1947 - RAJAKUMARI STILL
http://i45.tinypic.com/21jorb9.jpg
Printable View
1947 - RAJAKUMARI STILL
http://i45.tinypic.com/21jorb9.jpg
நன்றி தினமணி கதிர் 09/12/2012
நாடோடி மன்னனும் எங்க வீட்டுப் பிள்ளையும்
"சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம். என்னதான் பணம் இருப்பினும் உழைப்பவர்கள், திறமை மிக்கவர்கள் இருப்பினும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி வேண்டாமா? படமெடுப்பவர்களுக்கு ஸ்டூடியோ வசதி மிகமிக முக்கியமானது. விஜயா வாகினி ஸ்டூடியோக்களின் அதிபர் திரு. நாகிரெட்டி அவர்கள் நாடோடி மன்னனுக்குத் தந்த உதவி பாராட்டுக்குரியதாகும். ஸ்டூடியோ அதிபர்களால் மட்டும்தான் ஒருவகைப் படங்களை எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை நாடோடி மன்னன் தோற்றுவிப்பதற்குக் காரணம், திரு. நாகிரெட்டி அவர்கள்தான். விசேஷ பலன் எதையும் எதிர்பாராமல், பெற்றுக் கொள்ளாமல் உதவி செய்து ஒத்துழைத்த திரு. நாகிரெட்டி அவர்களுக்கு "நாடோடி மன்னன்' தந்த வெற்றி மகத்தானது. "நாடோடி மன்னன்' பட அதிபர்களுக்கு மகிழ்ச்சியையும், துணிவையும் உருவாக்கியிருக்கிறது என்றால் அதற்குத் திரு. நாகிரெட்டி அவர்களின் ஒத்துழைப்பு காரணமாகும்.
அவருடைய ஸ்டூடியோவான வாகினியில் தயாரிக்கப்பட்ட நாடோடி மன்னனில் இருப்பதாக மக்களால் கூறப்படும் சிறப்புகட்கு, காட்சி சோடனை முதல் விளக்கு அமைப்புகள் வரை முழுவதற்குமாக திரு. நாகிரெட்டி அவர்கள் வெற்றிபெற்று விட்டார். நாடோடி மன்னனில் உள்ள அம்சங்களைப் பாராட்டும்போது அவற்றுள் பெரும்பாலானவைகட்குத் தரப்படும் பாராட்டு முழுவதையும் திரு. நாகிரெட்டி அவர்கள் தட்டிக் கொண்டு போய்விடுகிறார்கள்.
படமெடுக்கும் சொந்த ஸ்டூடியோக்காரர்கள், வேறு படமெடுக்கும் உரிமையாளர்களுக்கு தொழிலாளர்களுக்கு உதவி செய்ய மாட்டார்கள் என்ற வாதத்தைத் தூளாக்கி வெற்றிவாகை சூட்டிக் கொண்டுவிட்டார்...'
- "நாடோடி மன்னன்' வெற்றிவிழா மலரில் என் தந்தையாரைப் பற்றி எம்.ஜி.ஆர். இப்படி எழுதியிருந்தார்.
"நாடோடி மன்னன்' படத் தயாரிப்பு பணி பற்றி என் தந்தையார் என்ன சொல்கிறார்:
""எம்.ஜி.ஆர். உழைப்பால் வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் தன்னிடமிருந்த பொருளாதாரம் அனைத்தையும் "நாடோடி மன்னன்' திரைப்படத் தயாரிப்பில் இறக்கினார். "மர்மயோகி' வெற்றிப்படத்தின் இயக்குநர் கே. ராம்நாத் "நாடோடி மன்னன்' இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் 1956 -இல் அவர் அகால மரணமடைந்தார். "நாடோடி மன்னன்' பற்றி எம்.ஜி.ஆர். மனதில் என்ன நினைத்து வைத்திருந்தாரோ, அதைத் திரையில் கொண்டுவர இனி தன்னால் மட்டுமே முடியும் என்பதை நன்கு உணர்ந்து, தானே அதை இயக்க வேண்டும் என்று செயலில் இறங்கினார். இரட்டை வேடம், தயாரிப்பு, இயக்கம் என்று முழுமூச்சுடன் இரவு பகலாக உழைத்தார். இந்த மகத்தான தயாரிப்பைப் பற்றி எம்.ஜி.ஆரை அழைத்து நான் பேசியபோது,
""இது என் டைரக்ஷன். என் சினிமா வாழ்க்கையின் முப்பது வருஷ அனுபவத்தை இதில் காட்டணும். செலவைப்பற்றி கவலைப்படவில்லை. அமெரிக்க படங்களான டென் கமாண்ட் மெண்ட்ஸ், பென்ஹர் படங்களை அவர்கள் சக்திக்கு டெக்னிக்காக எடுத்த மாதிரி என் சக்திக்கு இதை எடுக்கப் போகிறேன். இது வெற்றியடைந்தால் நான் மன்னன். இல்லையானால் நாடோடி என்கிற முடிவில்தான் எடுக்கிறேன்'' என்றார் எம்ஜி.ஆர்.
என்னுடைய விஜயா வாகினி ஸ்டூடியோவில் அமைந்திருந்த பிரம்மாண்டமான அரங்கங்களில் படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளித்தேன். ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ். வாசனும் தானாகவே முன்வந்து, தன்னுடைய விலையுயர்ந்த படப்பிடிப்புக் கருவிகளை இரவல் தந்து, எம்.ஜி.ஆருக்கு உதவினார். இதற்கு முன் இந்தக் கருவிகள் ஜெமினி ஸ்டூடியோவை விட்டு வெளியே போனதேயில்லை. அதுமட்டுமல்ல, ஜெமினி, விஜயா போன்ற மிகப்பெரிய நிறுவனங்களால்தான் இந்த மாதிரி பிரம்மாண்டமான திரைப்படங்களைத் தயாரிக்க முடியும் என்றிருந்த காலகட்டம் அது.
"நாடோடி மன்னன்' படப்பிடிப்பு துவங்கியது.
வாகினி படப்பிடிப்பு நிலையத்தில் முதல்நாள் படப்பிடிப்பு. அழைப்பு இல்லாமல், ஆடம்பரம் இல்லாமல் நடந்தது.
"நாடோடி மன்னன்' துவக்கம் முதல் எம்.ஜி.ஆருக்கு சிரமங்கள். அப்படத்தை ஒரு வெற்றிப் படமாக்க ஒவ்வொரு துறையையும் கவனித்தார்.
"நாடோடி மன்னன்' படத்துக்காக எடுக்கப்பட்ட நெகடிவ்கள் மூன்று படம் எடுக்கக்கூடிய அளவு இருந்தது.
வாகினி ஸ்டூடியோவில் ஒரேசமயத்தில் ஏழு படப்பிடிப்பு தளங்களில் செட்கள் போடப்பட்டு படமாக்கப்பட்ட படம் "நாடோடி மன்னன்'. இதில் வெளிப்புறக் காட்சிகளுக்கான செட்களும் போடப்பட்டன. காலை ஏழு மணிக்கு படப்பிடிப்பு தொடங்கினால் அடுத்தநாள் இரவு இரண்டு மணி வரையில் தொடர்ந்து நடக்கும். இரவு இரண்டு மணிக்குப் பின்னர் காலை ஆறு மணிவரையில் ரீ ரிக்கார்டிங் நடைபெறும். அதிக நாள்கள் ரீ ரிக்கார்டிங் செய்யப்பட்ட படம் "நாடோடி மன்னன்'.
உச்சகட்ட காட்சியின்போதும் ரீ ரிக்கார்டிங்கின்போதும் நாற்பதுநாள் எம்.ஜி.ஆர். இரவு பகலாக படப்பிடிப்பு நிலையத்தில்தான் இருந்தார். ஒலிப்பதிவாளர் சாமிநாதனும் மேனனும் கூடவே இருந்தனர்.
அப்போது நிறைய காட்சிகளைப் படமாக்கிவிட்டார்கள். இப்போது எப்படி எடிட் பண்ணுவது என்று திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்ற செவிவழிச் செய்தி ஒன்று படவுலகில் பரவியிருந்தது. இதைக் கேள்விப்பட்டு ஒருநாள் சக்கரபாணியும் நானும் எம்.ஜி.ஆருடன் வாகினியில் பேசிக் கொண்டிருந்தபோது...
""நான் டெக்னீஷியன் என்ற முறையில் மகிழ்ச்சியடைகிறேன். இது புது முயற்சி துணிவுள்ள பணி'' என்ற எம்.ஜி.ஆர்., படத்தின் நீளத்தை குறைப்பதில் பல சிரமங்கள்... ஏற்கெனவே இரண்டு எடிட்டர்கள் இருந்தும் திருப்தியுடன் பணியை முடிக்க முடியாத நிலையைப் பற்றி கூற, எடிட்டிங் வேலைகளையும் செய்ய அப்போது வாகினியில் எடிட்டராக இருந்த ஜம்புவை நியமித்தேன். எம்.ஜி.ஆருக்கு உதவியாக ஜம்பு "நாடோடி மன்னன்' படத்தில் எடிட்டிங் வேலைகளை கவனித்தார்.
ஐந்து மணி நேர படம் மூன்றரை மணி நேரம் ஓடும் படமாக்கப்பட்டது...
"நாடோடி மன்னன்' வெற்றி, இமாலய வெற்றியாக அமைந்து எம்.ஜி.ஆருக்கு பெயர் கிடைத்தது.
மதுரையில் அப்போது நடைபெற்ற வெற்றி விழாவில் தலைமை தாங்கிப் பேசிய பேரறிஞர் அண்ணா கூறினார்:
""உலகத்தில் மிகவும் கஷ்டமான விஷயம் ஒரு புதுமையை மக்களுக்குப் புரியவைப்பது, அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வைப்பது.
நம் நாட்டைப் பொறுத்தவரை எதைச் சொல்லுகிறோம் என்பது பெரிதல்ல, யார் சொல்லுகிறார் என்பதே பெரியது.
இப்போது எம்.ஜி.ஆர். சொல்லியிருக்கிறார். அதை மக்களும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இல்லையானால் திரும்பத் திரும்ப வந்து பார்த்து, திரையிட்ட இருபது அரங்குகளிலும் படத்தை 200 நாள் ஓட விட்டிருப்பார்களா?
தங்கம் போன்ற மனம் படைத்தவர் என்றும் பிரகாசிக்கட்டும் என்று எம்.ஜி.ஆருக்கு தங்கவாளைத் தந்துள்ளனர்...'' என்றார்.
"நாடோடி மன்னன்' படம் உருவாக்கப்பட்டதில் பல புதுமைகள் நிகழ்ந்தாலும் வெற்றி விழாவிலும் பல தொடக்கங்களில் வரலாறு நிகழ்த்திய படம்.
அன்றைய தினம் படத்தோடு சம்பந்தப்பட்ட நடிகர்கள் கலைஞர்கள் கெüரவிக்கப்பட்டார்கள்.
வெற்றிவிழாவுக்குக் கேடயம் கொடுக்கும் வழக்கம். "நாடோடி மன்னன்' படம் வெற்றி விழாவிலிருந்து வந்ததுதான்.
விழா சென்னையிலும் நடந்தது. அதில் நடித்த சக நடிக நடிகையருக்கும் ஒவ்வொரு பவுன் மோதிரம் வழங்கினார் எம்.ஜி.ஆர்.
"நாடோடி மன்னன்' படத்தில் நடந்த பல புரட்சிகளில் ஒன்று அதில் நடித்தவர்களே ஒரு விழா எடுத்து எம்.ஜி.ஆருக்கு ஆள் உயர வெள்ளி சுழற்கோப்பையை கொடுத்தனர். விற்பன்னர்களுக்கு, தயாரிப்பாளர்தான் பரிசு கொடுப்பார். இப்படத்துக்காக விஜயா கார்டனில் ஒரு விழாவை வைத்து எம்.என். நம்பியார், பி.எஸ். வீரப்பா, பானுமதி, சரோஜாதேவி, ஜி. சகுந்தலா, ஜி.கே. ராமு, எஸ்.எம்.சுப்பையா நாயுடு ஆகிய ஏழு பேரும் அதைக் கொடுத்தனர்.
"நாடோடி மன்னன்' பட வெற்றியில் என்னைப் பற்றியும் எம்.ஜி.ஆர். குறிப்பிடுகிறார் என்றால் அது அந்தப் படக் குழுவினருக்குத்தான் சேரும். ஸ்டூடியோ முதலாளி என்ற வகையில் படத் தயாரிப்பாளருக்குத் தரவேண்டிய ஒத்துழைப்பைத்தான் தந்து என் கடமையைத்தான் செய்தேன்.
எங்க வீட்டுப் பிள்ளை
அந்த நாளில் விஜயா-வாகினி வேகமாக வளர்ந்து வரும்போது சக்கரபாணியார் ஒவ்வொரு அரங்குக்கும் போய், படப்பிடிப்பை பார்த்து, தேவைப்பட்டால் தகுந்த ஆலோசனைகளை வழங்குவார். அவரே ஓர் எழுத்தாளராக, திரைக் கதாசிரியராக இருந்ததால் அவர் போகும் அரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
விஜயா படங்களுக்கு ஒரு மாதிரி, வெளியார் படங்களுக்கு ஒரு மாதிரி என்ற பாகுபாடு இல்லாமல், விஜயா - வாகினியில் தயாராகும் அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரியான கண்ணோட்டம்தான் அப்போது அங்கே இருந்தது. அந்த அளவுக்கு வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இருந்தார்கள்.
எனது தந்தையார் எந்த ஒரு படப்பிடிப்பையும் பார்க்க மாட்டார். ஆனால் அந்தப் படத்திற்காக செட் போட ஆரம்பிக்கும்போதும், செட் போட்டு முடிந்த பிறகும் போய் அதைப் பார்ப்பார். ஏதாவது மாறுதல்கள் தேவைப்பட்டால் சொல்லி, செயல்படுத்துவார்.
இந்த மாதிரி என் தந்தையாரும், சக்கரபாணியாரும் அங்கே தயாராகும் படங்களுக்கு விஜயாவின் படங்களைப் போன்றே அனைத்து வேலைகளையும் உதவிகளையும் செய்து வந்ததைப் பார்த்த எம்.ஜி.ஆருக்கு, அவர்கள் மீது இன்னும் நம்பிக்கை ஏற்பட்டது. "நாடோடி மன்னன்' படத்திற்கு என் தந்தையார் தந்த ஒத்துழைப்பும் நாளடைவில் அவர்களை எம்.ஜி.ஆருக்கு நெருங்கிய நண்பர்களாக்கியது.
நாடோடி மன்னனுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் நடிக்க விஜயாவின் சார்பில் படத்தைத் தயாரிக்க என் தந்தையாரும், சக்கரபாணியாரும் விரும்பினர்.
ஆனால், அதற்கேற்ற கதை உடனே கிடைக்கவில்லை. ஐந்து வருடங்கள் காத்திருந்த பின்னர்தான் எம்.ஜி.ஆருக்கு ஏற்ற கதையை அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.
"ராமுடு பீமுடு' என்று என்.டி. ராமாராவ் தெலுங்கில் நடித்த அப்படத்தைத் தமிழில் விஜயா இண்டர்நேஷனல் சார்பில் தயாரித்தோம்.
எம்.ஜி.ஆர். எங்க வீட்டுப் பிள்ளையாக எப்படி ஆனார்?
என் தந்தையார் சொல்லக் கேட்போம்:
""எங்க வீட்டுப் பிள்ளை படத்தை எடுக்க நான் விரும்பியபோது, எம்.ஜி.ஆர். அரசியலில் ஈடுபட ஆயத்தங்கள் செய்துகொண்டிருந்தார்.
எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுக்க இருப்பதாக விநியோகஸ்தர்களிடம் சொன்னேன்.
அவர்களோ எம்.ஜி.ஆரை வைத்தா... வேண்டாம் என்றார்கள்.
இல்லை... இந்தப் படத்தில் கதை,கேரக்டர் அவருக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்று கூறினேன்.
இதையறிந்த எம்.ஜி.ஆரும் இப்படத்தின் பொறுப்பை என் கையில் விட்டுவிடுங்கள் என்று முன் வந்தார்.
நானும் அவர் சொன்னபடியே செய்தேன். அவரது சொந்தப் படம் மாதிரியே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.
"எங்க வீட்டுப் பிள்ளை'யை அவரது பிள்ளையாக ஊட்டி வளர்த்தார். அந்தப் படப்பிடிப்பு நாள்களில் நடந்த எத்தனையோ சம்பவங்கள்.
வாகினியில் எட்டாவது தளத்தில் "எங்க வீட்டுப் பிள்ளை' படப்பிடிப்பு நடைபெறுவதற்கு முன் தினம் மாலையில் இந்தி நடிகர் திலீப்குமாரும், நானும் விஜயா கார்டனில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
பொதுவாக படப்பிடிப்பு தளத்தின் உள்ளே, வெயில் சூடு தணிய வேண்டும் என்பதற்காக கோணிப் பைகளில் வைக்கோலை நிரப்பி கூரையின் உட்புறத்திலும் பக்கவாட்டிலும் தொங்க விடுவார்கள்.
ஒரு கடைவீதி மாதிரி அமைக்கப்பட்டு, அடுத்தநாள் அதில்தான் படப்பிடிப்பு... பக்கத்து தளத்தில் வேறு படத்தில் கலந்து கொள்ள வந்திருந்த துணை நடிகர்களில் ஒருவர் சிகரெட்டைப் பற்ற வைத்து சுவாரஸ்யமாக புகைக்க, அந்த சமயத்தில் அவரை உள்ளே ஷாட்டுக்கு அழைக்க, அவர் அந்த அவசரத்தில் சிகரெட்டை சரியாக அணைக்காமல் வீசியெறிந்தபடியே போக... "எங்க வீட்டுப் பிள்ளை' செட்டில் இருந்த வைக்கோல் பைகள் புகைந்து... கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துவிட்டன.
எம்.ஜி.ஆர். விரைந்து அரக்க பறக்க விஜயா கார்டனுக்கு வந்தார். ""ரெட்டியார்... எங்க வீட்டுப் பிள்ளை செட் தீப்பற்றி எரிகிறது. நாளைக்கு ஷுட்டிங் வைத்து இருக்கிறோம்... என்ன செய்வது?'' என்று கண்கலங்கினார்.
""வருத்தப்படாதீர்கள்... ஸ்டூடியோவில் ஆட்கள் இருக்கிறார்கள்... தீயை அணைத்து விடுவார்கள். அதுவும் தவிர நான் அங்கு வந்தால் நான் என்ன சொல்வேனோ... எதைச் செய்வேனோ என்ற குழப்பம்தான் ஏற்படும், தைரியமாக இருங்கள்'' என்றேன்.
ஆனால்... அவர் அமைதியாகவில்லை. உடனே வாகினிக்கு விரைந்தார்.
இரவு 10 மணி இருக்கும். எம்.ஜி.ஆர். திரும்பி வந்தார். ""நெருப்பை அணைத்தாகிவிட்டது... திட்டமிட்டபடி நாளைக்கு ஷூட்டிங் நடக்கும்'' என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
அப்போது அவர் முகத்தில் மின்னிய அந்த மகிழ்ச்சியை அதன்பிறகு எப்போதும் நான் பார்த்ததில்லை... இந்த நிகழ்ச்சியை எதற்காகச் சொல்கிறேன் என்றால், படப்பிடிப்பு தளத்திற்குள் நெருப்பு... அதனால் ஒரு வாரம் ஷுட்டிங் கேன்சல்... வேறு படத்தில் நடிக்கலாம் அல்லது ஓய்வு எடுக்கலாம் என்று நினைக்காமல், அவர் என் மகன்களுடன் சேர்ந்து எங்க வீட்டுப் பிள்ளையாக போராடி அந்தத் தீயை அணைத்து தொழிலில் தமக்குள்ள ஈடுபாட்டை உணர்த்தினார்.
"எங்க வீட்டுப் பிள்ளை' படத்தை மற்றவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, திட்டமிட்டதற்கு முன்னரே முடித்துக் கொடுத்தார். சுருக்கமாகச் சொன்னால், என் சுமையை அவர் தன் சுமையாக்கிக் கொண்டார்.
எம்.ஜி.ஆர். ஏற்கெனவே "நாடோடி மன்னன்' படத்தில் இரட்டை வேடத்தில் அருமையாக நடித்த போதிலும், அவர் சமூகப் படத்தில் மிகச் சிறப்பாக இரட்டை வேடங்களில் நடித்த படம் "எங்க வீட்டுப் பிள்ளை'. எம்.ஜி.ஆருடைய மகத்தான வெற்றிப்படமான "எங்க வீட்டுப் பிள்ளை' ஏழு திரையரங்குகளில் வெற்றி விழா கொண்டாடி வரலாறு படைத்தது.
எங்க வீட்டுப் பிள்ளையின் சென்னை நகர விநியோக உரிமையை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் வாங்கி இருந்தது. படம் வெள்ளி விழாவைத் தாண்டி ஓடியதால், விநியோகஸ்தர்களுக்கு நிறைய லாபம் கிடைத்தது.
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் அதிபரான எம்.ஜி.ஆர். தனக்கு அதிக லாபம் வந்ததால் ஒரு தொகையை எங்களுக்கு வழங்க முடிவு செய்தார். விஜயா இண்டர்நேஷனல் பெயரில் ஒரு லட்ச ரூபாய்க்கான செக் அனுப்பி வைத்தார். அத்துடன், நான் பேசிய தொகைக்கு மேல் லாபம் வந்து கொண்டிருக்கிறது. எனவே இந்தத் தொகையை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தார்.
ஆனால், அந்தப் பணத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. "உங்கள் நல்ல உள்ளத்தை பாராட்டுகிறோம். எனினும் இந்தப் பணத்தை நாங்கள் ஏற்பதற்கு இல்லை. இந்தப் பணத்தை உங்கள் விருப்பப்படி தர்ம காரியத்திற்கு பயன்படுத்துங்கள்' என்ற கடிதத்துடன் செக்கை திருப்பி அனுப்பிவிட்டோம்.
வாழ்வில் எவ்வளவோ பேரைத் தூக்கிவிட்ட எம்.ஜி.ஆர். ஒரு சந்தர்ப்பத்தில் என்னைத் தோளில் சுமந்தார் என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும்.
"எங்க வீட்டுப் பிள்ளை' படம் எடுத்து முடித்த நேரம். தமிழகம் எங்கும் படம் வெளியிட்டாகி விட்டது. நாளுக்கு நாள் அதற்கு கூட்டம் அதிகரித்துக்கொண்டே வந்தது. எம்.ஜி.ஆருக்கு மிகவும் சந்தோஷம். மக்கள் படத்தை எப்படி ரசிக்கிறார்கள் என்பதை நேரில் பார்க்க அவர் ஆசைப்பட்டார். நானும் ஒப்புக் கொண்டேன். சென்னையில் "எங்க வீட்டுப் பிள்ளை' நடைபெற்ற ஒரு திரையரங்குக்கு அவருடன் நானும் சென்றேன்.
சென்ற இடத்தில் மக்கள் எம்.ஜி.ஆரைப் பார்த்துவிட்டார்கள். அவரைச் சூழ்ந்துவிட்டனர். கூட்டத்தில் நான் சிக்கிக் கொண்டேன். எம்.ஜி.ஆர். எப்படியோ கூட்டத்தை சமாளித்துக்கொண்டு தன் காரை நோக்கிப் போய்விட்டார். நானோ, மக்கள் வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டேன். எளிதாக, அந்த வெள்ளத்திலிருந்து மீண்டு வர என்னால் முடியவில்லை. காருக்கு அருகே சென்றதும் எம்.ஜி.ஆர். என்னைத் தேடிப் பார்த்தார். நான் அங்கு இல்லை .உடனே, அவர் மக்கள் வெள்ளத்தை விலக்கிக் கொண்டு என்னிடம் வந்தார். என்னை அலக்காகத் தூக்கி தன் தோளிலே வைத்தார். ஒரு ஹீரோ மாதிரியே தூக்கி என்னை காரில் வைத்துவிட்டு "விர்'ரென்று நடந்தார் தன் காரை நோக்கி.
வேறு காரில் என்னை அழைத்து வரச் சொல்லி இருக்கலாம். ஆனால் தன்னை நம்பி வந்தவரை, காரியம் முடிந்தவுடன் நடுவழியில் விட்டுச் செல்லாமல் அவரை எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என்பதே அவரது கொள்கை.
மக்கள் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட மகிழ்ச்சி உணர்வுடன் நான் இருந்தேன். ஆனால் எம்.ஜி.ஆரோ ஏதும் நடக்காததுபோல சர்வ சாதாரணமாக இருந்தார். இந்தப் பண்பு, தோழமை உணர்வுதான் அவரை தமிழகத்தின் உச்சாணிக் கொம்பில் உட்கார வைத்தது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சமாதி நினைவிடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. சுமார் ரூ.8 கோடி செலவில் இந்த நினைவிடம் முதல்வர் ஜெயலலிதாவால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
http://i50.tinypic.com/6j3txx.jpg
இதனிடையே இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், மெரினா கடற்கரைக்கு வந்திருந்த மக்கள் சமாதி திறக்கப்பட்டதை அறிந்து, திரண்டு வந்தனர். இதனால், இந்த நினைவிடத்தைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது.
10th dec 2012 - dailythandhi
http://i45.tinypic.com/343svbt.jpg
http://i45.tinypic.com/2s12153.jpg
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
http://i49.tinypic.com/mbqyba.jpg
http://i48.tinypic.com/2628rwh.jpg
Dear jai sir
excellent article about makkal thilagam mgr - nagireddy . Detailed information about nadodimannan news.
Thanks jai sir