டியர் ராகவேந்திரன் சார்,
என் மனமார்ந்த நன்றிகள்! தங்களின் சாணக்ய சந்திரகுப்தா பற்றிய நிழற் படங்கள் மற்றும் பட விவரப் பதிவுகள் அனைத்தும் அருமை. நன்றி.
அன்பு பம்மலார் சார்,
எங்கள் உளம் கனிந்த பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள். தவப் புதல்வனைப் பற்றிய ஆவணப் பதிவுகள், கிடைத்தற்கரிய நிழற் படங்கள், குறிப்பாக கண்ணதாசன்,c.v.r, பாலாஜி, முக்தா அவர்களுடன் நடிகர் திலகம் சர்வ சாதரணமாய் அமர்ந்துள்ள பிலிமாலயாவின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் கண்களிலேயே தங்கி நகர மறுக்கிறது, சூப்பர்.
டியர் சந்திரசேகரன் சார்,
அற்புதமான முக்கனிகளை எங்களுக்கு உங்கள் பிறந்த நாள் பரிசாக அளித்து விட்டீர்கள். தீஞ்சுவையாக இனித்தன. நடிகர் திலகத்தை நேரிலே சந்தித்த சந்தோஷத்தை அளித்தது அவர் தங்களுக்கு கையொப்பமிட்டு அளித்த அந்த அருமையான புகைப்படம். விசிட்டிங் கார்டும் அருமை. கிடைத்தற்கரிய பொக்கிஷம். (என்ன ஒரு ரசனை அவருக்கு!) நன்றி சார்!.
அன்பு பாலா சார்,
தாங்கள் அளித்துள்ள சுட்டியும், பதிவுகளும் மறக்க இயலாதவை. நன்றி!
மற்றும் அனைத்து நல் உள்ளங்களின் அருமைப் பதிவுகளுக்கும் என்னுடைய இதய பூர்வமான நன்றிகள்.
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.