்ததனால்தான் மக்கள் மனதில் வாழ்ந்து
கொண்டு இருக்கிறார்.
வேலூர் நாராயணன், நடத்திய அலை ஓசை பத்திரிகையில் பணிபுரிந்து வந்தேன்.
1973ல் பொண்ணுக்கு தங்க மனசு என்கிற படத்தில் பாட்டு எழுத வாய்ப்பு கிடைத்தது. அலை ஓசை பத்திரிக்கை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு
எதிர்ப்பாக செயல்பட ஆரம்பித்ததும், அதிலிருந்து நான் விலகினேன். இந்த செய்தி
எப்படியோ எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தெரிந்து, ஆள் வைத்து, கூப்பிட்டு என்னை
விசாரித்தார். வேலை இல்லாமல் எவ்வளவு நாட்கள் இருப்பாய், வேலை கிடைக்கும்வரை பணம் தருகிறேன், வைத்துக்கொள் என்றார். நான் வாங்க
மறுத்துவிட்டேன். மீண்டும் வற்புறுத்தினார். மறுத்தேன். எனக்கு வேலை ஏதாவது
இருந்தால் கொடுங்கள் செய்கிறேன். பணம் வேண்டாம். என்றேன். வேலை வரும்போது தருகிறேன். பணம் வாங்கிக்கொள் என்றார். மீண்டும் மறுத்து வாதம்
செய்தேன். இவையெல்லாம் 1974ல் நடந்து முடிந்தது. பின்னர், சில திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்பு அளித்தார்.
1981- ல் கலைமாமணி பட்டம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கரங்களால் வாங்கும்போது, பணம் வாங்காமல் நான் வாதம் செய்து, வேலை கேட்டதை மனதில் வைத்து, உழைக்காமல் தான் பணம் வாங்கக்கூடாது என்பதில் உறுதியாக
இருந்து என் நெஞ்சை தொட்ட , திரு.முத்துலிங்கத்திற்கு இந்த கலைமாமணி
பட்டத்தை தராமல் வேறு யாருக்கு தருவது, என்று, மனிதாபிமானத்தோடு பேசி,
என்னை உயர்வாக பாராட்டி பேசினார்.
மீனவ நண்பன் படம் முடியும் தருவாயில், சத்யா ஸ்டுடியோவில் புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். அவர்களை சந்திக்க சென்றேன். இந்த படத்தில் உன் பாட்டு எது என்று கேட்டார். எதுவுமில்லை என்றேன். ஏனில்லை, படம் உருவாகும் சமயம் என்னிடம் சொல்லாமல் எங்கு சென்றாய் என்று கடிந்து கொண்டார். உண்மையில் தங்கையின் கல்யாணத்திற்காக ஊருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்த சமயத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை சந்திக்க சென்றால்,
பணம் வாங்கத்தான் வந்திருக்கிறேன் என்று அவர் நினைக்கக்கூடும் என்று
தவிர்த்தேன். , பின்னர் இயக்குனர் ஸ்ரீதரை அழைத்தார். முத்துலிங்கத்திற்கு
இந்த படத்தில் பாட்டு எழுத வாய்ப்பு கொடுங்கள் என்றார். படம் முடியும் தருவாயில் உள்ளது என்று ஸ்ரீதர் அவர்கள் சொன்னார். ஏதாவது கனவுக்காட்சி
வருவதுபோல் காட்சிகள் அமைத்து ஏற்பாடு செய்யுங்கள் என்றார் புரட்சி தலைவர்.
அது எப்படி முடியும் என ஸ்ரீதர் கேட்க, ஏன் முடியாது, உரிமைக்குரல் படத்தில்
விழியே கதை எழுது, அன்பே வா படத்தில், ராஜாவின் பார்வை கனவுபாடல்கள்
எப்படி அமைந்தன, அந்த மாதிரி சிச்சுவேஷன் வருவது காட்சிகள் அமைத்து இவருக்கு பாடல் எழுத வாய்ப்பளித்து, பதிவு செய்து கொண்டு வாருங்கள் என்று,
உத்தரவிட்டு, சென்றுவிட்டார். அதாவது ஒருவர் தன்னிடம் ஏதாவது உதவிக்கு
என்று வந்துவிட்டாரானால் எப்படியாவது அவருக்கு உதவவேண்டும் என்பதே
அவருடைய நோக்கமாக இருந்து செயல்பட்டார் என்பதற்கு இது ஒரு சிறந்த
உதாரணம். அதன்படி உருவானதுதான், தங்கத்தில் முகமெடுத்து பாடல்.
தன்னை நம்பி ஒரு கூட்டம் இருக்கிறது, அவர்களுக்கு உதவ வேண்டும், இயன்ற உதவியை செய்ய வேண்டும் அவர்களை கைதூக்கி விடவேண்டும். என்று செயல்பட்டதனால்தான் இன்றும்கூட, வீடுகளில், மாடங்களில், தெருக்களில்,
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்களை வைத்து பூஜை செய்கிறார்கள்.
கவிஞர் மருதகாசியின் வீடு ஏலத்திற்கு வந்தது. அதை தெரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். அவர்கள் அதை மீட்டெடுத்து, பத்திரங்களை ஒப்படைக்க மருதகாசியை அழைத்தபோது, அவர் வீடு, பத்திரங்கள் வாங்க மறுத்துவிட்டார். கவிஞர்
கண்ணதாசன் படத்தயாரிப்பில் ஈடுபட்டு நஷ்டம் அடைந்தது போல , தாங்கள்
எதுவும் செய்ய வேண்டாம், நான் வேண்டிய உதவிகள் செய்கிறேன், என்றார்
புரட்சி தலைவர். மருதகாசியின் வீட்டை மீட்டு கொடுத்தது புரட்சி தலைவரின்
பெருந்தன்மை . ஆனால் மருதகாசிக்கு என்ன பெருந்தன்மையோ கடைசிவரை
மறுத்து விட்டார்.
தஞ்சையில் தமிழ் பல்கலை கழகம் உருவாக்கிய உன்னத தலைவர் நமது
புரட்சி தலைவர்.எம்.ஜி.ஆர். அவர்கள்.
மலர்களில் சிறந்தது -12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி .
நதிகளில் சிறந்தது கங்கை நதி. மலைகளில் சிறந்தது இமய மலை.
மனிதர்களில் சிறந்தவர் எம்.ஜி.ஆர். என்கிற மகான்
தொடரும் !!!!!
dinathal 19/02/2015
http://i61.tinypic.com/iyq82b.jpg
கலைவேந்தன் சார்
விஜய் டிவி வழங்கிய மன்னாதி மன்னன் - எம்ஜிஆர் - உங்கள் கை வண்ணத்தில் சிறப்பான அலசல்கட்டுரைகள் அபாரம் .நீங்கள் விவரிக்கும் ஒவ்வொரு வரிகளும் நேரில் பார்த்த உணர்வை தந்தது .மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கு நீங்கள் ஒரு ''வர்ணனை வேந்தன் ''.வளர்க உங்கள் தொண்டு .
வேலை சுமை அதிகம் எனவே திரியில் அதிகமாக வர இயலாது நண்பர்களே இருப்பினும் உங்களின் பார்வைக்கு முகராசி வேலூர் records 96
http://i62.tinypic.com/29yqv14.jpg
]வேலூர் records 97
]http://i62.tinypic.com/2cpe0i0.jpg
வேலூர் records 98
http://i59.tinypic.com/2qnuuc3.jpg
வேலூர் records 99
http://i57.tinypic.com/2zth99u.jpg
http://i62.tinypic.com/nlsnlg.jpg
வேலூர் records 100
http://i62.tinypic.com/2v9p1dj.jpg