தலைவருக்கு எதிராக என்னதான் புழுதிவாரி தூற்றினாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பதையே துக்ளக் இதழில் வெளியான இந்த கடிதங்கள் காட்டுகிறது. நன்றி திரு.லோகநாதன் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Printable View
இலங்கையில் ஆயிரத்தில் ஒருவன் வெற்றிகரமாக 18 நாட்கள் ஓடியதையும் தற்போது அடிமைப்பெண் படம் திரையிடப்பட்டிருப்பதையும் தெரிவித்த திரு.மணி அவர்களுக்கும் பதிவிட்ட திரு.வினோத் அவர்களுக்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
சகோதரர் திரு.சத்யா அவர்களுக்கு,
பணிகள் காரணமாக சில நாட்கள் பதிவுகளை பார்க்க முடிவதில்லை. நேரம் கிடைக்கும்போது பார்க்காமல் விட்ட பதிவுகளை பார்த்து படித்து விடுவேன். இன்று அப்படி பார்த்தபோது இந்த பதிவை நிதானமாக படித்தேன். அப்போதிருந்த அரசியல் சூழ்நிலைகள் நினைவில் வந்துபோயின.
பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார் 1976-ல் சோவியத் யூனியனுக்கு சென்றபோது நடந்த வழியனுப்பு விழாவில் புரட்சித் தலைவரும் தமிழக காங்கிரசின் தனிப்பெரும் தலைவராக இருந்த அய்யா மூப்பனாரும் சிரித்தபடி பேசும் புகைப்படத்தையும் செய்தியையும் பார்த்தேன்.
தலைவர் மறைந்த பிறகு 1989-ம் ஆண்டு நடந்த தேர்தலில், கழகம் இரண்டாக பிளவுபட்டு புரட்சித் தலைவரின் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலையும் முடக்கப்பட்ட நிலையில், அதிமுக ஜெ. அணிக்கு சேவல் சின்னமும் அதிமுக ஜா. அணிக்கு இரட்டை புறா சின்னமும் தேர்தல் கமிஷனால் ஒதுக்கப்பட்டன. கட்சி பிளவுபட்டு, தலைவரின் வெற்றிச் சின்னமும் முடக்கப்பட்ட நிலையில், ஆட்சி அமைக்கும் வாய்ப்பை அதிமுக இழந்தது.
கழகம் பிளவுபடாமல் இருந்திருந்தால் 1989-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும். அன்னை ஜானகி அம்மையார் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து கழகம் ஒன்றானது. இரட்டை இலை சின்னமும் திரும்பக் கிடைக்க அன்னை ஜானகி அம்மையார் உதவினார். அதனால், இரட்டை இலை சின்னமும் கழகத்துக்கு திரும்பக் கிடைத்தது.
சட்டப் பேரவை பொதுத் தேர்தலின் போது மதுரை கிழக்கு தொகுதிக்கும் மருங்காபுரி தொகுதிக்கும் தேர்தல் நடக்கவில்லை. அந்த தொகுதிகளுக்கு மார்ச் மாதம் இடைத்தேர்தல் நடந்தது. அந்த இடைத்தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெற்றது. கழகம் பிளவுபடாமல் இருந்திருந்தால் 1989 சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றியிருக்கும் என்பதற்கு இந்த இடைத்தேர்தல் முடிவுகளே ஆதாரம்.
89-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் தா.பாண்டியன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. தனித்துப் போட்டி என்றே சொல்லிவிடலாம். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த அய்யா மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. அதிமுக ஜெ.அணி அணி 27 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றது.
அய்யா மூப்பனார் தலைமையில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்றது. 19.83 சதவீத ஓட்டுக்களைப் பெற்றது. அந்த அளவுக்கு அய்யா மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வலிமையோடு இருந்தது. தலைவர் மீதும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர் அய்யா மூப்பனார்.
மேலே உள்ள படத்தைப் பார்த்ததும் பழைய நினைவுகள் மனதில் ஓடின. அதைத்தான் பகிர்ந்து கொண்டேன். நன்றி.
1989-ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் முடிகவுகளுக்கான இணைப்பை கீழே கொடுத்திருக்கிறேன்.
https://en.wikipedia.org/wiki/Tamil_...election,_1989
அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
இதயக்கனி ஆசிரியர் திரு. எஸ். விஜயன் அவர்களின் "எம்.ஜி.ஆர்.கதை " நூல்
வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்ச்சி ..........
http://i62.tinypic.com/23lz8qp.jpg
இதயக்கனி ஆசிரியர் திரு. விஜயன் வரவேற்புரை.
உடை அலங்கார நிபுணர் திரு. முத்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.பற்றி புகழுரை.
http://i60.tinypic.com/k4f2w3.jpg
திரு.எம்.ஏ. முத்து அவர்களுக்கு தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர்
பொன்னாடை அணிவிக்கிறார். அருகில் திரு. விஜயன்.
http://i59.tinypic.com/294sxlf.jpg
பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் உரையாற்றும்போது
http://i62.tinypic.com/211jqlf.jpg
பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் அவர்களுக்கு இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. ராஜ்குமார் பொன்னாடை போர்த்துகிறார்.அருகில்
திரு. விஜயன்.
http://i57.tinypic.com/23hulqs.jpg