Originally Posted by
Murali Srinivas
ஒரு தவறான புரிதலின் விளைவே இந்த எதிர் வினைகள் என்றே எனக்குப் படுகிறது. சொக்கலிங்கம் கர்ணன் படத்தையும் ஆயிரத்தில் ஒருவன் படத்தையும் restoration செய்த விதத்தைதான் ஒப்பீடு செய்திருக்கிறார் என்பதாகவே நான் புரிந்துக் கொள்கிறேன். இரண்டு படங்களையும் re-master செய்தபோது வந்த result-ஐ எடுத்துப் பார்த்தால் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு கிடைத்த technical success rate அதிகம் என்ற அர்த்தத்தில்தான் அந்த வாக்கியம் எழுதப்பட்டிருக்கிறதே தவிர இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் பற்றிய ஒப்பிடு அல்ல அது. இந்த கட்டுரையை எழுதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் டேனியல் திம்மையாவின் தெளிவற்ற வரிகளால் விளைந்த குழப்பம் இது. தமிழை தாய் மொழியாக கொள்ளாத(?) இந்த நிருபர் தமிழில் மட்டுமே பேசக்கூடிய சொக்கலிங்கத்தின் பேச்சை அதில் சொல்ல வந்த விஷயத்தை புரிந்துக் கொள்ளாமல் அப்படியே மொழி மாற்றம் செய்திருக்கிறார் என்றே எனக்கு படுகிறது.
Let us give the benefit of doubt to Chokkalingam in this regard!
அன்புடன்