THAT IS JAYALALITHA...
(dont worry, in next election she will definitely remember MGR.)
DEAR KARTHIK SIR
YOU ARE CORRECT
Printable View
THAT IS JAYALALITHA...
(dont worry, in next election she will definitely remember MGR.)
DEAR KARTHIK SIR
YOU ARE CORRECT
கருப்புஎம்.ஜி.ஆர். நான் என்று (அதற்கு தான் தகுதியான ஒருவரா என்று சிறிதளவும் சிந்திக்காமல் - இம்மியளவும் தகுதியும் கிடையவே கிடையாது என்பதையும் நினைவில் கொள்ளாமல்) தன்னைத் தானே சொல்லி திரிந்த விளம்பரப் படுத்திக் கொண்ட திரு விஜய்காந்த் கட்சியின் தற்போதைய நிலைமையை, அவருடைய அரசியல் வியாபார/காமெடி செயல்பாடுகள் மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிட்ட காட்சியினை நாம் அனைவரும் கண்கூடாகப் பார்க்கின்றோம்.
எது எப்படியோ புரட்சித் தலைவர் காலத்து அரசியல் சூழ்நிலை தற்போது இல்லையென்றாலும், அவரையும், அவர் உருவாக்கிய அனைத்திந்திய அண்ணா தி. மு. க. வினையும், இரட்டை இலை சின்னத்தையும் தமிழக மக்கள் மறக்க வில்லை என்பதனேயே சமீபத்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தெளிவு படுத்தியுள்ளன. மக்கள் திலகம் எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கு சிரஞ்சீவியாக வாழ்கிறது என்பதை பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மூலம் அறிய முடிகிறது. இந்த தேர்தலில் அஇஅதிமுக பல இடங்களை கைப்பற்றியுள்ளது அதற்கு வித்தைவிதைத்ததிரு புகழ்வீரன் மக்கள் திலகம் வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்- அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர்.
நடிகர்களும் அரசியலும்
சுயநல மோகமும், பொதுநலக் கோஷமும்!
தமிழகத்தில் இது தேர்தல் பருவம். அரசியல் கட்சிகள் கூட்டணிக் கணக்குகளைப் போட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் அரசியலுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட திரைத்துறையினர் வேறு கணக்குகளில் இறங்கியிருக்கிறார்கள். நடிக, நடிகையர் நேரடியாகத்தேர்தல் களத்தில் குதிப்பதிலிருந்து, பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொள்வது வரை சினிமாவின் பங்கு தேர்தல் அரசியலில் கணிசமாகவே இருக்கும்.
சினிமா உலகிலிருந்து சட்ட மன்ற உறுப்பினர்களையும் முதல்வர்களையும் தேர்ந்தெடுத்துப் பழக்கப்பட்ட தமிழகத்தில் இது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. ஓரளவுக்குச் சுமாரான ஹீரோவாக இருந்தால் கூட "எப்ப சார் அரசியலுக்கு வர்றீங்க?" என்ற கேள்வியை கேட்காமல் எந்தப் பேட்டியையும் முடிப்பதில்லை நமது சினிமா நிருபர்கள். அவர்களும் மையமாக ஒரு புன்னகைவீசிவிட்டு "அதுக்குள்ள என்ன அவசரம்?" என்று பதிலளிப்பதையும் கேட்க வேண்டியிருக்கும்.
உலகின் மிகத் துரதிருஷ்டமான கேள்வியும் பதிலும் இதுவாகத்தான் இருக்கும்! ஏனென்றால் தமிழகத்தில் அரசியலின் வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறது சினிமாக்காரர்களின் கவர்ச்சி.
சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்ற ஆதங்கம் நீண்ட காலமாகவே ஒரு தரப்பு மக்களின் எண்ணமாக இருக்கிறது. நாலாம் கிளாஸ் கூடப் படிக்காத ஒருவர் அரசியல்வாதியாகி, சட்டமன்றத்தையும் எட்டிப் பார்த்துவிடுகிறார். ஆனால் படித்த, ஓரளவுபொது நல விஷயங்களில் அக்கறை காட்டும் ஒரு நடிகர் வந்தால் என்ன தவறு என்றுமேற்படி கருத்தோடு மோதிப் பார்க்கும் இன்னொரு கூட்டமும் இதே நாட்டிலிருக்கிறது.
அரசியல் பார்வை சார்ந்த காரணங்களுக்காகவும் சில இயக்குநர்கள் அரசியல் பக்கம் எட்டிப்பார்க்கிறார்கள். சீமான் போன்றவர்கள் தமிழர்கள் உரிமை, குறிப்பாக ஈழத் தமிழர்கள் உரிமைசார்ந்த காரணங்களுக்காக அரசியல் பேசுகிறார்கள். களத்தில் இறங்கிப் போராடுகிறார்கள்.ஆனால் பெரும்பாலான நடிகர்களைப் பொறுத்தவரை அவர்களை அரசியலுக்குள் இழுப்பது அரசியல் பார்வையோ பொதுநல அக்கறையோ அல்ல என்பதே யதார்த்தம்.
ஒரு நடிகர் அரசியலுக்கு வந்து வெற்றிகரமாக ஆட்சியையும் பிடித்த முதல் உதாரணம் மக்கள்திலகம் எம்ஜிஆர். வெற்றிகரமான பல நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது அவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பது அவர்தான். எம்.ஜி.ஆர். சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்தே அரசியலில் ஆர்வம் கொண்டவர். அவரது திருமணத்தின்போது கூடக் கதராடைதான் அணிந்தார். பிறகு அவரது நெருங்கிய நண்பர் மு. கருணாநிதியின் வாதங்களால் ஈர்க்கப்பட்டு தேசிய அரசியலிலிருந்து திராவிட அரசியலைச் ஸ்வீகரித்துக்கொண்டார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருமே தனிக்கட்சி கண்டதும், எம்ஜிஆர் வெற்றி பெற்றதும், சிவாஜி அந்த வாய்ப்பை இழந்ததும் நாடறிந்த கதை.
எம்ஜிஆருக்கு அடிப்படையிலேயே இரக்க குணம் அதிகம். அவரது ஈகை குணத்தைப் பற்றி இன்னமும் வியந்து வியந்து பேசிக் கொண்டிருக்கிறது தமிழகம். சமீபத்தில் எம்ஜிஆர் ஒருசகாப்தம் என்றொரு நூலை எழுதியிருக்கிறார் அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கே.பி.ராமகிருஷ்ணன் (எழுத்தாக்கம்: எஸ். ரஜத்). அதில் ஒரு சம்பவம்...
ஒருமுறை கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவைப் பார்த்துவிட்டு காரில் வந்துகொண்டிருந்தாராம் எம்ஜிஆர். நல்ல வெயில் நேரம். தூரத்தில் ஒரு மூதாட்டி தன் பேரக்குழந்தையுடன் காலில் செருப்பில்லாமல் தலையில் ஏதோ சுமையுடன் நடந்துகொண்டிருந்தார். சிறிது தூரம் இருவரும் ஓடுவது. பின்பு அங்கிருக்கும் ஏதாவது ஒரு மரத்தடியில் கால் சூடுதணியும்வரை நிற்பது என்று அவர்களின் பயணம் இருந்தது. கண்கலங்கி விட்டார் எம்ஜிஆர்.காரில் தன்னுடன் வந்துகொண்டிருந்த ஜானகியம்மாளின் செருப்பையும், தன் செருப்பையும் கழற்றி டிரைவரிடம் கொடுத்து இதைப்போய் அந்தம்மாளிடம் கொடுத்து வா என்றுஅனுப்பினாராம். அதன்பின் வந்ததுதான் இலவச காலணித் திட்டம். இதை எதிர்க்கட்சியினர் கேலி செய்தார்கள். ஆனால் அது பற்றியெல்லாம் கவலையேபடவில்லை அவர்.
இந்தக் குணம் இன்று நாற்காலி பிடிக்கிற ஆசையிலிருக்கிற எந்த நடிகருக்காவது இருக்கிறது என்று சொல்ல முடியுமா?
எம்ஜிஆர் விட்டுச் சென்ற நாற்காலிக்கு ஆசைப்படும் ஒருவரும் சினிமாவில் அவர் பாணியைப் பின்பற்றுவதில்லை. அவர் மதுவை விரும்பாதவர். புகையை அறியாதவர். ஆனால் இது இரண்டும் இல்லாத ஹீரோக்களை ஹீரோ என்றே யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.
courtesy-ஆர்.எஸ்.அந்தணன்
[QUOTE=Tenali Rajan;1133644][B][FONT=Arial][SIZE=3][COLOR="#008000"]
கருப்புஎம்.ஜி.ஆர். நான் என்று (அதற்கு தான் தகுதியான ஒருவரா என்று சிறிதளவும் சிந்திக்காமல் - இம்மியளவும் தகுதியும் கிடையவே கிடையாது என்பதையும் நினைவில் கொள்ளாமல்) தன்னைத் தானே சொல்லி திரிந்த விளம்பரப் படுத்திக் கொண்ட திரு விஜய்காந்த் கட்சியின் தற்போதைய நிலைமையை, அவருடைய அரசியல் வியாபார/காமெடி செயல்பாடுகள் மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிட்ட காட்சியினை நாம் அனைவரும் கண்கூடாகப் பார்க்கின்றோம்.
எது எப்படியோ புரட்சித் தலைவர் காலத்து அரசியல் சூழ்நிலை தற்போது இல்லையென்றாலும், அவரையும், அவர் உருவாக்கிய அனைத்திந்திய அண்ணா தி. மு. க. வினையும், இரட்டை இலை சின்னத்தையும் தமிழக மக்கள் மறக்க வில்லை என்பதனேயே சமீபத்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தெளிவு படுத்தியுள்ளன. மக்கள் திலகம் எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கு சிரஞ்சீவியாக வாழ்கிறது என்பதை பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மூலம் அறிய முடிகிறது. இந்த தேர்தலில் அஇஅதிமுக பல இடங்களை கைப்பற்றியுள்ளது அதற்கு வித்தைவிதைத்ததிரு புகழ்வீரன் மக்கள் திலகம் வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்- அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர்.
http://www.youtube.com/watch?v=3vEE35I2thw
19.5.2014
ANNAI JANAKI AMMAYAR NINAIVU NAL .
http://i58.tinypic.com/ngzrz8.jpg