adhisaya raagam ( aboorva raagangal )
பெண்ணை வருணிக்கும் பல பாடல்களை கேட்கும் பொழுது, கவிஞர் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகையை மனதில் இருத்தி கொண்டு பாடலை எழுதி இருப்பாரோ என்று தோன்றும். அந்த வகை பாடல்களில் என்னை அதிசயிக்க வைத்த பாடல் இது.
காட்சி: நாயகனின் மனம் கவர்ந்தவள் யார் என்று நாயகி கேட்கிறாள். நாயகன் மனதில் நாயகிதான் இருக்கிறாள், ஆனால் அவனால் சொல்ல முடியவில்லை. ஏன் என்றால், அவள் மணமாகி, ஒரு பெண்ணுக்கு தாயாகி, ஆனால் கணவனை பிரிந்து இருப்பவள். கிடைத்த இந்த சந்தர்ப்பத்தில் அவன் அவனுடைய காதலை சொல்ல முற்படுகிறான்.
கதாநாயகி : ஸ்ரீவித்யா
இனி வரும் வரிகளை அந்த பாத்திரத்துடனும், நடிகை ஸ்ரீவித்யாவுடனும் பொருத்தி பாருங்கள் :P
அதிசய ராகம்..
ஆனந்த ராகம்....
அழகிய ராகம்....
அபூர்வ ராகம்..
அதிசய ராகம்..
ஆனந்த ராகம்....
அழகிய ராகம்....
அபூர்வ ராகம்...
அதிசய ராகம்
வசந்த காலத்தில் மழை தரும் மேகம்
அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம்
மோகம்...... மோகம்...
வசந்த காலத்தில் மழை தரும் மேகம்
அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம்
இசை எனும் அமுதினில் அவளொரு பாகம்
இந்திரலோகத்து சக்கரவாகம்
அதிசய ராகம்..
ஆனந்த ராகம்....
அழகிய ராகம்....
அபூர்வ ராகம்..
பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மை இலக்கணம் அவளது வேகம்
பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மை இலக்கணம் அவளது வேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம்
அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம்
அது என் யோகம்....
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவள் ஒரு பைரவி
அவள் ஒரு பைரவி.. அவள் ஒரு பைரவி..
அதிசய ராகம்..
ஆனந்த ராகம்....
அழகிய ராகம்....
அபூர்வ ராகம்..
வசந்த காலத்து மழை துளி போல் தூய்மையானவள்
"இந்திரலோகத்து சக்கரவாகம்" சக்கரவாகம் என்பது ஒரு தேவலோக பறவை.. அதன் கண்கள் மிக மிக அழகாக இருக்கும்.. ஸ்ரீவித்யாவின் கண்களுக்கு இதை விட என்ன சிறந்த உவமை இருக்க முடியும் :P
"ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி" சீதையை போன்று கற்பில் சிறந்தவள். ஆனால் அதே சமயம் "மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி" மாதவிக்கு கோவலன் மணிமேகலையை கொடுத்து விட்டு சென்று விட்டான், அந்த நிலையில் உள்ளவள் அவள்.
http://music.cooltoad.com/music/song.php?id=288028
Re: adhisaya raagam ( aboorva raagangal )
:thumbsup:
Quote:
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி" சீதையை போன்று கற்பில் சிறந்தவள். ஆனால் அதே சமயம் "மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி" மாதவிக்கு கோவலன் மணிமேகலையை கொடுத்து விட்டு சென்று விட்டான், அந்த நிலையில் உள்ளவள் அவள்.
"ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி"
"மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி"
ஒரு புறம், சீதையைப் போல், குடத்தில் இட்ட விளக்காய் அடக்கமாய் ஒளிரும் குடும்பத்து அழகு. இன்னொரு கோணத்தில், மாற்றோனை சுண்டியிழுக்கும் அலங்கார அழகு. ஆபத்தான அழகு.
என்றும் பொருள் கொள்ளலாம்.