Originally Posted by
Murali Srinivas
எல்லா வருடமும் டிசம்பர் மாதத்தில் டி டி.கே. ரோட்டில் அமைந்திருக்கும் ஏவிஎம் Sound Zone -ல் டிவிடி களின் sales நடைபெறும். இந்த வருடமும் அது போன்றே நடந்து வருகிறது. அனைத்து டிவிடி வெளியிட்டாளர்கள் தங்கள் படைப்புகளை அங்கே காட்சிபபடுத்தியிருக்கின்றனர். தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் உள்ள டிவிடிகள் கிடைப்பதாலும் திரைப்படம் தவிர கர்நாடக சங்கீத மற்றும் நாட்டியம் சம்பந்தப்பட்ட டிவிடிகளும் கிடைக்கின்றன என்பதாலும், பல்வேறு வயது வரம்பிலான குழந்தைகளுக்கான ஒலி/ஒளி இழைகளும் அங்கே இருக்கின்றன என்பதாலும் பொது மக்கள் பலரும் ஆர்வமாக வந்து வாங்கி செல்லும் காட்சியை காண நேர்ந்தது. புத்தகங்களும் தள்ளுபடியில் விற்கப்படுவதால் ஒரு added advantage கிடைக்கிறது.
வழக்கம் போல் நடிகர் திலகத்தின் படங்களுக்குதான் demand அதிகம். நான் அங்கே செலவழித்த இரண்டு மணி துளிகளில் நடிகர் திலகத்தின் பல்வேறு திரைப்படங்களை தேடி தேடி எடுத்தும், அங்கே இருக்கக்கூடிய விற்பனையாளர்களிடம் இல்லாத படங்களைப் பற்றி கேட்பதும் என பலரும் சிவாஜி படங்களை வேண்டும் என கேட்டு வாங்கி செல்வதை கண்கூடாய் காண முடிந்தது. ஒருவர் மணமகன் தேவை படம் வேண்டும் என்று பொறுமையாய் தேடி எடுத்து சென்றார். மற்றொரு பெண்மணியின் முகத்தில் வசந்த மாளிகை டிவிடியை பார்த்தவுடன் வந்த சந்தோஷத்தை பார்க்க வேண்டுமே! பலரும் மோட்டார் சுந்தரம் பிள்ளை டிவிடியை வாங்குவதை பார்க்க முடிந்தது. அது போன்றே உயர்ந்த மனிதன்! Moser baer டிவிடிகளில் பராசக்தி அந்த நாள் combination -க்கு நல்ல வரவேற்பு இருப்பதை காண முடிந்தது. கர்ணன் எப்போதும் போல் நம்பர் 1, closely followed by திருவிளையாடல்! தூக்கு தூக்கி, ஆலய மணி, ஆண்டவன் கட்டளை, பாசமலர் and of course புதிய பறவை என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
அன்புடன்