Madhu: I have those lines with me, but they are not in the video!
Here they are:
புதுவை நகரில் புரட்சிக் கவிஞன்
குயிலோசை உன் வாய் மொழியோ
கோவையில் விளையும் பருத்தியில் வளரும்
நூலிழைதான் உன் இடையழகோ
Printable View
Madhu: I have those lines with me, but they are not in the video!
Here they are:
புதுவை நகரில் புரட்சிக் கவிஞன்
குயிலோசை உன் வாய் மொழியோ
கோவையில் விளையும் பருத்தியில் வளரும்
நூலிழைதான் உன் இடையழகோ
எதனால் இந்த சென்சார் வேலை செஞ்சிருக்காங்க ? :think:
யாராவது விவரம் தெரிஞ்சவங்க சொன்னா நல்லா இருக்கும் !!
இந்த ஆடியோ ஃபைலில் அந்த வரிகள் இருக்கு.
மதுரையில் பறந்த
இதே மாதிரி இன்னொரு பாட்டு..ஆடியோல
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா
படத்தில எந்தன் பார்வையின் கேள்விக்குப் பதில் என்ன சொல்லடி ராதா..
அப்புறம் ஆடியோல ஒரு ஸ்டான்ஸாவையே வெட்டியிருப்பாங்க பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்..படத்தில அன்சென்சார்ட் வெர்ஷன் முன்ன பார்த்ததுல இருந்தது.. இப்போ லேட்டஸ்ட் டிவிடில இல்லை அந்த வரிகள் ..
சிக்கா...
படம் ரிலீஸ் ஆன சமயம் சில தியேட்டர்களில் ( கோடம்பாக்கம் லிபர்டி ) அந்த பாட்டையே மொத்தமாக வெட்டி விட்டாங்க தெரியுமா ?
ஏன்..ஐ திங்க் படம் நீளம்னு நினச்சுருப்பாங்கன்னு நினைக்கறேன்.. மதுரையிலும் சின்ன வயசுல பாத்தப்போ பாட்டு இல்லாத நினைவு தான்..
இயற்கையென்னும் இளைய கன்னிலயும் இது ஆடியோல கிடையாது..வீடியோல இருக்கும்..அது என்ன அந்திப் பட்டு பேசறது?
மலையை தழுவிச் செல்லும் நீரோட்டமே
கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே
மஞ்சள் வெய்யில் நேரம்தானே
மஞ்சம் ஒன்று போடலாமே
தரையை தடவிச் செல்லும் காற்றோட்டமே
காலை நனைத்துச் செல்லும் ஆற்றோட்டமே
இன்னும் கொஞ்சம் நேரம்தானே
அந்திப் பட்டுப் பேசலாமே
சிக்கா...
அந்தக் காலத்தில் படத்தில் மூன்று பாரா பாடினால் அனேகமாக ஆடியோவில் இரண்டு பாராக்கள்தான் இருக்கும்.
அதிலும் பல சமயங்களில் ரெண்டு தடவை பாடுவதை ஒரே தடவையாக மாற்றி இருப்பார்கள். அது சில சமயங்களில்
தாளத்தில் கூட தெரியும். ( உ-ம். "கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா" பாட்டில் "சந்திரனைத் தேடிச் சென்று குடியிருப்போமா"
என்று பாடி முடிக்கும் முன்னே "தமிழுக்கு சேதி சொல்லி" என்று ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் படத்தில் அதை நிதானமாக
ரெண்டு தடவை பாடுவதால் தாளம் சரியாக இருக்கும் )
"நான் நன்றி சொல்வேன்" பாடலில் ஆடியோ வெர்ஷனில் இருக்கும் பாரா வீடியோவில் இருக்காது. "என் கேள்விக்கென்ன பதில்"
பாடலில் பின்னணி இசையிலும் "ஹா அஹா ஒஹோ ஓஹோ" எனும் ஒலிகளும் படத்தில் வராது. இப்படி எத்தனை எத்தனையோ வேறுபாடுகள்.
ஏதாச்சும் காரணம் இருக்கும்.
நிற்க.. அந்தி பட்டு பேசலாமே என்றால் கொஞ்சம் பொழுது சாய்ந்து இருட்டட்டும். அப்புறமா.. பேசிக்கலாம்னு.. ஹி ஹி..
ஓஹ் விளக்கத்துக்கு நன்றி மதுண்ணா.. பொழுது சாய்ந்து இருட்டறது இருக்கட்டும் அந்த சிச்சுவேஷனோட பட்மாக்கிய விதமும் ஒரு அந்தி தான்..மஞ்சள் வெயில் தகதகக்கும் காஞ்சனையின் மேனியில் பட்டு!!!
காஞ்சனா என்றால் தங்கம் என்றுதானே அர்த்தம் சிக்கா ;)
ஆமாங்க..ஆனா காஞ்சனாவும் மஞ்சளும் சேர்ந்து வந்த நாவல் எது தெரியுமா.. கடல்புறா ஹி.ஹி..