Quote:
ராஜ் டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘ஸ்வர்ண சங்கீதம் சீசன்-2’ நிகழ்ச்சி, பிரமாண்ட மேடையில் பரபரப்பான போட்டிகளால் இன்னும் சூடு பிடித்திருக்கிறது. நிகழ்ச்சியை பிரபல நடிகை அனுஜா ஐயர் தொகுத்து வழங்குகிறார். பிரபல கர்நாடக இசைப்பாடகர்கள் பாபநாசம் அசோக் ரமணி, சவும்யா நடுவர்களாக இருந்து நிகழ்ச்சியின் ரசனையை இன்னும் அதிகரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பு நடுவர்களாக சுதா ரகுநாதன், நித்யஸ்ரீ, உன்னி கிருஷ்ணன், ரஞ்சனி காயத்ரி, மஹதி, சின்ன பொண்ணு, அபிஷேக் ரகுராம், பிரியா சகோதரிகள், சிக்கில் குருசரண், ஓ.எஸ்.அருண் ஆகியோர் மெருகூட்ட, இறுதி சுற்றுக்கு இசை உலக ஜாம்பவான் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா வருகிறார். போட்டிக்காக கோயம்புத்தூர், சேலம், ஓசூர், மதுரை, திருச்சி, சென்னை, பெங்களூர் என்று எல்லா நகரிலும் குரல் தேர்வில் நூற்றுக்கணக்கான இளம் ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர். அதிலிருந்து சிறந்த 12 குரல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. போட்டியில் பாடகர்கள் தேர்வு பெற்ற நிகழ்ச்சியை வரும் வாரங்களில் காணலாம்.