Joe,
unable to read ur mail
Printable View
Joe,
unable to read ur mail
All Sivaji fans Pls join sivajifans@yahoogroups.com
It is in unicode Tamil .Pls select View-> encoding .> unicode from your browserQuote:
Originally Posted by abkhlabhi
Good News!
Court allowed TN govt to open NT statue as per the schedule.
சிம்மக்குரலோன் சிலை காண வாரீர் -கலைஞரின் கவிதை அழைப்பு
---------------------------------------------------
கடற்கரையில் காமராஜர் சாலை நடுவில்
காந்தியடிகள் வாழ்த்து பெற்று நிற்பது போல்
கம்பீரப் பொலிவுடன் நிற்கின்ற கலையுலகக் கதிரவனாம்-சிவாஜி
கணேசனுக்கு சிலை அமைக்கும் விழாவுக்கு வருகை தாரீர்!
நாடறிந்த கலைவேந்தன், நடிகர் திலகமென நானிலம் புகழும் மைந்தன்
ஏடு புகழ இதயம் பெற்றோர் எல்லோருமே இணைந்து புகழ
பார் புகழும் பகுத்தறிவுப் பெரியார் வழங்கிய விருது;
சீர் திகழும் சிவாஜிக்குக் கிடைத்தபோது;
வேர் பழுத்த பலாவாக இனித்ததம்மா நெஞ்சம்!
‘‘யார் பக்கமிருந்தாலும் எக்கட்சி சேர்ந்தாலும்;
என் தம்பி கணேசன் எங்கிருந்தாலும் வாழ்க!‘‘, என்று
நன் மனப் பேரறிஞர் அண்ணாவும் வாழ்த்தினார், அன்று!
எம்மிருவருக்கும் தாய்; அன்னை அஞ்சுகமென்றும்; அந்த
அம்மாவின் செல்லப்பிள்ளைகள் நாமிருவர் என்றும்-
நட்புக்கு இலக்கணமாம் நடிகர் திலகம் சிவாஜி,
நாடறிய நினைவு மலர் ஏடொன்றில் எழுதியதை;
என்றும் மறக்காத என்னிதயம் தான்
இன்று விடுக்கிறது அழைப்பென எண்ணி வாரீர்!
ஐம்பத்தி நான்கு ஆண்டின் முன்னே
அடியேன் தீட்டிய பராசக்தியில் அறிமுகமாகி; அந்தத்
தீபாவளி நாளில் திரையுலகில் ஓர் திருப்புமுனையை
திசையெட்டும் ஒளியூட்டிக் காட்டிய தீரன்;
பட்டாக்கத்தி வீசி வசனப் பொறி பறக்க வீரபாண்டியக்
கட்டபொம்மனாக மட்டுமல்ல;
பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் படுகிழமாய்ப்
பரமனடிமை அப்பர் எனும் அருள் ஞானியாகவும்-
கலையுணர் மக்கள் நெஞ்சத்தில் எல்லாம்
நிலை பெயராமல் நிற்கின்ற
சிம்மக் குரலோன் செந்தமிழ்ச் செல்வன்
சிலை வடிவாய் அமைந்து;
சிக்கல் தவிர்த்து வெளிப்படுகின்ற செவாலியரின்,
செம்மாந்த தோற்றம் காண வாரீர்! வாரீர்!
Nadigar Thilagam Ninaivu Naal -July21
Oh! Our dear Nadigar Thilagam..You will be in our hearts for ever!
Yes, lets bow and observe a two minute silence in honour of the greatest actor that ever walked this earth. :notworthy:
I too did a tribute for him one week after his passing. Let me search for it....
Found this instead: http://www.angelfire.com/pa3/ppp/sivaji.html
சிவாஜி அளித்த பரிசு!இன்று சிவாஜிகணேசன் நினைவு நாள்
நட்பை மதிக்கத் தெரிந்தவர் நடிகர்திலகம் சிவாஜி. எத்தனையோ படப்பிடிப்புகளின் நடுவிலும் கூட, நண்பர்களுக்காக நேரம் ஒதுக்கக்கூடியவர். அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் அமெரிக்க துõதுவராக இருந்தார். அவர் சிவாஜியிடம், "உங்களது நினைவு பரிசாக அமெரிக்க குழந்தைகள் விளையாடுவதற்கு ஏதாவது கொடுங்கள்' என்று உரிமையோடு கேட்டார்.
நண்பரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டாலும், அந்த பரிசு வித்தியாசமானதாக இருக்க வேண்டுமென்று சிவாஜி நினைத்தார். அதனால் அவர் தன்னுடைய செலவில் ஒரு யானைக்குட்டியை அமெரிக்காவுக்கு விமானத்தில் அனுப்பி வைத்தார்.
அமெரிக்க அதிபராக இருந்த ஜான் கென்னடி இவ்விஷயத்தை கேள்விப்பட்டு ஆச்சரியமடைந்தார். பரிசு அனுப்பியவரை பற்றி சென்னையிலுள்ள அமெரிக்க துõதரகம் மூலம் விசாரித்துத் தெரிந்து கொண்டார். சிவாஜியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அமெரிக்க அதிபருக்கு ஏற்பட்டது.
"வி.ஐ.பி., விருந்தினர்' என்ற கவுரவத்தோடு அந்நாட்டு கலாசார பரிமாற்றத்தின் கீழ் சிவாஜி அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டார். அப்போது, இந்தியாவிலிருந்து "நடிகர்' என்ற அந்தஸ்தில் அழைக்கப்பட்ட முதல் நடிகர் சிவாஜி மட்டும்தான்.
சிவாஜிக்கு அழைப்பு வந்த போதிலும் இங்குள்ள நண்பர்களிடம் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்த கால்ஷீட்டை தள்ளிப்போட அவர் விரும்பவில்லை. நேரத்தை கடைபிடிப்பதில் அவருக்கு நிகர் அவரே. "பலே பாண்டியா' என்ற படத்துக்காக அவர் கடுமையாக உழைத்து 11 நாட்களில் படத்தின் முழு வேலையையும் முடித்து கொடுத்தார். அதுவரை அவ்வளவு குறுகிய காலத்துக்குள் எந்தப்படமும் முடிக்கப்பட்டதில்லை.
அமெரிக்க பயணத்தின் போது, ஹாலிவுட் நடிகர்களை சந்தித்தார். சிவாஜிக்கு அமெரிக்க அரசு மிகப்பெரிய கவுரவத்தை வழங்கும் விதமாக, நயாகரா நகரின் ஒரு நாள் மேயர் பொறுப்பினை அவருக்கு வழங்கியது. அதற்கு அடையாளமாக அப்பதவிக்குரிய தங்க சாவி அவருக்கு அளிக்கப்பட்டது.
நயாகரா நகரின் மேயராகும் வாய்ப்பு இரு இந்தியர்களுக்கு மட்டுமே கிடைத்தது. அந்த வாய்ப்பு பெற்ற இன்னொருவர் மறைந்த பிரதமர் ஜவகர்லால்நேரு.1928 அக்டோபர் முதல் தேதியில் பிறந்த சிவாஜி, 9 வயதிலேயே நடிக்கத் தொடங்கினார். முதல் படம் பராசக்தி (1952). ஏறத்தாழ 300 படங்களில், விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் திரையுலக "பல்கலைக்கழகம்' என்று புகழும் அளவுக்கு உயர்ந்தார். சுவாசம் மற்றும் இதய பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த 5 ஆண்டுக்கு முன்பு இதே நாளில் நம்மை விட்டு பிரிந்தார்.
நன்றி - தின மலர்