முரளி சார்
பாச மலர் டிரைலராகட்டும், நீதி வெளியீட்டு நினைவுகளாகட்டும் தங்களுக்கு மட்டுமே உரித்தான பாணியில் மிகச் சிறப்பாக அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் ஸ்வாரஸ்யமாக சொல்லியிருக்கிறீர்கள். தொடருங்கள்.
Printable View
முரளி சார்
பாச மலர் டிரைலராகட்டும், நீதி வெளியீட்டு நினைவுகளாகட்டும் தங்களுக்கு மட்டுமே உரித்தான பாணியில் மிகச் சிறப்பாக அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் ஸ்வாரஸ்யமாக சொல்லியிருக்கிறீர்கள். தொடருங்கள்.
ஓரிரு மாதங்களுக்கு முன் என நினைவு. வாசு சார் கிட்டத்தட்ட 4000 பதிவுகளை நெருங்க சில பதிவுகளே இருப்பதைப் பாராட்டும் வகையில் நாம் குறிப்பிட்டு எழுதியிருந்தோம். ஆனால் தற்போது பார்த்தால் அவருடைய பதிவுகளின் எண்ணிக்கை கிட்டத் தட்ட 3600ஐக் காட்டுகிறது.
what happened?
திரு.ராகவேந்திரன் சார்,
தாங்கள் பதிவிட்ட நடிகர்திலகத்தின் அபூர்வப் படங்கள் அருமை. நன்றி.
திரு.முரளி சார்,
மகாலட்சுமி திரையரங்கில் நீதி திரைப்படம் வெளியாவதையொட்டி, தங்களின் 1971-72 ஆம் ஆண்டு நினைவுகளை அருமையாக எங்களுடன் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.
அன்புள்ள முரளி சார்,
இன்று சென்னை மகாலட்சுமி அரங்கில் நீதி வெளியாவதையொட்டி தங்களின் 'நீதி நினைவலைகள்' படு சூப்பர். 72 - 73 பொற்கால நினைவுகளை எத்தனை தடவை பகிர்ந்துகொண்டாலும் அலுக்காது, சலிக்காது. இடைவிடாத படப்பிடிப்பு, அயராத ஸ்தாபன காங்கிரஸ் கட்சிப்பணி, தன தலைமையில் இயங்கிய நடிகர் சங்கத்துக்கான உழைப்பு என பம்பரமாக சுழன்று வந்த நேரம்.
ஆனால் இப்போதோ..., அவர் சார்ந்திருந்த திரையுலகமும் அவரைப்போற்றுவதில்லை, ஓடி ஓடி உழைத்த கட்சியும் ஏறிட்டுப்பார்க்கவில்லை. அவர் கட்டிக்காத்த நடிகர்சங்கமும் கண்டுகொளவ்தில்லை. அவரை உயிராக மதிக்கும் ரசிகர்கள் இதயங்களில் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கிறார்.
சென்னையைப்பொருத்தவரை 'ராஜா'வின் 100வது நாள் விளம்பரத்தின் அருகிலேயே 'நீதி' பட விளம்பரம் வந்தபோதே அது ;துஷ்மன்' படத்தின் ரீமேக் என்ற செய்தி கசிந்து வரலாயிற்று. அதற்கேற்றாற்போல பொம்மையில் வந்த ஸ்டில்களில் (ராஜேஷ் கன்னா அணிந்திருந்தது போன்ற) கருநீல ஜீன்ஸ் மற்றும் தலையில் கர்சீப்கட்டு ஆகியவை ஊகத்தை உறுதி செய்தன. உண்மையில் பாலாஜி 'நீதி' படத்துக்கு குறித்திருந்த வெளியீட்டு நாள் 1973 ஜனவரி 26. (ஆனால் முன்கூட்டியே வெளியாக நேர்ந்த காரணத்தை ஏற்கனவே நீங்கள் மூன்றாண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறீர்கள்).
திரையுலகின் அப்போதைய பெரும் ஜாம்பவான்களான ஏ.வி.எம்.சரவணன், ஏ.பி.நாகராஜன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், ராமண்ணா, முக்தா சீனிவாசன், பாலாஜி உள்ளிட்டோர் ஒன்றுசேர்ந்து துவங்கி, என்னமோ பெரிதாக சாதிக்கப்போகிறது என்று எதிர்பார்க்கவைத்து கடைசியில் புஸ்வாணமாகிப்போன "மூவி மேக்கர்ஸ் கவுன்சில்" பற்றியும் மறக்காமல் குறிப்பிட்டுள்ளீர்கள். இவர்களின் அப்போதைய படங்களான அகத்தியர், ராஜா, சக்திலீலை, கண்ணா நலமா உள்ளிட்ட படங்களின் டைட்டிலில் 'இது ஒரு மூவிமேக்கர்ஸ் கவுன்ஸில் சித்திரம்' என்று போட்டுக்கொண்டததைதவிர வேறெதையும் சாதிக்கவில்லை. இதில் நடிகர்திலக முகாம் இயக்குனர்களான ஏ.சி.திருலோகசந்தர், பி.மாதவன், சி.வி.ராஜேந்திரன் போன்றவர்களும், எம்.ஜி.ஆர். முகாம் இயக்குனர்களான ப.நீலகண்டன், கே.சங்கர், எம்.ஏ.திருமுகம் போன்றவர்களும் இடம்பெறவில்லை. தயாரிப்பு மற்றும் இயக்கத்தை மேற்கொண்டவர்கள் மட்டுமே இடம்பெற்றனர். இறுதியில் அந்த அமைப்பைத் துவக்கியவர்களே வெகுசீக்கிரம் அதை மறந்தனர்.
'நீதி'யில் இன்னொரு சிறப்பு மூன்று காமெடி நட்சத்திரங்கள். ஆனால் மூவருக்கும் (சந்திரபாபு, மனோரமா, எம்.ஆர்.ஆர்.வாசு) ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாத தனித்தனி காமெடி ட்ராக்குகள். ('நாளை என்ன நடக்கப்போகுதுன்னு பார்' என்று சொல்லும் மனோகரிடம் 'ஏங்க, நாம இருக்க மாட்டோமா?' என்று வாசு கேட்கும் இடம் ஒரு சாம்பிள்) . வயலுக்கு தீ வைக்கும் இடம் சவாலே சமாளியை நினைவூட்டியது.
நடிப்பில் நம்ம தலைவர், ராஜேஷ் கன்னாவைத் தூக்கி சாப்பிட்டிருந்தார். ஆனால் மும்தாஜ் ரோலில் கலைச்செல்வி அவ்வளவாக சிறக்கவில்லை. அதிலும் பயாஸ்கோப் பாடல் காட்சியில் பந்துபோல துள்ளி துள்ளி ஆடிய மும்தாஜைப் பார்த்துவிட்டு தமிழில் மொக்கை ஜெயலலிதாவைப் பார்க்க சப்பென்றிருந்தது.
பாலாஜி சார் படங்களைப் பொருத்தவரைக்கும் 'எங்கிருந்தோ வந்தாள்' படம் தவிர வேறெந்த படத்துக்கும் 100 - வது நாளை விழாவாக கொண்டாடியதில்லை. ஆனால் அவரிடம் ஒரு நல்ல பழக்கம் தன படங்கள் 100 நாட்கள் ஓடிய தியேட்டர்களுக்கெல்லாம் 100 நாட்கள் ஓடியதற்கான 'ஷீல்டு' செய்து கொடுத்து விடுவார். அந்த வகையில் 'ராஜா' படத்துக்கு தேவி பாரடைஸ், ராக்ஸி அரங்குகளுக்கும், தீபம் படத்துக்கு சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி அரங்குகளுக்கும் வழங்கியது கூடப்பெரிய விஷயமில்லை. ஆனால் 'நீதி' படத்துக்கு தேவி பேரடைஸுக்கு '99-வது நாள்' ஷீல்டு செய்து கொடுத்திருந்தாரே அதுதான் சுவாரஸ்யம். அங்குதான் பாலாஜி நிற்கிறார்.
மகாலட்சுமியில் நீதி வெற்றிநடை போடட்டும், வாழ்த்துக்கள்...
டியர் கார்த்திக் சார்,
என்னைப் போன்றவர்களுக்கு (1968) தாங்கள் மற்றும் முரளி சார் போன்றவர்கள் கூறும் 1970களின் அனுபவங்கள் மிகவும் சுவையாகவும், இனிமையாகவும் உள்ளன. நன்றி.
Back with a Bang ...
என்ற ஆங்கில சொற்றொடருக்கு ஏற்ப...
நீதியின் அட்டகாசமான துவக்கம்...
வார நாள், குறிப்பாக 3வது வாரமான ஆடி வெள்ளி போன்ற காரணங்களையெல்லாம் தாண்டி பகல், மாலை, இரவு என மூன்று காட்சிகளிலும் சராசரியாக 40 சதவீதத்திற்கும் மேலாக அரங்கு நிறைவு கண்டு நீதி திரைப்படம் அருமையான துவக்கத்தைச் சந்தித்துள்ளது. தகவல் அனுப்பிய நண்பருக்கு உளமார்ந்த நன்றி. தொடரும் நாட்களில் இது மேலும் சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.
இன்றைக்கு சரியாக நாற்பது ஆண்டுகளுக்கு முன் மதுரை மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள நியூசினிமா அரங்கில் பட்டையை கிளப்பினார் பட்டாக்கத்தி பைரவன். நாற்பது ஆண்டுகளுக்கு பிறகும் பல முறை மதுரை மாநகரை கலக்கிய பின்னரும் இன்றும் அனல் பரத்துக்கிறார் பைரவன்.
இன்று முதல் மதுரை சென்ட்ரலில் வெளியாகியிருக்கும் எங்கள் தங்க ராஜா முதல் நாள் அன்றே has set the Box office on fire. ஆம், இன்றைய தினத்தில் மட்டுமே ரூபாய் பன்னிரெண்டாயிரத்தை [More than Rs 12,000/-] தாண்டியிருக்கிறது. அண்மை காலங்களில் மதுரை மாநகரில் ஒரு பழைய படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வசூல் இது. நன்றி சந்திரசேகர் அவர்களே!
சென்னையில் லாரி டிரைவர் ராஜா, மகாலட்சுமி அரங்கில் முதல் நாள் அன்றே வசூல் நீதியை நிலை நாட்டியதைப் பற்றி ராகவேந்தர் சார் குறிப்பிட்டிருக்கிறார். இன்னும் specific-ஆக சொல்ல வேண்டும் என்றால் இன்றைய தினம் மட்டுமே வசூல் ரூபாய் பதினைந்தாயிரத்தை தாண்டி விட்டது. இந்த நிகழ்வு ஒரு பெரிய நிகழ்வு என்பதை சொல்லவும் வேண்டுமோ!
அன்புடன்
நீதி பற்றிய பதிவை பாராட்டிய கோபால், ராகுல் ராம், ராகவேந்தர் சார், ராமஜெயம் சார், சந்திரசேகர் சார் மற்றும் அருமை நண்பர் கார்த்திக்,அலைபேசி மூலமாக பாராட்டு சொன்ன நமது சுவாமி மற்றும் மதுரை சந்திரசேகர், கோபால் மூலமாக சொன்ன Ganpat என்ற கணேஷ் ஆகிய அனைவருக்கும் மனங்கனிந்த நன்றி.
பாசமலர் ட்ரைலர் பதிவைப் பாராட்டிய அருமை தம்பி செந்தில், நண்பர் Gold Star சதீஷ் ஆகியோருக்கும் நன்றி.