உலகம் சுற்றும் வாலிபன் மே மாதம் ரிலீஸ் ஆகலாம். அதற்கு முன்னதாகவே ஏப்ரலில் நினைத்ததை முடிப்பவன் ரிலீஸ் ஆகிவிடும் என்ற இரட்டை மகிழ்ச்சியான தகவல் கிடைத்துள்ளது.
http://i63.tinypic.com/29qnwgl.jpg
Printable View
உலகம் சுற்றும் வாலிபன் மே மாதம் ரிலீஸ் ஆகலாம். அதற்கு முன்னதாகவே ஏப்ரலில் நினைத்ததை முடிப்பவன் ரிலீஸ் ஆகிவிடும் என்ற இரட்டை மகிழ்ச்சியான தகவல் கிடைத்துள்ளது.
http://i63.tinypic.com/29qnwgl.jpg
http://s12.postimg.org/rdglcjzzd/IMG_3654.jpg
Courtesy- Facebook
நன்றி - அண்ணன் ஏ.ஆர். ஹூசைன் முகநூல் பக்கத்தில் அவர் நேரில் பார்த்த அனுபவம். ஹூசைன் நமது திரியிலும் உறுப்பினர். சில பதிவுகள் இட்டுள்ளார். இனி அவரின் முகநூல் பதிவு....
1980 புரட்சி தலைவரின் ஆட்சி கலைக்கபட்டதால் அப்பொழுது அதிமுகவினர் நீதி கேட்டு போராட்டம் நடத்தினர் , அப்போது கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர் அதில் ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது , இந்த சம்பவத்திற்கு பிறகு பாதிக்கபட்ட தொண்டர்களை நலம் விசாரிக்க புறப்பட்டு சென்றார் புரட்சி தலைவர் , தஞ்சாவூர் ,கும்பகோணம் , வழியாக பண்ருட்டிக்கு வந்தார் அந்த காலகட்டத்தில் நான் அங்கிருந்தேன்.
போராட்டத்தில் கலந்து கொண்டு முழங்காலில் பலத்த அடிபட்டு பாதிக்கப் பட்டிருந்தார் அதிமுக முக்கிய பிரமுகர் , வழக்கறிஞர் அவர் வீடு இருந்த பகுதி குறுகலான தெரு , தலைவர் வரும் செய்தியை ஆட்டோவில் ஒலிபரப்பு செய்து விட்டனர் உள்ளுர்கட்சியினர் , கூட்டம் கூடிவிட்டது , நான் எப்படியும் தலைவர் வக்கீல் வீட்டிற்கு தான் வருவார் அவரை பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் வீட்டின் வாசலிலேயே காத்திருந்தேன் ,மாலை ஐந்து மணியிருக்கும் தெருவினுள் கார்கள் நுழைந்தன ஒவ்வொரு காரின் பின்னே ஒரு கூட்டம் ஓடியது , லோடுவேன்போல் ஒரு வேனில் இருந்து தலைவர் இறங்கினார் , வந்தவுடன் அவர் கேட்ட முதல் கேள்வி " நான் வருவதை அறிவித்தவர் யார் " என்று தான் ஆட்டோ பிரச்சாரம் செய்தவர் ஓடி சென்று "நான் தான் தலைவரே" என்றார்.
அவரை கோபத்துடன் பார்த்து" நான் பொது கூட்டத்திற்கா வந்திருக்கிறேன்.. இந்த சின்ன தெருவில் அதிகமான மக்கள் கூடினால் அவர்களுக்கு சிரமம் ஏற்படாதா..?" என சொல்லிவிட்டு உள்ளே சென்றார் , பாதிக்கபட்ட வழக்கறிஞரை நலம் விசாரித்து விட்டு சிறிது நேரம் கழித்து வெளியே வந்து இரு கைகளை கட்டியபடி வாசலில் நின்றார் , எதிரே மக்கள்" புரட்சி தலைவர் வாழ்க" என கோஷமிட்டனர்.
தலைவரின் பாதுகாவலர்கள் ஒருவரையொரு கைகளை இணைத்து சங்கிலி போல் அரண் அமைத்து நின்றனர் , அப்பொழுது யாரும் எதிர்பாராதது நடந்தது. கூட்டத்திலிருந்து ஒரு இளைஞன் தலைவரை நோக்கி பாய்ந்து வந்தான் , சுதாரித்து கொண்ட தலைவர் மாட்டை அடக்கும் வீரர் போல் இடது காலை பின் வைத்து , இரு கைகளையும் முன் பக்கம் விறைப்பாய் வைத்தார். அதற்குள் அவரின் மெய்க்காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணன் அவர்கள் அந்த இளைஞனை அலேக்காக தூக்கி வீசிவிட்டார்.
இதை கண்ண தெரே பார்த்த எனக்கு மெய்சிலிர்த்து விட்டது , தலைவரின் முன்னெச்சரிக்கை தன்மையை நேரில் கண்டேன்.(இந்த சம்பவத்தை தலைவரின் மெய்க்காப்பாளர் திரு.ராமகிருஷ்ணனை சந்தித்த போது நினவு கூர்ந்தேன்)
http://i64.tinypic.com/286uvc6.jpg
நாற்காலியில் உட்கார்ந்திருப்பவர் புரட்சித் தலைவரின் மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணன் அவர்கள். இடது பக்கம் ஓரம் அண்ணன் ஏ.ஆர். ஹூசைன்.
எந்த சூழ்நிலையிலும் முன்னெச்சரிக்கையாக இருந்து எதையும் சமாளிக்க நமக்கெல்லாம் சொல்லிக் கொடுத்த வாத்தியார்
http://i64.tinypic.com/2cwu8lh.jpg
1962-ம் வருடம் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் மூலம் சென்னை பிளாசா தியேட்டரில் ஒருவாரத்துக்கு தான் நடித்த படங்களை திரையிட்டு அதன் மூலம் கிடைத்த வசூலை தேசப் பாதுகாப்பு நிதிக்காக புரட்சித் தலைவர் கொடுத்துள்ளார்.
இந்தியா நலனுக்காக மட்டும் இல்லாமல் இலங்கை மக்களுக்கும் புரட்சித் தலைவர் உதவி இருக்கிறார். முதல்வராக இருந்தபோது இலங்கை தமிழர்களின் போராட்டத்துக்கு எவ்வளவோ உதவியுள்ளார்.
அதற்கு முன்னால் நடித்துக் கொண்டிருந்த காலத்திலேயே இலங்கை மக்களுக்கு உதவி இருக்கிறார். இலங்கையில் தீவிரவாத இயக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாடோடி மன்னன் படத்தின் வெளியீடு மூலம் கிடைத்த வசூல் நிதியைக் கொடுத்து உதவி இருக்கிறார் எட்டாவது வள்ளல் பெருமான்.
பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ.... பாட்டு வரிகள் நினைவுக்கு வருகிறது.
மனிதர்களைக் கண்டு இரங்கும் பொன்மனச் செம்மலின் வள்ளல் தன்மை மொழி, இனம், ஜாதி, மதம், மாநிலம், நாடு ஆகிய எல்லைகளை கடந்தது.
http://i67.tinypic.com/a47in8.jpg
தனியார் தொலைக்காட்சிகளில் கடந்த வாரம் ஒளிபரப்பான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------------------
04/03/2017 - சன் லைப் -வேட்டைக்காரன் -காலை 11 மணி .
முரசு - நினைத்ததை முடிப்பவன் - இரவு 7.30 மணி
05/03/2017
- சன் லைப் - தேடி வந்த மாப்பிள்ளை -இரவு 7 மணி
08/03/2017- சன் லைப் - புதிய பூமி - காலை 11 மணி
09/03/2017 - மெகா டிவி - தாய் சொல்லை தட்டாதே - பிற்பகல் 3 மணி
10/03/2017 - சன் லைப் - நான் ஆணையிட்டால் - காலை 11 மணி
12/03/2017 -- சன் லைப் - பல்லாண்டு வாழ்க - காலை 11 மணி
- முரசு - நீதிக்கு பின் பாசம் - இரவு 7.30 மணி
நேற்று முதல் (10/03/2017) சென்னை சரவணாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "குமரிக்கோட்டம் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/ejgd4h.jpg
நேற்று (10/03/2017) முதல் சென்னை கிருஷ்ணவேணியில் மக்கள் திலகம் எம். ஜி.ஆர். திரையுலகின் "கலங்கரை விளக்கம் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .http://i63.tinypic.com/2mmwccz.jpg