-
வாசு - இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று - தாயை புகழும் பாடல் என்பதால் மட்டும் அல்ல - பாடல் முழுவதும் ஒரு positive vibe ஏற்படும் - பாலாவின் குரலும் , ம .தி போன்றே வெகு சுறுசுறுப்பாக இருக்கும் - அந்த காலத்தில் 100க்கு 40 மார்க் வாங்கினவன் கூட தன் அம்மாவிடம் இந்த பாடலைத்தான் பாடுவான் .. இந்த பாடல் மிகவும் பிரபலம் ஆகி தேர்தல் மேடைகளில் பின்பு முழங்க தொடங்கியது --
இப்பொழுதெல்லாம் எங்களால் பாலாவிற்கும் வாசுவிர்க்கும் அதிக வித்தியாசங்களை கண்டு பிடிக்க முடிவதில்லை - இருவரும் தடம் பதித்தவர்கள் - ஒருவர் பாடி கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தார் - இன்னொருவர் அலசி , ஆழமாகத் தோண்டி , பாடல்களை எடுத்துவந்து , தூசிகளை கலைந்து , மெருகு ஊட்டி இந்த திரியில் எல்லோரையும் மயக்கிக்கொண்டிருக்கிறார் ..
-
என் மதிப்பிற்குரிய '' நடமாடும் இசைபல்கலைகழக வேந்தர் '' திரு வாசுதேவன்
உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை . ஒரு தீவிர எம்ஜிஆர் ரசிகர் கூட இந்த அளவிற்கு தேடி வந்த மாப்பிள்ளை படத்தின் பாடல்களை அனுபவித்து இருப்பார்களா ? என்பது சந்தேகம் .
நடு நிலைமையோடு உணர்வு பூர்வமாக பாடல்களை மிக அழகாக பூமாலை தொடுக்கும் உங்களுக்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் சார்பாக அன்பு ''மலர் மாலை '' அணிவிக்கிறோம் .
தொடரட்டும் தங்கள் அருமையான பணி .
-
திரு ரவி
மாதா , பிதா , குரு , தெய்வம் வரிசையில் மாதாவின் மகிமைகள் எல்லாம் அருமை .
பிதாவின் மகிமைகளை மிக மகிழ்வுடன் ரசித்து படித்து கொண்டு வருகிறேன் .வாழ்த்துக்கள் .
-
கோபால்,
'பூத்திருக்கும் விழி எடுத்து' பூரித்து ரசித்தேன்.
வீடியோவில் ஏ.எம்.ராஜா பாடிய பாடல்கள் என்று தவறான தலைப்பு. என்னதான் சொல்வது?
அதே போல மாலதி ஒரு அபூர்வப் பூ. அதிகம் தென்பட்டதில்லை. எம்.எஸ்.மாலதி என்று பெயர். அழகுப் பதுமைதான். பக்கவாட்டில் லேசாக மணிமாலா சாயலும் உண்டு.
இவர் நடிகர் திலகத்துடன் ஒரு படத்தில் நடித்திருப்பார். கிட்டத்தட்ட முறைப்பெண் ரோல். சின்னையா சின்னையா என்று நடிகர் திலகத்தை சுற்றி வருவார். என்ன படம் என்று தெரிகிறதா?
-
குமார் சார்!
வேலைப் பளுவினால் மதுர கானங்கள் திரியில் தங்களை உடனே வரவேற்க முடியாமல் போய் விட்டது. இப்போது அன்புடன் வரவேற்கிறேன். வருக! வருக!
தாங்கள் பழைய பாடல் விரும்பி என்று கேள்விப்பட்டேன். தேவர் படங்களில் இருந்து தாங்கள் தேர்ந்தெடுத்து அளித்த பாடல்கள் பட்டியலையும் பார்த்தேன். அருமை.
தங்களிடம் பழைய பாடல்கள் பற்றிய ஆவணங்கள் இருந்தால் அவற்றை இங்கே பதித்து அனைவரையும் இன்புறச் செய்ய வேண்டுகிறேன்.
தங்கள் அன்பு பாராட்டிற்கு நன்றி. நீங்கள் பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிப் பாராட்ட வேண்டாம்.
இங்கு மது அண்ணா, கோபால், ராஜேஷ்ஜி, ராகவேந்திரன் சார், முரளி சார், ராஜ்ராஜ் சார், கிருஷ்ணா போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் இருக்கிறார்கள்.
குறிப்பாக மது அண்ணா. அவரின் தமிழ் சினிமா மற்றும் பாடல்கள் பற்றிய அறிவு இந்த நிமிடம் வரை என்னை வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. அற்புதமான விஷயங்களை தன்னகத்தே கொண்ட மாமனிதர் அவர். அவர் முன்னால் நாங்கள் ஒன்றுமே இல்லை.
மதுர கானத்தில் தங்கள் சேவையை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
நன்றி!
-
ரவி சார்,
நன்றி! தந்தையர் தொடருக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள். சாதனைகளை சர்வ சாதரணாமாக செய்வது போல் இருந்தாலும் இதன் பின்னால் உள்ள உங்களின் உழைப்பு பிரம்மிக்க வைக்கிறது.
//இவ்வளவு வருத்தமாக இருந்தாலும் ஏனோ தாடி மட்டும் வளரவே இல்லை//.
ரசித்து சிரித்தேன். தந்தையர் தொடரில் ஏராளமான நடிகர் திலகத்தின் பாடல்கள் உண்டு. அதனால் நீங்கள் இன்னும் மகிழ்வுடன் பதியலாம்.
-
ஆதிராம் சார்,
'நிலவே நீ சாட்சி' பாடலை ரசித்து 'லைக்' இட்டதற்கு மிக்க நன்றி! இந்த மாதிரிப் பாடல்கள் நீங்கள் மிகவும் விருப்பம் கொள்பவை என்று தெரியும். தங்கள் உயர் ரசனைக்கு என் மனமுவந்த பாராட்டுக்கள்.
-
ராகவேந்திரன் சார்,
'நான் பெற்ற செல்வம்' பாடல் அலசல் சுகம். ரசித்துப் படித்தேன். 'பண்பே அறியாப் பாவியர்கள்' என்று நிறுத்தி மீண்டும் பாடும்போது நடுவில் வரும் அந்த இடையிசை உள்ளத்தை உடைக்கும். உருக்கும். மிக்க நன்றி சார்.
இந்தப் பாடலில் நடிகர் திலகம் எப்படி வாயசைக்கிறார் என்று இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் ஒருமுறை பார்த்தாலே போதும். இப்போதெல்லாம் நட்சத்திரங்கள் எங்கே வாய் திறக்கிறார்கள்? டாஸ்மாக் பாரைத் தவிர.
-
டியர் ரவி சார்,
இலக்கியங்களிலும் திரைப்பாடல்களிலும், மேடைப்பேச்சுக்களிலும், பட்டிமன்றங்களிலும் அதிகம் பேசப்படாத, பல நேரங்களில் அறவே பேசப்படாத பரிதாபத்துக்குரிய தந்தைக்குலம் பற்றி தாங்கள் தொடர் துவங்கியிருப்பது மனதுக்கு இதமளிக்கிறது.
ஈன்று புறந்தருதல் தாயின் கடனாயினும் அவனை சான்றோனாக்குதல் தந்தையின் கடன் என்று புற்னானூறு பேசியதை மறந்து இன்று தந்தையர்கள் அறவே போற்றப்படுவதில்லை. பட்டிமன்றப் பேச்சாளிகளின் பார்வையில் தந்தை என்றாலே அவனை டாஸ்மாக் கடை வாசலில் நிற்கும் சில ஆண்களைக்கொண்டு மதிப்பிடும் அவல நிலைதான் உள்ளது. பெரும்பாலான தந்தையரின் தியாக வாழ்க்கை போற்றப்படுவதில்லை.
இந்நிலையில் நீங்கள் துவங்கியிருக்கும் தொடர் மகத்தான ஒன்று என்பதில் ஐயமில்லை.
தந்தையரின் புகழ் பாடும் தொடர் பெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
-
Cries and Whispers - Ingmar Bergman - Sweden - 1972
ஒரு சிறிய நாட்டில் வசித்து கொண்டு (ஸ்வீடன்)நம்மை விட மிக மிக குறைந்த ஆட்களே பேசும் மொழியில் ,குறைந்த முதலீட்டில்,hollwood ,U .S போல வியாபார நிர்பந்தங்களுக்கு பணியாமல் ,பிரத்யேக படங்களை,யாரோ நம் அந்தரங்கத்தில் ஊடுருவியதை போல பதட்டம் தரும்,சினிமா மட்டுமே கண்டுணரக்கூடிய வார்த்தைகளற்ற மௌன ரகசியத்தை படங்கள் மூலம் பேசியவர் பெர்க்மன். இன்றும் கூட யாராவது நல்ல படம் தந்தால் ,பெர்க்மன் feel வருகிறது (உ.ம் மெட்டி,தேவர் மகன்)என்று சொல்ல வைத்த இயக்குனர் உலக அளவில் பேர் பெற்ற பெர்க்மன்.
நாம் சாவு,நோய் ,இதையெல்லாம் வெறுக்க கற்று, பிரிக்க முடியாத அவைகளுடன் ரகசிய சிநேகம் கொள்ள மறுக்கிறோம். பெர்க்மன் படங்கள் நம்பிக்கை,ஏமாற்றம்,சூன்யம்,மன பிறழ்வுகள்,நோய்,சாவு இவற்றை ஒரு அதீத மனித உணர்ச்சி குவியலுடன் ,ஒரு புதிர் தன்மையோடு ,அழகான கலையுணர்ச்சியோடு ,மனதுக்கு அருகில் சேர்த்தவை.
இந்த படம் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு தனி பங்களாவில் ,சாவுடன் போராடும் ஆக்னெஸ் என்ற சகோதரியை பார்க்க வரும் மரியா ,கரீன் என்ற உடன் பிறப்புக்கள்,அன்னா என்ற மத நம்பிக்கையில் ஊறிய பணிப்பெண் இவர்களை சுற்றி படரும்.அமானுஷ்ய உணர்வு தரும் படம். அவள் இறந்து விடுவாளோ என்ற பயம் ஒரு புறம்,இறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மறுபுறம். நினைவுகள் பின்னோக்கி போகும் flashback . அவர்களின் சிறுவயது வாழ்க்கை,அது சார்ந்த நினைவலைகள்,எண்ண எழுச்சிகள்,, மரியாவின் டாக்டர் நண்பனுடனான காதல்,தோல்வியில் முடியும் திருமணம்,கரின் தன்னை தானே துன்புறுத்தி,தன பெண்ணுறுப்புக்களை சிதைத்து கொண்டு கணவனை விரட்டி விடும் மிரட்சியான காட்சிகள்,அக்னேஸ் தன்னுடைய அம்மாவின் மீது வைத்த அளவு கடந்த அன்பு என்று போகும்.இதில் தன குழந்தையை சிறு வயதில் இழந்த அன்னா மட்டுமே சற்று நிதானமாக பிரச்சினையை அணுகுவார்.இறந்து விடும் அக்னேஸ் திரும்பி வந்து அவர்களின் நேசத்தையும் ,கவனிப்பையும் யாசிப்பது என்று படம் முடியும்.
பெண்களின் மனோதத்துவம் அற்புதமாக கையாள பட்டிருக்கும்.முழுக்கவும் சிவப்பு விரிப்புகள் ,வெண்ணிற பொருட்கள் என்று வண்ணங்களின் வினோதம் மனோதத்துவ பின்னணியுடன் இணையும். காமெரா மேன் Nykvist மாயாஜாலம் புரிவார்.(ஆஸ்தான கேமரா மேன் ). பெர்க்மென் தன்னுடைய நடிக நடிகைகளை எல்லா படத்திலுமே திரும்ப திரும்ப பயன்படுத்துவார்.(Ullman -நாயகியாய் சுமார் எட்டு படங்களில்).
சினிமா,தொலைகாட்சி,நாடகம் என்று இயங்கிய பெர்க்மன் உணர்ச்சிகளின் குழந்தை. 4 மனைவி,4 துணைவி,கணக்கில்லா பிள்ளைகள் என்று. பின்னாட்களில் வரி ஏய்ப்புக்காக charge sheet பெற்று மன உளைச்சலில்,படங்களை துறந்து நரம்பு தளர்ச்சி நோய்க்கு ஆட்பட்டார்.(பின்னர் விடுவிக்க பட்டாலும்)
மகேந்திரனுடன் இப்படத்தை குறிப்பிட்டே, மெட்டியுடன் ஒப்பிட்டேன். (அவருக்கு DVD கொடுத்தேன்).இதை பேட்டியிலும் குறிப்பிட்டார்.(நடிகராக போகிறார் போல?)
இவரின் ரசிக்க பட வேண்டிய பிற படங்கள் Seventh Seal ,Wild Strawberries ,Persona .