http://i47.tinypic.com/11cfjlu.jpg
Printable View
காலத்தை வென்று வாழ்கின்றவர்கள் சிரஞ்சீவிகள் என்று சொல்லப்படுகின்றார்கள். மார்க்கண்டேயர், அனுமான், அகத்தியர், அசுவத்தாமன் போன்றவர்கள் சிரஞ்சீவிகளாக இதிகாஷங்களில் கூறப்பட்டு உள்ளனர். ஆனால் நாம் இவர்களை கண்டிருக்க மாட்டோம்.
1969 இல் வெளியான சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்களில் ஒன்று அடிமைப் பெண். இதில் நடித்துக் கொண்டு இருந்த நாட்களில்தான் மக்கள் திலகம் எம். ஜி. ஆர் சுடப்பட்டார். ஆயினும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று அதிசயிக்கத் தக்க முறையில் உயிர் தப்பினார் எம். ஜி. ஆர். படத்தை நடித்து முடித்தார்.
உயிர் தப்பிப் பிழைத்து மரணத்தை வென்று மீண்ட எம். ஜி. ஆருக்காக என்றே ஒரு பாடல் எழுதப்பட்டு இப்படத்தில் வெளிவந்தது. பட்டி, தொட்டி எங்கும் முழங்கியது. காலத்தை வென்றவன் நீ என்று இப்பாடல் ஆரம்பிக்கின்றது. பூத உடல் மறைந்து விட்டாலும் புகழுடம்புடன் இன்று வரை சிரஞ்சீவியாகதான் மக்கள் மனங்களில் எம். ஜி. ஆர் நிறைந்து வாழ்கின்றார். எம். ஜி. ஆரின் நினைவு உள்ள வரை இப்பாடலும் நின்று நிலைத்து வாழும்.
இன்றைய இசை விருந்தில் இப்பாடலை காணொளியில் தருகின்றோம்.
பாடல் தலைப்பு காலத்தை வென்றவன் நீ திரைப்படம் அடிமைப்பெண்
கதாநாயகன் எம்.ஜி,ஆர் கதாநாயகி ஜெயலலிதா
பாடகர்கள் பாடகிகள் பி.சுசீலா/எஸ்.ஜானகி
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் பாடலாசிரியர்கள் அவினாசிமணி
இயக்குநர் கே.சங்கர் ராகம்
வெளியானஆண்டு 1969 தயாரிப்பு எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ்
காலத்தை வென்றவன் நீ
ஆரம்ப இசை பல்லவி
பெண்-1 : காலத்தை வென்றவன் நீ...காவியமானவன் நீ...
வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ...
காலத்தை வென்றவன் நீ...காவியமானவன் நீ...
வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ...
காலத்தை வென்றவன் நீ...காவியமானவன் நீ...
(இசை) சரணம் - 1
பெண்-1 : நடந்தால் அதிரும் ராஜநடை
நாற்புறம் தொடரும் உனதுப் படை
நடந்தால் அதிரும் ராஜநடை
நாற்புறம் தொடரும் உனதுப் படை போர்க்களத்தில்
நீ கணையாவாய்... பூவைக்கு ஏற்ற துணையாவாய்
பெண்-1 : காலத்தை வென்றவன் நீ...காவியமானவன் நீ...
பெண்-2 : அஹ்ஹஹ்ஹா...ஆ ஆ...ஓஓஓஓஓ...
அஹ்ஹஹ்ஹாஆ...ஆஆஆஆஆ
சரணம் - 2
பெண்-2 : அழகாக விடிந்திடும் பொழுதும் உனக்காக
வேங்கையின் மைந்தனும் எனக்காக
அழகாக விடிந்திடும் பொழுதும் உனக்காக
வேங்கையின் மைந்தனும் எனக்காக
ஓயாது உழைப்பதில் சூரியன் நீ...
ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ...
பெண்-2 : காலத்தை வென்றவன் நீ...காவியமானவன் நீ...
வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ...
காலத்தை வென்றவன் நீ...காவியமானவன் நீ...
பெண்-1 : அ அ ஆ ஆ...அ அ ஆ...அ அ ஆ...அ அ ஆ...அ ஆ அ ஆ அ ஆ
சரணம் - 3
பெண்-1 : பாவாய் பாவாய் பாரடியோ
பார்வையில் ஆயிரம் வேலடியோ
பெண்-2 : தங்கம் தங்கம் உன் உருவம் தங்கம் தங்கம் உன் உருவம்
தாங்காதினி மேல் என் பருவம்
பெண்-1 : வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன்
பெண்-2 : வெற்றித் திருமகன் நீ...
பெண்-1 : காலத்தை வென்றவன் நீ...
பெண்-2 : காவியமானவன் நீ...
(இசை) சரணம் - 4
பெண்-1 : சுடராக தோளில் புகழ்மலை தொடராக தோகையின்
நெஞ்சம் மலராக
சுடராக தோளில் புகழ்மலை தொடராக தோகையின்
நெஞ்சம் மலராக
பெண்-2 : உள்ளத்தில் இருக்கும் கனவாக
ஊருக்குத் தெரியா உறவாக
இருவர்: காலத்தை வென்றவன் நீ...காவியமானவன் நீ...
பெண்-2 : அஹ்ஹஹ்ஹ அஹ்ஹஹ்ஹஹ்ஹ அஹ்ஹஹ்ஹஹ்ஹ
அஹ்ஹஹ்ஹஹ்ஹ அஹ்ஹஹ்ஹஹ்ஹ அஹ்ஹஹ்ஹஹ்ஹ
அஹ்ஹஹ்ஹஹ்ஹ அஹ்ஹஹ்ஹஹ்ஹ அஹ்ஹஹ்ஹா
பெண்-1 : ஆ. ஆ. ஆ. ஆ. ஆ... ஆ... ஆ...
பெண்-2 : ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ...
பெண்-1 : லல்ல லால்ல லால்ல லால்ல லால்ல லால்ல
பெண்-2 : லல்லல்ல லா லா லா
பெண்-1 : ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ
பெண்-2 : ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ
பெண்-1 :&பெண்-2 : ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ (overlap)
ராஜ் வீடியோ நிறுவனத்தார் மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் திரைக்காவியத்தை VCD மற்றும் DVDகளில் மிகசிறப்பாக வெளியிட்டு உள்ளனர். அவற்றின் அட்டையை மிகச்சிறப்பாக வடிவமைத்துள்ளனர்.
http://i49.tinypic.com/5x39qw.jpg
http://i46.tinypic.com/zkkdog.jpg
சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி புதுப்பிப்பு பணி கடந்த 10 மாதமாக நடந்தது. சமாதியின் முகப்பில் இரட்டை இலை சின்னமும், பறக்கும் குதிரையும் அமைக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் நினைவு தினமான வரும் 24ம் தேதிக்குள் முடிக்கும்வகையில் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.முகப்பு பணிகள் நிறைவடைந்து, சாரம் பிரிக்கப்பட்டு வருகிறது. தரைத்தளங்கள் புதுப்பித்தல் பணிகளும் முடிவடையும் நிலைக்கு வந்துள்ளன. சமாதி அடுத்த வாரத்தில் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
.http://i45.tinypic.com/jtpgf9.jpg.
http://i45.tinypic.com/aadptx.jpg
Makkal thilagam mgr samadhi reopened today without any information. Jaya tv 7.30. Pm news.
http://i48.tinypic.com/5l5if8.jpg