http://i57.tinypic.com/6tcj68.jpg
Printable View
Courtesy- face book
வாத்தியார் பாடசாலையில் கல்வி மூன்றாம் வகுப்புவரையில் படித்திருந்தாலும், வாழ்க்கைப் பள்ளியில் நிறையவே படித்தவர். ஒருவரால் அவரைப் போல் உயர்ந்த நிலைக்கு வர முடியுமென்றால், இறந்த இத்தனை வருடங்களின்பின்னரும் மக்களின் மனதில் ஆட்சி செலுத்திக்கொண்டிருக்க முடியுமென்றால் அது ஒன்றும் சாதாரண விடயமல்ல.
வாத்தியாரின் செயற்பாடுகளிலுள்ள + கள் மற்றும் - களுடன் அவரை அணுகுவது என் வழக்கம். உதாரணமாக நடிப்பில் மிகுந்த ஆளுமையுடைய கமலகாசன் , சிவாஜி கணேசன் போன்றவர்கள் எவ்வளவு உருக்கமாக 'இரத்தத்தின் இரத்தமே' என்று அழைத்தாலும் அசையாத, மக்களை குண்டடிபட்டுச் சீரழிந்த குரலுடன் வாத்தியார் 'இரத்தத்தின் இரத்தமே' என்ற இரண்டு வார்த்தைகள் அசைத்துவிடுவதொன்றும் சாதாரணவிடயமல்ல.
நியூயார்க் மருத்துவ நிலையத்தில் இருந்துகொண்டு தேர்தலில் வெல்வதென்பதொன்றும் சாதாரண விடயமல்ல. அவரது சத்துணவுத்திட்டம், இறந்தபின் தன் சொத்துக்களை குருடர், செவிடர் நல்வாழ்வுக்காக ஒதுக்கிய பண்பு, ஈழத்தமிழர்கள் விடயத்தில் அவர் காட்டிய கரிசனை.. இது போன்ற பல விடயங்கள் முக்கியமானவை. அவரது திரைப்படங்களில் தொடர்ந்து வலியுறுத்தப்படும் வாழ்வின் முன்னேற்றத்திற்கான கருத்துகள் இவையெல்லாம் முக்கியமானவை.
1st Paragraph...and 3rd Paragraph are absolutely true ! I think it is something god given for Late Sri.MGR !! Not everybody is destined to achieve this !
2nd Paragraph - at the same time, as usual shows, how much "ஆளுமை" NT too has whenever any topic related to Late Sri. MGR is spoken by anybody across the world .
NT - Anybody can like him, Anybody can dislike him BUT NONE can ignore him ! - One more definition of "ஆளுமை"
RKS
'' எம்.ஜி.ஆர். ஆட்சி; கலைஞர் ஆட்சி; ஜெயலலிதா ஆட்சி; யாருடைய ஆட்சி பொற்கால ஆட்சி? மழுப்பாமல் பதில் சொல்லுங்கள்? ''
''இந்த மண்ணுக்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியது;
சுய மரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கியது;
இந்திக்கு இங்கே இடம் இல்லை என அகற்றியது;
எள் முனை அளவு ஊழல் குற்றச்சாட்டுக் கும் இடம் இன்றிப் பணி ஆற்றியது; எதிர்க் கட்சியினரை உயர்வாக மதித்து, ஜனநாய கத்தைப் போற்றியது...
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்; மேடைகளில், ஏடுகளில், பாமர மக்கள் மனங்களில், தமிழுக்கு மகுடம் சூட்டிய அண்ணா அவர்களின் ஆட்சிதான், தமிழரின் பொற்கால ஆட்சி என்பேன்.
பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு அரசின் ஏற்பு அளித்தது; தனக்கென்று எதையும் சேர்க்காதது, தியாகச் சுடர் காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தைக் கோடானுகோடிக் குடும்பங்களின் பிள்ளைகளுக்குச் சத்து உணவுத் திட்டமாக ஆக்கியது; தமிழ் ஈழ விடுதலைப் போருக்கு தளம் அமைத்துக் கொடுத்தது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆட்சியின் மாண்புகள் ஆகும். மற்ற இருவர் ஆட்சியைப் பற்றிய மதிப்பீட்டை, இப்போது நான் செய்ய விரும்பவில்லை. அதை விரிவாக விளக்க வேண்டும் ! "
- விகடன் மேடையில் வைகோ ( 27 - 12 - 2011 )
கடந்த 1966ல் எம்.ஜி.ஆர்.,
எழுதியது
என் வாழ்க்கையில், நான் அடைந்த
அனுபவம் ஒன்றை எனக்காகவும், என்னைச்
சார்ந்த நண்பர்களுக்காகவும்
எடுத்துக்கூற விரும்புகிறேன்.
பல ஆண்டுகளுக்கு முன்,
சென்னை நியூ எல்பின்ஸ்டன் தியேட்டர்,
அண்ணா சாலையில் இருந்தது.
அத்தியேட்டரில், "இரு சகோதரர்கள்'
என்ற படம் திரையிடப்பட்டது. அதில்
கதாநாயகனாக, "இந்திய மேடைப்
புலி' என்ற பட்டம் பெற்றிருந்த
கே.பி.கேசவன் நடித்திருந்தார்.
நாடக மேடையிலும், சினிமாவிலும்
நடித்து, மிகப் பெரும்
புகழ்பெற்றவர் அவர். அவரும், நானும்,
வேறு சிலரும், அந்த படத்தை காண
அன்று சென்றிருந்தோம்.
இடைவேளையின் போது, அவர்
வந்திருப்பதை அறிந்த மக்கள்,
அவரை பார்ப்பதற்காக எழுந்து, அவர்
பெயரைக் கூவி, கூச்சலிடத்
தொடங்கினர். அந்த படத்தில்
ஒன்றிற்கு மேற்பட்ட மிகச் சிறிய
வேடங்களில் நடித்திருந்த நான்,
இதைக் கண்டு திகைத்து, கே.பி.கே.,
அவர்களையே பார்த்துக்
கொண்டிருந்தேன்.
"இத்தனை ஆதரவு பெற்றவருக்கு அருகில்
நாம் உட்கார்ந்திருக் கிறோமே...'
என்ற பெருமை கூட
எனக்கு உண்டாயிற்று. படம்
முடிவதற்குள், வெளியே வந்து விட
வேண்டும் என்று, நாங்கள்
புறப்பட்டோம். அதற்குள் மக்கள்
வெளியே வந்து விட்டனர். நாங்கள்
மேலேயிருந்து படியிறங்கி வருவது கூட
கஷ்டமாகி விட்டது.
நான் மற்றவர்களை பிடித்து தள்ளி,
மக்களிடமிருந்து
கே.பி.கே.,வை விலக்கிச் சென்று,
காரில் ஏற்றி அனுப்பினேன்.
அன்று மக்களுக்கு என்னை யார்
என்றே தெரியாது.
இந்த சம்பவம் நடந்து, பல
ஆண்டுகளுக்கு பின்,
சென்னை நியூ குளோப், (முன்பிருந்த
அலங்கார்)
தியேட்டருக்கு கே.பி.கேசவனும்,
நானும் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்க
போனோம். அப்போது, நான் நடித்த,
"மர்மயோகி' படம் வெளிவந்து சில
மாதங்களே ஆகியிருந்தன.
இடைவேளையின் போது, நான்
வந்திருப்பதை அறிந்த மக்கள்,
எழுந்து கூச்சல் போட்டனர்.
எனக்கு அருகில், அதே கே.பி.கேசவன்
அமர்ந்திருந்தார். அவரை யார்
என்றே படம் பார்க்க வந்தவர்கள்
கவனிக்கவில்லை. படம்
முடிந்து வெளியே வந்தோம். மக்கள்
கூட்டம் என்னைச் சூழ்ந்தது. என்
பெயரையும், "மர்மயோகி' படத்தில்
எனக்காக சூட்டப்பட்ட, "கரிகாலன்'
என்ற பெயரையும் சொல்லி வாழ்த்தினர்.
மக்கள் கூட்டத்தின் நெரிசல்
அதிகமாகவே, கே.பி.கேசவன், அந்த
ரசிகர்களிடமிருந்து என்னைக்
காப்பாற்றி, டாக்சியில்,
(அப்போது எனக்கென்று சொந்தக்கார்
எதுவும் கிடையாது)
ஏற்றி அனுப்பி விட்டார்.
நான் புறப்படும் போது, அந்த மக்கள்
கூட்டத்தில் அவரும் ஒருவராக
நின்று கொண்டிருந்தார்.
அவரது நடிப்பு திறமை, எந்த
வகையிலும்
குறைந்து விடவில்லை என்பதோடு,
நன்கு நடிக்கும் ஆற்றலை அப்போது,
அவர் அதிகமாகவே பெற்றிருந்தார்
என்பதுதான் உண்மை.
மக்களால் புகழப் பெற்ற, "டைகர் ஆப்
இண்டியன் ஸ்டேஜ்' என கவர்னரால்
புகழப்பெற்ற, "இரு சகோதரர்கள்'
வெளியிடப்பட்ட ஆண்டில், "சிறந்த
நடிகர்' என்று தேர்ந்தெடுக்கப்பட்ட,
இதே கே.பி.கேசவன் அவர்கள்,
தங்களோடு இருக்கிறார் என்பதை,
பாவம், அந்த மக்களால்
அப்போது புரிந்து கொள்ள
இயலவில்லை.
என்னால் உச்சநிலையில் இருப்பதாக
நம்பப்பட்ட அதே கே.பி.கேசவன், நான்
உச்சநிலையில் இருப்பதாக கருதும்
வாய்ப்பை, அதே மக்கள்
அவருக்கு அனுபவ
முத்திரை ஆக்கினர். இதை நேரடியாக
நானே அனுபவித்த பின், இந்த
போலியான
உச்சநிலை என்பதை எப்படி பெற்றுக்
கொள்வது... நம்புவது?
கலைஞனுக்கு உச்சநிலை, தாழ்ந்த
நிலை என்பதெல்லாம், மக்களால்
தரப்படும் மயக்க நிலை;
அவ்வளவுதான்.
இதை நம்பி ஏமாந்து விடுவோமானால்,
நாம் மற்றவருக்கு பண்பு, பாசம்,
பகுத்தறிவு முதலியவற்றை தரும்
கடமை கலைஞனாக இயங்க முடியாது.
கலைஞனைப் பொறுத்தவரையில்,
அவனுக்கு வீழ்ச்சியே கிடையாது.
சூழ்நிலை உயர்த்தும், தாழ்த்தும்.
அது பிற மக்களின் மனதில் தோன்றும்
முடிவு!
ஆனால், கலைஞன் தன் உள்ளத்தை, எந்த
நேரத்திலும் பொறாமையின்
தாக்குதலுக்கு இரையாக்காமல்,
மனிதாபிமானத்தோடு கலைத்
தொழிலில் செயல்படுவதாக ஏற்றுக்
கொள்ளச் செய்தால், அந்த
உணர்வுக்கு தோல்வியே கிடையாது.
மற்றவர்கள் முன், அவன்
தோல்வியடைந்தவனாகத்
காட்சியளித்தாலும், கலைஞனுடைய
நல் உணர்வுள்ள மனதின் முன், அவன்
வெற்றி பெற்றவனாவான். —
courtesy net
வெற்றியின் வேந்தனாய் இப்பூஉலகில் மலர்ந்தார், தன்னை அறிந்தார் - தான் யார் என்பதை உணர்ந்தார், வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால், உலகத்தில் போராடலாம்,
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்.
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா.
தன்னை தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகர் இல்லையா.
பிறர் தேவை அறிந்து கொண்டுவாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா.
மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று - போற்றிப் புகழ வேண்டும்.
http://i58.tinypic.com/30vi1af.jpg
கோடிகளை மதிக்காதவர் மக்கள் திலகம் எம்ஜிஆர், கடைக்கோடி மனிதர்களின், கஷ்டங்களை உணர்ந்தவர்,அதனால்தான் கோடானகோடி ஏழைமக்களின் மனங்களில் வாழ்கிறார்.
http://i1170.photobucket.com/albums/...psb3aad10c.jpg
Vinod Sir thank you for uploading song book covers.