நன்றி திரு.ராதா அவர்களே
Printable View
நன்றி திரு.ராதா அவர்களே
Just browsing thro' the older pages of NT thread.In the part-1 one mr.nilavupriyan's post read like this:
one of my favourites is navarathiri.
nowadays all the actors are so much emphasising on changing the body.but shivaji is amazing in that movie.
1)the drunken and killer shivaji are fat
2)the maapillai is lean
3)the farmer character is round
4)the police offiecr look to be tight muscled
5)the doctor shivaji looks perfectly as an aged one
excellent......................................... .....
many of the hubbers who were there in that thread like nerd,shakthiprabha,s.balaji,stranger,m_23_bayarea are missing now.What a superb posts by all of them.I kindly request them all to come here again and share their valuable posts on NT.
திருஷ்டி சுற்றிப் போடுங்கள்.
http://i1087.photobucket.com/albums/..._001634850.jpg
அன்பு நெஞ்சங்களே!
மனதில் மகிழ்ச்சியும், களிப்பும், உவகையும், சந்தோஷமும் (எல்லாம் ஒன்று தானே என்கிறீர்களா?) பூரணமாய் நிறைகிறது. எதனால்?... ஆம்.திலகத்தின் புகழை திக்கெட்டும் பரப்பும் நம் திரி 'தூள்' கிளப்பிக் கொண்டிருப்பதனால். ஏழாவது பாகம். பக்கங்களோ முன்னூறைத் தாண்டி. பீடுநடை போட்டு பிரமாதப் படுத்திக் கொண்டிருக்கிறது நம் திரி.
பணிக்கு பேருந்தில் சென்றால் கூட அருகில் அமர்ந்துள்ள நண்பர் இறங்குமிடம் வந்து விட்டது என்று நினைவு படுத்தும் அளவிற்கு திரியை பற்றிய சிந்தனையே எப்போதும் எனக்கு. இரவில் உறக்கத்திலும் கூட திரியின் கனவுதான். திலகத்தைப் பற்றிய நினைவுதான்.
ஜெட் வேகம், ராக்கெட் வேகம் என்பார்களே அவர்கள் நம் திரியின் வேகத்தையும், வளர்ச்சியையும் கண்டால் என்ன சொல்வார்களோ?.
அற்புதமான ஆய்வுகள். அனுபவசாலிகளின் அலசல்கள். ஆதார பூர்வமான தகவல்கள். ஆச்சர்யமான உண்மைகள். அற்புதம்..அபாரம்...
ராப்போதும் இமை சோராமல் திரியின் பழுத்த அனுபவசாலியாய் பற்பல ஆய்வுகளையும் ,ஆவணங்களையும்,சுட்டிகளையும், நிழற் படங்களையும் நமக்களித்து விந்தைகள் பல புரியும் வித்தகர் ரசிக வேந்தர் திரு.ராகவேந்திரன் சார்.....
ஆவணச் செம்மல், ஆதாரக் குவியல்களை அள்ளித் தரும் நம் அன்பு பம்மலார் சார்...
காவிய நாயகனின் அருமைகளையும், பெருமைகளையும் காலம் தவறாமல் கவின்மிகு கட்டுரைகளில் வழங்கும் அன்பு கார்த்திக் சார் ...
பார் போற்றும் பாசமலரின் புகழை பாங்காய் எடுத்துரைக்கும் பார்த்தசாரதி சார்...
சரளமான நடையில் சரித்திரம் படைக்கும் அன்பு சகோதரி சாரதா ....
முத்து முத்தாய் வார்த்தைகளைக் கோர்த்து முடிசூடா மன்னனின் புகழை முத்தாய்ப்பாய் வழங்கும் முரளி சார் ...
சரித்திர நாயகனின் சாகசங்களை சத்தாய் நமக்கு சமர்ப்பணம் செய்யும் சதீஷ் சார்...
பாசமும் நேசமும் கலந்து பராசக்தியின் மைந்தன் புகழ் பாடும் பாலா சார்,
குவலயத்தோர் போற்றும் எங்கள் குலவிளக்கைக் கொண்டாடும் குமரேசன் சார்...
சந்தடி இல்லாமல் சாகச வித்தைகள் புரியும் சந்திர சேகரன் சார் ...
திரியில் பங்கு கொண்டு திகட்டாத தேனமுது படைக்கும் இன்னும் பல பாச நெஞ்சங்கள்... பண்பட்ட உள்ளங்கள்.
'திரி'த்தேரின் வடம் பிடிக்கும் 'வரலாற்று நாயகனின்' வஞ்சமிலா நல்இதயங்கள்
உள்ள வரை...
நமது திரி...
அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி... வற்றாத நீரூற்று..தங்கச் சுரங்கம்...வைரப் பெட்டகம்..சாதனைக்கோர் சான்று. உண்மைக்கோர் உரை கல்.
நமது திரி சரித்திரப் புகழ் பெறப் போவது திண்ணம். அது ஒன்றே நமது எண்ணம்.
எனவே தான் சொல்கிறேன்.
திருஷ்டி சுற்றிப் போடுங்கள் நமது திரிக்கு...
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
டியர் வாசுதேவன் சார்,
தங்களது பாராட்டுக்களுக்கு எனது அன்பான நன்றிகள் !
வீரத்திலகத்தின் "மருதநாட்டு வீரன்" - 'மாறுபட்ட வேடங்கள்' ஆல்பம் அட்டகாசம் !
ஈரேழு பதினான்கு லோகங்களிலும் முதல்தர நடிகரான நம் தவப்புதல்வனின் உயிர்ப்பான கம்பீர நடிப்புக்கு கட்டியம் கூறும் பல சிறந்த பாடல்களில், முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழும் 'உலகின் முதலிசை தமிழிசையே' பாடலின் வீடியோவை பதிவிட்டதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் ஸ்பெஷல் நன்றிகள் !
Dear kumareshanprabhu Sir, Thanks !
டியர் சந்திரசேகரன் சார், நன்றி !
டியர் ஜேயார் சார், மிக்க நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
டியர் mr_karthik,
பாராட்டுக்கு நன்றி !
"தவப்புதல்வன்" விகடன் விமர்சனம் குறித்த தங்களது வருத்தம் நியாயமானது. 1970களுக்குமுன் விகடன் திரைப்பட விமர்சனங்கள் பெருமளவுக்கு neutralஆக இருந்தன. எழுபதுகளின் தொடக்கத்திலிருந்தே அந்த நடுநிலையிலிருந்து தடம் புரண்டு பெருமளவுக்கு ஒருதலைப்பட்சமான படவிமர்சனங்கள் வரத்தொடங்கி விட்டன. இதை என்னைவிட தாங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். 1970களின் தொடக்கத்தில் வெளிவந்த விகடன் விமர்சனங்களின் பின்னணி பற்றி முன்னணி எழுத்தாளர் நமது முரளி சார் ஒரு சிறப்புப் பதிவு அளிப்பார். அதில் பல்வேறு தகவல்கள் தெரியவரும்.
"தவப்புதல்வன்" விமர்சனத்துக்கு, மக்கள் விகடனுக்கு கரி பூசினர் என்று குறிப்பிட்டிருந்தீர்கள், உண்மை. "வசந்த மாளிகை" விமர்சனத்துக்கு சர்வதேச அளவில் சரியான சாட்டையடியே கொடுத்தார்கள் என்பது தங்களுக்கு நினைவிருக்கும். இந்தியாவில் 200 நாட்களும், இலங்கையில் பொன்விழாவும் [நேரடியாக 41 வாரங்கள் / ஷிஃப்டிங்கில் 50 வாரங்களுக்கும் மேல்] கொண்டாடிய "வசந்த மாளிகை", எல்லா விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்ட விண்ணை முட்டும் வெற்றியையல்லவா பெற்றது.
மெல்லிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.வி. பற்றிய தங்களது ஆதங்கமும் நியாயமான ஒன்றே. இசையமைப்பாளர்கள் என்றால் இரண்டாம்பட்சமாக நினைக்கும் எண்ணம் 1930களிலிருந்தே இருந்திருக்கிறது. தமிழ்த்திரை இசைக்கு முதல் மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்த திரை இசைச் சக்கரவர்த்தி ஜி.ராமநாதன் அவர்கள், 30களிலும், 40களின் தொடக்கத்திலும் இசையமைத்த படங்களில் சிலவற்றில், சங்கீத டைரக்டர்(இசையமைப்பாளர்) என்ற முறையில், அவரது பெயரை Title Cardல் காண்பிக்காமல் இருட்டடிப்பு செய்திருக்கிறார்கள். இதை அவரே குறிப்பிட்டு வருத்தப்பட்டிருக்கிறாராம்.
"தவப்புதல்வன்" 50வது நாள் விளம்பரம் கிடைக்கப் பெற்றவுடன் அவசியம் பதிவிடுகிறன்.
அன்புடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
நமது திரிக்கு தாங்கள் திருஷ்டி சுற்றி போடச் சொன்னது மிகச் சரியே !
தங்களது பதிவு பிரமாதம் !
நமது திரியில் நடிகர் திலகத்தின் காவியங்கள் குறித்த பற்பல கண்ணோட்டங்கள், திறனாய்வுகள் இதுவரை பதிவிடப்பட்டிருக்கின்றன. தற்பொழுது தாங்கள் நமது திரி என்னும் காவியக்களஞ்சியத்தை-கலைப்பெட்டகத்தை-தகவல்சுரங்கத்தை-ஆவணக்காப்பகத்தை குறித்து திறனாய்வு-கண்ணோட்டம் அளித்து 'அசத்தோ அசத்து' என்று அசத்திவிட்டீர்கள் !
பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
கிருஷ்ணன் வந்தான்
[28.8.1987 - 28.8.2011] : வெள்ளிவிழா ஆண்டின் தொடக்கம்
அரிய நிழற்படம்
http://i1094.photobucket.com/albums/...EDC4456a-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
ஜல்லிக்கட்டு
[28.8.1987 - 28.8.2011] : வெள்ளிவிழா ஆண்டின் தொடக்கம்
பொக்கிஷப் புதையல்
காவியக்காட்சிகள் : பொம்மை : 16-31 ஆகஸ்ட் 1987
http://i1094.photobucket.com/albums/...EDC4459a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4460a-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1094.photobucket.com/albums/...EDC4457a-1.jpg
100வது நாள் விழா : பொம்மை : ஜனவரி 1988
http://i1094.photobucket.com/albums/...EDC4453a-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
வருகிறார்.....
http://i1094.photobucket.com/albums/...EDC4461a-1.jpg
அன்பு பம்மலார் சார்,
நன்றி சார்! கண்ணைக் கவரும் அந்த ஜல்லிக் கட்டு (பொம்மை இதழ்) காட்சி உண்மையிலயே தாங்கள் கூறியிருப்பது போல ஒரு காவியக் காட்சி தான். நமது அண்ணல், நடிப்பு வள்ளல் நிற்கும் ஸ்டைலைப் பாருங்கள். முதுமை ஒரு தடை அல்ல நம் முதல் தர நடிகருக்கு. அன்றும், இன்றும் ஸ்டைல் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர் அவர் ஒருவரே. இந்த போஸுக்காகவே ஆயிரம் முறை தங்களைப் பாராட்டலாம்.
"முதல்வரின் இந்த வாழ்த்து இளைய தலைமுறையினர் உற்சாகத்துடன் தொடர்ந்து வழி நடத்த உதவும்" என்ற ஜல்லிக் கட்டு 1௦௦-ஆவது நாள் விழாவில் நம் அருமைத் திலகம் அவர்கள் பேசியிருப்பது இளம் தலைமுறையினர் மீது அவர் கொண்ட அன்பையும், பாசத்தையும், அவர்கள் வளர்ச்சியின் மேல் அவருக்கிருந்த அக்கறையையும் பிரதிபலிக்கிறது. ஜல்லிக்கட்டு 100-ஆவது நாள் விழாப் பதிவுகள் மனதை விட்டு நீங்காப் பதிவுகள். ஜோராக இருந்தது,
எங்கள் ஆசை ராசாவைக் காணக் காத்திருக்கிறோம்.
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.