http://i62.tinypic.com/11idf61.jpg
Printable View
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் முகராசி படத்தின் இன்று முதல் விள்ம்பரம் - வேலூர் மன்ற நோட்டீஸ் - ஆங்கிலத்தில் வெளியான விருதுநகர் எம்ஜிஆர் -ஜெயலலிதா மன்ற நோட்டீஸ் - முகராசி 7 வது வார விளம்பரம் - முகராசி 100 வது நாள் விளம்பரம் - முகராசி திரையிடப்பட்ட தென்னிந்திய திரை அரங்கு பெயர்களுடன் விளம்பரம் - ஒரிஜினல் பதிவுகளை வழங்கிய இனிய நண்பர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி .
இது வரை யாருமே பார்க்காத ஆவணம் . 49 ஆண்டுகளாக பாது காத்து வைத்து நமக்கு வழங்கிய திரு பாஸ்கரன் அவர்களுக்கும் நன்றி .
தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் தலைவர் நடித்த ‘முகராசி$ திரைப்படம் வெற்றிப்படம் 100 நாட்கள் ஓடிய திரைப்படம் என்பது நாமெல்லாம் அறிந்ததுதான். இருந்தாலும் அதன் 100 வது நாள் விளம்பரத்தை பதிவிடும்போது அது அதிகாரபூர்வமான ஆதாரமாக, ஆவணமாக அமைந்துவிடுகிறது. இதுபோன்ற ஆவணங்கள் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் தலைவர் நடித்த திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடியதை பறைசாற்றிக் கொண்டேயிருக்கும்.
இப்போதே, விருதுநகர் மற்ற பகுதிகளைக் காட்டிலும் பெரிய வளர்ச்சி பெற்றுவிடவில்லை. 1966ம் ஆண்டில் விருதுநகர் எப்படி இருந்திருக்கும்? அங்கே 3 வாரம் ஓடிய விவரம் இடம் பெற்றுள்ளது. (இது நோட்டீஸ் அடிக்கும்போது இருந்த நிலை. இன்னும் கூட ஓடியிருக்கலாம்) மேலும், அந்த சிறிய ஊரில் அப்போதே தலைவரின் ரசிகர்கள் ஆங்கிலத்தில் நோட்டீஸ் அடித்து அசத்தியுள்ளனர்.
அதோடு, தமிழகம் முழுவதும் 43 சென்டர்களில் படம் ரிலீஸ் செய்யப்பட்டதும் தெரிகிறது. பெங்களூர், மங்களூரிலும் விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பும் காணக்கிடைக்கிறது.
இதுவரை பார்த்திராத இந்த அரிய தகவல்களையும் , முகராசி திரைப்படத்தின் 100வது நாள் விளம்பரத்தையும் பதிவிட்டு ஆவணப்படுத்திய சகோதரர் திரு.வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கும் பொக்கிஷத்தை தந்து உதவிய திரு.பாஸ்கரன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
திரு.ராமமூர்த்தி சார், திரு.பாஸ்கரன் சார் ஆகியோருக்கு,
தாங்கள் வைத்துள்ள பொக்கிஷங்களை நேரம் கிடைக்கும்போது பதிவிடவும். இல்லாவிட்டால் இது குறித்து சிபிஐக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று அன்போடு எச்சரிக்கிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
மதுரை சென்ட்ரலில் பெரிய இடத்து பெண் இன்று முதல் வெளியிடப்படுகிறது என்ற தகவலை பதிவிட்ட திரு.திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.
இதுபற்றிய தகவலையும் படங்களையும் அனுப்பிய மதுரை எஸ்.குமார் அவர்களுக்கும் பதிவிட்ட திரு.லோகநாதன் அவர்களுக்கும் நன்றி. பெரிய இடத்துப் பெண் கலக்கல் கொண்டாட்டங்களையும் வசூல் விவரங்களையும் தெரியப்படுத்துமாறு திரு.குமார் அவர்களை அன்போடு கோருகிறேன்.
திரு.லோகநாதன் சார், தலைவர் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி குறித்த உங்கள் தொகுப்பு அற்புதம்.
மன்னாதி மன்னன் டி.வி. நிகழ்ச்சி பற்றிய கட்டுரைக்கு பாராட்டு தெரிவித்த திரு.சைலேஷ் பாசு அவர்கள், பெங்களூர் திரு. குமார் அவர்கள் ஆகியோருக்கு நன்றி.
திரு. ரவிச்சந்திரன் சார் , அன்பே வா பட ஸ்டில்லுக்கு எனது குறிப்பை பாராட்டியமைக்கு நன்றி. பாத்திரத்துக்கேற்ப நுணுக்கமான நடிப்பை வெளிப்படுத்துவதில் தலைவர் கில்லாடி. நான் பார்த்து ரசித்ததை சகோதரர்களான உங்களோடெல்லாம் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நேற்று, மன்னாதி மன்னன் நிகழ்ச்சி பற்றிய கட்டுரையில் தலைவரின் ஸ்டைல்கள் பற்றி கூறியிருந்தேன். அவை ஒவ்வொன்றைப் பற்றியுமே தனி கட்டுரை எழுதலாம். நேரம்தான் இடிக்கிறது. இருந்தாலும் முடிந்தபோதெல்லாம் நேரத்தை பதிலுக்கு இடித்து தொடர்வேன். நன்றி.
திரு.கலியபெருமாள் அவர்கள், திரு. ஜெய்சங்கர் அவர்கள், திரு.ரூப் குமார் அவர்கள் ஆகியோர் பங்களிக்க வேண்டும் என்று நேற்றைய தினம் திரு.குமார் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்ததை வழிமொழிகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
1960களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் முழு மூச்சுடன் சமூக படங்களில் நடித்த நேரத்தில் எம்ஜிஆரை பலபத்திரிகைகள் , வார இதழ்கள் கிண்டல் செய்தார்கள் . மேலும் எம்ஜிஆர் படங்களை அடித்தள மக்கள் மட்டும் தான்பார்க்கிறார்கள் என்று கூறினார்கள் . எம்ஜிஆர் படத்தை மேல்தட்டு மக்கள் பார்க்கமாட்டார்கள் என்றும் கூறினார்கள் .
1961 ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் தன்னுடைய திருடாதே படத்தின் மூலம் சமூக புரட்சி செய்து திரை உலகில் ஒரு மாபெரும் விழிப்புணர்ச்சியினை உருவாக்கினார் . அண்ணாவின் நல்லவன் வாழ்வான் மூலம் மாபெரும் அரசியல்புரட்சியினை தந்தார் .தேவரின் தாய் சொல்லை தட்டாதே - துப்பறியும் அதிகாரியாக தோன்றி ரசிகர்களின் மாபெரும்ஆதரவை பெற்றார் .
1962ல் தாயை காத்த தனயன் - குடும்பத்தலைவன் - பாசம் -விக்கிரமாதித்தன் -மாடப்புறா படங்கள் மூலம்எம்ஜிஆருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உருவானார்கள் .
1963ல் மக்கள் திலகம் 9 படங்களில் நடித்து மாபெரும் நடிகப் பேரரசராக , வசூல் மன்னனாக வலம் வந்ததை அன்றைய ஏடுகள் ,இதழ்கள் எம்ஜிஆரின் சாதனைகளை பாராட்டினார்கள் .
1964 - எம்ஜிஆரின் வெற்றி மேல் வெற்றி பவனி ....
தொடரும் .....