- 
	
	
	
	
		மெல்லிசை மன்னரின் அற்புத இசையமைப்பில் வரிசை கட்டி வந்து கொண்டிருந்த படங்களில் ஒன்றுதான் ஒளிவிளக்கு. 1968 ல் வெளியான இப்படம் திரு எம்.ஜி.ஆரின் நூறாவது படம் என்ற பெருமையும் பெற்றது. 
 
 ஆனால் இப்படத்தின் பாடல்களைப் பற்றி பேசும் வாய்ப்பு வருபோதெல்லாம் அனைவரும் ஒன்று சேர்ந்து குறிப்பிடுவது இப்படத்தில் வரும் இரண்டு பாடல்களைப்பற்றி மட்டும்தான் என்பது, உண்மையான இசையை ரசிக்கும் ரசிக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 
 நான் சொன்ன இரண்டு பாடல்களில் ஒன்று, பி.சுசீலா பாடிய
 "ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்"
 என்ற பாடல். இதை எல்லோரும் ஒருமித்து பாராட்டிப்பேசக் காரணம், அடிபட்டுக்கிடக்கும் கதாநாயகனைக் காப்பாற்ற அனைத்து மதத்தவரும் பிரார்த்தனை செய்வதாக காட்டப்படுவது. மற்றும் கதாநாயகர் எம்.ஜி.ஆரின் வள்ளல் குணம் போன்றவற்றை தனிப்பட்ட முறையில் புகழும்
 
 "உள்ளமதில் உள்ளவரை.... அள்ளித்தரும் நல்லவரை
 விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்"
 
 போன்ற வரிகள். பல்லவிக்கு முன் தொகையறாவோடு அமைந்த பாடல் இது. இசையமைப்பு அருமை என்பதில் சந்தேகமில்லை.
 
 அடுத்து அனைவரும் குறிப்பிடும் இன்னொரு பாடல்
 
 "நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
 நல்ல பாட்டு படிக்கும் வானம்பாடிதானுங்க"
 
 குறவன் குறத்தி பாடுவதாக அமைந்த இப்பாடலில் திரு எம்.ஜி.ஆரும் செல்வி ஜெயலலிதாவும் குறவன் குறத்தியாக வேடம் கட்டி ஆடியதால் புகழ்பெற்றது.
 இவையிரணடையும் தவிர்த்து அவர்கள் குறிப்பிடுவதானால்
 "தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா" என்ற டி.எம்.எஸ்.பாடலைச் சொல்வார்கள். அதற்கும் காரணம் கதாநாயகன் இப்பாடலில் குடிப்பழக்கத்தின் கேடுகளைச் சொல்வதனாலும், ஒரு காட்சியில் அவர் ஐந்து வேடங்களில் தோன்றுவதனாலும்தான்.
 
 ஆனால் இம்மூன்றையும் தாண்டி, உண்மையிலேயே இசையை ரசிக்கும் ரசிகர்களுக்கு அரிய விருந்தாக அமைந்த மூன்று முத்தான பாடல்கள், அதே ச்மயம் மற்றவர்களால் கண்டு கொள்ளாமல் விடப்பட்டவை
 
 "நான் கண்ட கனவில் நீயிருந்தாய்"
 
 "ருக்குமணியே...பப்பர..பர...பர.."
 
 "மாம்பழத்தோட்டம் மல்லிகைக் கூட்டம்"
 
 ஆகிய மூன்று முத்தான பாடல்கள்தான். நாமும் அவற்றை கண்டுகொள்ளவிட்டால் எப்படி..?. அதற்குத்தான் இந்த சின்ன பதிவு.
 
 Courtesy  msv times
 saradhaa sn
 
 
- 
	
	
	
	
		"நான் கண்ட கனவில் நீயிருந்தாய்..." (ஒளி விளக்கு) 
 
 மெல்லிசை மன்னரின் மிக அருமையான மெட்டமைப்பில், அதிக INSTRUMENTS உபயோகித்து அமைத்த பாடல்
 
 எல்.ஆர்.ஈஸ்வரியின் கொஞ்சும் குரலில் அமைந்த அருமையான பாடல். கதாநாயகி கிளப்பில் பாடிக்கொண்டே கவர்ச்சி நடனம் புரிவார்.
 ஃப்ளூட் மற்றும் டிரம்ஸ் சகிதம் துவங்கும் முன்னிசையில் அடுத்து ட்ரம்பெட்டில் ஒரு உச்சஸ்தாயி அதைத்தொடர்ந்து வயலின் மேலே பயணித்து அப்படியே கீழே இறங்க, தொடர்ந்து கோரஸ்
 
 ஜிஞ்சல...ஜல..ஜிஞ்சல...ஜின்சல...
 ஜிஞ்சல...ஜல..ஜிஞ்சல...ஜின்சல...
 ஜிஞ்சல...ஜல..ஜிஞ்சல...ஜின்சல...
 ஜிஞ்சல...ஜல..ஜிஞ்சல...ஜின்சல...
 
 தொடர்ந்து பேஸ் கிடார் அப்ப்டியே கீழே சரிய, ஈஸ்வரியின் துள்ளல் குரலில் பல்லவி..
 
 நான் கண்ட கனவில் நீயிருந்தாய்
 கனவில் எனக்கொரு சுகம் தந்தாய்
 கனவும் கலைய... சுகமும் முடிய
 அடுத்ததென்னவோ...ஓ...ஓ..ஒ...
 
 இப்பாடலுக்கு அனுபல்லவியும் உண்டு. அனுபல்லவியில் பாங்கோஸின் அற்புத விளையாடல்..
 
 அம்மம்மா எனக்கந்த சுகம் சுகம்
 அப்பப்பா எப்போது வரும் வரும்
 நினைத்தால் மயங்குது மனம் மனம்
 உன்னைத்தான் நெருங்குது தினம் தினம்
 
 தொடர்ந்து இடையிசையில் பேஸ் அக்கார்டியனுடன் ட்ரம்ஸ், அடுத்து கிடாரின் கம்பீரம் என HEAVY INTERLUDE... அதைத்தொடர்ந்து சரணம்...
 
 பந்து போல எனை எடுத்து தன் பக்கம் வைத்தானோ
 பகல் வருகின்ற வரையில் புரிகின்ற மொழியில் பாடத்தைச் சொன்னானோ
 ஆகட்டும் ஆகட்டும் என்றது என்மேனி
 ஆனந்தம் ஆரம்பம் கண்டது பொன்மேனி
 
 ('பந்து போல' தொடங்கி 'சொன்னானோ' வரையில் பாங்கோஸ், பின்னர் 'ஆகட்டும் ஆகட்டும்' தொடங்கி 'பொன்மேனி' வரையில் தபேலா)
 
 மீண்டும் பாங்கோஸில் அனுபல்லவி
 
 அம்மம்மா எனக்கந்த சுகம் சுகம்
 அப்பப்பா எப்போது வரும் வரும்
 நினைத்தால் மயங்குது மனம் மனம்
 உன்னைத்தான் நெருங்குது தினம் தினம்
 
 மீண்டும் அக்கார்டியன், ட்ரம்பெட், கிடார் கலந்த HEAVY INTERLUDE க்குப்பின் அடுத்த சரணம்
 
 என்னவேண்டும் என்று நினைத்து என் நெஞ்சைத்தொட்டானோ
 இவள் மயக்கத்தில் கொஞ்சம் மிதக்கட்டும் என்று முத்திரை இட்டானோ
 ஏ. .மிஸ்டர் ஏ...மிஸ்டர் உனக்கிது கிட்டாது
 ஓ...மிஸ்டர் ஓ...மிஸ்டர் கைகளுக்கெட்டாது
 
 (முதல் சரணம் போலவே முதலிரண்டு வரிகளுக்கு பாங்கோஸ், பின்னிரண்டு வரிகளுக்கு தபேலா)
 
 தொடர்ந்து பாங்கோஸுடன் அனுபல்லவி
 
 அம்மம்மா எனக்கந்த சுகம் சுகம்
 அப்பப்பா எப்போது வரும் வரும்
 நினைத்தால் மயங்குது மனம் மனம்
 உன்னைத்தான் நெருங்குது தினம் தினம்
 
 இறுதியில் பல்லவி
 
 ய...ய...ய...நான் கண்ட கனவில் நீயிருந்தாய்
 கனவில் எனக்கொரு சுகம் தந்தாய்
 கனவும் கலைய... சுகமும் முடிய
 அடுத்ததென்னவோ...ஓ...ஓ..ஒ...
 
 
 இறுதியில் HEAVY POSTLUDE உடன் பாடல் முடியும்போது அடைமழை பெய்து .. ஓய்ந்த மாதிரி இருக்கும்.
 
 (மெல்லிசை மன்னரின் ரசிகர்கள், அறுபதுகளில் வந்த 'பா' வரிசைப்பாடல்களை விட்டால் 'தொபுக்கடீர்னு' தாண்டி 'நினைத்தாலே இனிக்கும்' காலத்திற்கு வருவதை விடுத்து, இதுபோன்ற இடக்காலங்களில் மறக்கடிக்கப்பட்ட பல பாடல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும்).
 _________________
 Saradha
 
 
- 
	
	
	
	
		ஒளிவிளக்கு. எம்.ஜி.ஆரின் 100வது படம். 1968இல் வெளிவந்தது.
 
 சினிமாப் படங்களில் பீடி சிகரெட் புகைப்பது மாதிரியோ, மது அருந்துவதாகவோ எம்.ஜி.ஆர். நடித்ததேயில்லை. தீய பழக்கங்கள் அண்டாத தூயவராகவே படங்களில் நடித்து நல்ல இமேஜ் ஏற்படுத்தி வைத்திருந்த எம்.ஜி.ஆருக்கு இந்தப் படத்தில் ஒரு சோதனை.
 
 அது என்ன? எம்.ஜி.ஆர். அதை எப்படி எதிர்கொண்டார்? விளக்குகிறார் சினிமா ஆய்வாளர் அறந்தை நாராயணன்:
 
 “கதையில் கதாநாயகன் ஒரு காட்சியில் மதுபானம் அருந்தியே ஆக வேண்டும். எம்.ஜி.ஆர். மது அருந்துவதா? அவரது இமேஜ் என்னவாகிறது? ஆனால் கதைக்கு மது குடித்தேயாக வேண்டும்.
 
 பத்து பதினைந்து அழகிய இளம்பெண்கள் பாடி நடனமாடியபடி மயக்க மருந்தை எம்.ஜி.ஆர். முகத்தில் ஸ்பிரே செய்கின்றனர். மயக்கமடைந்ததும் அவர் பிராந்தியைக் குடிக்கிறார். இதனாலும் தன் இமேஜ் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை எம்.ஜி.ஆருக்கு வரவில்லை.
 
 படத்தில், மயக்கம் தெளிந்ததும் எம்.ஜி.ஆருக்கு உள்ளிருந்து இன்னொரு எம்.ஜி.ஆர். (மனசாட்சி) புறப்படுகிறார். எதிரே போய் நின்றுகொண்டு கை நீட்டி “தைரியமாகச் சொல், நீ மனிதன் தானா? இல்லை. நீ ஒரு மிருகம்! இந்த மதுவில் விழும் நேரம் மனமும் நல்ல குணமும் உன் நினைவை விட்டு விலகும்” என்று பாடி மதுவை எதிர்த்து மனசாட்சி எம்.ஜி.ஆர். பிரச்சாரம் செய்கிறார்.”
 
 1975இல் வெளியான நினைத்ததை முடிப்பவன்  திரைப்படத்தில்கூட “ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து” எனும் பாடலுக்கு இடையில் கதாநாயகி, கதாநாயகனுக்கு மது கொடுப்பார். கதாநாயகனோ அதைக் குடிப்பதுபோல் பாவனை செய்து, கீழே கொட்டி விடுவார். ஆனால் குடித்தது போலவே நடிப்பார்.
 
 இப்படித்தான் எந்தக் காலத்திலும் மக்கள் மத்தியில் தன் இமேஜ் கெட்டுவிடக் கூடாது என்பதில் எம்.ஜி.ஆர். மிகுந்த கவனமுடன் இருந்தார்.
 
 அந்தக் கதாநாயகர் எம்.ஜி.ஆருக்கு நிஜ வாழ்க்கையிலும் மதுவில் துளிகூட நாட்டம் கிடையாது. ஒரு கட்டத்தில் மருந்தாகக் கூட மதுவை அருந்த மறுத்து விட்டாராம்.
 
 முந்தைய தி.மு.க. அரசு மதுக்கடைகளைத் திறந்தபோது அக்கட்சியின் பொருளாளர் எனும் அடிப்படையில் அதற்கு அவர் உடன்பட்டிருக்கிறார். மதுவுக்கு எதிரானப் பிரசாரத்தை எம்.ஜி.ஆர். முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்.
 
 1971 செப்டம்பர் 15 அன்று தன்னுடைய சத்யா ஸ்டுடியோவில் பணியாற்றும் ஊழியர்களை அண்ணா சமாதியின் முன்பு நிற்க வைத்து “நான் என் வாழ்வில் எப்பொழுதும் குடிப்பழக்கத்துக்கு ஆட்பட மாட்டேன். இதுவரை சூழ்நிலையின் காரணமாக அப்படி அந்தப் பழக்கத்துக்கு அடிமைப்பட்டிருப்பவர்களைத் திருத்தும் பணியில் ஈடுபடுவேன். என் முயற்சியில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட பகுதியினரைக் குடிப்பழக்கத்தில் இருந்து மாற்றினேன் என்ற பட்டியலை எங்களை வாழ வைத்த பேரறிஞர் அண்ணாவின் காலடியில் காணிக்கையாக்குவேன். என்தாய், என்சகோதரி, என் குடும்பம், என் நாடு, எல்லாப் பொதுமக்கள் அனைவரின் நல்வாழ்வுக்காக இன்றையதினம் உறுதியெடுத்துக் கொள்கிறேன்” என சத்தியம் செய்ய வைத்தார்.
 
 அ.தி.மு.க.வை தொடங்கியபோது அதன் கொள்கைகளில் ஒன்றாக, “முழுமையான மதுவிலக்கு என்பதுதான் அதிமுகவின் கொள்கை. இந்தியத் துணைக்கண்டம் முழுமையிலும் இறுதியாக மதுவிலக்கு கொண்டு வரவேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
 
- 
	
	
	
	
		மக்கள் திலகத்தின் ''ஒளி விளக்கு '' ஒரு சிறப்பு பதிவு .
 
 20.9.1968
 
 .
 
 1936 ல் ஜெமினியின் தயாரிப்பில் சதிலீலாவதி - தமிழ் படத்தின் மூலம் சிறு வேடங்களில் நடிக்க துவங்கி 10 ஆண்டுகளில் பல போராட்டங்களுக்கு பிறகு1947ல் தமிழ் சினிமாவில் -ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி 1968ல் 100 வது படமான ஜெமினியின் தயாரிப்பில் வந்த
 படம் ''ஒளிவிளக்கு ''
 
 பிரம்மாண்ட வண்ணப்படம்
 
 மக்கள் திலகத்தின் அசத்தலான அலங்கார உடைகள் -ஒப்பனைகள் - ஸ்டைல் காட்சிகள் .
 
 குடியின் தீமைகளை பாடல் காட்சிகளில் மூலம் சித்தரித்த மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு .
 
 திருடுவதால் ஏற்பாடும் தீமைகள் - சமூகத்தில் கிடைக்கும் கேட்ட பெயர் - யாருமே திருடனாக
 மாறக்கூடாது என்ற சமூக சீர்திருத்த கதையில் நடித்த புரட்சி நடிகர் .
 
 1968ல் அன்றைய அண்ணாவின் அரசின் சாதனைகளை ''நாங்க புதுசா '' என்ற பாடல் மூலம்
 கொள்கைகளை பரப்பியவர் எம்ஜிஆர் .
 
 மெல்லிசை மன்னரின் அட்டகாசமான டைட்டில் இசை - மக்கள் திலகத்தின் போஸ் சூப்பர் .
 
 ஆரம்ப காட்சியில் மனோகருடன் மோதும் சண்டை காட்சி -புதுமையான முறையில் இருந்தது .
 
 சொர்ணம் அவர்களின் வசனங்கள் - பல இடங்களில் நெஞ்சை தொடுவதாக இருந்தது .
 
 நான் கண்ட கனவில் நீ ..... பாடலில் ஜெயாவின் அறிமுகம்
 
 மாங்குடி கிராமத்திற்கு மக்கள் திலகம் செல்லும் காட்சி
 
 சோ வின் சந்திப்பு
 
 ஜமீன்தார் வீட்டில் சௌகார் ஜானகி அறிமுகம்
 
 அவருக்கு செய்யும் மக்கள் திலகத்தின் சேவை
 
 கள்ள பார்ட் நடராஜனை புரட்டி எடுத்த காட்சி
 
 சௌகாரை மீட்டு தன் வீட்டுக்கு அழைத்து வருதல்
 
 வலுக்கட்டாயமாக மக்கள் திலகத்தை குடிக்க வைக்கும் காட்சியும்- ஜெயாவின் நடனமும்
 மெல்லிசை மன்னரின் பிரமாதமான இசையும் அதை தொடர்ந்து ''தைரியமாக சொல் ''
 பாடலும் காண்போர் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு படம் விறுவிறுப்பாக செல்லும் .
 
 சௌகாரை கேவலமாக பேசிய ஜஸ்டினை மக்கள் திலகம் படிக்கட்டுகளில் ஏறி தூங்கி கொண்டிருந்த அவர எழுப்பி வீதிக்கு அழைத்து வந்து புரட்டி எடுக்கும் இடம் - சூப்பர் .
 
 கவர்ச்சி வில்லனிடம் ''வீரன் கோழையான வரலாறு ''என்று அசோகன் கூறும் பிளாஷ் பேக் காட்சி
 
 மொட்டை நடராஜனிடம் மக்கள் திலகம் மோதும் ஆவேசமான சண்டை
 
 ''ருக்குமணியே '' என்ற வித்தியாசமான பாடலில் அந்தரத்தில் தொங்கி கொண்டே மக்கள் திலகம்
 
 பாடல் காட்சி - புதுமை
 
 திருடன் என்று பெயர் வாங்கியதால் எங்குமேவேலை கிடைக்காமல் சோர்வுடன் திரும்பும் எம்ஜிஆரின் நடிப்பு - முக பாவம் அசத்தல் .
 
 தீயில் சிக்கிய குழந்தையை காப்பாற்றும் காட்சி - மரணப்படுக்கையில் இருந்த மக்கள் திலகத்தின் உயிரை காப்பாற்ற ஆண்டவனிடம் சர்வ மதத்தினரும் பிராத்தனை - சௌகாரின் பாடல் -உருக்கமான காட்சிகள் -
 
 மாம்பழ தோட்டம் -பாடல் சீர்காழி - ஈஸ்வரி குரலில் இனிமையான பாடல் .
 
 இறுதி காட்சிகளில் மக்கள் திலகம் - மனோகர் சண்டை
 
 மக்கள் திலகம் - அசோகன் சண்டை என்று 15 நிமிடங்கள் விறுவிறுப்பாக சென்ற காட்சிகள் என்று ''ஒளிவிளக்கு '' படம்
 ரசிகர்கள் - பொதுமக்களுக்கு விருந்து படைத்த படம் .
 
 மொத்தத்தில் எம்ஜிஆரின் ஒளிவிளக்கு -
 
 உலகம் உள்ளவரை எம்ஜிஆரின் ''அணையா விளக்கு ''
 
 
- 
	
	
	
	
- 
	
	
	
	
		பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியமைக்கு மிக்க நன்றி திரு வினோத் சார், மக்கள் திலகம் "ஒளி விளக்கு" இன்னிசை விளக்கங்கள் அருமை, மற்ற பதிவுகள் அனைத்தும் அற்புதம்...👍 👌 
 
- 
	
	
	
	
		தமிழ்ப் பட முதலாளிகள்
 அந்த வெற்றியை… அந்தக் காசை…
 தாங்களும் அடைய விரும்ப…
 எம்.ஜி.ஆரை முன் நிறுத்தி
 குலோபகாவலி
 அலிபாவும் 40 திருடர்களும்
 பாக்தாத் திருடன் என தயாரித்தார்கள்.
 எப்பவும் எங்கேயும் முதலாளிகளின் குறி தப்புவதே இல்லை.
 வெற்றியையும் காசையும் அள்ளினார்கள்.
 எம்.ஜி.ஆருக்கு கிட்டியது என்னவோ
 வெறும் புகழ் மட்டும்தான்.
 கூடுதலாக…
 ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் நெஞ்சத்தில்
 நிறந்தர இடம்!
 
 மேற்குறிப்பிட்ட நான்கு படங்கள் மட்டுமில்லாமல்
 மகாதேவி(1957) ‘தாயத்து தாயத்து’ப் பாடலிலும்
 சிரித்து வாழவேண்டும்(1974)
 ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ பாடலிலும்
 இஸ்லாமிய வேடமிட்டு அவர் மின்னவே செய்தார்!
 அந்தப் பாடல் காட்சிகளில்
 மக்கத்து சால்வை அணிந்து
 புகையும் ஊதுபத்தியை காதில் சொருகியபடி
 ஃபக்கீர்களின் ‘தப்’போடும்,
 அவர்களின் தாளம் பிசகாத கை லாவகத்தோடும்
 இசைத்தபடி
 சூஃபிகளை ஒத்த
 தத்துவார்த்தங்களையும் பேசி வலம் வர
 அவர் மின்னாமல் என்ன செய்வார்?
 
 
- 
	
	
	
	
		எம்.ஜி.ஆரின் பழைய படங்கள் பலவற்றை
 இந்த எம்.ஜி.ஆர். வாரத்தில்தான் அதிகமும் பார்த்தேன்.
 எம்.ஜி.ஆர். நடித்த,
 இஸ்லாமிய திரைக்கதை கொண்ட படங்களையும் சேர்த்து.
 
 *
 குலோபகாவலி/ அலிபாவும் 40 திருடர்களும்/
 பாக்தாத் திருடன்/ ராஜா தேசிங்கு என்கிற
 இந்த நான்கு படங்களிலும்
 இஸ்லாமியப் பெயர்களையும், அடையாளங்களையும் தாங்கி
 பாத்திரத்தோடு அவர் ஒன்றி
 நடித்திருப்பது கவனிக்கத் தக்கதாக இருக்கும்.
 அவர் தொப்பி அணியும் அழகே அலாதியாக இருக்கும்.
 இஸ்லாத்தை மாசுபடுத்தாத வகையில்
 கவனமும் செய்திருப்பார்..
 குறிப்பாய் ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது
 குலோபகாவலி படத்தின் துவக்கம்
 ஃபஜருக்கு (அதிகாலை நேரத் தொழுகை) பாங்கு சொல்வதாக இருக்கும்.
 தமிழில் இப்படி ஃபஜரின் பாங்கோசையோடு துவங்கும்
 இன்னொரு படம் பிற்காலத்தில் வந்திருக்கிறது. அது
 மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’
 மலையாளத்தில் கூட அப்படியோர் படம் பார்த்திருக்கிறேன்…
 பெயர்தான் நினைவில் இல்லை.
 
 சினிமாவில்,
 எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்த காலத்திலும்
 அதற்குப் பிறகான காலத்திலும் பல நடிகர்கள்
 இஸ்லாமிய வேடம் ஏற்றிருக்கிறார்கள் என்றாலும்
 எம்.ஜி.ஆர். அளவுக்கு இஸ்லாமியப் பாத்திரங்களோடு
 ஒன்றிப் போனார்கள் என சொல்ல முடியாது.
 
 எம்.ஜி.ஆர். நடித்த அந்த நான்கு படங்களில்
 ராஜா தேசிங்கு நீங்களாக
 மற்ற மூன்றும்
 வெற்றிப் பெற்ற ஆங்கில படங்களை தழுவியது.
 ராஜா தேசிங்கு…
 செஞ்சியை ஆண்ட ஓர் நவாபுவின்
 அவரது மறைமுக மனைவிகளின்….
 அவர்களது பிள்ளைகளின்…
 வரலாற்றுச் சான்றுகளை ஒட்டிய திரைக்கதை!
 
 Courtesy net
 
 
- 
	
	
	
	
		எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் தமிழக மக்களின் மனசாட்சியின் குரலாக ஒலிக்கிறது.
 
 எல்லா படங்களிலும் வசனம், காட்சி, பாடல்கள் மூலம் கருத்துகளை சொன்னவர் எம்ஜிஆர்.
 தவறு செய்தால் தட்டிக் கேட்பதும், குழந்தைகள், பெண்களை நேசிப்பதும் எம்ஜிஆரின் பார்முலா.இன்றுவரை ரஜினி, கமல், விஜய் வரை இந்த பார்முலாதான் நீடிக்கிறது. எவ்வளவு நாளைக்கு நல்லவனாவே இருப்பது போரடிக்குது என்று அஜித் பேசும் வசனமும் இதன் நீட்சிதான்.
 மனிதன் தவறுகளை செய்பவன்தான் .ஆனால் திருத்திக் கொள்ள வேண்டும் என்பது எம்ஜிஆரின் அவதானிப்பு. திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் வருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம் இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற எம்ஜிஆரின் பணம் படைத்தவன் படத்துக்காக வாலி எழுதிய பாடல் வரிகள் பசுமரத்தாணி போல சிறுவயதில் என் மனதுக்குள் பதிந்து விட்டன. இன்று வரை அதன் தடயம் அழியவே இல்லை.
 Courtesy  net
 
 
- 
	
	
	
	
		எம்ஜிஆர் என்றால் அவர் ஒரு ஹீரோ. அவர் நடித்த படங்களில் அவருக்கென்று ஒரு பாணி. அதாவது தனி ஸ்டைல். எம்ஜிஆர் ஸ்டைல்.அவரது காலத்தில் கதாநாயகனாக நடித்த எல்லோருமே  வயதானவர்கள்தான். எல்லோருமே கதாநாயகனாக, கல்லூரி மாணவனாக, இளைஞனாக நடித்தனர். அவர்களில் அவர்களை விட இவர், அதாவது எம்ஜிஆர் கொஞ்சம் மூத்தவர் அவ்வளவுதான். ஆனாலும் அவரை எதிர் முகாமில் வயதான நடிகர் என்று கிண்டலடித்தனர்.
 
 எனவே தனது தோற்றத்தை காட்டிக் கொள்வதில் தனி கவனம் செலுத்தினார். அதற்குத் தகுந்தாற் போல காட்சிகள் அமைக்கச் சொன்னார். உடைகள் அணிந்தார். மேக்கப் போடச் சொன்னார். பெரும்பாலும் அவரது பாடல்களில் அவர் அணியும் அரைக் கை சட்டை என்பது கைகளில் உள்ள முண்டாவைக் காட்டும். அவரது  எந்த தனிப் பாடலை பார்த்தாலும் அவர் கைகளை வீசிக் கொண்டும், உயர்த்தி கொண்டும் வேகமாக ஓடி வருவதை நாம் காணலாம். (அச்சம் என்பது மடமையடா – மன்னாதி மன்னன் ; உலகம் பிறந்தது எனக்காக – பாசம் ; புதிய வானம் புதிய பூமி – அன்பே வா ; அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் & ஏன் என்ற கேள்வி – ஆயிரத்தில் ஒருவன் ) அதே போல திடீரென்று ஏதேனும் ஒரு கனமான பொருளை தூக்குவார் அல்லது நகர்த்தி வைப்பார். துள்ளி குதிப்பார். அவரது காதல் பாடல்களும் இதற்கு தப்பாது ( காற்று வாங்கப் போனேன் – கலங்கரை விளக்கம் ; நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் –அன்பே வா )
 courtesy net