http://youtu.be/2QCefVbbI0U
Printable View
ஆரம்ப இசையைக் கேட்டதும் "முரட்டுக்காளை" படத்தில் ஷைலஜா பாடும் "மாமன் மச்சான்" பாட்டு நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பில்லீங்கோ !
http://youtu.be/7E9VDQB2_k8
நீங்க சொன்னது ரொம்ப சரி ராகவ் ஜி.. ( ஏனென்றால் அந்த இடத்தில் கண்டிப்பாக வீடியோ பார்க்க மாட்டோம் )
http://youtu.be/eb6bOPAxSzY
வடக்கிந்திய கம்பெனி ஆட்களை ஹான் ஜி என்று கலாட்டா செய்வோம். இங்கேயும் ஜி கோஷ்டிகள்.நானும் அவ்வாறே அழைக்கிறேன்.
ராகவ்ஜி, பின்னி விட்டீர்கள் தேர்ந்தெடுப்பில். புதைந்து கிடப்பவை தோண்டி எடுக்க படுகின்றன. உன்னதம் என்று இல்லா விட்டாலும் கவனிப்பு வேண்டுவன இப்பாடல்கள். நீங்கள் சொன்ன மாதிரி "ஹம்சா நந்தி " சாயல் இரண்டிலும்.
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே ,
நீங்களெல்லாம் சொப்பனம்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்களெல்லாம் அற்ப மயக்கங்களோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
வானகமே இள வெயிலே மரசெறிவே
நீங்களெல்லாம் கானலின் நீரோ
வெறும் காட்சி பிழைதானோ
போனதெல்லாம் கனவினை போல்
புதைந்தழிந்தே போனதினால்
நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ
காலமென்றே ஒரு நினைவும்
காட்சி என்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ அதன் குணங்களும் பொய்களோ
காண்பதெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ
நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ
All things that are standing, walking, flying
Are these just my dreams or mere illusions?
Things that I learn, hear, imagine
are these also just illusions
Isn’t there an deeper meaning to it?
The rays of light that fall on the trees
are these a mere also a mere illusion?
All that have gone seems like a dream
Am I also just a dream
Isn’t this whole universe a false thing?
Time that is perceived as a thought
images that appear to our multiple thoughts
Are these lies too?
If whatever we see will disappear eventually
If we can see the ones disappeared
Am I also not a dream
Isn’t this whole universe a false thing?
All things that are standing, walking, flying
Are these just my dreams or mere illusions?
Things that I learn, hear, imagine
are also just illusions
Isn’t there a deeper meaning to it?
The rays of light that fall on the trees
are these also a mere illusion?
All that have gone seems like a dream
Am I also just a dream
Isn’t this whole universe a false thing?
Time that is perceived as a thought
images that appear to our multiple thoughts
Are these lies too?
If whatever we see will disappear eventually
If we can see the ones disappeared
Am I also not a dream
Isn’t this whole universe a false thing?
இளைய ராஜா என்ற மாபெரும் ஆளுமைக்கு தலைவணக்கம்.அதுவரை பாரதி என்றால் தேச பக்தி ,மொழி பற்று,இன பற்று,ஜாதி ஒழிப்பு என்ற வகையிலேயே பாடல்களை தமிழ் படங்களில் உபயோக படுத்தி வந்த போது ,பாரதி ,அதற்கும் மேலே என்று காட்டிய இந்த தனி பாடலை தேர்ந்தெடுப்பு செய்ததற்கு. இளைய ராஜாவினுள் இருந்த இலக்கிய,தத்துவ வாதி இதனை தூண்டி இருக்க வேண்டும்.அதற்கு முன்பு இருந்த இசையமைப்பாளர்களுக்கு இசையளவு இலக்கியம் புரியுமா என்பது கேள்வி குறியே. ஆனால் இளைய ராஜா,ரகுமான் போன்றவர்கள் revival of literary value in Film songs பற்றி பேசி சாதிக்கவும் செய்தார்கள்.பாரதியே சங்கீதம் அறிந்தவர் என்பதால் தன்னுடைய பாடல்களின் ராக ஒலி குறிப்புகளை குறிப்பிட்டே செல்வாராம்.(வாலியும் நன்கு இசை ஞானம் உள்ளவர் )இந்த பாடலுக்கு சுலப கல்யாணி ராகம் (இதுவும்,கீரவாணியும் இசை ஞானிக்கு அல்வா ) தேர்ந்தெடுத்ததால் பாமர மக்களின் மனதையும் இணைத்து ,பாடலின் வரிகளின் முக்கியத்துவத்தை கொணர்ந்த இளைய ராஜாவிற்கு ,என் காலையின் மாலை.
எனக்கு சிறு வயதில் அடிக்கடி ஏற்படும் பிரமை. நானே வேறாகி வாழ்வதை நானே காண்பது போல .எப்படி சொல்வது? சுற்றி இருப்பதெல்லாம் உண்மையா? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்? என்றெல்லாம் தோன்றும். முக்கியமாக எங்கள் வீட்டு நாக மரத்தின் வசதியான கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து மணிகணக்கில் யோசித்து கொண்டிருப்பேன்.நானே என் வாழ்வின் சொப்பனமோ?தோற்ற மயக்கங்களோ?
இந்த பாடலை இலக்கிய கூட்டம் ஒன்றில் 1972 இல் நான் சொல்லி மேற்கோள் காட்டிய போது , எல்லா தமிழ் ஆசிரியர்களும் என்னிடம் கேட்ட கேள்வி ,இது பாரதி பாடலா?கேட்டதில்லையே? (இந்த பாடலை எனக்கு சொன்னவர் என் நண்பனின் தந்தை.சாதா தொழிலாளி)
இதை படித்து படித்து மாய்ந்தே மேற்கோள் காட்டினேன். இதை பாரதி படத்தில் கேட்ட போது என் மன விகசிப்பை உணரவும் உணர்த்தவும் வேண்டுமோ?
இதன் மாண்பை குலைக்காமல் நடித்த,பாடிய,இயக்கிய அனைவருக்கும் நன்றி.
https://www.youtube.com/watch?v=YVMkMlxOD9Y
காலை வணக்கம்
மது,
தாங்கள் கூறியது முற்றிலும் சரி.. சில பாடல்களைக் கேட்டல் மட்டுமே நன்று. இதனாலேயே அதிகம் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் ஆடியோ மட்டுமே நமக்கு தேவை என்ற அடிப்படையில் பகிரந்து கொள்கிறேன். சில பாடல்கள் கோபால் கூறியது போல் பல முறை கேட்டால் மட்டுமே மனதில் பதியலாம். இருந்தாலும் கேட்கும் போது உறுத்தாமல் சற்று இனிமையாக அல்லது, நமது அந்நாள் நினைவுகளை மீட்டும் விதமாக இருக்கக் கூடியவை இங்கு பகிரந்து கொள்ளப் படுகின்றன.
தங்களுடைய ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் உளமார்ந்த நன்றி. தொடருங்கள்.
கோபால்,
பாரதி பற்றிய தங்கள் கருத்துக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டியதே. திரும்பத் திரும்ப செந்தமிழ் நாடெனும் போதினிலே, விடுதலை, ஓடி விளையாடு பாப்பா, என்று பாரதியை குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிய லெவலுக்கு வைத்து விட்டார்கள். அவருடைய படைப்புகளால் தான் அவர் நிற்கிறார். ஆனால் அவற்றிலிருந்து தங்களுக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக் கொண்டு அவரை ஒரு லேபிளுக்குள் வைத்து விட்டார்கள்.
அதிலிருந்து விலகி பாரதியைப் பற்றிய சரியான கோணத்தை ஒரு பாதியளவிற்கேனும் நமக்குக் காட்டியதற்கு ஞான. ராஜசேகரனுக்கும் இளையராஜாவிற்கும் நாம் பாராட்டுதலைத் தெரிவிக்கத் தான் வேண்டும். இதற்கு சரியான உதாரணம் காட்ட வேண்டுமென்றால் அக்கிரஹாரத்தில் செல்லம்மாவைத் தோளில் கைபோட்டு அழைத்துச் செல்லும் காட்சி.
காலை வணக்கம் ராஜேஷ்.
கோபால்,
மனதை மயக்கும் மற்றும் கவரும் மதுர கானங்கள் ஏன் கருத்தைக் கவரும் மதுர கானங்களாகவும் திகழக் கூடாது.
தமிழ்த் திரைப்பாடல்களில் உள்ள இலக்கிய நயம், உவமை, சொல்லாடல், இலக்கண வரையறை அல்லது வழுவல் போன்றவற்றை எடுத்து தாங்கள் ஏன் எழுதக் கூடாது.
இலக்கியத் தமிழும் இசைத் திரையும் இதயத்தைக் கவரக் கூடியவை அல்லவா.
வேண்டுமானால் ஒரு தலைப்பை வைத்துக் கொள்ளுங்கள். இலக்கியத் தமிழும் இசைத் திரையும் எனக் கூட...
தொடக்கமாக சுரதா என்கிற சுப்புரத்தின தாசனுடைய பாடலை எடுத்துக் கொள்வோம்...
http://www.unmaionline.com/new/image...16-31/t_06.jpg
விழியாலே காதல் கதை பேசி
மலர் கையாலே சந்தனம் பூசி
கனி மொழி போலே சுவையேறும் செந்தேனே
உடல் நான் உயிர் நீ தானே..
அமுதும் தேனும் எதற்கு பாடல் தமிழிலக்கியத்திலேயே தனியிடம் பெறக் கூடிய அளவிற்கு மொழி வளமும் கருத்தடக்கமும் கொண்டு திகழ்கிறது.
http://www.youtube.com/watch?v=pOyGvSA0GDc
விழியாலே காதல் கதை பேசி
மலர் கையாலே சந்தனம் பூசி
கனி மொழி போலே சுவையேறும் செந்தேனே
உடல் நான் உயிர் நீ தானே..
இந்த வரிகள் அவருக்கு அக்காலத்தில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கின என்றால் மிகையில்லை.
இவருடைய படைப்புகளைப் பற்றி அல்லது தங்களுடைய மனம் கவர்ந்த வேறு எந்தத் திரைப்படப்பாடலாசிரியரானாலும் அவருடைய பாடல்களைப் பற்றி எழுதலாமே..
கோபால் மட்டுமல்ல நம் நண்பர்கள் ஒவ்வொருவருமே இதில் பங்கு பெறலாம்.