வாவ்...
அழகழகா பாட்டு புடிச்சு அதை விட அழகழகா எக்ஸ்ப்ளெயின் செய்யறிங்களே !
ganshu and power ! handsup... sorry.. thumbsup :noteeth:
வசந்த காலத்தில் இயற்கை தன் பூரண அழகுடன் இருக்கும். அது மலர்களின் பருவம்.. எங்கும் பூவாசத்துடன் தென்றல் வீசும்.. அப்போது மென்மையான மிருதங்கம் போன்ற இடியுடன் சாரல் மழையோ அல்லது திடீர் என்று படபடவென்று அடித்து ஓயும் இன்ஸ்டண்ட் மழையோ மட்டுமே பொழியும்.. அதைப் பொழியும் மேகம் கூட முழுவானத்தையும் மூடாமல் அங்கங்கே நீலத் திட்டுக்கள் தெரியும்படி நகரும்.. இயற்கையை ரசிக்கும் எவரும் அந்த மேகக் கூட்டங்களை ரசிக்காமல் இருக்க முடியாது. இங்கே இந்த நாயகியும் அது போல மனதிற்கு மகிழ்ச்சி தருகிறாளோ ?
இன்னொரு பாடலில் "சக்கரவாகமோ மழையை அருந்துமாம்" என்று எழுதியிருக்கிறார்கள்.. இங்கோ மழை தரும் மேகமே சக்ரவாகமாகத் தோன்றுகிறது கவிஞருக்கு.. ஒருவேளை அது already அருந்தியிருப்பதால்தான் பனி முடிந்து வரும் வசந்த காலத்தில் கூட மழை தருகிறதோ ?
மிதிலையின் மைதிலி...காவிரி மாதவி...
இந்த வரிகள் எழுப்பும் ஒரு கேள்வி !
ஏரின் கொழுமுனையில் கிடைத்ததால் சீதா என்றும், விதேக நாட்டு இளவரசியானதால் வைதேகி என்றும், ஜனகனின் மகள் என்பதால் ஜானகி என்றும், மிதிலைக்கு உரியவள் என்பதால் மைதிலி என்றும் அழைப்பார்கள். இன்னும் அவனிஜா, பூமிஜா என்றெல்லாம் பெயர்கள் இருந்தாலும், சீதாவின் பெய்ரோடு இணைந்து சீதாராமன் என்று ராமனுக்குப் பெயர் இருப்பது போல ராமனுக்காகவே வாழ்ந்த சீதைக்கு அந்த உறவை நினைவுபடுத்த பெயர் ஏதும் உள்ளதா ?
கவிஞர் இன்னொரு பாடலிலும் - ("நான் யார் யார் என்று சொல்லவில்லை from பட்டணத்தில் பூதம் ) "காவிரி சொல்லும் மாதவிப்பெணும்... பாவலர் பாடும் ஜானகிப் பெண்ணும்" என்று இவர்கள் இருவரையும் உவமைப் படுத்திப் பாடுகிறார். அவர் ஏன் கண்ணகியை மேற்கோள் காட்டவில்லை ?
ushaji..
ungaloda review sollungo. hayya.. niraiya ideas and explanations kidaikkudhu :P
