Pammalar sir, good to know that Shanthi is stepping into Golden jubilee year. Great. The detailed informations are mind blowing.
Printable View
Pammalar sir, good to know that Shanthi is stepping into Golden jubilee year. Great. The detailed informations are mind blowing.
karthik sir, I can see only one reason, which is a regular phenomenon, i.e., NT himself is his competitor. This films must have been lifted from theatre just to give way for the release of NT's next film - Arivali ?Quote:
Originally Posted by mr_karthik
My Sincere thanks to Mr.Karthik & Mr.Rangan !
Regards,
Pammalar.
டியர் கார்த்திக் சார்,Quote:
Originally Posted by mr_karthik
சித்தூர் ராணி பத்மினி ஓட்டத்தில் சறுக்கியதற்கு, எமக்குத் தெரிந்த மூன்று காரணங்கள்:
1. திரு. ரங்கன் அவர்கள் கூறியது போல் நடிகர் திலகத்தின் திரைப்படமே, நடிகர் திலகத்தின் திரைப்படத்திற்கு போட்டியாக வந்தது தான் முழுமுதற் காரணம். ஏற்கனவே புக் செய்யப்பட்ட அறிவாளி திரைப்படத்திற்காக, சித்தூர் ராணி பத்மினியை எடுக்க வேண்டிய சூழ்நிலை. அறிவாளிக்கும் இதே நிலை தான். ஏற்கனவே காண்ட்ராக்ட் போடப்பட்ட இருவர் உள்ளம் திரைப்படத்திற்காக, அறிவாளியை எடுக்க வேண்டிய தர்மசங்கடம்.
2. சித்தூர் ராணி பத்மினி கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் தயாரிப்பில் இருந்தது. தயாரிப்பு தாமதங்கள், படத்தின் வெற்றிக்கு பங்கம் விளைவிக்கும் என்பது தெரிந்த ஒன்று. தாமதத்திற்கான காரணங்களில், முதன்மையானது, கதாநாயகி வைஜயந்திமாலாவின் கால்ஷீட் குளறுபடிகள் என்பது தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
3. பாலையா அவர்கள் சிறந்த குணச்சித்ர நடிகர் தான். ஆனாலும், இப்படத்தில் அவர் சோபிக்கவில்லை. இதில் அவருக்கு பவர்ஃபுல்லான அலாவுதீன் கில்ஜி வேடம். மிகுந்த கம்பீரத்துடன் செய்ய வேண்டிய ரோலை காட்டமான காமெடியாகச் செய்திருப்பார். படம் படுத்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்பது எமது தாழ்மையான கருத்து. ஏனென்றால், கில்ஜி சாம்ராஜ்யத்தின், உச்ச சக்கரவர்த்தி, அலாவுதீன் கில்ஜி. அவரைப் பாவம், ஒரு பஃபூன் போல ஆக்கியிருப்பார்கள்.
படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்டுகள் : நடிகர் திலகத்தின் கம்பீரமான நடிப்பும், ஜி. ராமநாதன் அவர்களின் நேர்த்தியான இசையும் !
அன்புடன்,
பம்மலார்.
நடிகர் திலகத்தின் உற்ற நண்பர் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் 23வது நினைவு நாளில் நமது இதய பூர்வமான அஞ்சலியை செலுத்திக் கொள்கிறோம்.
ராகவேந்திரன்
பம்மலார் சொன்னது போல் நன்றாக வந்திருக்க வேண்டிய, நடிகர் திலகத்தில் புகழ்க் கிரீடத்தில் மற்றொரு மாணிக்கக் கல்லாக வந்திருக்க வேண்டிய சித்தூர் ராணி பத்மினி திரைப்படம், சொதப்பல் ராணி பத்மினியாக மாறிவிட்டதற்கு காரணமானவர்களை அவர்களது மனசாட்சியே மன்னிக்காது. நடிகர் திலகமும் ஜி.ராமநாதன் அவர்களும் உழைத்த உழைப்பே இன்றும் அப்படத்தைப் பார்க்கும் அளவிற்கு வைத்திருக்கிறது. குறிப்பாக ஒஹோ நிலா ராணி பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் ஸ்டைல் மிகவும் அற்புதமாக இருக்கும். தற்போது இப்படம் ஒளிக் குறுந்தகடு அல்லது நெடுந்தகடு வடிவில் கிடைக்கிறது என்று நினைக்கிறேன். கிடைத்தால் பாருங்கள்.
மிகவும் அபூர்வமான பழைய படங்களைப்பற்றி, குறிப்பாக அதிகம் பேசப்படாத இன்றைய தலைமுறையினர் முற்றிலும் அறிந்திராத அதே சமயம் நடிகர் திலகத்தின் முழு முத்திரையைப் படைத்த படங்கள் பலவுண்டு. அவற்றை இங்கே அறிமுகப் படுத்தலாம் என்று எண்ணுகிறேன்.
ராகவேந்திரன்
பார் மகளே பார் - கதை பகுதி - 7
http://i949.photobucket.com/albums/a...Image074-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image075-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image076-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image079-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image080-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image081-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image082-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image083-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image084-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image085-2.jpg
சந்திராவை முத்துராமனால் மறக்க முடியவில்லை. சந்திராவை விரும்பியது ஒரு செல்வந்தரின் பெண் என்பதால் அல்ல. எனவே அவரின் அன்பு துளிகூட குறையவில்லை. தன் தாய் காந்தாவையாவது மணந்துகொள் எனறதையும் அவர் ஏற்கவில்லை. எம்.ஆர்.ராதாவை தன் நண்பராக ஏற்றுக்கொண்டு அவர் போகுமிடமெல்லாம் அழைத்து செல்கிறார்.
அவர் பணி காரணமாக ஒரு ஆசிரமத்திற்கு செல்ல அங்கு ஆசிரியராக சந்திராவை பார்த்து அதிற்ச்சி. ஆனால் தலைமை அதிகாரி அவரின் பெயர் சாரதா என்றும் அவர் சிறு வயதிலிருந்தே அங்கு தான் வளர்ந்தவர் என்றது ஒரே குழப்பம். முத்துராமனும் எம்.ஆர்.ராதாவும் அந்த தலைமைகாக்கும் மாதுவிடம் எல்லா நடந்தவைகளையும் சொல்ல இந்த அனைத்தினயும் சந்திரா மறைவிலிருந்து கேட்டு மிகவும் வருந்துகிறாள் . அதிலும் தான் தந்தை நிம்மதி இழந்து தவிப்பதையும் தன் தாய் நோய்வாய்பட்டு கிடைப்பதையும் தன் சகோதரி தன் வழியில் செல்வதையும் கேள்விப்பட்டு ஒரு முடிவுக்கு வருகிறார். அதாவது, தான் அருகிலிருந்தால் எப்போதாவது அவர்களை பார்க்கும் தவிப்பு ஏற்ப்பட்டுகோண்டே இருக்கும் எனவே அவர்களின் பார்வையிலிருந்தே முற்றிலுமாக சென்றுவிடமேன்று முடிவு செய்து மன்றாட, அவரை கல்கத்தாவிற்கு சென்று சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.
சிவலிங்கமோ முற்றிலும் நிம்மதி இழந்து அமைதியில்லாமல் இருக்கிறார். மகள் தன் அருகில்லில்லை. மனைவியோ படுத்த படுக்கை. தான் செய்த தவறுகளுக்காக வருந்துகிறார்.
எம்.ஆர்.ராதாவிற்கு ஒரு சந்தேகம் எப்போதும் இருந்த வருகிறது. அதாவது தான் பார்த்த பெண் சந்திராதான் என்று ஒரு சந்தேகம். அவர் சதாகாலமும் அந்த ஆசிரமத்தையே சுற்றித்திரிய அப்போது சந்திரா தலைமை அம்மையிடம் உண்மையினை உரைத்து தான் கல்கட்த்தா போகும் செய்தியினை கேட்டு உடனே ஓடோடி முதலில் முத்துராமனிடம் சொல்ல இருவரும் மிகுந்த உற்சாகத்துடன் சிவாஜியிடம் சென்று சொல்கின்றனர்.
செய்திகேட்ட சிவலிங்கம் உன்மத்தரைப்போல உற்சாகம் கொண்டு ஓட , ஒரு சாலையில் தற்செயலாக சந்திராவின் கார் ( கல்கத்தா செல்லும் வழியில் ) சிவாஜியை தாக்க, சிவாஜி அடிபட்டு விழ சந்திரா , அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்க , அவருக்கு ரத்தம் தேவைப்பட இரு பெண்களுமே அவருக்கு ரத்தம் அளிக்க , உடல் குணமாகி சிவாஜி, தான் செய்த தவறுகளுக்கும் , அந்தஸ்து என்ற மாயையிலுருந்து தான் வெளியே வந்துவிட்டேன் என்று ஒப்புக்கொண்டு , தன் அருமை பெண்கள் இருவரையும் ஒன்று சேர்ந்து பாசத்துடன் இணைத்துகொண்டு, வி.கே.ஆர்.ரிடன் மன்னிப்பு கேட்டுகொண்டு அவருடைய மகனான ராஜனுக்கு மணமுடிக்கிறார் காந்தாவை.
சந்திராவை முத்து கரம்பிடிக்க ...............சுபம்.
அடுத்து நாம் காண இருப்பது--- படத்தின் மற்ற சிறப்பு அம்சங்கள்
நடிகர் திலகம் பற்றி தந்தை பெரியார் :
(8.6.1969 வெளியான நடிகர் திலகத்தின் சிறப்பு மலரிலிருந்து)
"உலகிலேயே சிறந்த நடிகரான சிவாஜி கணேசன் தமிழ்நாட்டில் இருப்பது நாம் பெற்ற பாக்கியம். மேலும், சிவாஜி கணேசன் அவர்களிடத்தில் எனக்கு மெத்தவும் மதிப்புண்டு. அவர் நடிப்புக் கலையில் தேர்ச்சி பெற்று, நடிகர் திலகமாகி உச்ச வரிசையிலிருப்பவர். மற்றும் அவர் ஒரு தமிழருமாவார்."
இன்று (24.12.2009) ஈரோட்டுச் சிங்கம், வைக்கம் வீரர், தந்தை பெரியார் அவர்களது 36வது நினைவு தினம்.
அன்புடன்,
பம்மலார்.
டியர் பம்மலார் & ராகவேந்தர்....
பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சென்னை சாந்தி திரையரங்க நிர்வாகத்துக்கும், குறிப்பாக கடந்த 35 ஆண்டுகளாக திறம்பட நிர்வகித்து வரும் 'மாப்பிள்ளை' வேணுகோபால் அவர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். இந்த தருணத்தில் நடிகர்திலகம் இல்லையே என்பது மட்டுமல்லாது, சாந்தி திரையரங்கின் முதுகெலும்பாக நின்ற ஆருயிர் அண்ணன் வி.சி.சண்முகம் அவர்கள் இல்லையே என்ற ஆதங்கம் நமக்கு மேலிடுகிறது.
சாந்தி திரையரங்கில் வெளியாகி சாதனை புரிந்த படங்களின் பட்டியல் மட்டுமல்லாது, சாந்தியில்தான் வெளியாக வேண்டும் என்ற பிடிவாதத்தினால் சாதனைகளைத் தவறவிட்ட படங்களின் பட்டியலையும் வெளியிட்ட பம்மலார் அவர்களுக்கு நன்றிகள்.
'சித்தூர் ராணி பத்மினி' படத்தைப்பொறுத்தவரை, வில்லன் குறித்து பம்மலார் சொன்ன கருத்துக்கள் நூற்றுக்கு நூறு சரியானவை. வில்லன் ரோல் என்பது கதாநாயகனுக்கு நிகரான (ஆனால் பாத்திரப்படைப்பில் நேர்மாறான) ஒன்று. அது எப்போதும் எஃபெக்டிவாக இருக்க வேண்டும். இந்தக்குறை சம்பூர்ண ராமாயணத்திலும் தெரிந்தது. டி.கே.பகவதி ஒரு சொதப்பல் ராவணனாக வந்தார். இந்த ரோலில் பி.எஸ்.வீரப்பா நடித்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்ற எண்ணத்தோடேயே படம் பார்க்க முடிந்தது.
அதுபோலவே, 'வீரபாண்டிய கட்டபொம்மன்' மெகா வெற்றி பெற்றுவிட்டதால் நம்மில் பலருக்கு குறையாகத்தெரியாமல் இருக்கலாம். ஆனால், எஃபெக்டிவான 'எட்டப்பன்' ரோலில் காமெடியன் வி.கே.ராமசாமி அவர்களை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை என்பதே உண்மை. அந்த ரோலில் நம்பியார் அல்லது வீரப்பா நடித்திருக்க வேண்டும். அல்லது படம் முழுக்க ஊமையாகவே இருக்கும் ஊமைத்துரை ரோலில் யாரையாவது போட்டுவிட்டு, O.A.K.தேவரையாவது எட்டப்பனாக்கியிருக்க வேண்டும்.
'சித்தூர் ராணி பத்மினி' படம் வெற்றிவாய்ப்பை இழந்ததால் நாம் இன்னொரு அருமையான வரலாற்றுப்படத்தை இழந்துவிட்டோம் என்பது நம்மில் பலருக்குத் தெரியுமா?.
சரித்திரக்கதை மன்னன் 'சாண்டில்யன்' எழுதிய "ஜீவ பூமி" என்ற நாவல் திரைப்படமாக எடுக்க எல்லா ஏற்பாடுகளும் முடிந்து, 'ரதன் சந்தாவத் சலூம்பரா' என்ற ராஜபுத்திர வீரனாக நடிகர்திலகமும், மேவார் நாட்டு இளவரசியாக வைஜயந்திமாலாவும், மொகலாய மன்னர் இரண்டாம் அக்பர் சக்கரவர்த்தியாக நம்பியாரும் ஒப்பந்தம் ஆகி படப்பிடிப்பும் துவங்கியது. படத்தின் ஸ்டில்களும் 'பேசும் படம்' போன்ற பத்திரிகைகளில் வெளியாகின. கே.வி.மகாதேவன் இசையில் இரண்டு பாடல்களும் ஒலிப்பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'சித்தூர் ராணி பத்மினி' படம் வெற்றிவாய்ப்பை இழக்கவே, கிட்டத்தட்ட அதேமாதிரியான கதைக்களத்தைக்கொண்ட 'ஜீவபூமி' படம் எடுத்தவரையில் கைவிடப்பட்டது.
ஆனால், ஜீவபூமி நாவலைப்படித்தபோது, சாண்டில்யனின் நடையும் வர்ணனைகளும் நடிகர்திலகத்தின் ஸ்டைலான நடிப்பைக் கண்முன் கொண்டுவந்து ஏக்கப்பெருமூச்சை ஏற்படுத்தின. அந்த நாவல் இரண்டாம் பதிப்பு வெளியானபோது, படத்துக்காக எடுக்கப்பட்ட நடிகர்திலகம் - வைஜயந்திமாலா ஸ்டில்லே அட்டைப்படமாக இடம்பெற்றிருந்தது.