Yes, of course.Quote:
Originally Posted by karthik_rcs
Please click the link given below for more info.:
http://www.hindu.com/cp/2009/06/26/s...2650331600.htm
Regards,
Pammalar.
Printable View
Yes, of course.Quote:
Originally Posted by karthik_rcs
Please click the link given below for more info.:
http://www.hindu.com/cp/2009/06/26/s...2650331600.htm
Regards,
Pammalar.
All Roads Lead To Chennai Shanthi Cinemas!!!
பம்மலார் சார்,Quote:
Originally Posted by pammalar
சாந்தி தியேட்டர் 'புதிய பறவை' போட்டோ ஆல்பம் அருமையாக உள்ளது. நன்றிகள் பல.
உங்கள் தலையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் சுமையேற்ற ஆசை. அதாவது, புதிய பறவையின் அந்நாளைய செய்தித்தாள் விளம்பரங்களை மட்டும் இன்னும் கொஞ்சம் குளோசப்பில் தனித்தனி படங்களாக பார்க்க ஆவல். (கம்ப்யூட்டரில் சேகரித்துக்கொள்ளத்தான்). இதற்குமுன் அவற்றைப் பார்த்ததே இல்லை.
செய்வீர்கள் என்று நம்புகிறோம். கூடவே இன்றைய மாலை ஆரவாரங்களையும் காண ஆவல்.
.......and one more I remember by Dada Mirasi is, Gemini Ganesh double acted colour movie 'SANGAMAM' (1969).. with beautiful songs like 'thannandhaniyAga nAn vandahpOthu'.Quote:
Originally Posted by pammalar
'நடிகர்திலகம் சிவாஜி' விருது பெற்ற ராகவேந்தர் சார், கிரிஜா மற்றும் ஜெகன் ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள்.
அடுத்த முறை பம்மலார் சார் மற்றும் முரளி சார் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டும் என்று நண்பர் செந்தில் கோரிக்கை வைத்திருப்பதை நானும் மனப்பூர்வமாக வழிமொழிகிறேன்.
நடிகர் திலகம் நினைவு நாள் நிகழ்ச்சி - Part V
அடுத்து ராம்குமார் பேசினார். எடுத்தவுடன் ஜூலை 21 நினைவு நாளை ஒரு விழாவாக நடத்துவதை நிறுத்தி விட்டதாகவும் அதற்கு காரணம் தங்கள் தாயார் என்றும் கூறிய அவர் நடிகர் திலகம் மறையவில்லை அவர் நம்முடன் வாழ்கிறார் என்றே எங்க குடும்பத்தில் அனைவரும் கருதுகிறோம். அந்நிலையில் அவர் நினைவு நாள் என்று ஒன்றை சொல்லும் போது அவர் மறைந்து விட்டார் என்ற நினைவு ஏற்படுகிறது, அதனால் அது வேண்டாம் என்றும் நினைவு நாள் அன்று என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை அவரது பிறந்த நாளான அக்டோபர் 1 அன்று சேர்ந்து செய்யும்படி கமலா அம்மாள் சொன்னதாக தெரிவித்த ராம்குமார் அதனால் கடந்த இரண்டு வருடங்களாக விழாவாக நடத்தவில்லை என்றும் ஆனால் இந்த தடவை இன்பா வற்புறுத்தி கேட்ட போது இரண்டு காரணங்களுக்காக ஒப்புக் கொண்டதாக சொன்னார். ஒன்று இன்பா கடந்த இரண்டு வருடங்களாக வெளிநாட்டிற்கு படிக்க சென்றிருந்தார் ஆதலால் அவருக்கு இந்த விவரம் தெரியாது. இரண்டு அவர் எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டு குகநாதன் அவர்களையும் சிறப்பு அழைப்பாளராக முடிவு செய்து விட்டார் என்று அறிந்த போது அந்த காரணத்திற்காகவும் ஒத்துக் கொண்டதாக சொன்னார்.
குகநாதன் அப்பாவிற்கும் சித்தப்பாவிற்கும் மிகவும் பிடித்தமானவர், அப்பா நடித்த படங்களிலே பலருக்கும் பிடித்த படங்களில் ஒன்றான ராஜபார்ட் ரங்கதுரை படத்தை தயாரித்தவர் என்றும் ராம்குமார் வெளிபடுத்தினார். மேலும் அன்னை இல்லம் வீட்டை வாங்கி அதை மாற்றி அமைத்து செப்பனிட்டோம். அந்த வேலைகளுக்கு சித்தப்பா ஷண்முகத்திற்கு உதவியாக இருந்தவர் குகநாதனின் அண்ணன் என்பதையும் சொன்னார். சாதாரணமாக அப்பாவின் படங்கள் சாந்தியில் வெளியாகும் போது நான் காலையில் எனக்காகவும் நண்பர்களுக்காகவும் 10 டிக்கெட்கள் வாங்குவது வழக்கம். ஆனால் ராஜபார்ட் வெளியானது பைலட் தியேட்டரில். என்ன செய்வது என்று யோசித்த போது படம் வெளியான அன்று காலையில் குகநாதன் சார் வீட்டிற்கு வந்து என்னை கூட்டிக் கொண்டு போய் 10 டிக்கெட் வாங்கி கொடுத்தார்.
ராஜபார்ட் படத்தைப் பற்றி பேசும் போது வேறு ஒரு விஷயம் பற்றியும் குறிப்பிட்டார். நடிகர் திலகம் 9 வயதில் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அந்த வயது சிறுவர்களை முறைப்படுத்துவதற்காக தஞ்சையில் சுப்ரமணியன் என்று ஒருவர் இருந்தார். அவரை மணி வாத்தியார் என்று கூப்பிடுவார்கள். அவரும் அந்த பழைய நாடக சங்கத்தை சேர்ந்த சிலரும் படம் வெளியான அன்று மாலைக் காட்சி பார்த்து விட்டு நேராக அன்னை இல்லம் வந்ததையும், அதற்குள் தூங்கி விட்ட நடிகர் திலகம் எழுப்பட்டதையும் அவர்கள் நடிகர் திலகத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லாமல் தவித்ததையும் அதிலும் குறிப்பாக மணி வாத்தியார் நந்தனார் வேடத்தில் வரும் போது நடிகர் திலகம் பாடும் நாளை நான் போகாமல் இருப்பேனோ என்ற காட்சியை பற்றி சொல்லி கண் கலங்கியதையும் அதை பார்த்து நடிகர் திலகமும் உணர்ச்சி வசப்பட்டதையும் ராம்குமார் சொன்ன போது அவர் கண்ணிலும் கண்ணீர் துளிகள். உடனே அதிலிருந்து விடுபட்டு ராம்குமார் பேச தொடங்கினார். அவர் குகநாதன் பற்றி சொல்லும் போது மனதில் பட்டவற்றை வெளிப்படையாக பேசக் கூடியவர் குகநாதன். அதனாலே சினிமா துறையில் நிறைய பிரச்னைகளையும் கஷ்டங்களையும் சந்தித்தவர். ஆனாலும் தன் நிலையில் உறுதியாக இருப்பார். ஆகவே அப்பாவிற்கு மிகவும் பிடிக்கும். அவரும் எங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போல இருப்பார். அவர் இன்று இந்த விழாவிற்கு வந்தது எங்களுக்கெல்லாம் பெருமை என்றார் ராம்குமார். மேலும் விழாவிற்கு வந்திருந்த பல ரசிகர்களையும் பேர் சொல்லி குறிப்பிட்ட ராம்குமார் இனி வரும் வருடங்களில் ஜூலை 21 அன்று ஏழை மக்களுக்கு பயன்படும்படியான நற்பணிகளை குறிப்பாக படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவிகள் செய்ய சொல்லி தன் பேச்சை முடித்தார்.
இறுதியாக பேசினார் குகநாதன். தான் ஆவேசத்தோடு பேச வந்ததாகவும் ஆனால் ராம்குமார் பேசிய பேச்சு தன் மனதில் பழைய நினைவுகளை கிளறி விட்டு விட்டதாகவும் மனதில் தோன்றிய ஈரம் கண்களிலும் எட்டிப் பார்ப்பதாகவும் சொன்னார்.
உயர்ந்த மனிதன் படத்திற்கு தன் குருவான ஜாவர் சீதாராமனுக்கு உதவியாக பணி புரிந்ததையும் எங்க மாமா மற்றும் தங்கைக்காக படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் பணியாற்றி விட்டு இருந்த நேரத்தில் ஏ.வி.எம் அவர்கள் சுடரும் சூறாவளியும் படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்ததையும் சொல்லி விட்டு அந்த படம் சரியாக போகவில்லை என்பதையும் சொன்னார். படம் தோல்வியடைந்ததால் அடுத்த வாய்ப்புகள் ஒன்றும் வரவில்லை என்றும் அந்நிலையில் ஒரு நாள் பகல் பொழுதில் ஒரு வேலையாக ஏ.விஎம் ஸ்டுடியோவில் வைத்து தற்செயலாய் நடிகர் திலகத்தை பார்த்ததையும் தன்னை பார்த்ததும் மேக்-அப் ரூமிற்கு வரச் சொன்னதையும் உள்ளே சென்ற போது நடந்தவற்றை எல்லாம் கேட்டு தெரிந்துக் கொண்டு சின்ன படம்தான் பண்ணுவியா என்னை வச்சு படம் எடுக்க மாட்டியா என்று நடிகர் திலகம் கேட்ட போது தான் இன்ப அதிர்ச்சியில் பேச்சு வராமல் நின்றதையும் போய் சண்முகத்தை பாரு, நான் சொல்றேன் என்று சொன்னதையும் சொல்லும் போது இப்போதும் குகநாதனுக்கு அதே உணர்வுகள். அதன் காரணத்தையும் அவரே சொன்னார். எனக்கு அப்போது வயது குறைவு. அவரின் இரண்டு படங்களுக்கு மட்டுமே வசனம் எழுதியிருக்கிறேன். அவரோ பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை என்று ஹிட்டுக்கு மேல் ஹிட்டு கொடுத்து அவர் கால்ஷீட் கொடுக்க மாட்டாரா என்று பெரிய பட நிறுவனங்களெல்லாம் காத்து கிடக்கும் நேரத்தில் என்னைப் போல ஒருவனுக்கு கால்ஷீட் கொடுத்தார் என்றால் எப்பேர்பட்ட மனிதன் அவர். இன்று எந்த ஹீரோவாவது இப்படி செய்வார்களா என்று கேட்ட போது வாய்ப்பே இல்லை என்று பதில் மேடையிலிருந்தே சிவசக்தி பாண்டியனால் சொல்லப்பட்டது.
சண்முகம் அவர்களோ அட்வான்சே கூட வாங்காமல் கதை ரெடி ஆனவுடன் கால்ஷீட் தருவதாக உறுதி கூறியதையும் அதே போல் நடந்துக் கொண்டதையும் குறிப்பிட்டார் குகநாதன்.
ஒருவர் வக்கீல் ஒருவர் பாக்ஸர் என இரண்டு வேடங்களில் நடிகர் திலகம் நடிக்க தான் படம் இயக்க ஆரம்பித்ததையும் மூன்றாவது நாள் படப்பிடிப்பு முடிந்ததும் தன்னை தனியே அழைத்த நடிகர் திலகம் அப்போது தயாரிப்பில் இருந்த கெளரவம் படத்திலும் தான் வக்கீலாக நடிப்பதாகவும் அதிலும் சில காட்சிகள் இது போல இருப்பதையும் எடுத்து கூறினார் என்றும் ஆகவே அந்த கதை கைவிடப்பட்டு பாலமுருகன் கொண்டு வந்த ராஜபார்ட் ரங்கதுரை கதையை தயாரித்ததையும் சொன்னார்.
இந்த படம் எடுத்த முடித்த போதுதான் பெருந்தலைவரிடம் பழகும் வாய்ப்பு கிடைத்ததையும் திராவிட இயக்கத்தை சேர்ந்த தான் பெருந்தலைவரின் குண நலன்களைப் பற்றியும் அவரின் பண்புகளையும் அவர் செய்த நிர்வாக சாதனைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது என்று சொன்னார். படத்தை பார்க்க அழைத்த போது முதலில் தலைவர் தயங்கியதையும் சிவாஜி நடிக்கிறார் என்றவுடன் அவர் முகத்தில் வந்த மாறுதலையும் சிவாஜி பகத்சிங் வேடத்தில் நடிக்கிறார் என்றவுடன் வந்த மாறுதலையும் சிவாஜி திருப்பூர் குமரன் வேடத்தில் நடிக்கிறார் என்றவுடன் உடனே பார்க்க வருகிறேன் என்று சொன்னதையும் அவருக்காக ராஜலக்ஷ்மி தியேட்டரில் படம் திரையிடப்பட்டதையும் படம் பார்த்து விட்டு மிகவும் நன்றாக இருந்தது என்று பெருந்தலைவர் பாராட்டியதையும் குறிப்பிட்டார் குகநாதன்.
பிறகு பல வருடங்களுக்கு பிறகு முதல் குரல் எடுத்த போது இடையில் வைத்து நடிகர் திலகம் சிங்கப்பூர் சென்ற போது உடல் நலம் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக பல மாதங்கள் நடக்க கூட முடியாமல் உடல் நிலை மோசமாக இருந்த நிலையில் தன்னை அழைத்து படத்திற்கு நிறைய செலவு பண்ணி விட்டாய். எனக்கு எப்போது என்ன நேரும் என்று சொல்ல முடியாது. ஆகவே பக்கத்தில் உள்ள ஏதேனும் வீட்டில் படப்பிடிப்பு வைத்துக் கொள்ள சொன்னதையும் அருகாமையில் இருந்த விஜயகுமாரி வீட்டில் படப்பிடிப்பு வைத்துக் கொண்டதையும் மாடிப்படிகளில் ஏறுவதற்கு சேரில் வைத்து தூக்கி சென்றதையும் கண்கலங்க குறிப்பிட்டார் குகநாதன்.
தான் காதல் கல்யாணம் செய்ய முடிவெடுத்த போது தன்னை தனியே அழைத்து சென்று இந்த இந்த கஷ்டங்களெல்லாம் வரும் ஆகவே அதை எல்லாம் உன்னால் எதிர் கொள்ள முடியும் என்றால் கல்யாணம் செய்து கொள் என்று சொன்னதை குறிப்பிட்ட குகநாதன், நான் அவர் சொன்ன அத்தனை பிரச்சனைகளையும் சந்தித்தேன் என்றார்.
இதை சொல்லி விட்டு தான் திரையுலகில் இன்று இந்த நிலைமைக்கு தான் உயர்ந்திருப்பதற்கு இருவர் மட்டுமே காரணம் என்று சொன்ன குகநாதன் அதில் ஒருவர் பெயரை சொன்னால் உங்களுக்கு [ரசிகர்களை பார்த்து] பிடிக்காது.ஆனாலும் சொல்லாவிட்டால் நான் நன்றி மறந்தவனாவேன் என சொல்லி ஒருவர் எம்.ஜி.ஆர்., மற்றொருவர் நடிகர் திலகம் என்றார்.
திரைப்பட துறையை சேர்ந்தவர்களுக்கு அரசு வழங்கவிருக்கும் இடத்தில் ஒரு ஸ்டுடியோ கட்டப்பட போவதாகவும் அதில் ஒரு படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் திலகம் பெயர் வைக்கப்பட போவதையும் சொன்ன குகநாதன் அதன் அருகிலே நடிகர் திலகத்தின் அனைத்து படங்களின் தொகுப்பு அடங்கிய ஒரு ம்யூசியம் அமைக்கப்படும் என்றும் சொன்னார்.
இறுதியில் தான் பேச்சை நிறைவு செய்யும் விதமாக அடுத்த வருடம் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா அரசு சார்பாக நடைபெறும். அதற்கான முயற்சிகளை தன் சங்கம் எடுக்கும் என்று உறுதி கூறி விடை பெற்றார்.
தமிழ் தாய் வாழ்த்தோடு தொடங்கிய கூட்டம் நாட்டுப் பண்ணோடு நிறைவு பெற்றது.
அன்புடன்
Congrats Mr. Ragavendran for recieving Sivaji award. A very nice gesture for a true and humble fan
deleted
repeat
repeat